Wednesday, August 27, 2008

கோவி கண்ணனும்,பதிவுகளும்

கோவி கண்ணன் சிங்கையில் சிஸ்டம் இஞ்சினியராக பணி புரிந்து வருகிறார்.நான்கு வருடங்களாக பதிவராக உள்ளார்.(govikannan.blogspot.com)
பதிவு உலகில் புதியதாக வருபவர்கள்..முதலில் இவரின் சில பதிவுகளையாவது படிக்க வேண்டும்.சாதாரண விஷயங்கள் முதல்..பல சமூக,அறிவியல்,பகுத்தறிவு,உலக நடப்பு,நகைச்சுவை,
மொக்கை பதிவு என எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் பதிவர்கள் மிகச் சிலரே!!!அதில் கண்ணனும் ஒருவர்.
நான் பதிவுகளில் நுழையும் முன் நான் படித்த சில பதிவர்கள்...தமிழச்சி,கோவி கண்ணன்.டோண்டு ராகவன்.
தமிழச்சியின் துணிச்சலான பதிவுகள்
டோண்டுவின் சிந்தனைப் பதிவுகள்
கோவி யின் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுகள். இவைதான் என்னை பதிவு எழுத தூண்டியவை.
இந்த பதிவு கோவியைப் பற்றியது ஆதலால் அதைப்பற்றி...

சிறுகதை- அவர் சில சிறுகதைகளை பதிவேற்றி இருக்கிறார். அதில் 'புணரபி மரணம்..புணரபி ஜனனம்' என்று ஒரு கதை.அருமையான கதை.படிக்காதவர்கள் அந்த வலைப்பக்கத்துக்குச்
சென்று தவறாமல் படிக்கவும்.
மரணம்..ஜனனம்..எல்லாம் மாயை...எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்?

இடஒதுக்கிடு- பற்றி ஒரு பதிவு..உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
ஜாதி மக்கள் அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் சமத்துவம் ஏற்படும்.
அவரின் இந்த எண்ணம்..அவரை ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் தோற்றுவிக்கிறது.
யாருக்கும்..எதற்கும் பயப்படாது..தன் எண்ணங்களை பதித்துள்ளார்.

எண்ணப்படம் பார்த்ததுண்டா வில்...விசித்ரமனம் பற்றி ஒரு பதிவு
'அறிவியல்..ஆன்மீகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும்..மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல் படுகிறது என்பதற்கான தெளிவுரை எவருமே எழுத வில்லை..'என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
ரோஜாவை எப்படி அழைத்தாலும் ரோஜாதான்..பதிவில்..பல்வேறு பெயர்களில் ரோஜாவை ஏற்றுக் கொள்ளும் நாம் பல் வேறு பெயர்களில் (ஈஸ்வரன்,அல்லா,ஜீஸஸ்)அழைக்கப்படும் பரம்பொருளை எண் ஏற்பதில்லை ...என்கிறார்.
கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம்...ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றய ஒரு பதிவு..சிங்கையில் இருந்தாலும்..தமிழ்நாட்டை மறக்காத தமிழன் தான் என்பதை உறுதி படுத்துகிறார்.
சில மொக்கை பதிவகளும் உண்டு.
ஆனால் அவை நமக்கு மொக்கையாகத் தெரிவதில்லை.
பதிவர் சந்திப்பு..என்பார்..பார்த்தால் மார்க்கெட்டில் இரு பதிவர்கள் பார்த்திருப்பார்கள்.அவ்வளவுதான்..ஆனால்..படிக்க நமக்கு சுவையாக இருக்கும்..அதுதான் அவர் எழுத்து.
பொன்முடி ஆங்கிலம் படிக்க வேண்டிய..அவசியத்தை கூறியுள்ளதை..ஆதரித்து..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்று ஒரு பதிவு.
மொத்தத்தில் தன் மனதில் சரி என்று தோன்றுவதை..யாருக்கும்..எதற்கும் பயப்படாமல் பதிவிடுதல் இவர் ஸ்பெஷாலிடி.

