Thursday, August 14, 2008

நான் என்ன படிக்கணும்? குட்டிக்கதை

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.

'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

15 comments:

Kanchana Radhakrishnan said...

வாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் நெஞ்சம்.
ஆனால் சுதந்திர நாட்டில் வாழும் சுத்ந்திர அடிமைகளாகத் தானே இன்னும் மக்கள் இருக்கின்றனர்.

Anonymous said...

ஏதோ LKG படிக்கிற பையன்னு நெனைச்சுப் படிச்சா, 24 ம்ணி நேரம்தான் ஆச்சா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வடகரை வேலன்

சின்னப் பையன் said...

:-)))))))))

சின்னப் பையன் said...

//இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா.//

அப்போ கொஞ்ச நாளைக்கப்புறம் மென்பொருளுக்கு மௌஸ் (எலிக்குட்டி) தேவையில்லையா?

Kanchana Radhakrishnan said...

நீங்களே மவுஸ்..மௌஸ் வித்தியாசத்தை சொல்லிட்டீங்க..அப்புறம் என்ன ச்சின்னப்பையன்.

Kanchana Radhakrishnan said...

//அப்போ கொஞ்ச நாளைக்கப்புறம் மென்பொருளுக்கு மௌஸ் (எலிக்குட்டி) தேவையில்லையா?//

சொல்லமுடியாது..அப்படியும் நடக்கலாம்

மங்களூர் சிவா said...

24 மணி நேரமாச்சு இன்னுமா முடிவு பண்ணலை லேஸி ஃபெல்லோஸ்

Kanchana Radhakrishnan said...

//24 மணி நேரமாச்சு இன்னுமா முடிவு பண்ணலை லேஸி ஃபெல்லோஸ்//

சிவா வை காணோம்னு சூடான இடுகையில் வர பதிவு போடணும்னு நினைச்சேன்...வந்துட்டீங்க சிவா...

MSK / Saravana said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்....

Kanchana Radhakrishnan said...

//அவ்வ்வ்வ்வ்வ்வ்....//

:-)))))

Anonymous said...

good story

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அனானி

நாமக்கல் சிபி said...

நல்ல கதை!

Kanchana Radhakrishnan said...

nanri sibi