Wednesday, September 24, 2008

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம்

அரசியல் களத்தில் தனியொரு மனிதனாக நின்று, ஹீரோ ரேஞ்சில் போராடிக் கொண்டிருந்தார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அவரை காமெடி நடிகர் வடிவேலு எதிர்த்துக் குரல் கொடுத்து, ``ஒத்தைக்கு ஒத்தையா வாரியா'' என்ற ரீதியில் கேட்க ஆரம்பித்து விட்டார்.

அதிலும் வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், விஜயகாந்த் உள்பட அடையாளம் தெரியாத முப்பது பேரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. அதுவும் கொலை முயற்சி வழக்கு என்பதால் இப்பிரச்னை பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பற்றி எரிகிறது.

அதற்குப் பதில் கூறியுள்ள விஜயகாந்த், `வடிவேலு தி.மு.க.வின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். பாவம் அவர்!' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூற, வடிவேலு கடுப்பாகி, `நானொன்றும் கைப்பாவையோ, கைப்பிள்ளையோ அல்ல. இப்படியெல்லாம் என்னைப் பற்றி அவதூறு பேசும் விஜயகாந்தால் பாதிக்கப்பட்டவன். அவர் தூண்டுதலால் என் வீடும் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பால் என் மனைவியும் குழந்தைகளும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டார்கள். இதற்கெல்லாம் காரணமான விஜயகாந்தின் அடாவடிக்கு முடிவு கட்டத் தயாராகிவிட்டேன்' என்று கூறி ஆவேசப்பட்டார் வடிவேலு.

ஏன் இந்த ஆக்ரோஷம்? என்று வடிவேலுவிடமே விசாரித்தோம். மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார். ``இந்தப் பிரச்னை போன வருஷம், இதே செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது. விஜயகாந்த் நடித்த `பேரரசு,' `தர்மபுரி,' `சபரி' போன்ற படங்களில் என்னை நடிக்க கால்ஷீட் கேட்டார்கள். இப்படியான படங்களில் இவரை (விஜயகாந்தை) `வல்லவன், நல்லவன்' என்று சொல்லிப் புகழ்வதுடன், `நாளை தமிழகமும், முதல்வரும் நீதான்' என்றெல்லாம் வசனம் பேச வேண்டும் என்றார்கள். இதுபோன்று, பொய்யான வசனங்களைப் பேசுவதில் இஷ்டம் இல்லை என்று கூறியதுடன் உண்மையிலேயே என்னிடம் தேதிகள் இல்லாததால் இவர் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு என் மீது கடும் கோபம் வந்துவிட்டது போலும். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.

இறந்தவர் வீடு விருகம்பாக்கத்தில் உள்ள என் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ளது. துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர், என் அலுவலக வாசலில் தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். அது எனக்குத் தொந்தரவாக இருந்ததால் அந்த வாகனங்களை எடுக்கச் சொன்னதற்கு, மறுத்து கன்னாபின்னாவென்று பேசி, அடிக்க வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகளாக இருந்தவர்களாம். அவர்கள் என்னிடம், நான் கால்ஷீட் கொடுக்காததைக் கூறி வம்பு பேசி, என் அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி, புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போன என்னை நள்ளிரவில் மூன்று மணிநேரம் உட்கார வைத்து நோகடித்ததெல்லாம் பழைய கதை. அதுபற்றி அப்போது விரிவாகவே உங்கள் `குமுதம் ரிப்போர்ட்டரில்' என் பேட்டியாகச் சொல்லியிருக்கிறேன்.

அந்தத் தகராறு குறித்து நடந்து வரும் விசாரணை இப்போது சைதாப்பேட்டை கோர்ட்டில் நடக்கிறது. என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் பதின்மூன்று பேரை அடியாளம் காண்பிப்பதற்காக, கோர்ட்டுக்குப் போக வேண்டிய நிலையில், இப்போது மறுபடியும் என் வீட்டையும் அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க விஜயகாந்தின் தூண்டுதலில் நடந்த விஷயம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களைச் சிரிக்க வைக்கப் பாடுபடும், என்னை பாதிப்படைய வைப்பவர், மனிதனே அல்ல'' என்றார் வடிவேலு.

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம் என்று எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?

``கைப்புண்ணுக்கு எதற்குக் கண்ணாடி? இப்போதும் தாக்குதல் நடத்தியவர்கள், விஜயகாந்த் பெயரைச் சொல்லி `வாழ்க' கோஷம் போட்டார்கள். `விரைவில் முதல்வர் ஆகப்போகும் எங்கள் தலைவரை எதிர்க்கக் கூடாது. மீறினால் வீட்டைத் தீ வைத்துக் கொளுத்துவோம். குண்டு வைத்துத் தகர்ப்போம்' என்றெல்லாம் பேசியதை இங்குள்ள ஏரியா மக்கள் பலரும் காது கொடுத்துக் கேட்டார்கள். இதற்கு மேலும் இது விஜயகாந்த் ஆட்களின் வேலை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் செய்யும் போக்கு என்பது விஜயகாந்தின் கோழைத்தனத்தையும் கையாலாகாத்தனத்தையும் பெட்டைத்தனத்தையும்தான் காட்டுகிறது. இவரின் வீரத்தை, அரசியல் கட்சிகளிடம் காண்பிக்கட்டும். மக்களிடம் காண்பிக்கட்டும். மாறாக, என்னைப் போன்ற சாதாரண மானவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை! வெட்கங்கெட்ட அரசியலை வெளிப்படுத்துகிறார், விஜயகாந்த்''.

இவ்வளவு ஆவேசமாக நீங்கள் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் பின்னணியாக இருப்பது ஆளும் தி.மு.க.தான் என்றும் இதற்காக, ஆற்காடு வீராசாமி மற்றும் ஸ்டாலின் போன்றோர் உங்களை அழைத்துப் பேசியதாகவும் கூறுகிறார்களே?

``இப்படியெல்லாம் நீங்கள் கேட்பதே, மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுக்கும் வேண்டியவனாகவே இருக்கிறேன். அண்ணா தி.மு.க. அம்மாவுக்கும், தி.மு.க. ஐயாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் மட்டுமின்றி இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைவரின் குடும்பத்திற்கும் அறிமுகமானவனாகவும் வேண்டியவனாகவும் இருக்கிறேன். இப்படியெல்லாம் இருந்தாலும் நான் எந்தக் கட்சிக்கும் அனுதாபி கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் என்னை யாரோ பயன்படுத்துவதாக அபாண்டமாகக் கூறுவது அநியாயம்; அக்கிரமம். உண்மையில் போன வருஷம் என் அலுவலகத்தைத் தாக்கியவர்களை கோர்ட்டில் அடையாளம் காண்பிக்க இருந்தேன். இதைத் தடுக்கவே என்னை மிரட்டிப் பார்க்கிறார்கள். இதன் மூலம், என்னை ஓர் எதிரியாகவே பாவிக்க ஆரம்பித்துவிட்டார். விஜயகாந்திற்கு கேடுகாலம் தொடங்கிவிட்டது. இனி, என் வாழ்க்கையில் ஒரே எதிரி என்றால், அது இந்த விஜயகாந்த் தான். இவரின் அராஜகப் போக்கைத் தடுக்க எல்லா வழிகளையும் கையாளப் போகிறேன்''.

அப்படியானால், நீங்களும் அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் இறங்கப்போகிறீர்களா?

``தேவைப்பட்டால் அதற்கும் தயாராவே இருக்கிறேன். இவரின் போக்கைத் தடுக்க, தேவைப்படும் ஆதரவை இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் கேட்பேன். எந்த இடத்திலும் இவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டுமென்றாலும், தயாராகி விட்டேன். ஒரு காமெடியன் குடும்பத்தையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் மகாபாவத்தைச் செய்யும் ஓர் அரசியல்வாதியை எதிர்ப்பதே என் ஒரே லட்சியம்''.

அதிருக்கட்டும், இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது உங்களுடன் ஆறுதலாகவோ அக்கறையாகவோ பேசினார்களா?

``அதை ஏன் கேட்கிறீர்கள்? நடிகர் சங்கத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. இப்போதைக்கு காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது''.

ஆனால் தி.மு.க. அரசுதான் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதாக விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

``இதெல்லாம் குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. இந்த அரசு, மக்களுக்கு நல்லது பண்ணவே நினைத்துக் கொண்டிருக்குமே தவிர, இவரை ஒழிப்பதற்கு ஒருபோதும் யோசனை செய்யாது. அதிலும், இந்த அரசு என்னைப் பயன்படுத்தி இவரை அழிக்கத் திட்டமிடுவதாக கற்பனை செய்வது ரொம்ப ஓவராக இருக்கு. உண்மையில் நடந்த தவறுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும். அதைச் செய்யாமல் அடுத்தடுத்து என்னையும் என் குடும்பத்தையும் தாக்கு.ம் வேலையை அவர் நிறுத்திக் கொள்ளட்டும்!'' என்று சொல்லி முடித்துக் கொண்டார் வைகைப்புயல்.

இவ்வளவு அதிரடியாக பல விஷயங்களைப் பேசிய வடிவேலுவின் குற்றச்சாட்டுகள் பற்றி விஜயகாந்தின் ரியாக்ஷனை அறிய முயன்றோம். நாள் முழுவதும் அவரைச் சந்திக்க முயன்ற நிலையில்தான் அவர் நிருபர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், ``பரபரப்பான செய்திகள் என்னைப்பற்றி வந்துள்ளதால் விளக்கம் கொடுக்க உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நான் யாரையோ தூண்டிவிட்டு வடிவேலுவைத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். அது மிகவும் தவறான செய்தி. இது ஆளுங்கட்சியின் தூண்டுதலால் போடப்பட்ட பொய்ப் புகார் மற்றும் பொய் வழக்கு என்றுதான் கூறுவேன். இதற்குப் பலிகடா ஆகியுள்ளார், வடிவேலு.

எங்கள் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், ஆளுங்கட்சியினர் சுமத்தியுள்ள வீண்பழி. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்னை சந்தித்ததில், அப்செட்டாகி குறுக்குப் புத்தியைப் பயன்டுத்தி என் இமேஜைக் குறைக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம், அடிப்படைக் காரணம் நான் இதுவரை `கலைஞர்' என்று குறிப்பிட்டு வரும் கருணாநிதிதான். இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கும் போது `அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழியை நினைவுப் படுத்தி அமைதி காக்கிறேன்'' என்று விளக்கம் அளித்தார்.

விஜயகாந்தின் இந்த தன்னிலை விளக்கப் பேட்டியை சன் நியூஸ் சேனல் நேரடியாக ஒளிப்பரப்பியது தனிக்கதை. இந்நிலையில் இந்தப் பேட்டி முடிந்ததும் விஜயகாந்திடம் ஒருசில வார்த்தைகள் நம்மால் பேசமுடிந்தது.

``இந்த வழக்கில் மட்டுமல்ல. நாளை தமிழகத்தில் எந்த வழக்கு வந்தாலும் அதிலும் என்னைச் சேர்க்கலாமா? என்று யோசிப்பார்கள். இப்படியெல்லாம் என்னை யாரும் ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. என் தைரியத்தைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது. ஒருவேளை இந்த ஆட்சியாளர்கள், என்னைக் கைது செய்து சிறை வைத்தால் அதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். அதுபோல் நடந்துவிட்டால், தி.மு.க. மற்றும் அண்ணா தி.மு.க. போல, எங்களது தே.மு.தி.க. தொண்டர்கள் பஸ்களைக் கொளுத்தவோ, ரயில் மறியல் செய்யவோ, பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதோ நடக்கவே நடக்காது. இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது என்பதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டம் ஒழுங்கு அறவே இல்லை என்பதை நிரூபிக்க அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதுடன், தமிழகத்தில் கொடுங்கோலாட்சி ஒழிய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள்'' என்று நம்மிடம் ஆவேசப்பட்டார் கேப்டன்.

ஒரு சாவு வீட்டில் நடந்த கைகலப்புச் சம்பவம், தே.மு.தி.க. தலைவர் கேப்டனையும் காமெடி நடிகர் வைகைப் புயலையும் நேரடியாகவே மோதவிட்டிருக்கிறது. மதுரைக்காரர்களான இருவரும், மோதிக்கொள்ள `அவரது படத்தில் நான் நடிக்க மறுத்ததுதான் காரணம்' என்று வடிவேலுவும் `இதற்குக் காரணம் ஆளுங்கட்சியின் தூண்டுதல்' என்று விஜயகாந்தும் மாறிமாறி பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க.வின் வளர்ச்சியினால் கடுப்பாகியிருக்கும் திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு சம்மதிப்பாரா? என்று எதிர்பார்த்திருந்த தேசியக் கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. (நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்)

தமிழக முதல்வர் ஆகிறார் மன்மோஹன் சிங்

2011ல் யார் முதல்வர் ..என்ற என் பதிவை பிரதமரிடம் ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதாம்.ஒரு மாநில முதல்வராக இவ்வளவு பேருக்கு ஆசையா? என்று வியந்தாராம் பிரதமர்.உடன் நமது சரடு நிருபர்..இந்த லிஸ்ட் இப்போதைக்கு...போகப்போக இதில்..வடிவேலு, டி.ராஜேந்திரன் போன்றவர்கள் பெயர்களும் இடம்பெறும் என்றாராம்.
திடீரென மன்மோஹன்'எனக்கும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது..அதற்கு வழி என்ன? என்று கேட்டாராம்.
அதற்கு நிருபர்..முதலில் தமிழ் படம் ஒன்றில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றாராம்.
மன்மோஹன் தமிழ் பட தயாரிப்பாளர்கள் பட்டியல் கேட்டிருக்காராம்.கூடிய விரைவில் சான்ஸ் கேட்டு அவர்களிடம் வரப்போகிறாராம் பிரதமர்.
இதற்கிடையே..தன் நண்பர்களிடையே பேசிய பிரதமர்...'நாட்டின் பிரதமரைவிட..தமிழக முதல்வருக்கு பவர் அதிகம் இருக்கிறது..என்றும்..இட ஒதுக்கீடானாலும் சரி,அணு ஆயுத ஒப்பந்தம் ஆனாலும் சரி,மீனவர்கள் பிரச்னை என்றாலும் சரி,மின் பற்றாக்குறை யானாலும் சரி..வேறு பிரச்னைகளுக்கும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டால்..மாநில முதல்வரின் பணி முடிந்து விடுகிறது.ஆனால் இங்கு எல்லாவற்றிற்கும் நான் சோனியாவிடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது.மேலும் அவ்வப்போது..முதல்வருக்கு மனம் கோணும்படியான முடிவு எடுத்தால்..ஆதரவை வாபஸ் வாங்கி விடுவேன் என்றும் பயமுறுத்தலாம்,'என்றெல்லாம் கூறி..தன் அவல நிலையைத் தெரிவித்தாராம்.
நமது நிருபர்..ஆமாம்..உங்களுக்கு வேண்டாதவர்களை வசைப் பாடி கவிதை எழுதத் தெரியுமா?முதல்வராக அது முக்கிய தகுதி ஆயிற்றே..என்று கூறிவிட்டு..சோனியா வரும் சப்தம் கேட்டதால் அங்கிருந்து எஸ்கேப் ஆனாராம்.