பின்னூட்டம்-பின்னூட்டம் இடுவதிலும் தனித்து நிற்பவர்.ச்சின்னப்பையனின் ஒரு பதிவுக்கு..குமரி முனையில் நில்லுங்கள்..உங்கள் பின்னால் 100 கோடி பேர் இருப்பர் என மெல்லிய நையாண்டி..எனது வாய் விட்டு சிரியுங்கள் பதிவிற்கு 'நான் வாய் விட்டு சிரித்தால்..வேலைக்கு ஆப்பு"என்று பின்னூட்டம் இட்டவர்..எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.
எவ்வளவு பேருக்கு..பாராட்டும் மனம் இருக்கிறது?

புதிய பதிவர்கள் என்றால்..அவர்களை ஊக்குவித்து (கலைஞர்..ஸ்டாலின்..ஊக்கு அல்ல) மூத்த பதிவர் என்ற தோரணை இன்றி பின்னூட்டம் இடுவார்.
அவ்வளவு ஏன்..சில மாதங்களாகவே எழுதும் என்னை (தமிழா..தமிழா..)..உங்களுக்கு பிடிக்கும் என தன் பதிவின் முகப்பில் இட்டுள்ளார்.

இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்...ஆனால் பதிவு நீண்டுவிடும்..
புது பதிவர்களே...இவர் பக்கத்திற்கு சென்று..இவர் பதிவுகளை படியுங்கள்.
ஆமாம்..இவர் பதிவில் எது சிறந்தது?
வெல்லக்கட்டியில் எந்த பாகம் இனிப்பு..சொல்லுங்கள்..நானும் சொல்கிறேன்.

22 comments:

செல்வ கருப்பையா said...

இந்த வரியை விட்டுட்டீங்க...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவர் இளம் வயதிலேயே வீட்டு சுவற்றில் ஏகப்பட்ட பதிவுகளை எழுதி இருக்கிறார்! ;-)

Kanchana Radhakrishnan said...

//இந்த வரியை விட்டுட்டீங்க...
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப அவர் இளம் வயதிலேயே வீட்டு சுவற்றில் ஏகப்பட்ட பதிவுகளை எழுதி இருக்கிறார்! ;-)//

தகவலுக்கு நன்றி செல்வ கருப்பையா

குமரன் (Kumaran) said...

நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)

சின்னப் பையன் said...

நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)

துளசி கோபால் said...

சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக்கே முதல்லே உங்களைப் பாராட்டணும்.

கோவியார் நேரில் பழகவும் மிகவும் இனிய நண்பர்.

மகிழ்ச்சியா இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)//


வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி குமரன்

Kanchana Radhakrishnan said...

//நல்லதொரு இடுகை. பாராட்டுகள். :-)
//

வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ச்சின்னப்பையன்

Kanchana Radhakrishnan said...

//சக பதிவரை மனம் திறந்து பாராட்டி இருக்கீங்க. அதுக்கே முதல்லே உங்களைப் பாராட்டணும்.

கோவியார் நேரில் பழகவும் மிகவும் இனிய நண்பர்.

மகிழ்ச்சியா இருக்கிறது.//



வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி துளசி கோபால் அவர்களே

கோவி.கண்ணன் said...

//எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.//

ராதாகிருஷ்ணன் ஐயா,

அது எம்.ஆர்.ராதா பற்றிய பதிவு அல்ல. 'எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுக்கள்' என்ற பதிவிற்கு இட்ட பின்னூட்டம் அது என்று நினைக்கிறேன்.

:)

எனது பதிவுகளை கூர்ந்து கவனித்து இருக்கிறீர்கள், உங்களைப் போன்ற பெரியவர்களிடம் பாராட்டு பெருவது என் எழுத்துக்கான வெகுமதி என்று நினைத்து மகிழ்கிறேன். மிக்க நன்றி ஐயா.

