.
ஒரு தமிழ் படத்தயாரிப்பாளர் பார்வையில்
எல்லாரும் ஆஹா ,ஒ ஹோ ன்னு சொல்ராங்கலேன்னு அந்த படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு ஹிந்தி தெரியாது. இதுதான் தலைவா ஒரு கஷ்டம் ..நாம இந்தியாவிலே
இருந்தாலும் ,இந்தியாவிலே தயாரிக்கிற படத்தை நம்மலாலே
பார்க்கமுடியல்ல ..பார்த்தாலும் புரிஞ்சுக்க முடியல்ல.
இந்த படத்தோட DVD கிடைக்குமான்னு தேடினேன். அதுல தானே இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கும்.(இங்கிலீஷ் ல கூட நான் வீக்
.அது வேற )
DVD கிடைச்சது. பார்த்தேன்.
என்ன அநியாயம் இது? இந்த படத்திலே என்ன இருக்கிறது?
ஒரு சண்டைக் காட்சி இருக்க...ஒரு கவர்ச்சி நடனம் உண்டா...
அவ்வளவு ஏன்...இதுலே ஒரு ஹிரோயின் னு கூட கிடையாது.
அப்பறம் தானே கவர்ச்சி .. தொப்புள்...எல்லாம்.
சரி.. அதுதான் போகட்டும்னா ,ஒரு வெளி நாட்டுலே கனவு காட்சி.
ஒரு பாட்டு,குறைஞ்ச ஆடையிலே ஒரு நடனம்..ம்..ம்...ம்..ம்..
சரி கதைக்கு வரேன்
டிச்லேக்சியா ங்கிற படிக்கிற திரன்லே குறைபாடுள்ள சிறுவனின்
கதை. அமீர்கானைவிட சிறுவன் நல்லா நடிச்சுருக்கான். ஆமாம் ..
இப்படி குழந்தைகளை நடிக்க வச்சா.. குழந்தை தொழிலாளர்கள்
சட்டம் மீரினாற்போல் இல்லையோ?
பாதியிலே DVD யை ஆப் பண்ணிட்டேன்.
சுவாரிசியமா எதுவுமில்ல.. ..நமக்கு இந்த படம் சரிப்படாது.
நம்ம அடுத்த படத்துலே நயன்தாரா பில்லா லே வர மாதிரி ஒரு கவர்ச்சி சீன் வைக்க சொல்லி இருக்கேன். கனல் கண்ணன் வேற காத்துக்கிட்டு இருக்கார்.
நான் வரேங்க.
நம்புங்க.. என்னாலே தாரே ஜாமீன் பார் மாதிரி ஒரு மட்டமான
படத்தை எடுக்க முடியாது.
8 comments:
படத்தோட கருத்து அருமையானது தான். ஆனா என்னவோ presentation அந்த அளவு impress பண்ணல. ஒருவேளை ச்விச்ஸ்ல த்ரிஷா டான்ஸ் எதிர்பார்தேன்னோ என்னவோ.
//படத்தோட கருத்து அருமையானது தான். ஆனா என்னவோ presentation அந்த அளவு impress பண்ணல. ஒருவேளை ச்விச்ஸ்ல த்ரிஷா டான்ஸ் எதிர்பார்தேன்னோ என்னவோ.//
அந்த தயாரிப்பாளர் மேலோட்டமாத்தான் கதை சொல்லி இருக்கார்.இனிமேல் ஹோட்டல்ல ரூம் போட்டு..
கதையைப்பற்றி எல்லாம் டிஸ்கஸ் பண்ணனுமே..மேலும் நீங்க ஏ சென்டர் ஆடியன்ஸ்..இவர் பி,சி,ஆடியன்ஸ் பற்றிவேற
கவலைப்படணுமே
பறந்து பறந்து அடிக்கறது, சாதாரணமா நடக்கும்போதே கால் செருப்புலேர்ந்து மத்தாப்பு நெருப்புமாதிரி வர்றது - இது எதுவும்கூட இல்லே போலிருக்கே அந்த படத்திலே?...சேச்சே...
//பறந்து பறந்து அடிக்கறது, சாதாரணமா நடக்கும்போதே கால் செருப்புலேர்ந்து மத்தாப்பு நெருப்புமாதிரி வர்றது - இது எதுவும்கூட இல்லே போலிருக்கே அந்த படத்திலே?...சேச்சே...//
விடுங்க..அவங்க ரசனை அவ்வளவுதான்
ஆனா இது என்ன ரொம்ப பாதிச்ச படம்....என்னால அந்த flip-book-அ மறக்கவே முடியல...
varukaikku nanri vijay
இந்த மாதிரி தமிழில் படம் வருவதிலையே என்று நினைக்கவைத்த படம்
நானும் சென்ற வாரம் தான் பார்த்தேன்
படத்திலே அமீர்கான்..கிட்டத்தட்ட இடைவேளை சமயத்திலே தான் வருவார்.அதுபோல
நம்ம தமிழ் படத்தில வந்தா...?குசேலர் கதிதான்.
வருகைக்கு நன்றி பாபு
Post a Comment