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....

அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்ங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

Tuesday, September 23, 2008

வாழ்வில் எல்லாம் இன்பமயமே....

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின் நம் .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அடுத்த முதல்வராக யார் வருவார் என அரசியலில் அரைவேக்காடு அண்ணாசாமிக்கு தினம் தினம் சந்தேகம் வலுக்கிறதாம்.
அவர் பட்டியல்படி கீழ்கண்டவர்கள் அப்பதவி தனக்குத்தான் என எண்ணுகிறார்களாம்.
1.கலைஞர் (ஸ்டாலின்).,அன்பழகன் 2ம் இடம் கிடைத்தால் போதுமாம்.
2.ராமதாஸ் (அன்புமணி)
3.காங்கிரஸ் அனைத்து கோஷ்டிகளும் அவரவர் தலைவரை எதிர்ப்பார்க்கின்றனர் .
(சந்துலே சிந்து பாட நினைக்கும் சிதம்பரம்)
4.விஜயகாந்த்
5.சரத்குமார்
6.திருமாவளவன்
7.கார்த்திக்(முதலில் அடுத்தவருஷம் எம்.பி. பின்2011ல் முதல்வர்)
2011க்குள் இப்பட்டியல் மேலும் நீடிக்கக்கூடுமாம்.
என்ன செய்வது என அறியாது தன் தலைவன் சொல்வதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்கள் வேறு.

Monday, September 22, 2008

இறங்கி வரும் கலைஞர்...

இவ்வளவு நாட்கள் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும்..தனித்தே ஆட்சி அமைத்து வந்தது தி.மு.க., அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையும் கிடைத்து வந்தது.இந்நிலையில் 2006 தேர்தலில்..காங்கிரஸ்,பா.ம.க.,வலது,இடது கம்யூனிஸ்ட்..மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.90 இடங்களே தி.மு.க.வென்றது.ஆனாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இதனால்..பிரதான எதிர்கட்சியான அ.அ.தி.மு.க., மைனாரிட்டி தி.மு.க.அரசு என்றே கூறி வந்தது.
அண்மையில்..பா.ம.க.ராமதாஸ் அரசை கடுமையாக விமரிசித்து வந்ததால்..அவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஒருவர்.,கலைஞரை என்றோ விமரிசித்து பேசியதை..ஆற்காட்டாரை விட்டு மீண்டும் ஞாபகப்படுத்தி வைத்து..கலைஞரும் பேச...பா.ம.க.கூட்டணியிலிருந்து விலகியது.காடுவெட்டி கைது செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்..மத்தியில் ஆதரவை வாபஸ் பெற....ஸ்டேட்டில் அவர்கள் ஆதரவு கேள்விக்குறியானது.
கம்யூனிஸ்ட் யூனியங்கள் நிலைப்பாட்டால்...கலைஞர் கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவரை வசைப்பாட...நிலை முற்றி இரண்டு கம்யூனிஸ்ட் களும் ஆதரவை வாபஸ் பெற்றது.
மீண்டும் பா.ம.க.வை உள்ளே கொண்டுவர திருமாவளவன் முயற்சி தோற்றது. பின் ப.சிதம்பரம் ,கலைஞரை சந்தித்ததும்...பா.ம.க.மீண்டும் இணைந்தால் சந்தோசப்படுவேன் என்றார் முதல்வர்.இச்சமயத்தில் தான் அவருக்கு தனது ஆட்சி மைனாரிட்டி அரசு என தெரிந்தது என எண்ணுகிறேன்.
உடனே...ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும்...தேர்தல் வந்தால் அதை சந்திக்கவும் 1 ரூபாய்க்கு அரிசி திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால்..வில்லனாக..நாட்டில்..இதுவரை இல்லாத மின்வெட்டு.
சட்டசபை குளிர்காலக் கூட்டம் தொடங்கும் நேரம்...தனது ராசி சரியில்லை என உணர ஆரம்பித்திருக்கிறார் முதல்வர்.அவருக்கு தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆதரவு அவசியம் தேவை.அதனால் தான்...இவ்வளவு நாள்..காங்கிரஸ் மாநில தலைவர்கள்..ஆட்சியில் பங்கு கேட்டது காதில் விழாது இருந்தவர்...திருச்சி கூட்டத்திற்குப் பிறகு..சோனியா
விரும்பினால்..அது பற்றி பரிசீலிக்கப் படும் என இறங்கி வந்திருக்கிறார்.
கலைஞரின் முதல் சறுக்கல் ஆரம்பமாகி விட்டது.

வடிவேலு..விஜய்காந்த் விவகாரம்-விஜய்காந்த் பேட்டி

ஊரில் கேட்ட அனைவருக்கும் ..வடிவேலு விவகாரம் கருணாநிதியின் சதி என்று கூறிய விஜய்காந்த்..எங்கள் சரடு பத்திரிகைக்கு பிரத்யேகப் பேட்டிக் கொடுத்தார்.
அப்போது சரடு நிருபர் கேட்ட கேள்விகளும்..அதற்கு விஜய்காந்த் பதில்களும்

நிருபர்-கலைத்துறையில் இருக்கும் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கோள்வது நன்றாகவா இருக்கிறது

விஜய்காந்த்-இதற்கு யார் காரணம் என நான் விரிவாக அனைவருக்கும் விளக்கி விட்டேன்..ஆனால் இதுவரை சொல்லாத தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.2011ல் நான் முதல்வராய் வந்ததும்..கலைத்துறை அமைச்சர் பதவி கேட்டார் வடிவேலு..அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

நிருபர்_ஏன்

விஜய்-மக்கள் விரும்பினால் தருகிறேன் என்றேன்

நிருபர்-மக்கள் என்றால்

விஜய்-என் மனைவி பிரேமாவும்,மச்சான் சதீஷூம்

நிருபர்- ஆமாம்..இதில் கலைஞர் எங்கு வந்தார்

விஜய்-நான் நடித்து சமிபத்தில் பெட்டிக்குள் போன படத்தை கலைஞர் டி.வி.க்கு கேட்டனர்..நான் மறுத்து விட்டேன்..அந்த கோபத்தில் வடிவேலுவை கிளப்பி விட்டுள்ளார்.இப்போதைக்கு இதுதான் சொல்வேன்

நிருபர்-மதுரைக்காரர் என்ன சொல்கிறார்.

விஜய்-நீங்கள் யாரைச்சொல்கிறீர்கள் என புரிகிறது. நான்,வடிவேலு,லீலாவதிகொலை வழக்கில் தற்போது விடுதலையாகி உள்ளவர் ஆகிய அனைவரும் மதுரைதான்.இப்போதைக்கு இதைத்தான் சொல்வேன்.மற்ற விஷயங்களை தேர்தல் வரும்போது சொல்வேன்.

இத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார்.

Sunday, September 21, 2008

எனக்கு வழங்கப் பட்ட சிறந்த பதிவாளர் விருது

சிறந்த பதிவாளர்களுக்கான விருது யாருக்கு வழங்குவது என்பது இந்த ஆண்டு கடும் போட்டியில் இருந்தது.கடைசியில் ..இந்த ஆண்டுக்கான சிறந்த பதிவாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலர் இதற்கான போட்டியில் இருந்தாலும்..இவ் விருது நானே வழங்குவதால்..எனக்கே வழங்கிக் கொள்கிறேன்.ஆச்சரியத்துடன்
அதுக்குள்ள பதிவுக்குள்ளே வந்துட்டீங்களா?
D.M.K., கலைஞருக்கு பெரியார் விருதை வழங்குவது போலத்தான் இதுவும்.,
ஹி...ஹி...ஹி...

வாய் விட்டு சிரியுங்க

1.கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.

2.கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை.

3.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.

4.அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே

5.தலைமறைவா இருக்கும் தீவிரவாதியை பிடிக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்னு போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி தேடச்சொல்லி உத்தரவாம்

6.இந்த இஞ்செக்ஷன் ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே பல் டாக்டரைப் பார்த்து பற்களை கட்டிக்கிகிட்டு வந்துடறேன் டாக்டர்

Saturday, September 20, 2008

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.

ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.

கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

தாய்ப்பால் நினைப்பால்

ஆண் பால் பெண் பால்
பலர்பால் , பலவின்பால்
தமிழ்ப்பால் போதித்தாள்
தமிழாசிரியை பள்ளியில்
வீட்டிலோ குழந்தை
விறைத்தது தாய்ப்பால்
நினைப்பால்.


தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

Thursday, September 18, 2008

நான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்

பெரும்பாலான திரைப்படங்கள் பாதியில் எழுந்து வரவேண்டியவைகளாக இருப்பதால்...ஒரு சில நல்ல படங்கள் விமரிசனம் வந்தபின் சென்று பார்ப்பது என் வழக்கம்.மணிரத்னம்,பாலுமஹேந்திரா போன்ற சிலர் படம் விதிவிலக்கு...
ஆனால்..அவர்கள் படத்தில் நான் பாதியில் வெ
ளியே வந்திருக்கிறேன்.

இருவர் - இந்த படம் நான் செல்ல ஒரே காரணம்..மணிரத்னம் படம்.முதல் வாரத்திலேயே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தேன்..பிரகாஷ்ராஜ்,மோஹன்லால் நடித்திருந்தனர்.ஒரு நல்ல படம் பார்க்கப்போகிறோம்..என்ற மகிழ்ச்சி சுத்தமாக போனது..படம் ஓட..ஓட..கொட்டாவி..மேல்..கொட்டாவி..
இவரது படம் எப்போதும் சற்று இருட்டாக இருக்கும்..அப்படி இந்த படம் இருந்திருந்தால்...ஏ.சி.தியேட்டரில் தூங்கியிருப்பேன்..ஆனால் சற்று வெளிச்சமாக வேறு எடுத்திருந்தார்.அரை மணி நேரம் சென்றிருக்கும்..திடீரென..வித..விதமான சத்தம்..ஏ.ஆர்.ரஹ்மான்..ரீரிகார்டிங்கில் கோளாறா..என்று பார்த்தால்..வந்திருந்த ரசிகர்கள் எழுப்பிய குறட்டை சத்தங்கள் அவை என உணர்ந்தேன்.
என்னை ஏமாற்றிய படம் இது.

ஜூலி கணபதி -நான் மதிக்கும் மற்றோரு இயக்குநர் பாலு மஹேந்திரா.இவரது இந்த படம் சத்யம் காம்ப்ளஃக்ஸில் பார்த்தேன்..நீண்ட நாளைக்குப் பிறகு சரிதா நடித்திருந்ததாலும்,என் அபிமான இயக்குநர் படம் என்பதாலும் முதல் வாரத்தில் தியேட்டரில் ஆஜர்.பிறகு தான் என் விதியை நொந்துக்கொண்டேன்.திரை முழுக்க ஆக்ரமித்துக்கொண்ட சரிதா..பாலக்காட் தமிழ் ஜயராம்..இப்போது நினைத்தாலும் வயிற்றைக் குமட்டுகிறது.மூன்றாம் பிறையில் நளினமாக கமல்..சில்க் நடனம் எடுத்தவரா...ரம்யாகிருஷ்ணனை வைத்து..ஒரு ஆபாச பாடல்/நடனம் எடுத்தார்.
கொஞ்சமும் லாஜிக் பற்றிக்கவலைப்படாத படம்.

பாபா -என்னை ஏமாற்றிய ..நான் பாதியில் வந்த மற்றோரு படம்..இப் படம் பற்றி எழுதுவதை விட வாளா இருப்பதே சிறந்தது.எங்கிருந்தோ ஓடி வந்து கையெழுத்துப்போட இருந்த விசுவின்
பேனாவை தட்டிவிடும்..ருத்ராக்க்ஷக்கொட்டை படத்தைக்கூட ரசித்த என்னால்..இந்த படத்தை...
ஒரு பகுதி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு ரஜினி திருப்பிக் கொடுத்தாராம்.நான் வாங்கிய டிக்கட் பணத்தில் ஒரு பகுதியை தியேட்டர்காரர்கள் எனக்குத் திருப்பித் தரவில்லை.

வாய் விட்டு சிரியுங்க

மங்களூர் சிவாவிற்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க
உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது
கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா?

2.நான் மனைவி சொல்லைக் கேட்காம எதுவுமே செய்ய மாட்டேன்.இதுவரை ஒரு காரியம் தான் தெரியாம செஞ்சேன்.அதுக்காக அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்
அது என்ன காரியம்
அவளை மணந்து கொண்டதுதான்

ஆற்காடு வீராசாமிக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

3.முன்பெல்லாம் மேலதிகாரியைப் பார்த்தா பயப்படுவே..இப்ப அந்த பயம் போயிடுச்சா
இனிமே..அவர் என்னை மின்சாரம் இல்லா காட்டுக்கு மாற்றுவேன்னு பயமுறுத்த முடியாதே

கோவிகண்ணனுக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

4.புள்ளி விவரப்படி..தினமும் ஒரு ஆள் இந்த இடத்தில் விபத்தில் மாட்டிக்கொள்கிறான்
ஐயோ..பாவம்..தினமும் அந்த ஆளே ஏன் மாட்டிக் கொள்கிரான்

இந்த ஜோக்கிற்கும் ச்சின்னப்பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

5.ஆஃபீஸிற்கு வந்ததும்..பத்தரையிலிருந்து 11 வரை எங்க அதிகாரி தூங்கிடுவார்..அந்த நேரத்தில் தான்...நான் பதிவுகளூம்,பின்னூட்டங்களும் இடுவேன்

இந்த ஜோக்கிற்கும் டோண்டு ராகவனுக்கும் சம்பந்தமில்லை

1.நீ எப்படி ஒரே சமயத்தில இரண்டு இடத்திற்கும் போவேன்னு சொல்றே!
ஒரு இடத்துக்கு நான் போவேன்..ஒரு இடத்திற்கு என் போலியை அனுப்புவேன்

Wednesday, September 17, 2008

உங்களுக்குத்தெரியுமா?

நமக்கெல்லாம் பொன்னி அரிசியைத் தவிர வேற எந்த ரக அரிசியும் தெரியாது.அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா அவன் எல்லா அரிசியையும் சாப்பிட்டு முடிக்க 500 வருஷங்கல் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசிகள் விரல் விட்டு எண்ணிடலாம்.ஸீரக சம்பான்னு ஒரு அரிசி...அது ருசி சொல்லமுடியாது.அப்பிடிப்பட்ட ருசி.அதுலே எத்தனை வகை தெரியுமா?ஈர்க்குச்சி சம்பா,ஊசி சம்பா,இலுப்பை சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகசம்பா,கோட்டைசம்பா,மல்லிகைசம்பா,மாப்பிள்ளைசம்பா,மூங்கில்சம்பா,பொய்கைசம்பா,பொட்டிச்சம்பா,வரகசம்பா,சின்னட்டிசம்பா,சீரகசீம்பா,சுண்டரப்புழுகுசம்பா,சூரியசம்பா,சொல்லச்சம்பா,ரங்கச்சம்பா,அரைச்சம்பா,பூலன்சம்பா,இடயப்பட்டிசம்பா,காச்சம்பா,அரைச்சம்பா,பூவானிசம்பா,டொப்பிச்சம்பா,பிரியாணிசம்பா,ஆனா இன்னிக்கு ...என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது.

