Friday, August 15, 2008

நலம்..நலம் அறிய ஆவல்

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா?

10 comments:

சின்னப் பையன் said...

ம். வரவர மொக்கை ஜாஸ்தியாயிட்டே போகுது.... :-))))

Kanchana Radhakrishnan said...

கேட்ட கேள்விக்கு பதில் இல்லையே...நலமா?

வடுவூர் குமார் said...

நலம் தான்.நீங்க எப்படியிருக்கீங்க?

Kanchana Radhakrishnan said...

//நலம் தான்.நீங்க எப்படியிருக்கீங்க?//
நலம் தான்.

நாமக்கல் சிபி said...

நான் இங்கு மிக்க நலம்! நன்றி!

நாடுவதும் நலமே!

Kanchana Radhakrishnan said...

//நான் இங்கு மிக்க நலம்! நன்றி!

நாடுவதும் நலமே!//

மகிழ்ச்சி சிபி

கரவைக்குரல் said...

"கடைசியாக தானே எங்கட நலம் கேட்கிறீங்க
நான் உங்களோட கோவம் போடட்டுமா?"
இப்படியும் இருக்கிறது
நலம் கேட்காவிட்டால் கோவிப்பார் சிலர்,

சரி
ரொம்ப சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள் இந்த சிறியவனின்.

இன்னும் வரட்டும்

Kanchana Radhakrishnan said...

//"கடைசியாக தானே எங்கட நலம் கேட்கிறீங்க
நான் உங்களோட கோவம் போடட்டுமா?"
இப்படியும் இருக்கிறது
நலம் கேட்காவிட்டால் கோவிப்பார் சிலர்,

சரி
ரொம்ப சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்,
வாழ்த்துக்கள் இந்த சிறியவனின்.

இன்னும் வரட்டும்//

கரவைக்குரல்..முதன் முறையாக வருகை தந்ததற்கு ஒரு நன்றி..
தங்களது பாராட்டுதலுக்கு ஒரு நன்றி

MSK / Saravana said...

நீங்க எப்படி இருக்கீங்க??
நலமா??

Kanchana Radhakrishnan said...

//நீங்க எப்படி இருக்கீங்க??
நலமா??//
நலம்தான் சரவணன்