குமரன், ச்சின்னப் பையன் மற்றும் துளசி அம்மா ஆகியோருக்கும் நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

பதிவுக்கு நன்றி!

திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரிகள்!

பட்டதைப் (பட்டறிவையும் தான்) பட் என்று சொல்லும்/எழுதிவிடும் பகுத்த அறிவாளர்(பகுத்தறிவாளராகவும் வைத்துக் கொள்ளாலாம், அவர் சாமி கும்பிடுவதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறார்)

பண் பட்ட எழுத்தாளர்,

கண் பட்ட கவிஞர்,

எனக்குத் தென்பட்ட மனிதர்,

சிறு கதைகளை எழுதிய சிந்தனைச் செல்வன்,

விமர்சிக்கப்படும் விமர்சகர்,

கனிந்த கட்டுரையாளர்,

மின்னணுவியல் படித்தவர், தன்னைத் தமிழணுவாக்கிக் கொண்டவர்,

ரம்மியமான ரசிகர்,

வலைஞர் மட்டுமல்ல இளைஞர்,

தஞ்சை தரணியில் பிறந்தத் தமிழ்ப் பற்றாளன்(இயற்கையாகவே-Obviously)

வலைப்பதிவர்களை வலைபோட்டுத் தேடும் வலைஞர்!

கோவி.கண்ணன் said...

//அவர் சாமி கும்பிடுவதில்லை என்று என்னிடம் சத்தியம் செய்திருக்கிறார் //


ஜோதி, அன்புக்கு நன்றி !

கொஞ்சம் பிழையான தகவல். சாமி கும்பிடுவதற்கான தேவை எனக்கு இல்லை என்பதால் கும்பிடுவதில்லை என்று சொல்லி இருக்கிறேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், 'சாமி கும்பிடுவதில்லை' என்று நான் சபதம் செய்து கொண்டது போல் புரிய வைத்துவிடும் ! அப்படியெல்லாம் இல்லை, அன்பானவர்கள் யார் அழைத்தாலும் அவர்களுடன் கோவில்களுக்குச் சென்று வருவேன், கும்பிடுதல், வேண்டுதல்கள் எதுவும் இருக்காது !
:)

Kanchana Radhakrishnan said...

//ராதாகிருஷ்ணன் ஐயா,

அது எம்.ஆர்.ராதா பற்றிய பதிவு அல்ல. 'எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுக்கள்' என்ற பதிவிற்கு இட்ட பின்னூட்டம் அது என்று நினைக்கிறேன்.

:) //


நீங்கள் சொல்வது போல 'எதற்கும் அஞ்சா..."விற்கு நீங்கள் இட்ட பின்னூட்டம்தான் அது.தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.எம்.ஆர்.ராதா..பற்றிய பதிவுக்கு 'மனிதநேயம்'மிக்கவர் என்று பாராட்டிஉள்ளீர்கள்.உங்கள் எல்லா பதிவு பற்றியும் எழுத வேண்டும் என்றுதான் ஆசை..ஆனால் பதிவு நீண்டு விடுமே என்றுதான் சிலவற்றுடன் நிறுத்திக்கொண்டேன்.பின்னர் ஒரு சந்தர்ப்பம் வராமலா இருக்கப்போகிறது?

Kanchana Radhakrishnan said...

//பதிவுக்கு நன்றி!

திரு கோவி.கண்ணனைப் பற்றி சில வரிகள்!//



கோவி பற்றி பின்னூட்டத்திலேயே ஒரு பதிவிற்கான விஷயத்தை சொல்லிவிட்டீர்கள்.வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ஜோதிபாரதி

கிரி said...