பெரியாரின் பெருந்தன்மை

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
(டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தென்கச்சி சுவாமினாதன் கூறியது)

Tuesday, September 16, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி தன் மனைவிக் கூப்பிட்டு உடனே கடைக்குப் போய் 6 டம்ளர் வாங்கிவரச் சொன்னார்
மனைவி எதற்கு என்று கேட்க 'டாக்டர் தினமும் என்னை 10டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கார்.
நம்ம வீட்ல 4 டம்ளர் தானே இருக்கு" என்றார்.

2.அண்ணாசாமி-(டாக்டரிடம்)எனக்கு இந்த ஜுரம் எப்படி வந்தது.
டாக்டர்-கொசுவாலேதான்.இந்தாங்க ..கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க
அண்ணாசாமி-அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா பிடிச்சு இந்த கிரீமை தடவ முடியும்?

3.அமெரிக்க அதிபர் புஷ், பில் லேடனைப் பிடிச்சா 10 லட்சம் பரிசுன்னு அறிவித்தார்.
அண்ணாசாமி உடனே புஷ்ஷை தேடிப்போனார் 'எனக்கு 10லட்சம் தாருங்கள் என்றார்.புஷ்
எதற்கு எனக் கேட்க அண்ணாசாமி'எனக்கு பில் லேடன் ஐ பிடிச்சிருக்கு'என்றார்.

4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்

Monday, September 15, 2008

நாடக விழா

சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவின் 108 வருடம் முடிந்தவிழா...என்.எஸ்.கிருஷ்ணனின் சென்டினரி விழாவாக கொண்டாடப்படுகிறது.13ம் தேதி முதல் 25ம்தேதி வரை நடைபெறும் நாடகவிழாவாகவும் இது அமைகிறது.இதில் எனது' மாண்புமிகு நந்திவர்மன்' என்ற அரசியல் நையாண்டி நாடகம் நடைபெற உள்ளது.நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் நாடகத்திற்கு வருகைதர அழைக்கிறேன்.



Sri Parthasarathy Swami Sabha at TP Koil Street in Triplicane is holding its 108th year celebration of NS Krishnan birth centenary drama festival at Mylapore Fine Arts Club Hall.

The festival would be inaugurated by president of Tamilnadu Iyal Isai Nataka Mandram Rama Narayanan and president of Sri Parthasarathy Swami Sabha Nalli Kuppuswami Chetti will preside over the function be held on 13 September (Saturday).

.
In view of the celebrations, various dramas would be staged at the Fine Arts club in the evenings till 25 September.

The dramas to be staged include T V Varadharajan’s Real Estate, Ananthu’s Oru Saadha Daadha Agiran, Ranganathan Photo Studio by Augusto, Paaru Paaru Pattanam paaru by Ezhichur Aravindan, Rathnam’s Jeshtakumara, Venkat’s Sponsor Kalyanam, T V Radhakrishnan’s Manbumigu Nandhivarman, Sri hari’s Pradosha Nayakan

சென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

சென்னையில் தான் நான் பல வருஷங்களாக வசித்து வருகிறேன்., இந்நகரில் பஸ் போக்குவரத்து அதிகம்.முன்பெல்லாம் சிவப்பு நிறத்தில் மட்டுமே பஸ்கள் இருக்கும். இப்போது பல வண்ணங்களில் பேருந்து (இப்படித்தான் சொல்ல வேண்டும்...பஸ்..என சொல்லக்கூடாது)கள் ஓடுகின்றன.சாதாரண கட்டணமுள்ள பேருந்து,விரைவுப் பேருந்து.சொகுசுப் பேருந்து.குளிர் சாதன பேருந்து என பல ஓடுகின்றன.ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதிரி கட்டணம்..விரைவுப் பேருந்து வேகமாகச் செல்லும் என எண்ணி சிலர் ஏறுவர்..கடைசியில் ஏமாறுவர்..ஏனெனில் அந்த பேருந்துகளும் எல்லா நிறுத்தத்திலும் நிற்கும்.பேருந்தில் 25 பயணிகள் மட்டுமே நிற்கலாம்..ஆனால் 2க்கு முன்னால் 1செர்த்து 125 பயணிகள் கூட இருப்பார்கள்.எந்த வாகன ஒட்டும் சட்டமும் இதை கண்டுக்கொள்ளாது.
சரி..ரயிலில் போகலாம் என்றால்..நீங்கள் மாதாந்திர சீசன் அட்டை வைத்திருந்தால்..பிழைத்தீர்கள்..இல்லவிட்டால்..நீங்கள் நிலயத்தில் டிக்கட் வாங்க நிற்கும் நேரத்தில்...நடந்தே செல்லும் இடத்துக்கு சென்று விடலாம்.சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் உண்டு.உடனே ரயில் பறக்குமா என கேட்கக்கூடாது.அந்த ரயில் செல்லும் பாதை
நிலமட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் இந்த பெயர்.ஊருக்குள்ளே ஓடும் ரயில் இது என்று சொல்லலாம்.
இது எல்லாம் வேண்டாம்...ஆட்டோ வில் செல்லலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வசதி உண்டு.ஆட்டோவிற்கு மீட்டர் உண்டு..ஆனால் டிரைவர்கள் மீட்டர் போட மாட்டார்கள்.வாய்க்கு வந்த கட்டணம் கேட்பார்கள்..மீட்டர் போட்டால் தான் வருவேன்..என்று புத்திசாலியாக சொல்லலாம்...அப்படி மீட்டர் போட்டு பயணம் செய்தால் ஆட்டோ டிரைவர்..முதலில் கேட்ட தொகையை வட மீட்டர் இரு பங்கு காட்டும்.(மீட்டர் சூடு போட்டதாக இருக்கும்)..நீங்கள் அதைக் கொடுத்துவிட்டு...சூடுபட்ட பூனையாய்..அடுத்த நாள் முதல் ஆட்டோவைக் கண்டால் காத தூரம் ஓடுவீர்கள்.இதையும் போலிஸ் கண்டுக்கொள்வதில்லை...பல ஆட்டோக்கள் போலிசாருடையது என்கிறார்கள்.அந்த காரணமாயும் இருக்கலாம்.
சென்னையில் தங்க சொந்தமாக ஒரு இடம் இருந்தால் தப்பித்தீர்கள்.இல்லாவிட்டால்..நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை பாதியை விழுங்கி விடும்.அபார்ட்மெண்டில் வசித்தால் மெயிண்டனேன்ஸ் என 500ஓ 1000மோ அதகப்படியாக மினி ரெண்ட் போலஆகிவிடும்.வாடகை பாதி.போக்குவரத்து செலவு கால் பகுதி..போக..மீதி கால் பகுதியில் தான் உணவு,உடை,குழந்தைகள் பள்ளிச்செலவு.மருத்துவ ச்செலவு.பொழுதுபோக்கு செலவு எல்லாம்.சிதம்பரத்தின் நாட்டு பண வீக்க கவலையை விட..நமக்கு நம்ம வீட்டு பணவீக்கம் கவலையைத் தரும்.
முக்கியமாக சொல்ல மறந்தது...சம்பளத்தன்று...பேருந்தில் வந்தால் ..பிக்பாக்கட்டுக்களால் முழு சம்பளத்தையும் இழக்க நேரிடும்.பிறகு கடன்தான் மாத செலவுக்கு.
மறந்து போன மற்றவை அடுத்த பதிவில்

Sunday, September 14, 2008

நாத்திகர்களும் இறைவனை காணும் தினம்

இன்று கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் விவரம்..இன்று அண்ணனின் பிறந்தநாள்.
இன்று தமிழக மக்கள் அனைவரும் புண்ணியம் செய்துள்ள நாள்
நாத்திகவாதிக்கும் இறைவன் காட்சியளிக்கப் போகிறான்.
என் கனவில் அண்ணா வந்து தினசரி கேட்டுக் கொண்டிருந்தார்.
'தம்பி நான் உன்னை விட்டுப் பிரிந்து..ஆண்டுகள் பல கடந்தும்..என் மன
வேதனையை நீ போக்கிடவில்லை.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதாலேயே..ஒன்றே குலம்..ஒருவனே தேவன் என்று நான் உரைத்தேன்.
அவன் சிரிப்பைக் காண வேண்டும் என்றுதான்..ரூபாய்க்கு ஒரு படி அரிசி
போட்டிட எண்ணினேன்..ஆனால் அத்திட்டத்தை அன்று நடைமுறைப்படுத்த
முடியவில்லை..அந்த முள் என் இதயத்தில் தைத்துள்ள நிலையில்..உன்னிடம்
அவர்களை ஒப்படைத்து சென்றேன்.நீ இதுநாள் வரை அதை போக்கிட வில்லை'
என்றிட்டார்.
ஐயகோ..அண்ணா என்னிடம் ..என்னை நம்பி..இவ்வளவு பெரிய பொறுப்பை
ஒப்படைத்துப் போகிறாயே..அதை நான் எப்படி நிறைவேற்றுவேன்..உன் இதயத்தில்
தைத்துள்ள முள்ளை எப்படி அகற்றுவேன்...என்றிட்டேன்.
இன்றுதான் அந்த முள் அகற்றப்பட்டிருக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண நினைத்த அண்ணனின் கனவை இன்று
அவர் தம்பி நனவாக்கி உள்ளேன்.
இனி ஏழை சிரிப்பான்...இறைவனைக்காணலாம்.
(ஹி..ஹி..எப்பவும் போல கற்பனை பேட்டிதாங்க)

பின் சேர்க்கை-உப்பும் கிலோ 1ரூபாய். தமிழன் நன்றி உள்ளவனாக இருக்கத்தான்
அதன் விலையையும் கொடுத்துள்ளேன்.

வாய் விட்டு சிரியுங்க

1.நண்பர்-(அலுவலக மதிய உணவு இடைவேளையில்)இன்னிக்கு நீ லஞ்ச் கொண்டுவரலியா?
நண்பர்2-கொஞ்சம் gas டிரபுள்..அதுதான் கொண்டுவரல்ல
நண்பர்- இப்பத்தான் சொன்ன உடனே gas கொண்டு வந்துடறாங்களே

2.இந்த வாரம் @@ சானல்ல
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையா...
என்ன படம் போடப்போறாங்க
தமிழில் 1931ல் வந்த முதல் படம் காளிதாஸ்

3.மனைவி(கணவனிடம்)- ஏங்க ...நம்ம மகனுக்கு தலையிலே மூளை கிடையாது..களிமண்ணுதான்னு சொல்வீங்களே..உண்மைதாங்க...தலையிலே செடி முளைச்சிருக்கு

4.டாக்டர்-(நோயாளியிடம்) வயிற்றுவலியா...மோஷன் எல்லாம் ஃப்ரீயா போறீங்களா?
நோயாளி-ஃப்ரீயா..எங்க டாக்டர் போக முடியுது..இப்பக்கூட இரண்டு ரூபா கொடுத்துத்தான் பப்ளிக் டாய்லட்லே போயிட்டு வரேன்.

5.மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும்.

6.உன் புடவை எல்லாம் எப்படி இவ்வளவு வெளுப்பா இருக்கு?
என் புடவையை என் கணவர் துவைக்கறப்போ சண்டை போட்டுடுவேன்...என் மேல் உள்ள கோபத்தை துணிகளில் காட்டி அடி அடி ன்னு அடிச்சு தோய்ச்சுடுவார்.

Saturday, September 13, 2008

பதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்

நான் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன்...என்ன தவறு செய்துவிட்டேன்...இதுநாள் வரை ஏதும் தெரியாமல் போயிற்றே!
கர்நாடகா மக்களை தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைத்தால் என்ன? என்று கேட்ட ரஜினி...குசேலன் வரும் சமயம் மன்னிப்பு கேட்டார்..ஆனால் அது வருத்தப்படுகிறேன் என்பதற்கான அர்த்தம் என பின் உணர்ந்துக்கொண்டேன்.
ஜயலலிதா பற்றி விகடன் ஏழுதப்போக..அவர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப..சுதாகரித்துக்கோண்ட விகடன் பகிரங மன்னிப்பு கேட்டதாகச் செய்தி வந்தது..பிறகு பார்த்தால் ..அது விகடன் தன் வருத்தத்தை தெரிவித்தாக பின் தெரிந்தது.
இப்பொது எல்லாம் வருத்ததை தெரிவிப்பது என்றால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகப் பொருள் என உணர்ந்துக்கொண்டேன்.
அதனால் யார் வீட்டிற்காவது இழவுக்கு நீங்கள் சென்றால்..அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்க சென்றுள்ளதாக பொருள் கொள்ள வேண்டும்.
ஆமாம்...நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?
எனக்கு எந்த வருத்தமும் இல்லை..
பின்...
இப்படி பெயர் போட்டதால் தானே வந்து படித்திருக்கிறீர்கள்? ஹி..ஹி..ஹி...அதனால்தான்...
ஆமாம்..இப்பதிவை படித்ததும் நீங்கள் வருத்தப்படாதீர்கள்..
ஏனெனில் அது நீங்கள் மன்னிப்புக் கேட்டதாய் ஆகிவிடும்.

