இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்ட பல லட்சம் மக்களை அந்நாட்டிலேயே சௌகரியமாக வாழச் செய்ய வழி காணாமல்,அவர்களின் எவ்வளவு பேரை எப்படி பங்கு போட்டு இந்தியாவிற்கு வரவழித்துக்கொள்ளலாம் என்பது பற்றி நமது சர்க்கார் இலங்கை பிரதமருடன் வாதம் நடத்தி முடித்திருக்கிறது.இந்த பேர விவாதம் நீடித்து இரு சர்க்கார்களின் 'உடன்படிக்கை'க்கணக்கை பார்க்கும் போது தமிழ் இதயங்களீின் ரத்தம் கொதிக்கும்.பல தலைமுறைகளுக்குமுன்.இலங்கை சென்று அந்நாட்டில் தங்கள் நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைத்து,அதனை வாழவித்தவர்களின் வாரிசுகளில் பெரும் பகுதியினருக்கு அங்கு இடமில்லை என்ற அநியாயத்தை எப்படி ஏற்பது?இலங்கையில் பிறந்ந ஒரு இந்திய வம்சாவளியினர் அங்கேயே வாழ விரும்பி அந்நாட்டிலே வேலை செய்து வரும்போது அந்த ஒரே ஒருவரை 'நாடற்றவ'ராக்கி இந்தியாவிற்கு துரத்தினாலும் அது அநீதியாகும்.ஆனால் இப்போதோ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அகதியாக்கியுள்ள ஏற்பாட்டுக்கு இந்திய சர்க்கார் ஒப்புக்கொண்டிருக்கிறது.இது இலங்கை சர்க்காரின் வெற்றி.தமிழர்கள் அகதிகளாக நிற்கின்றனர்.
அன்று தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக ஒரு காந்திஜி எழுச்சிக்கொண்டு போராடியதுபோல இன்று இலங்கை தமிழர்களுக்காக ஒருவர் அந்நாட்டில் எழுச்சி பெற மாட்டாரா?இலங்கை அரசாங்கத்தை விட கொடிய எதிராளியுடன் காந்திஜி போரிட்டார்.அன்று மனித உரிமைகளை காக்கும் அய்க்கிய நாடுகள் சபையும் இருக்கவில்லை.எனினும் அண்ணலின் சத்தியம் வென்றது.
இலங்கையிலும் சத்தியத்துக்காக போராட ஒரு தீரன் தோன்றவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.
(1965ம் ஆண்டு கல்கி பத்திரிகையில் வந்த தலையங்கம்
5 comments:
பயங்கர அதிர்ச்சியாக இருக்கிறது... இது 1965-யிலேயே வெளியான தலையங்கமா?????
நம்ம தலைவர்களெல்லாம் தனக்குத்தானே சிலை வைத்துக்கொண்டும், நோபல் பரிசு பெறுவதற்கும்தான் முனைகிறார்களே ஒழிய.... இந்த பிரச்சினையில் வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டாக ஒரு முடிவு எடுக்க மாட்டேன்றாங்களே...... :-((((
இந்த பிரச்னைக்கு முடிவே இருக்காது போல இருக்கிறதே
இலங்கை தமிழர் பிரச்னை தீர இன்னொரு காந்தி தேவை..அவர்கள் நிலை என்று விடியுமோ?
வருகைக்கு நன்றி அனானி
Post a Comment