Saturday, August 30, 2008

உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பாரதியார்

நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

4 comments:

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. முதல்ல நமக்கு நம்ம மேல நம்பிக்கை (self confidence ) வேணும்கிறத அழகா சொல்லியிருக்கீங்க!!

சூப்பர்!

மங்களூர் சிவா said...

அண்ணே உங்களை ஒரு தொடர்விளையாட்டுக்கு கோத்து விட்டுருக்கேன் பாருங்க

http://mangalore-siva.blogspot.com/2008/08/blog-post_30.html

Kanchana Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
நல்ல பதிவு. முதல்ல நமக்கு நம்ம மேல நம்பிக்கை (self confidence ) வேணும்கிறத அழகா சொல்லியிருக்கீங்க!!

சூப்பர்//


நான் சொல்ற ஜோக்கையெல்லாம் தொகுப்புக்கு நன்றின்னு பின்னூட்டம் போட்டுட்டு..பாரதியார் சொன்னதை பதிவிட்டால்..அதை நான் சொன்னது போல பின்னுட்டம் இடும் சிவா வை
வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Kanchana Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
அண்ணே உங்களை ஒரு தொடர்விளையாட்டுக்கு கோத்து விட்டுருக்கேன் பாருங்க//



தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
^

^

^

^

^

உங்களை எதில் கோத்துவிடலாம்னு..:-)))))