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்

Thursday, September 11, 2008

தங்கவேலு..ஒரு மறக்கமுடியாத கலைஞன்

இன்று பதிவு ஏதும் போடவில்லையே..என்ன எழுதலாம் என்று நினைத்தபோது...பைரவன் ஞாபகம் வந்தது..ஆம்..நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் ஞாபகம்..
அவர் தன் மனைவியிடம் தான் வேலை செய்யுமிடம் மன்னார் & கம்பனி என்று சொல்லி தினமும் காலையில் டிபனை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.ஒரு பூங்காவில் அமர்ந்திருந்து விட்டு மாலை வீடு திரும்புவார்.ஒரு நாள் இந்த விஷயம் மனைவிக்கு தெரியவர..அடுத்த பொய்யாக..தான் ஒரு எழுத்தாளன் என்று கூறுவதுடன், தன் புனைப் பெயர் பைரவன் என்று சொல்வார்.
ஒருநாள் பேப்பரில் பைரவனுக்கு பாராட்டு விழா என்ற செய்தியைப் பார்த்ததும்..அவள் மனைவி அவருக்கு பாராட்டு விழாவா? என வினவ...'ஆமாம்..நான் வேண்டாம்னு தான் சொன்னேன்..கேட்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க..'என்பதுடன்..அப்பாராட்டு விழாவிற்கு மனைவியை வரவேண்டாம் என்பார்.அவர் மனைவியோ ..தன் கணவர் பற்றி பெருமையாகக்கூறி..தனது தோழிகளுடன் விழாவிற்குப் போவார்..ஆனால் அங்கே..பைரவன் என்னும் வேறு ஒருவருக்கு விழா நடக்கும்.அப்போதுதான் தன் கணவர் சொன்ன பொய் தெரியவரும்.கோபத்துடன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பவரிடம்...தங்கவேலு ஒரு மாலையை கடையில் இருந்து வாங்கி வந்துவிட்டு சமாளிப்பார்.கடைசியில் தன் குட்டு வெளிவந்தது தெரிந்துவிடும்.அடுத்த நாள் அவர் மனைவி
அவரை ஒரு அறையில் பூட்டிவைத்து கதை எழுதச் சொல்வார்.
இந்த காமெடியை மிஞ்சிய ஒன்று இதுவரை தமிழ் படங்களில் வரவில்லை என்பது என் எண்ணம்.
இன்றும்..நண்பர்கள் பேசும்போது..எங்கே மன்னார் & கம்பனிலே வேலைசெய்யறியா? என கிண்டல் செய்வதுண்டு.
தங்கவேலு ..ஒரு பிறவி காமடியன்.அவர் ஆரம்ப காலங்களில் வயதான பாத்திரங்களிலேயே நடித்தார்.பலருக்கு அவர் வயதானவர்தான் என்ற எண்ணம் இருந்தது.பிறகு மாதர் குல மானிக்கம் ,ரம்பையின் காதல் போன்ற படங்கள் வந்து அவர் இளைஞர்தான் என்று சொன்னன.
தேன் நிலவு,இதயத்தில் நீ,பாசமலர் இப்படி பல படங்கள் இவர் திறமையை பறைசாற்றின.
கல்யாணபரிசு..பைரவன் போல் ..நம் ஞாபகத்தில் மறக்க முடியாத மற்றோரு படம்..தெய்வப்பிறவி..இதில் இவர் பண்ணும் கதாகாலெட்சபம் அருமை.
தங்கவேலு...கடைசி வரை நாடகங்களில் நடிப்பதையும் விடவில்லை.
தன் மனைவி எம்.சரோஜாவுடன் சேர்ந்து நம்மை மகிழ வைத்தவர்.என்.எஸ்.கிருஷ்ணன்..மதுரம் ஜோடிக்கு பிறகு திறையுலக காமெடி ஜோடி இவர்களுடையது.கடைசிவரை..காமெடியன் என்பவர் பொதுவானவன்..மக்கள் அனைவருக்கும் வேண்டப்பட்டவனாய் இருக்க வேண்டும் என யார் மனதையும் புண்படுத்தாமல்..எந்த கட்சியிலும் சேராமல்..வாழ்ந்தவர்.

வாய் விட்டு சிரியுங்க

ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு

2.வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.

3.இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
எப்படி சொல்ற
நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்

4.தலைவர் ஏன் சுடுகாட்டில மீட்டிங்க் வைக்கணும்னு சொல்றார்
அங்க அடக்கமானவங்க பெயர் எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்ல இருக்காம்

5.என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு போங்க ன்னு சொல்றா

6.உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

Wednesday, September 10, 2008

பகுத்தறிவாளன் என்பவன் யார்?

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" ஆய்ந்து...ஆராய்ந்து..அதுதான் பகுத்தறிவு.

எந்த ஒரு செயலைச் செய்தாலும்..அதனால் கேடு விளையுமா...நன்மை விளையுமா..என்று பகுத்து அறிந்து பார்ப்பவனே பகுத்தறிவாதி.
மின்சார கம்பியைத் தொட்டால்.."ஷாக்"அடிக்கும்..என்பது நம் நம்பிக்கை..ஆனால் மின்சாரவெட்டு இருக்கும்போது கம்பியைத் தொட்டுவிட்டு ஷாக் அடிக்கவில்லை பாரு என்று சொல்வதில் சாமர்த்தியம் என்ன இருக்கிறது? மின்சாரம் வரும்போது அதை செய்து காட்டி சொன்னால் ஷாக் அடிக்கும் என்னும் தன் நம்பிக்கையை அவன் விட்டு விடுவான்.

கடவுள் இருக்கிறார் என்பவன் ஆத்திகவாதி....இல்லை என்பவன் நாத்திகவாதி...

கோவிலுக்கு செல்பவன் ஆத்திகவாதி..மற்றவர்கள் நாத்திகவாதி என்பது சரியில்லை.நான் கோவிலுக்கு செல்வதில்லை..அதனால் ஆத்திகவாதி இல்லை என்றாகிவிடுமா? நான் கடவுளை நம்புவன்.கோவிலில்தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவன். கடவுளிடம் இதைத்தா...அதைத்தா..என வேண்டாதவன்..ஏனெனில்...அவன் இருக்கிறான்..என்பதால்..அவனுக்கு எனக்கு என்ன தேவை? எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என அவன் அறிவான்.இதை நீ நம்ப வேண்டும்.எனக்கு அந்த நம்பிக்கை இருப்பதால் நான் அவனை வேண்டாதவன்.
ஆனால் ஒருவனே தேவன்... என எண்ணுபவன்..அவன் உருவம் இல்லாதவன்..இயற்கைதான் அவன் என்பவன்...இப்படி நான் சொல்வதால் நான் பகுத்தறிவற்றவன் என்று கூறிட முடியுமா?இறைவன்...எனப்படுபவன்..யார்..என்பதை பகுத்தறிந்து நம்புவதாகவே எண்ணுகின்றேன்.

அதனால்..ஆத்திகவாதி பகுத்தறிவாளன் இல்லை என்பதையும்...நாத்திகவாதி பகுத்தறிவாளன் என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.சிந்திக்கும் திறனுள்ளவன் மனிதன்.ஆகவே..அவனுக்கு பகுத்தறியும் குணம் இயற்கையிலேயே அமைந்து விடுகிறது.

நாத்திகவாதிகள்...தாங்கள்தான் பகுத்தறிவாளர்கள் என்பதை ஏற்க முடியாது.

மேலும்..பார்ப்பனர்கள் எனப்படுபவர்..அனைவரும் ஆத்திகவாதிகள்..பகுத்தறிவாதிகள் இல்லை..என்பவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிந்துள்ளனர்.

இப்படி சொல்ல..அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ..அவ்வளவு உரிமை உடன் தங்கள் அறிவை பகுத்தறிந்து..ஆண்டவன் இருக்கிறான் என ஆத்திகவாதி எண்ணுகிறான்.அதற்கு அவனுக்கு உரிமை உண்டு.அவன் எண்ணம் அவனைப் பொறுத்த அளவில் சரி.அது அவன் நம்பிக்கை.அதில் நாம் ஏன் தலையிட வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை..சிந்திக்கும் அனைவரும் பகுத்தறிவாளரே!! இதில் ஒரிஜனல் பகுத்தறிவுவாதி...போலி பகுத்த்றிவு வாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

Tuesday, September 9, 2008

சொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)

சந்நியாசிகளின்
சரணாலயம்
காவல் நிலையம் !!!!

வேதம் ஓதும் வேதியர்
ஹோமம் வளர்க்கின்றனர்
நற்குணங்களை அதில் இட.,

பிராணிவதைத் தடுப்பு
தலைவனாய்
கசாப்பு காதர்.

சாமியாரைச் சுற்றி
தாய்க்குலங்கள்
குழந்தைப்பேறு வேண்டி!!!

தமிழ் செம்மொழி
பெருமைப்படுகிறான்
தமிழன் ஆங்கிலத்தில்.

இயற்கையை போற்றுவோம்
போதனை செய்தனர்
விறகு வெட்டி கள்.

'திரு'வோடு வாழ்கிறான்
திருவோடு ஏந்தியதால்
தமிழ்க்கவி அவன்.

வாய் விட்டு சிரியுங்க

அதிகாரி- என்னப்பா வேலை செஞ்சிருக்கே!!உன் கிட்ட எல்லாம் வேலை வாங்க வேண்டியிருக்குப்பார்..அதுக்குப் பதிலா எங்கயாவது போய் சாகலாம்.
ஊழியர்- இந்த முறை மன்னிச்சுடுங்க..அடுத்த முறை இப்படி நடந்தா..உங்க இஷ்டம் போல செய்யுங்க.

2.என் கனவுலே கவர்ச்சி நடிகைங்க வராங்க டாக்டர்
இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்..கவலைப்பட வேண்டாம்
ஆனா..அவங்க முழுசா டிரஸ் பண்ணிட்டு இல்ல வராங்க

3.அங்க தாடியோட போறாரே..அவரை ஒரு காலத்தில நீ காதலிச்சயா?
நோ..நோ..நெவர்..தாடி வைச்ச யாரையும் நான் காதலிக்கலை

4.வக்கீல்-(கட்சிக்காரரிடம்) எந்த சிக்கலான கேஸ்னாலும் ஜெயிச்சுடுவேன் என்பதற்காக மலச்சிக்கல்னு வந்தா எப்படி

5.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசிலே என்ன ஆச்சு
நான் கொவிச்சுக்கிட்டு..பிறந்த வீடு வந்துட்டேன்

6.ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்

Monday, September 8, 2008

மின்சாரவெட்டு=சம்பளவெட்டு

வங்கி ஒன்றில் வேலை செய்த்க் கொண்டிருந்தான் அவன்.
கனவில்கூட ..தான் அரசியலில் நுழைவோம் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அதுவும்..பொருளாதார மேதைகளே..திண்டாடும்..பணவீக்கம் அதிக மாகிக்கொண்டிருக்கும் நாட்டில்..தான் நிதி அமைச்சர் ஆவோம் என்று அவனால் எப்படி எதிப்பார்த்திருக்க முடியும்.
கட்சியின் தலைவரும்,பிரதமரும் அவனைக்கூப்பிட்டு 'வங்கியில் நீ வேலை செய்ததால்..பொருளாதாரம் பற்றி உனக்குத் தெரியும்'என்றனர்.
'வங்கியில் வேலை செய்தால்...எல்லாம் தெரிந்து விடுமா..'என மறுத்தான்.
'தமிழகத்தைப்பார்...மின்சார இலாக்காவில் வேலை செய்தவர்..ஆற்காட்டார்..என்ற காரணத்தால் தான் அவருக்கு மின்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.அதை அவர் எவ்வளவு அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்(???!!!)..அதுபோல நீயும் நிதித்துறையை செவ்வனே கவனித்துக் கொள்ளமுடியும்"என்றார் பிரதமர்.
பிரதமர் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவன் நிதி அமைச்சர் ஆனான்.
'ஆற்காட்டாரை பின்பற்றி நாட்டில் அனைவருக்கும் சம்பளவெட்டு செய்தால் போயிற்று' என்ற எண்ணத்தில்.

பின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்

பதிவர்கள் பதிவிடும் போது..பதிவை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதைவிட எத்தனைப்பேர் பின்னூட்டம் போட்டார்கள் என்று பார்ப்பது வழக்கம்.இவர்களை ஏமாற்றாமல்..எக்ஸாம் பேப்பர்களை திருத்தும் +2 ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குவது போல் மானாவரியாக பின்னூட்டம் இட்டு நமக்கு தெம்பைக் கொடுத்து வருபவர்களில் முதன்மையானவர் நம்ம மங்களூர் சிவா.அவர் திருமணம் வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறப்படியால்..அவர் இன்று சென்னை கிளம்பிவிட்டதாக தகவல்.ஆகவே..பதிவுகளுக்கு பின்னூட்டப் பாதிப்பு ஏற்படும்.அதனால் சில நாட்கள் பதிவர்கள் தங்கள் பதிவுகளை நிறுத்திவிட்டு..முடிந்தவர்கள் அவர் திருமணத்திற்குச் செல்லவும்.திருமணம் முடிந்ததும்,வாழ்த்து தெரிவித்ததும், அவர் வேலைக்கு போகும் தினத்தை துப்பறிந்து அதற்குப் பின் பதிவிடவும்

Sunday, September 7, 2008

சஞ்செய்யின் விடுப்பட்ட கிராம நினைவு

கிராமத்தில் விடுபட்டுப் போனவை
கொடுக்காப்புளிக்காய்
ஸ்லேட் அழிக்க பறிக்கும் கோவக்காய்
காக்கா கடி கமர்கட்,டைமன்ட் மிட்டாய்
சுட்ட சோளம்
புளியம்பழம்
சூடுகொட்டையால் பக்கத்து பையனுக்கு வைக்கும் சூடு
நேரத்துக்கு நேரம் தெரிவிக்கும் சங்கோசை
வாரம் தவறாமல் தலையில் எண்ணெய் வைத்து அம்மா செய்து வைக்கும் குளியல்
வாரம் தவறாமல் விளக்கெண்ணெய் குடித்தல்
ஏரியில் நீச்சல் குளியல்
மாட்டு வண்டி சவாரி
சைக்கிள் டயர் உருட்டி ஓட்டம்

Saturday, September 6, 2008

சொந்த சரக்கும்... இரவல் சரக்கும்

சுதந்திரம் பிறப்புரிமை
மீன்களின் ஆர்ப்பாட்டம்
கண்ணாடித் தொட்டிக்குள்.

கைம்பெண்ணுக்கு
கணவன் சொத்து
மஞ்சள் குங்குமம் கடை

பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமி ஆனது தலை.

காற்று வாங்கப்போனேன்
காற்றின்றி
மூச்சற்று கிடந்தது பீச்சு!!!

விண்ணில் மாவின்றி
செம்மண் கோலம்
சந்தியா காலம்.

வெள்ளிக் காசுகள்
கொட்டும் சப்தம்
மங்கை உன் சிரிப்பு..

Friday, September 5, 2008

அடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்

ச்சின்னப்பையன்..நம்ம அடுத்த படம் ஹிட்ன்னு கிண்டல் பண்றார்.அடுத்தும் நாயகன் மாதிரி ஒரு ஹிட் படம் கொடுக்கணும்.என சொன்ன ரித்திஷ்..படத்தோட பெயர் தளபதி என்றாராம்.நண்பர்கள் கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் கையில் துப்பாக்கி ஒன்று இருந்த்விட்டால் போதும்..சேஸிங் சீன்ஸ்..தோட்டா சத்தம்..என் தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்னு கதை பண்ணிடுவேன் என்றவர்..பாட்டுக்கள் மட்டும் 'நிலா..நிலா.'.போல் சாங்க்ஸ் வேண்டும் என்றிருக்கிறார்.தயாராய் இருந்த பாடலாசிரியர் மூவர் தங்கள் பாடல்கைள்க்
காட்டினர்
முதல் பாடலாசிரியர்-பா பா பிலாக்சீப் ஹேவ் யௌ எனி வுல்...எஸ் சார் எஸ் சார் திரீ பேக்ஸ் புல்

ரித்திஷ்- நோ..நோ..இந்த பாட்டு வேண்டாம்..தமிழில் வேண்டும்..என் தானைத்தலைவனுக்கு அதுதான் பிடிக்கும்.(இரண்டாம் பாடலாசிரியரிடம்) நீங்க சொல்லுங்க..

இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை முத்தம் தா தா.இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு..உன்னை போல் அம்மா ஊரில் யாரும் இல்லை.என்னால் உனக்குத் தொ
ல்லை ஏதும் இனி இல்லை...