கோவி கண்ணன் என்றால் அது கில்லாடி கண்ணன் :-)))

பாராட்டிலேயே பெரிய பாராட்டு அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டுவது தான், சும்மா பேருக்கு கூறாமல்.

கோவி கண்ணன் அவர்களை பற்றிய உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

//பாராட்டிலேயே பெரிய பாராட்டு அடுத்தவர்களை மனம் திறந்து பாராட்டுவது தான், சும்மா பேருக்கு கூறாமல்.

கோவி கண்ணன் அவர்களை பற்றிய உங்கள் பதிவிற்கு என் வாழ்த்துக்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

விஜய் ஆனந்த் said...

மொத்த பதிவுக்கும், எல்லா பின்னூட்டங்களுக்கும் செம்ம ஸ்ட்ட்ராங்கா ஒரு ரிப்பீட்ட்டேய்!!!

TBCD said...

அவ்வ்வ்வ்வ்

அண்ணாச்சி உங்களுக்கு கிடைத்த இந்த பாராட்டுக்களைப் பார்த்து எனக்கு ஆனந்தக் கண்ணீர் வருது...

அவ்வ்வ்வ்வ்வ்

ஃஃஃஃஃஃஃ
காஞ்சனா ராதாகிருஷ்னன்,

நீங்க யாரோ எவரோ தெரியாது, எதுக்கும், வெளியே போகும் போது, ஆட்டோக்களிடம் கவனமாக இருக்கவும்...!!

நல்லவர்களுக்கு காலம் இது கிடையாதுங்கோ....!!

manikandan said...

நான் ஒரு மூணு மாசமா blog படிக்கறேன்.

கோவி சார் (அவர் மட்டும் இல்ல ) எழுதறத பாத்துட்டு நான் எழுதி வந்த bloga அழிச்சுட்டேன். ஒரு inferiority complex தான் !!!

சொல்லப்பட்டுள்ள கருத்த விட அவர் சொல்லுகிற விதம் மிக அழகு. அவரது தமிழ் மிக எளிமையானது.

சில சமயம் மிகவும் opinionated ஆக எனக்கு அவர் தென்பட்டார். அது எனது குறைபாடாகவும் இருக்கலாம்.

Kanchana Radhakrishnan said...

பாராட்டப் பட வேண்டியர்வர்களை பாராட்டாமல் இருப்பதும்..ஒன்றுமில்லாதவர்களைப் பாராட்டுவதும் தமிழர்களின் வழக்கம்தானே!! வருகைக்கு நன்றி கிரி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி விஜய்

Kanchana Radhakrishnan said...

//காஞ்சனா ராதாகிருஷ்னன்,

நீங்க யாரோ எவரோ தெரியாது, எதுக்கும், வெளியே போகும் போது, ஆட்டோக்களிடம் கவனமாக இருக்கவும்...!!

நல்லவர்களுக்கு காலம் இது கிடையாதுங்கோ....!!//



மனசுலே உண்மைன்னு நினைக்கறதை சொன்னா தப்பு இல்லைன்னு நினைக்கிறவன் நான்..இது கூட தற்பெருமைக்கு சொல்லலை..என்னை யாருன்னு தெரியலைன்னு சொன்னதுக்கு.
சென்னையிலே 'மாண்புமிகு நந்திவர்மன்'னு ,இன்றைய அரசியல் நிகழ்வுகளை..ஒரு அரசியல் நையாண்டி நாடகம் போடுகிறேன்.நான் ஒரு நாடக ஸ்கிரிப்ட் ரைட்டெர்.
வருக்கைக்கு நன்றி TBCD ஐயா..

Kanchana Radhakrishnan said...

//சொல்லப்பட்டுள்ள கருத்த விட அவர் சொல்லுகிற விதம் மிக அழகு. அவரது தமிழ் மிக எளிமையானது. //


அதுதான் அவர் பாராட்டப்படுவதற்கு காரணம்.வருகைக்கு நன்றி அவனும்(?)அவளும்(?)