ரித்திஷ்_ போதும் போதும் ..மன்னன்ல ரஜினி பாட்டு 'அம்மா என்று அழைக்காத..' மாதிரி இதுவும் ஹிட் ஆயிடும்..இந்த பாட்டு இருக்கட்டும்.(3வது பாடலாசிரியரிடம்) உங்க பாட்டு..

3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசியும் ஏறும் யானை..கட்டிக் கரும்பை முறிக்கும் யானை..

ரித்திஷ்-பியூட்டிஃபுல்..இந்த பாட்டும் கண்டிப்பாய் ஹிட் ஆகும்

(அதற்குள் ஃபோன் வருகிறது..கலைஞர் பேசுகிறார்)

கலைஞர்- தம்பி..கழகக் கண்மனி ரித்திஷ் உன் படத்திற்கு அருமையான பாட்டு வேண்டும்..என்றாயாம்..வசைபாடும் பாடல்களாகவே சில காலமாக எழுதிவரும் நான்..உனக்காக இப்பாட்டை எழுதி உள்ளேன்..கேட்டிடுவாய்
'அ என்றால் அஞ்சா நெஞ்சன்
அ என்றால் அன்னை அஞ்சுகம்
அ என்றால் அண்ணா
அ என்றால் அன்பழகன்
ஆ என்றால் ஆதவன்
ஆ என்றால்.."

ரித்திஷ்-தலைவா இது போதும்..படம் சூபர் ஹிட்தான்.கண்டிப்பாக இது கலைஞர் டி.வி.யில் டாப் டென்னில் முதல் இடம் பிடிக்கும்.

கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையும் உனக்காக வைத்துள்ளேன்

ரித்திஷ் ராங்க் நம்பர் என ஃபோனை வைக்கிறார்.

Thursday, September 4, 2008

ஒரு ரூபாய் அரிசி தரும் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நின்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையில்..ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றது.வந்ததும் ஒரு படி ஒரு ரூபாய்.படிப்படியாக 3 படி போடுவோம் என்றனர்.இல்லாவிட்டால் சவுக்கால் அடியுங்கள் என்றனர்.எதிர்பாராது கிடைத்தது வெற்றி.அண்ணா முதல்வர் ஆனார்.சென்னையிலும்,கோவையிலும் முதலில் படி அரிசி திட்டம் அமுல் செய்யப்பட்டது.ஆனாலும்..நிதிநிலையைக் காரணம் காட்டி அதையும் பின்னர் விலக்கிக்கொண்டனர்.
பின்னர்..இவ்வளவு ஆண்டுகள் கழிந்து 2006 தேர்தலில் கலைஞர் தேர்தலில் ஜெயித்து வந்ததும் 2ரூபாய்க்கு அரிசி போட்டார்.இப்பொழுது செப்டம்பர் 15..அண்ணா பிறந்தநாள் முதல் ரேஷனில் ரூபாய்க்கு ஒரு கிலோ என அறிவித்திருக்கிறார். 41 ஆண்டுகள் கழித்து..அண்ணாவின் கனவை நிறைவேற்றி வைத்துள்ள கலைஞரை மனதார பாராட்டுகிறேன்.
ஆனால் இச்சமயத்தில் ஒரு சில வேண்டுகோள்.
தேவையில்லாதவர்களுக்கும்,மாதம் கணிசமாக சம்பாதிப்பவர்களுக்கும் கூட அரிசி கார்ட் உள்ளது.அவர்கள் ரேஷனில் அரிசி வாங்குவதில்லை.ஆனால்..கடைகளில்..அவர்கள் கார்டிலும் பில் போடப்பட்டு அரிசி திருடப்படுகிறது.அண்டை மாநிலங்களுக்கு அதிக விலைக்கு கடத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் அரசுக்கு பொருளாதார இழப்பை எற்பட காரணமாக ஆகிறது.இந்த சமூக விரோதிகளை அடையாளம் காணமுடியாது.அப்படியே யார் என்று தெரிந்தாலும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது..ஏனெனில் அவர்கள் ஏதாவது அரசியல் கட்சியைச் சேர்ந்தவராய் இருப்பார்கள்.
ஆகவே..அரிசி கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அரிசி விலையை 5 ரூபாய்க்கு உயர்த்துங்கள்.உன்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாகவே அரிசி கொடுங்கள்.ஒவ்வொரு வார்டிலும் கஷ்டப்படுபவர்கள்,நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கணக்கெடுங்கள்.அந்த பொறுப்பை அரசியல்வாதிகளிடம் கொடுக்காதீர்கள்.சமூக ஆர்வலர்களிடம் ஒப்படையுங்கள்.தேவையானவர்களுக்கு அரிசி போய் சேரட்டும்.
மற்றவர்களுக்கு சற்று உயர்வு விலையால் பாதிப்பு இருக்காது..இதனால் வரும் அதிகப்படி வருவாய் இலவச அரிசிக்கு ஈடுகட்டிவிடலாம்.
பிறகு என்ன 39ம் நமதே..

Wednesday, September 3, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.பழைய பேப்பர் வாங்கறவருக்கும்,ரேஷன் கடைக்காரருக்கும் உள்ள முக்கிய வேற்றுமை என்ன?
பழைய பேப்பர்காரர் இரண்டு கிலோவை ஒரு கிலோ என்பார்.ரேஷன் கடைக்காரர் ஒரு கிலோவை இரண்டு கிலோ என்பார்.

2.எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.

3.டாக்டர்-உங்களுக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதின்னு எப்படி சொல்றீங்க?
நோயாளி-ஆஃபீஸ்ல சீட்ல இல்லாம நடந்துகிட்டே இருக்கேன்

4.பீச்சில் காதலி-முந்தாநாள் இங்க நாம பேசிக்கிட்டு இருந்ததை என் ஃபிரண்ட் சுமதி பார்த்துட்டா..எங்கப்பா கிட்ட சொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு
காதலன்- அப்படி அவள் சொல்லிட்டா...நேற்று நானும்..அவளும் இங்க பேசிக்கிட்டு இருந்ததை நீ அவங்க அப்பா கிட்ட சொல்லிடு

5.தலைவரே போன தேர்தல்ல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தருவோம்னு சொன்னீங்களே...
அதுக்குத்தான்..வீட்ல ஒருத்தனான என் மச்சானுக்கு வேலை வாங்கி கொடுத்துட்டேன்

6.நீதிபதி-சீட்டுக்கம்பேனி நடத்தி மக்களிடம் திரட்டிய பணத்தை என்ன செய்தாய்?
குற்றவாளி-சீட்டாடியே தொலைச்சுட்டேங்க

Tuesday, September 2, 2008

சின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன்னிலை விளக்கம்...

சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து கோவி சார் ஒரு பதிவு போட்டிருந்தார்.அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் போட்டிருந்தார்.அதற்கு பின்னூட்டமாக நான் 'கோவி நீங்களுமா?' என பின்னூட்டம் இட்டிருந்தேன்.சமீபத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொன்ன கோவி 'சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதியபோது "நீங்க எல்லாம் இதை பெரிய விஷயமாக எழுதுகிறீர்களே"என உயர்வை கற்பித்து ஒரு கேள்வி இட்டிருந்தனர்' என்றிருக்கிறார்.
அது என்னைத்தான் என்பதால்..இது குறித்து அவருக்கு பதில் எழுத வேண்டியது என் கடமை ஆகிறது.
கோவி சார்..நானும் ஒரு நாடக எழுத்தாளன்,நாடக இயக்குநர்,நாடக நடிகன் தான். என்னுடைய 4 கதைகள் பொதிகையில் ஒலி/ஒளி பரப்பப்பட்டிருக்கிறது.காவிரி தண்ணீர் பிரச்னை பற்றி நான் எழுதிய 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்'2006ல் சிறந்த நாடக விருதை பெற்றது நாடகவிழாவில்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்..என்றால்..நானும் கலைஞர்களை மதிப்பவன்தான்..ஏனெனில் நானும் ஒரு கலைஞன்.
ஆனால் கலைஞர்கள் இதை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஒரு உதாரணம்
சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகர் ஒருவர்..பழைய நாடகம் ஒன்றை மீண்டும் போட்டார் திடீரென.
அதற்கு சொல்லப்பட்ட காரணம்..இந்த நாடகத்தை..சிங்கப்பூர்,மலேசியா,துபாய் ஆகிய இடங்களில் போட்டால்...சில்லறை தேற்றலாம் என்பதுதான்...
இப்போது சொல்லுங்கள்..இவர்கள் உண்மை கலைஞர்களா? அல்லது மக்களை ஏமாற்றுபவர்களா?
கலைஞ்ர்களைப் பொறுத்தவரை...பணம் சம்பாதிக்கும் இடங்களாகவே..சிங்கையும்,மலேசியாவும்,துபாயும் உள்ளன.
அங்குவாழ் மக்கள்..தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை..சக்திக்கு மீறி கொடுத்து டிக்கட் வாங்குகின்றனர்.
இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..உயர்வு..தாழ்வு என்ற பேச்சுக்கே அதில் இடமில்லை.
இது என் தன்னிலை விளக்கமாகக்கூட கொள்ளலாம்.

தயவு செய்து யாராவது உதவுங்களேன்...

கலைஞர் டி.வி.யில் ..வினாயகசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லாமல்..விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றார்கள்.கீழ் கண்ட தினத்தை என்ன வென்று சொல்வார்கள் என விடை தெரியாது குழம்புகிறேன்..யாராவது உதவி..என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க்ளேன்.
ஜனவரி 14 பொங்கல்தினம் என்று நிகழ்ச்சிகள் வழங்குவார்களா? அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றுதான் சொல்வார்களா?
ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது டாக்டர் அம்பேத்கர் தினத்தை முன்னிட்டு என்பார்களா?அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்பார்களா?
சரஸ்வதி பூஜை யன்று என்ன சொல்வார்கள்,விஜயதசமியை என்ன என்று சொல்வார்கள்? தீபாவளியை என்ன என்பார்கள்.,
தமிழக அரசு..இன்ன இன்ன தினங்களுக்கு இதற்காக விடுமுறை என அறிவிக்கிறார்களே...அதை சொல்லாமல் கலைஞர் டி.வி.அரசை அவமதிக்கிறதா?
உயர் மட்டத்தை திருப்தி படுத்த என்றால்...அது யார் ஆணை?
இந்த சந்தேகம் எல்லாம் சாமான்யனுக்கு வருவதால்...இனி அரசு வருடம்தோறும் வெளியிடும் விடுமுறைதினங்களுக்கான அறிவிப்பை எதற்காக விடுமுறை என்று சொல்லாமல்.....விடுமுறை..விடுமுறை என்றே அறிவிக்குமா?

Monday, September 1, 2008

வினாயகர் சதுர்த்தியும், சினிமாக்களும்

வினாயகசதுர்த்தி நாளை(3-9-08) கொண்டாடப்படுகிறது. என் நண்பர் ஒருவர் பழுத்த ஆன்மீகவாதி.அவரை..அன்று முழுவதும் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சார் இப்படி கேட்கிறீர்கள்..அன்று முழுவதும் நான் பிசி என்றார்.
'எனக்குத் தெரிந்து..காலையில் குளித்து முடிந்ததும்..கடைத்தெருவிற்கு சென்று களிமண் பிள்ளையார்,அவருக்கு ஒரு குடை.பூ,பழங்கள் இவற்றை நீங்கள் வாங்கி வரவேண்டும்..வீட்டில் மனைவி எப்போதும் போல் சமைப்பதுடன்..கொழுக்கட்டை,வடை,பாயாசம் செய்வார்கள்.பின்..சாமி கும்பிடுவீர்கள்..எல்லாம் 10மணிக்குள் முடிந்துவிடுமே'என்றேன்.
அதற்கு நண்பர்,'அது எல்லாம் வெறும் ஃபார்மாலிட்டி தான்...அதற்குப் பின்னால் தான்..சன் டி.வி.யில்,சாலமன் பாப்பையா .பட்டிமன்றம்..ராஜா கூட இருக்கார்..தமாஷா இருக்கும்.
அப்புறம் 11மணிக்கு ஒரு படம்..அதுமுடிந்ததும் இன்னோருபடம்..மாலை 6 மணிக்கு ஒரு படம்,9.30 மணிக்கு ஒரு படம்னு நாலு படம் இருக்கு..நடு நடுவே பல சினிமா பிரபலங்கள் பேட்டி..
மத்யானம்..தூங்கக்கூட நேரம் இல்லை'என்றார்.
அடப்பாவிகளா..இந்த பண்டிகை..முக்கியமானது என்றுதானே..விடுமுறையே விடுகிறார்கள்..என்றேன் நக்கலாக.
'ஒரு மணி நேர பூஜைக்கு..முழுநாள் விடுமுறை யார் விடச்சொன்னது?'எடக்குமடக்கான பதில்.
தனி மனிதனே..சற்று சிந்தித்துப்பார்..
விடுமுறை விட்டதால் எல்லா மக்களின் நேரமும்...எவ்வளவு கோடிக்கணக்கான மணி நேரம் வீண்?
உற்பத்தி எவ்வளவு பாதிக்கப்படுகிறது.
நாட்டுக்கு எவ்வளவு கோடிக்கணக்கான பணம் இழப்பு..
பொழுதுபோக்கு அவசியம் தான்...24 மணி நேரமும் அது தேவையா.

Sunday, August 31, 2008

கால ஓட்டத்தில் காணாமல் போனவை - விவாதமேடை

அப்போது நாங்கள் இருந்த காலனியில் கிட்டத்தட்ட 100 வீடுகள் இருக்கும்.ஒவ்வொரு வீட்டினரைப் பற்றியும் அனைத்து வீட்டினரும் அறிவார்கள்.ஒவ்வொரு வீட்டு மனையும் 2 கிரௌண்டுகள் இருக்கும்.தனித்தனி வீடுகள்.வீடு கட்டியதுப் போக எஞ்சிய நிலத்தில் வெண்டை,கத்திரி,கொத்தவரை,அவரை,புடல் என செடிகள் போட்டிருப்பார்கள்.அவரைக்கும்,புடலுக்கும் பெரிய பந்தல்.புழக்கடைப் பக்கம் கிணறு...பக்கத்தில்..துணி தோய்க்க கல்.காலை விடியும் போதே.. கிணற்றிலிருந்து பக்கெட்..பக்கெட்டாக தண்ணீர் சேந்தி..தலைக்கு குளிப்போம்.குளிக்கும் தண்ணீர் செல்லும் பாதையில் வாழை மரங்கள்.வாழையடி வாழையாக வளரும் கன்றுகள்.அருகே தானே தரையில் வளரும் பூசணிக்கொடி.
வாசலில் மல்லிகை பந்தல்,ரோஜா செடிகள்,அந்தி மந்தாரை,பவழவல்லி மரம்,குண்டுமல்லிகை..என வாசனை கும்மென்று இருக்கும்.கூடியவரை எந்த வீட்டிலும் காய்கறிகள் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள்.நமக்குப் போக மீதத்தை பகிர்ந்து , பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கும் தாராள மனது.நவராத்திரி சமயத்தில்...மாலை நேரத்தில்..கண்களுக்கு விருந்தாய்..பல வண்ண ஆடைகள் உடுத்தி வீதியில் துள்ளித் திரியும் மான்கள் (??!!) கூட்டம்..கையில் குங்குமம்..சுண்டல் பைகளுடன் பொடிசுகள்.
தீபாவளி,பொங்கல் தினங்களில்..ஒருவர் வீட்டுக்கு..ஒருவர் வருவதும்..வாழ்த்துவதும்...அடடா அந்த நாட்கள்..பொங்கல் பொங்கும் போது காலனி முழுதும் எதிரொலிக்கும்'பொங்கலோ..பொங்கல்'கூவல்...அடுத்த நாள்..மாட்டுப்பொங்கல்....பசுமாடுகள் இருக்கும் வீட்டில்..அந்த பசுவின் கொம்புகளுக்கு..வண்ணம் தீட்டி..மற்ற வீடுகளுக்கு மாலை நேரத்தில் எடுத்துச் செல்வார்கள்.நாம் பசுவிற்கு எதேனும் கொடுக்க வேண்டும்.அதுபோக..காளைமாடுகள் பூட்டிய வண்டியில்..ஜாலியாக..ஊரைச்சுற்றி ஊர்வலம் வருவார்கள்.
ஏதேனும் வீடுகளில்..அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால்...இளைஞர்கள் கூட்டம் கூடிவிடும்.இறுதி ஊர்வலத்திற்கு உடலை சுமப்பதில்..நான்..நீ...என போட்டி இருக்கும்...

ஆனால் இன்று...?

தனித்தனி வீடுகள் போய்..எங்கு பார்த்தாலும்..அடுக்கு மாடி குடியிருப்புகள்..அடுத்த ஃப்ளாட்டில் யார் இருக்கிறார் என்று தெரியாது.போதாக் குறைக்கு...தீபாவளி சமயங்களில்..காலை 6 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சட்டங்கள் வேறு.பொங்கல் அன்று..சாலமன் பாப்பையாவைப் பார்த்துக் கொண்டே குக்கர் பொங்கல்.
யார் வீட்டிலாவது...மரணம் சம்பவித்தால்..வரும் உறவு,நண்பர்கள்..எப்போது எடுப்பார்கள்? வீட்டில் மெகா சீரியல் பார்க்க நேரம் ஆச்சே என உள்ளம் பதை பதைக்க போலியாக வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் அவலம்.எங்களால் 'பாடி'யை சுமக்க முடியாது..B.P., sugar என்று கூறும் அனைத்து வயதினரும்.கடைசியில் அமரர் ஊர்தியில்..எவ்வளவு உறவு இருந்தாலும் தூக்க ஆளின்றி காடு செல்லும் பிணங்கள்.

இவற்றை எல்லாம்...பார்க்கும் போது...
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த, காணாமல் போன அந்த நாட்கள்..அந்த மனித நேயம்...திரும்ப வருமா? என்று எண்ணத் தோன்றுகிறது .

இப்படி ஒரு பதிவை போட உதவிய சிவாவிற்கு நன்றி.

இத் தொடரைத் தொடர நான் கேட்டுக் கொள்ளும் இருவர்...
ச்சின்னப்பையன்
வடகரை வேலன்

Saturday, August 30, 2008

உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பாரதியார்

நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

அய்ந்தறிவும் ஆறறிவும்....(கவிதை)...

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பேதமில்லை
மச்சு வீடு குச்சு வீடு
பாகுபாடில்லை.

செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யை பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை.

உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை

பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவாரில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கு இல்லை

Friday, August 29, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.

பலப்பத்தை மறந்த அவாள்

படிக்கின்ற காலத்திலே
பாலர் வகுப்பிலே
பலப்பம் இன்றி இருந்திட
பிச்சை இட்டேன்
பலப்பத்தை நான்
அதை மறந்திட்டார்
அவாள் இன்று
மற்றோரு ஆழ்வாரோ
வடவாசல் அன்னை
வருகை அன்று
என் எண்ணத்தை
தவிடு பொடி ஆக்கினார்
ஆதலால் பின்னாளில்
அன்னை புகழ் பாடினேன் -இன்றோ
நரைமுடியான் என எனை
எள்ளி நகையாடுகிறார்
தேளாய்,நண்டாய் கொட்டுகிறார்
வஞ்சகர்களே.இன்று
வன்மையாய் நான்
ஒன்று உரைத்திடுவேன்
கனி இருக்க காய்
கவர்ந்தற்று - .வள்ளுவன்
வாக்கை மறந்திடாதீர்.

Thursday, August 28, 2008

விழுதுகள் (கவிதை)

அவனுக்கு அவன்மீதே

ஆத்திரம்

நாம் இருவர்

நமக்கு இருவர் - மறந்து

வீங்கிய வயிறுடன்

வீட்டினுள் மணவாட்டி

முத்தாய் மூன்றாவது

முளையிலேயே கிள்ளிடணும்

இல்லையேல் முடியாது

இனிதாய் வாழ்ந்திட

இரவு முழுதும் மனப்புயல்

இடி மழையோ வெளியே

மறுநாள் புயலில்

மரங்கள் பல சாய

ஆலமரமோ சாயவில்லை

ஆதாரம் விழுதுகளே..

வருந்திய மனதில்

வந்தது மகிழ்ச்சி

Wednesday, August 27, 2008

கோவி கண்ணனும்,பதிவுகளும்

கோவி கண்ணன் சிங்கையில் சிஸ்டம் இஞ்சினியராக பணி புரிந்து வருகிறார்.நான்கு வருடங்களாக பதிவராக உள்ளார்.(govikannan.blogspot.com)
பதிவு உலகில் புதியதாக வருபவர்கள்..முதலில் இவரின் சில பதிவுகளையாவது படிக்க வேண்டும்.சாதாரண விஷயங்கள் முதல்..பல சமூக,அறிவியல்,பகுத்தறிவு,உலக நடப்பு,நகைச்சுவை,
மொக்கை பதிவு என எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் பதிவர்கள் மிகச் சிலரே!!!அதில் கண்ணனும் ஒருவர்.
நான் பதிவுகளில் நுழையும் முன் நான் படித்த சில பதிவர்கள்...தமிழச்சி,கோவி கண்ணன்.டோண்டு ராகவன்.
தமிழச்சியின் துணிச்சலான பதிவுகள்
டோண்டுவின் சிந்தனைப் பதிவுகள்
கோவி யின் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுகள். இவைதான் என்னை பதிவு எழுத தூண்டியவை.
இந்த பதிவு கோவியைப் பற்றியது ஆதலால் அதைப்பற்றி...

சிறுகதை- அவர் சில சிறுகதைகளை பதிவேற்றி இருக்கிறார். அதில் 'புணரபி மரணம்..புணரபி ஜனனம்' என்று ஒரு கதை.அருமையான கதை.படிக்காதவர்கள் அந்த வலைப்பக்கத்துக்குச்
சென்று தவறாமல் படிக்கவும்.
மரணம்..ஜனனம்..எல்லாம் மாயை...எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்?

இடஒதுக்கிடு- பற்றி ஒரு பதிவு..உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
ஜாதி மக்கள் அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் சமத்துவம் ஏற்படும்.
அவரின் இந்த எண்ணம்..அவரை ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் தோற்றுவிக்கிறது.
யாருக்கும்..எதற்கும் பயப்படாது..தன் எண்ணங்களை பதித்துள்ளார்.

எண்ணப்படம் பார்த்ததுண்டா வில்...விசித்ரமனம் பற்றி ஒரு பதிவு
'அறிவியல்..ஆன்மீகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும்..மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல் படுகிறது என்பதற்கான தெளிவுரை எவருமே எழுத வில்லை..'என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
ரோஜாவை எப்படி அழைத்தாலும் ரோஜாதான்..பதிவில்..பல்வேறு பெயர்களில் ரோஜாவை ஏற்றுக் கொள்ளும் நாம் பல் வேறு பெயர்களில் (ஈஸ்வரன்,அல்லா,ஜீஸஸ்)அழைக்கப்படும் பரம்பொருளை எண் ஏற்பதில்லை ...என்கிறார்.
கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம்...ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றய ஒரு பதிவு..சிங்கையில் இருந்தாலும்..தமிழ்நாட்டை மறக்காத தமிழன் தான் என்பதை உறுதி படுத்துகிறார்.
சில மொக்கை பதிவகளும் உண்டு.
ஆனால் அவை நமக்கு மொக்கையாகத் தெரிவதில்லை.
பதிவர் சந்திப்பு..என்பார்..பார்த்தால் மார்க்கெட்டில் இரு பதிவர்கள் பார்த்திருப்பார்கள்.அவ்வளவுதான்..ஆனால்..படிக்க நமக்கு சுவையாக இருக்கும்..அதுதான் அவர் எழுத்து.
பொன்முடி ஆங்கிலம் படிக்க வேண்டிய..அவசியத்தை கூறியுள்ளதை..ஆதரித்து..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்று ஒரு பதிவு.
மொத்தத்தில் தன் மனதில் சரி என்று தோன்றுவதை..யாருக்கும்..எதற்கும் பயப்படாமல் பதிவிடுதல் இவர் ஸ்பெஷாலிடி.

பின்னூட்டம்-பின்னூட்டம் இடுவதிலும் தனித்து நிற்பவர்.ச்சின்னப்பையனின் ஒரு பதிவுக்கு..குமரி முனையில் நில்லுங்கள்..உங்கள் பின்னால் 100 கோடி பேர் இருப்பர் என மெல்லிய நையாண்டி..எனது வாய் விட்டு சிரியுங்கள் பதிவிற்கு 'நான் வாய் விட்டு சிரித்தால்..வேலைக்கு ஆப்பு"என்று பின்னூட்டம் இட்டவர்..எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.
எவ்வளவு பேருக்கு..பாராட்டும் மனம் இருக்கிறது?

புதிய பதிவர்கள் என்றால்..அவர்களை ஊக்குவித்து (கலைஞர்..ஸ்டாலின்..ஊக்கு அல்ல) மூத்த பதிவர் என்ற தோரணை இன்றி பின்னூட்டம் இடுவார்.
அவ்வளவு ஏன்..சில மாதங்களாகவே எழுதும் என்னை (தமிழா..தமிழா..)..உங்களுக்கு பிடிக்கும் என தன் பதிவின் முகப்பில் இட்டுள்ளார்.

இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்...ஆனால் பதிவு நீண்டுவிடும்..
புது பதிவர்களே...இவர் பக்கத்திற்கு சென்று..இவர் பதிவுகளை படியுங்கள்.
ஆமாம்..இவர் பதிவில் எது சிறந்தது?
வெல்லக்கட்டியில் எந்த பாகம் இனிப்பு..சொல்லுங்கள்..நானும் சொல்கிறேன்.

Tuesday, August 26, 2008

திரைப்பட பாடல்களும்...பட்டுக்கோட்டையாரும்

..
கானா பாட்டு,குத்துப் பாட்டு என திரைப்பட பாடல்கள் வந்துக் கொண்டிருக்கும் நாளில்..(நிலா..நிலா..வா வா என்று ஒரு லேட்டஸ்ட் பாட்டு..இனி எந்த பள்ளியிலும் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சொல்லிக்கொடுக்க முடியாது)அந்த நாளில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமை கட்சிக்காரர்.ஒவ்வொரு பாடல்களிலும் கருத்து மிக அருமையாக இருக்கும்.அவரது பாடல் வரிகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளை அடிப்பதில்
வல்லமைக் காட்டிடும்
திருட்டு உலகமடா...தம்பி
உலகம் புரிந்து நடந்துக் கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா'

மற்றொரு பாடல்;-

(குழந்தையிடம் பாடும் பாடல்)

ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி

என்று சொல்பவர்..அதே பாடலில்
வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுதுன்னு
விளையாடப் போகையில் சொல்லி வைப்பாங்க -உன்
வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே ஸோம்பி இருந்து
வெம்பி விடாதே..

கவிஞருக்கு சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை பாருங்கள்

நாடோடி மன்னன் படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பற்றி சொல்லவே வேண்டாம்.ஒவ்வொரு வரியும் பொன் வரிகள்..அப்பாடலின் கடைசி இரு வரிகள்..

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

(இந்த இடத்தில்..தமிழக அரசு தூங்காமல் இருந்திருந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒப்புதல் போட்ட உடனேயே முடித்திருக்கலாம்.இன்று
பிரச்னை இருந்திருக்காது)
இப்படி பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம்..இவருக்கு ஜனரஞ்சக மான பாட்டுக்கள் எழுதத் தெரியாதா? என்றால்..
அவரால் அதுவும் முடியும்..
கல்யாணபரிசு பாடல்கள் அனைத்தும் அவர்தான்.
அவர் வாழ்நாள் முழுதும் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களுக்குச் செல்ல மைலாப்பூரிலிருந்து 12-B பஸ் பிடித்துத்தான் செல்வாராம்..கார் வைத்துக்கொள்ள வசதி இல்லை.
எனக்கு புரியாத புதிர் ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது?

ஆனந்தம்

மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்க்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேர்றப்போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச்சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக்கண்ணீர் அல்ல

பனிப்பாவை (கவிதை)

வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

Monday, August 25, 2008

ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்

இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'

ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?

ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.

பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.

Sunday, August 24, 2008

இட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் "அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'.."

1.இ.வ.-முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து
எழுதலாமா? சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

கலைஞர்-தம்பி இ.வ.(மனதிற்குள் இ.வா என்று சொல்லிக்கொள்கிறார்)
இதையே சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னால்..தரம்
தாழ்ந்தது என்று சொன்னால்..அஞ்சா நெஞ்சனை தா.கிருட்டிணன்
கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தி..பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது
* * * நீ பார்த்தியா? *** நான் சொல்றேன் நீதான் கொலை செஞ்சேன்னு
என்றெல்லாம் பேசினேனே அதை நீ என்ன வென்று சொல்வாய்?

2.இ.வ-பிராமண சமூகத்தை மட்டுமே ஏன் எப்போதும் இழிவு படுத்துகிறீர்கள்?அடுத்த
முறை கனவில் அண்ணா,பெரியார் வரும்போது நல்ல அறிவுரைகளைக்
கேட்டு தெரிந்துக் கொள்வீர்களா?
கலைஞர்-தம்பி..இம்முறையும் தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய்.பல
முறை என்னுடன் பணி புரியும் அதிகாரிகள் பிராமணர்கள்தான் வேண்டும்
என நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.அண்ணா..பெரியார் இருவரும் என்
கனவில் வரும்போது அதிகமாக ஸ்டாலினைப்பற்றியும்,அழகிரியைப் பற்றியுமே
கவலைப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக அவர்கள் இதயத்துள் தைக்கப்பட்டுள்ள
முள் அகன்றதும்தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்பதை நீ அறிவாய்.

3.இ.வ.-மைனாரிட்டி அரசாக இருந்தாலும்..நீங்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.
ஜாதிகளைப் பற்றிப் பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா?
கலைஞர்-இந்த கேள்வி சிரிப்பைத்தான் வரவழிக்கிறது. மைனாரிட்டி அரசு என்று
நீ சொல்வதன் மூலம் ...யார் சொல்லி நீ அதைக் கேட்கிறாய் என அறிந்தேன்.
நீ வெறும் அம்பு..எய்தவன் இருக்க உன்னை நொந்து என்ன பயன்?நான்
ஆரியன் இல்லை சூத்திரன் என்ற ஒரே காரணத்தினால் இக் கேள்விஎன்னிடம் கேட்கப்
பட்டிருக்கிறது என்பதை உடன் பிறப்புக்கள் அறிவார்கள்.

4.இ.வ-ஐந்து முறை பதவிப்பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு..'எந்த விருப்பும்..
வெறுப்பும் இன்றி..'என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா?
அதை கூட விட்டு விடுங்கள்..இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
கலைஞர்-'அவாள்'என்று சொல்வதை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்.நான் எப்போதும்
அவர்கள் நினைப்பிலேயே இருப்பதால்..அந்த பேச்சு என்னை அறியாது எனக்குள்
புகுந்துவிட்டது.வேண்டுமானால் தயாளு மாமியை கேட்டுப் பாருங்கள்.மாறன் இருந்திருந்தால்
இந்த கேள்வி எழுந்திருக்காது.

5.இ.வ.-தேர்தலில் இதை பகிரங்கமாக சொல்லி 'அவாள்' ஓட்டு வேண்டாம் என்னும் தைர்யம்
நேர்மை கொஞ்சமாவது உண்டா?
கலைஞர்-மீண்டும் எனக்கு சிரிப்பை வரவழிக்கிறாய்..தேர்தல் போது நீ பார்க்கும் மு.க. வேறு.
தேர்தலில் அவர்கள் ஓட்டையும் பெற்று நான் கோட்டையை பிடிக்கும் போதும்,
கோட்டையை இழக்கும் போதும் பார்க்கும் மு.க. வேறு.

(இத்துடன் கலைஞரின், நமது கற்பனை பதில்கள் முடிந்தது)

இனி நமக்கு புரியாத கேள்வி..எல்லா சவால்களையும் சமாளிப்பவர்..'அவாள்' சவால் என்பது எதனால்..?

Saturday, August 23, 2008

தமிழ் படித்தவரா (குட்டிக்கதை)

பத்துக்கு எட்டு அளவுள்ள அந்த அறைக்குள் நுழைந்தான் அண்ணாமலை .
நேர் காணலுக்கு வந்திருக்கிறான் .அறங்காவலர்கள் மூவர் அமர்ந்திருந்தனர் .
அவனைப் பார்த்து 'சிட் டோவ்ன் 'என்றனர்.பின் ஒருவர் மாற்றி ஒருவர்
கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர் .
வாட் ஈஸ் உவர் நேம்'
அண்ணாமலை.
யுவர் எசுகேசனால் குவாலிபிகேசன்
எம். ஏ .,தமிழ்
'தமிழ்' என்றபடி மூவரும் அவனை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவன் போல பார்த்தனர்.
'டூ யு நோ ..தி நேம் ஆப் அவர் பவுண்டர்,'
'வெள்ளையப்பன்'
வெரிகுட். யு நோ இன் விச் இயர் வி சேலி பி ரே டெட் அவர் கோல்டன் சுபீலி
இன் தி இயற் 2000
ஹொவ் மச் சே ல ரி யு வான்ட்'
10000
ஆல் ரெயிட். வி வில் லேட் யு நோ '
தமிழ் வளர்ச்சி சங்க வேலைக்கு வந்தவன் தமிழ் படித்திருந்ததால்
தேர்ந்து எடுக்கப் பட வில்லை.

Friday, August 22, 2008

பொழுது போகாத ச்சின்னப்பையனுக்கு

ச்சின்னப்பையனுக்கு பொழுது போகவில்லையாம்.
இப்படிப்பட்டவற்றையும் கண்டுபிடிக்கட்டும்.
ஓரெழுத்துச்சொல்-
கை..
கீ (சாவி)
தா
தீ
தை
நோ (NO)
பூ
பை, போ ,மை, ரோ(ROW)
வை

இரண்டு ஒறே எழுத்து
சௌசௌ
டாடா
தைதை(என குதித்தான்)
பாபா
மாமா
லாலா,
லோ..லோ(என அலைந்தான்)

ஒரே வார்த்தைகள் அதன் ஒற்றுடன்
காக்கா
பாப்பா
தாத்தா
சாச்சா
(அப்பாடா..ச்சின்னப்பையனுக்கு வேலை கொடுத்தாச்சு)

தாரே ஜாமீன் பர் லேட்டா வந்துள்ள லேட்டஸ்ட் விமரிசனம்

.
ஒரு தமிழ் படத்தயாரிப்பாளர் பார்வையில்

எல்லாரும் ஆஹா ,ஒ ஹோ ன்னு சொல்ராங்கலேன்னு அந்த படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு ஹிந்தி தெரியாது. இதுதான் தலைவா ஒரு கஷ்டம் ..நாம இந்தியாவிலே
இருந்தாலும் ,இந்தியாவிலே தயாரிக்கிற படத்தை நம்மலாலே
பார்க்கமுடியல்ல ..பார்த்தாலும் புரிஞ்சுக்க முடியல்ல.
இந்த படத்தோட DVD கிடைக்குமான்னு தேடினேன். அதுல தானே இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கும்.(இங்கிலீஷ் ல கூட நான் வீக்
.அது வேற )
DVD கிடைச்சது. பார்த்தேன்.
என்ன அநியாயம் இது? இந்த படத்திலே என்ன இருக்கிறது?
ஒரு சண்டைக் காட்சி இருக்க...ஒரு கவர்ச்சி நடனம் உண்டா...
அவ்வளவு ஏன்...இதுலே ஒரு ஹிரோயின் னு கூட கிடையாது.
அப்பறம் தானே கவர்ச்சி .. தொப்புள்...எல்லாம்.
சரி.. அதுதான் போகட்டும்னா ,ஒரு வெளி நாட்டுலே கனவு காட்சி.
ஒரு பாட்டு,குறைஞ்ச ஆடையிலே ஒரு நடனம்..ம்..ம்...ம்..ம்..
சரி கதைக்கு வரேன்
டிச்லேக்சியா ங்கிற படிக்கிற திரன்லே குறைபாடுள்ள சிறுவனின்
கதை. அமீர்கானைவிட சிறுவன் நல்லா நடிச்சுருக்கான். ஆமாம் ..
இப்படி குழந்தைகளை நடிக்க வச்சா.. குழந்தை தொழிலாளர்கள்
சட்டம் மீரினாற்போல் இல்லையோ?
பாதியிலே DVD யை ஆப் பண்ணிட்டேன்.
சுவாரிசியமா எதுவுமில்ல.. ..நமக்கு இந்த படம் சரிப்படாது.
நம்ம அடுத்த படத்துலே நயன்தாரா பில்லா லே வர மாதிரி ஒரு கவர்ச்சி சீன் வைக்க சொல்லி இருக்கேன். கனல் கண்ணன் வேற காத்துக்கிட்டு இருக்கார்.
நான் வரேங்க.
நம்புங்க.. என்னாலே தாரே ஜாமீன் பார் மாதிரி ஒரு மட்டமான
படத்தை எடுக்க முடியாது.

Thursday, August 21, 2008

இளைஞர்களுக்கு வழிவிடப்படுமா?

தி.மு.க.வைத் தொடங்கும்போது அண்ணாவுக்கு நாற்பது வயது, நாவலருக்கு 29 வயது, பேராசிரியருக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது, மதியழகனுக்கு 25 வயது... எனவே, வயது எதற்கும் தடையில்லை... - இப்படித்தான் தி.மு.க.வின் தலைவர்கள் எல்லாரும் பேசினார்கள், 1980-ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது!

ஆனால், தி.மு.க.வில் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.

இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.

தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.

அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.

வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் முதல்வராவாரா?

இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.

இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.

``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.

``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.

`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.

மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?

Wednesday, August 20, 2008

நகையெல்லாம் கவரிங்

வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு திருமணமா?' என்று தமிழகமே வாய்பிளந்து பார்த்தது... பி.பி.சி. உட்பட உலகத் தொலைக்காட்சி களே அதிசயித்து அந்தத் திருமணத்தை நேரடி ஒளி பரப்பு செய்தன... அது மட்டுமா?

`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...

விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.

சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது...

அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.

ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்!

சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!

வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.

இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்...

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.

சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...

``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர்.

இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.

எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்...

`ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம்.

ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்...

இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.''

இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....

வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.

மதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை

எடுக்கப்பட்டு விட்டதா?ஏன்? என பரிசல்காரனிடமிருந்து
ஒரு கேள்வி.,
இந்த கேள்வி வராவிட்டால் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.
சில அனானிகளின் அநாகரிக பின்னூட்டம்..உண்மையான சில நண்பர்களிடமிருந்து
இது வேண்டாமே...ஓவர்..என அறிவுறுத்தல்கள் அந்த பதிவை எடுத்துவிட வேண்டிய
நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது.பின்னூட்டம் இட்ட ச்சின்னப்பையன்,செந்தழல் ரவி
பரிசல்காரன் அனைவருக்கும் நன்றி.
பெரிய தலைவர்களையெல்லாம் கண்டபடி கேலி செய்து கார்ட்டூன் போட்ட மதனை
ரசித்தவர்கள்..அவரை நையாண்டி செய்வதை ஏன் ரசிக்க மறுக்கிறார்கள்?

தமிழச்சியிடம் பெரியாரின் ஆணாதிக்கம்

பெண்ணுரிமைப்பற்றி பெரியாரை தவிர எந்த தலைவரும் அதிகமாக பேசியதில்லை.ஆனால் பெரியார் படம் பார்த்தபோது ஒரு காட்சி மனதை உறுத்தியது.ஓரு ஏழை,தாழ்ந்த ஜாதி வீட்டில் அவரும் மணியம்மையும் சாப்பிடப்போகிறார்கள்.
அங்கே இருந்த நாற்றம் மணியம்மையால் சாப்பிட முடியவில்லை.தன் இலையின் அடியில் சாப்பாட்டை மறைத்து,சாப்பிட்டது போல பெயர் பண்ணுகிறார்.இது கண்டு பெரியார், அனைவர் எதிரிலும் எச்சிக்கையால் 'பளார்'என அறைகிறார்..
அவர் இப்படி செய்யலாமா?இதுவும் ஆணாதிக்கம் தானே?!

Tuesday, August 19, 2008

என்றும் நீ என்னோடுதான்

மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்

சற்றேனும் அறிவாயோ?

பாலும், பழமும், தேனுமென

குழந்தை பருவத்தில்

கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை

மகிழ்ச்சிக் கொண்டேன்!

வாலிப வயதிலோ..விரைவு உணவென

கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி

குப்பைக்கூடையாகினாய்..

உயிர் குடிக்கும் மதுவை

உள்ளே செலுத்தியவாறு

கல்லைத் தின்னாலும்

செரிக்கும் வயதென

செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..

எனக்கும் மூப்புண்டு அறிவாயா?

அத்தனையும் தாங்கும்

அடித்தளம் முற்றும் அழிந்தது

மரண அழைப்பு வந்தது

புற்றென பெயரில்..

சென்றிடுவோம் ..வந்திடு

என்றும் நீ என்னோடுதான்.

Monday, August 18, 2008

என்னை யாரும் ஏமாற்றமுடியாது - கலைஞர்

சென்னையில் சமீபத்தில் நூலகம் ஒன்றிற்கு அடிக்கல்
நாட்டிய முதல்வர்..தன்னை யாரும் ஏமாற்றமுடியாது
என்றும்,யாரை எங்கு வைப்பது என தனக்குத் தெரியும்
என்றும் பேசினார்.

அவர் கூற மறந்த அவர் ஏமாந்த தருணங்கள்-

1.பொருளாளராக இருந்த M.G.R., கணக்குக் கேட்டதும்..அப்போது
அவருக்குத் தெரியாது M.G.R., ஒரு பெரிய சக்தியாக உருவாவார் என்று.
கலைஞர் முதல் ஏமாந்தது இத் தருணத்தில் தான்.

2.M.G.R.,மறைவுக்குப் பின் ஜானகி அணிக்கு ஆதரவு கேட்டு வீரப்பன் வந்த
போது..ஆதரவு அளிக்க மறுத்தது.அப்படி அன்று ஆதரவு அளித்திருந்தால்
பிற்காலத்தில் ஜெ தலைமையில் அண்ணா தி.மு.க., வளர்ந்திருக்காது.
இதிலும் கலைஞர் ஏமாந்தார்.

3.2001 தேர்தலின் போது..அதீத நம்பிக்கையில்...தன்னை ஆதரித்த கட்சிகளை
விலக்கி..தேர்தலை சந்தித்தது..வெற்றி வாய்ப்பை இழந்தது.

4.M.G.R.க்கு போட்டியாக வரவேண்டும் என் தன் மகன் முத்துவை நடிகனாக
ஆக்க முயன்று ஏமாந்தது.

5.மாறன் சகோதரர்கள் தன்னை விட்டு விலகி விடுவார்கள் என அறியாது..அரசியலில்
சற்றும் அனுபவம் இல்லா தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கி ஏமந்தது.
(இவர்கள் சர்ச்சைக்கு உண்மையான காரணம்..தன் பெயரிலும்,தன் மனைவியின்
பெயரிலும் இருந்த சன் டீ.வீ. பங்குகளை விற்ற போது..அதற்கான
பணத்தை சகோதரர்கள் குறைவாகக் குடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்ற
வதந்தியும் உண்டு.இதிலும் ஏமாந்தார் கலைஞர்.)

6.தான் நம்புபவர்கள் எல்லாம்..தன் முதுகில் குத்துகிறார்கள் என சில நாட்கள்
முன்பு அறிக்கை விட்டார் முதல்வர்.அப்படியென்றால்..அவர் நம்பியர்வர்கள்
அனைவரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

இப்போதற்கு எனக்கு ஞாபகம் வந்தது இவ்வளவுதான்...வேறு சந்த்ர்ப்பங்கள்
ஞாபகம் வந்தால் அடுத்த பதிவில் தொடரும்.

வாய் விட்டு சிரியுங்க

1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்

Sunday, August 17, 2008

மனிதர்களும் நாயும் (சிறுகதை)

'அம்மா' ..எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கலேன்னா ..நான் இனிமேல் கல்லூரிக்கு போகமாட்டேன்' என்று மகன் ரவி சொல்ல. .அதைககனவன் கோபாலி டம் சொல்லச் சென்றாள் மாதவி.
கோபாலோ .. வளர்ந்து நிற்கும் தன் மகள் ஜானகிக்கு நாயாக அலைந்தும் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லையே
என்ற சோகத்தில் இருந்தான். மாதவி தகவலைச் சொன்னதும் அவளைப் பார்த்து 'வாள் வாள்' என கத்த ஆரம்பித்தான்.
'நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி 'வள் ளு ' ன்னு விழறீங்க' என்றபடியே உள்ளே சென்று விட்டாள் மாதவி .
அப்பாவின் கோபத்தைப் பார்த்து விட்டு வாலைச்சுரிட்டிக்கொண்டு மூலையில் படிக்க ஆரம்பித்து விட்டான் ரவி
அவனைப் பார்த்து ஜானகி கலாய்க்க ஆரம்பித்தாள்
பொறுமை இழந்த ரவி 'என் கிட்ட வாலாட்டினே அப்பா கிட்ட சொல்லிடுவேன்.. ஜாக்கிரதை' என்றான்,
'நன்றி கெட்ட ஜன்மம்' என அவனைத் திட்டிவிட்டு படிக்க ஆரம்பித்தாள்.
அப்பா அலுவலகம் கிளம்பியதும் மீண்டும் அம்மாவிடம் வந்த ரவி 'அம்மா' என அவளைக் கட்டிக் கொண்டான்.
'ஏண்டா நாயாட்டம் மேல விழரே.. இந்த வீட்டிலே உங்கப்பாகிட்ட குப்பை கொட்டறதை விட ஒரு நாயா பிறந்து இருக்கலாம்' என்றாள் மாதவி.
மாலை மணி ஆறு...
அலுவலகத் திலிருந்து .. கோபால் ஒரு புதிய கைனடிக் ஹோண்டா வில் வந்து இறங்கினான்.
வண்டியை நாக்கை நீட்டியபடி ஜொள்ளு வழிய பார்த்த ரவியிடம் 'சம்பள உயர்வு கேட்டு ..மேலதிகாரி இடம்
வாலைக் குழைச்சு கிட்டு கெஞ்சினேன் .உடனே கொடுத்திட்டார் .அந்த மகிழ்ச்சியில் உனக்கு வண்டி வாங்கிட்டேன் 'என்றான்.
காலையில் இருந்து அந்த வீட்டில் நடந்த களேபரம் எல்லாவற்றையும் உன்னிப்பாக ..ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடன்
பார்த்துக் கொண்டிருந்தது ..டாமி.

Saturday, August 16, 2008

இலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்ற வேண்டும்

இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்ட பல லட்சம் மக்களை அந்நாட்டிலேயே சௌகரியமாக வாழச் செய்ய வழி காணாமல்,அவர்களின் எவ்வளவு பேரை எப்படி பங்கு போட்டு இந்தியாவிற்கு வரவழித்துக்கொள்ளலாம் என்பது பற்றி நமது சர்க்கார் இலங்கை பிரதமருடன் வாதம் நடத்தி முடித்திருக்கிறது.இந்த பேர விவாதம் நீடித்து இரு சர்க்கார்களின் 'உடன்படிக்கை'க்கணக்கை பார்க்கும் போது தமிழ் இதயங்களீின் ரத்தம் கொதிக்கும்.பல தலைமுறைகளுக்குமுன்.இலங்கை சென்று அந்நாட்டில் தங்கள் நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைத்து,அதனை வாழவித்தவர்களின் வாரிசுகளில் பெரும் பகுதியினருக்கு அங்கு இடமில்லை என்ற அநியாயத்தை எப்படி ஏற்பது?இலங்கையில் பிறந்ந ஒரு இந்திய வம்சாவளியினர் அங்கேயே வாழ விரும்பி அந்நாட்டிலே வேலை செய்து வரும்போது அந்த ஒரே ஒருவரை 'நாடற்றவ'ராக்கி இந்தியாவிற்கு துரத்தினாலும் அது அநீதியாகும்.ஆனால் இப்போதோ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அகதியாக்கியுள்ள ஏற்பாட்டுக்கு இந்திய சர்க்கார் ஒப்புக்கொண்டிருக்கிறது.இது இலங்கை சர்க்காரின் வெற்றி.தமிழர்கள் அகதிகளாக நிற்கின்றனர்.

அன்று தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக ஒரு காந்திஜி எழுச்சிக்கொண்டு போராடியதுபோல இன்று இலங்கை தமிழர்களுக்காக ஒருவர் அந்நாட்டில் எழுச்சி பெற மாட்டாரா?இலங்கை அரசாங்கத்தை விட கொடிய எதிராளியுடன் காந்திஜி போரிட்டார்.அன்று மனித உரிமைகளை காக்கும் அய்க்கிய நாடுகள் சபையும் இருக்கவில்லை.எனினும் அண்ணலின் சத்தியம் வென்றது.
இலங்கையிலும் சத்தியத்துக்காக போராட ஒரு தீரன் தோன்றவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

(1965ம் ஆண்டு கல்கி பத்திரிகையில் வந்த தலையங்கம்

Friday, August 15, 2008

நலம்..நலம் அறிய ஆவல்

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா?

குடிப்பது எப்படி

குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பது எப்படின்னு வால் பையன் ஒரு
பதிவு போட்டிருந்தார்..ஆனால் ஆரம்ப நிலையான குடிப்பது எப்படி என்பதை
அவர் சொல்ல வில்லை.அது ஒரு முக்கியமான வேலை என்பதால்
நான் ஒரு பதிவு போட வேண்டியது இந்த சுதந்திரநாளில் ஒரு இந்திய
குடிமகனின் கடமை என்று எண்ணியதால் இப்பதிவு.
முதலில்...ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்..நீங்கள் குடிப்பது
மினரல் வாட்டராய் இருந்தால்..அந்த பாட்டிலின் மூடியைத் திறந்து..அந்த டம்ளரில்
முக்கால் பாகமோ..அல்லது முழு பாகமோ தண்ணீரை ஊற்றி..அப்படியே
மெதுவாக எடுத்து சிப் பண்ணி சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.
இதற்குத்தான் குடித்தல் என்று பெயர்.
மினரல் வாட்டரோ,கண்ணாடி டம்ளரோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என
ஏதேனும் பின்னூட்டம் வந்தால்..அதைப்பற்றி அடுத்த பதிவு..வால்பையனோடு
கலந்து ஆலோசித்து இடப்படும்.

Thursday, August 14, 2008

என்னென்னவோ ஆகப்போகிறார் ஸ்டாலின்

இன்று (14-8) சென்னை தி.நகரில்(மன்னிக்கவும் தியாகராய நகரில்)
உஸ்மான் சாலை..துரைசாமி சாலைசந்திப்பில் மேம்பாலத்தை
திறந்து வைத்து பேசிய முதல்வர்..உஸ்மான் என்பது இஸ்லாம் சமூகத்தை
சேர்ந்தவர் பெயர்..துரைசாமி என்பது ஐயர்..இருவரையும் இம் மேம்பாலம்
இணைக்கிறது என்றார்.மேலும் பேசுகையில் ..மேயர் சுப்ரமணியத்தை
பாராட்டியவர்...ஸ்டாலின் பற்றி கூறுகையில்'இவர் மேயராக இருந்தபோதும்..
இப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி..பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளார்..
இவர் இன்னும் என்னென்னவோ ஆகப்போகிறவர்..'என்றார்.
அந்த என்னென்னவோக்களில் ஒன்று எனக்குத் தெரியும்...
வேறு ஏதாவது என்னென்னவோ உங்களுக்குத் தெரியுமா?

மனிதனானால் காதல் செய்! - பாரதியார்

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது.ஒரே ஒரு தெய்வம் முடியும் வரை விரிந்து நிற்பது--அதுதான் காதல்.
காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை எழுதுதல் ஆகாதென்று தடுத்தால், அவர்கள்..நமக்கு தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள்; பறவைகளின் பாட்டையும்,மலர்களின் கந்தத்தையும்,குழந்தையின் சிரிப்பையும்,ஞாயிற்றின் ஒளியையும்,காற்றின் உயிர்ப்பையும்,விண்
மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது?
தெய்வத்தின் படைப்பு முழுதும் காதலுக்கு தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது.உலகம் முழுதும் தூது போகச் செய்கிற திறமை காதலர்க்கு உண்டு.
இளவேனிற் காலமே நான் எழுதுகிற ஓலை நீ
உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய் பிற
செடியானால் தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்
காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.

நான் என்ன படிக்கணும்? குட்டிக்கதை

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.

'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

Wednesday, August 13, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.நம்ப தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலாக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

2.வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை

3.நண்பன்-(தன் நண்பனிடம்) கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டே..என்னைப்பற்றி இப்போ
உனக்குத் தெரியாது..நீ accident ஆகி hospital ல இருக்கும்போதுதான் உயிர் காப்பான் தோழன்னு
என்னைப் புரிஞ்சுப்ப...

4.போன வாரம் செத்தது..நீயா..இல்ல உன் அண்ணனா?
ம்...நீ அண்ணன்னு சொன்னது என்னையா இல்ல என் தம்பியையா?
???!!!!

5.அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

6.என்னை யாராவது முட்டாள்..மடையன்னு திட்டினா..நீ தாண்டா அதுன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு 'வரட்டுமா'
அப்பிடின்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்
அப்போ நான் வரட்டுமா...
???!!!!

தமிழனுக்கு...---பாரதி (இலக்கியம்)

தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.
உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.
தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.
பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்க்ளும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்த்ங்க்கலும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.

Tuesday, August 12, 2008

முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்???!!!!

துணிச்சலான யோசனை,புரட்சிகரமான சிந்தனை இவற்றில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இதை தெரிவித்துள்ளது.
அம்பானி..அப்பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்..
அதில் அவர்'இந்தியாவின் நன்மையை நோக்கமாகக் கொண்டே எங்கள் நிறுவனம் செயல் படுகிறது.168 லட்சம் கோடி வருமானம் உள்ள எங்கள் நிறுவனம் 100 கோடி இந்தியர்களின் நலனைச் சார்ந்தே இயங்கும்.விவசாயிகள் பலன் அடையும் வகையில் இதுவரை 700இடங்களில் காய்கறி,உணவுப்போருள்கள் கடைகளை தொடங்கி பல ஆயிரம் பேருக்கு நேரடி,மறைமுக வேலை அளித்துள்ளோம்.5 ஆண்டுகளீல் 3 கோடி விவசாயிகள், மற்றும் ஊழியர்களுக்கு வேலை அளிக்க உள்ளோம்'என்றார்.
அவரது பேட்டி வெளியான செய்தியில்..தனது துணிச்சலான முடிவுகள்..புரட்சிகர சிந்தனைகளின் மூலம் காந்திக்கு
அடுத்தபடியாக இந்தியாவின் சிறந்த மனிதராக முகேஷ் அம்பானி விளங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அம்பானியை பாராட்டட்டும்..வேண்டாம் என்று சொல்லவில்லை..
ஆனால் காந்தி யுடன் அவரை ஒப்பிட்டது...
காந்தி ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டார்.ஆனால் அம்பானி..? ஏழை காய்கறிவிற்பவர்கள்,கீரை விற்கும் பெண்கள் ஆகியவர்களின் வயிற்றில் அடிக்கிறார்.
தேசப்பிதாவுடன், 8000 கோடிyil மனைவிக்காக வீடு கட்டும் அம்பானி ஒப்பிடப்படுகிறார்.
ஒவ்வொரு இந்தியனும் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறோம்.
இதுவே வேறு எந்த நாடாய் இருந்திருந்தாலும்..பத்திரிகையை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கும்.

Monday, August 11, 2008

தாரே ஜமீன் பர் தமிழில்

அமீர்கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தாரே ஜமீன் பர்.
அது தமிழிலும்,தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர்
12ம் தேதி வெளிவருகிறது.தமிழில் அமீர்கானுக்கு நடிகர் சூர்யா குரல்
கொடுத்துள்ளார்.
இயக்குநர் முருகதாஸ் கஜினி படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து
இயக்கி வருகிறார்.ஒருநாள் படபிடிப்பின் போது..தாரே ஜமீன் பர் படம்
தமிழில் வரவேண்டும் என்ற கோரிக்கை வந்த பத்திரிகை ஒன்றை அமீரிடம்
காட்ட..அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாராம்.
பிரமீட் சாய் மீரா நிறுவனம் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.
தமிழில் 'வால் நட்சத்திரம்'என்ற பெயரிலும்..தெலுங்கில்'நிலமீது தாரலு'
என்ற பெயரிலும் வரும்.
இச்செய்தியை..தாரே...படத்திற்கு Gollapudi ஸ்ரீனிவாச நேஷனல் விருது வழங்கும் விழாவில் அமீர் தெரிவித்தார்.

வாய் விட்டு சிரியுங்க

தயாரிப்பாளர்-(இயக்குநரிடம்)நம்ம படத்திலே கிளைமேக்ஸ் எல்லோரும் நம்பும்படி இருக்கணும்
இயக்குநர்- வில்லன் கார்ல தப்பி ஓடறான்..ஹீரோ ஒரு ரோடு ரோல்லர் ல போய் அவனைப் பிடித்து விடுகிறான்.

2.என் முதலாளி சரியான நன்றி கெட்ட ஜன்மம்..எதெற்கெடுத்தாலும் வள் வள்னு விழறார்
வள் வள்னு விழறவர் எப்படி நன்றி கெட்ட ஜன்மமாய் இருப்பார்.

3.சிறுவன்(வீட்டுக்குவருபவரைப்பார்த்துவிட்டு) அப்பா..இந்த மாமாவிற்கு இரட்டை நாக்குன்னு சொன்னே ஆனா
ஒன்னுதான் இருக்கு

4.நகைச்சுவை எழுத்தாளராக கொடி கட்டி பறந்தீர்கள்..இப்போல்லாம்..நீங்க ஏன் நகைச்சுவை கதை எழுதறதில்லை?
இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு

5.டாக்டர்..உங்ககிட்ட வர்ற பேஷண்ட்ஸ் குறைவுதான்..அதுக்காக வர்ற பேஷண்ட்ஸ் எல்லாம்..தன்கூட இன்னொரு
பேஷண்டை கூட்டிக்கிட்டு வரணும்னா எப்படி?

தமிழ் வளர ...

தமிழ் வாழ்க ... தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா ?
தமிழ் வாழவேண்டுமானால் .. தமிழை தமிழன்னு சொல்கிற வர்கள் அனைவரும்
வாசிக்கவேண்டும் ..தமிழாசிரியர்களை மதிக்கவேண்டும் தமிழாசிரியர்களையும் ,
தமிழ் எழுத்தாளர்களையும் மதிக்காத மொழி எப்படி வளரும் .
தமிழ் படிச்சா கேவலம்ன்னு தமிழன் நினைக்கிறான்.தெலுங்கலித் தாய்மொழியாகக் கொண்டவன்..அதே மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவனைப் பார்த்தால் "பாக உன்னாரா"னு  கேட்கறான்.
மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் மற்றொரு அதே தாய்மொழிக்காரரனைப் பார்த்தால்,
"சுகம்தன்னே: என்கிறான்.
அதே போன்றே மற்ற மொழியினரும் நடக்கின்றனர்
ஆனால்//

ஒரு தமிழன் மட்டும் இன்னொரு தமிழனைப்பார்த்தால் ஹலோ
ஹொவ் ஆர் யு ? ன்னு கேட்கிறான் .
கொஞ்சம் யோசனை செய்தால் தமிழனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப்பற்று குறையுதுன்னு தோன்றுகிறது.