..
கானா பாட்டு,குத்துப் பாட்டு என திரைப்பட பாடல்கள் வந்துக் கொண்டிருக்கும் நாளில்..(நிலா..நிலா..வா வா என்று ஒரு லேட்டஸ்ட் பாட்டு..இனி எந்த பள்ளியிலும் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சொல்லிக்கொடுக்க முடியாது)அந்த நாளில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமை கட்சிக்காரர்.ஒவ்வொரு பாடல்களிலும் கருத்து மிக அருமையாக இருக்கும்.அவரது பாடல் வரிகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளை அடிப்பதில்
வல்லமைக் காட்டிடும்
திருட்டு உலகமடா...தம்பி
உலகம் புரிந்து நடந்துக் கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா'
மற்றொரு பாடல்;-
(குழந்தையிடம் பாடும் பாடல்)
ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி
என்று சொல்பவர்..அதே பாடலில்
வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுதுன்னு
விளையாடப் போகையில் சொல்லி வைப்பாங்க -உன்
வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே ஸோம்பி இருந்து
வெம்பி விடாதே..
கவிஞருக்கு சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை பாருங்கள்
நாடோடி மன்னன் படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பற்றி சொல்லவே வேண்டாம்.ஒவ்வொரு வரியும் பொன் வரிகள்..அப்பாடலின் கடைசி இரு வரிகள்..
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா
(இந்த இடத்தில்..தமிழக அரசு தூங்காமல் இருந்திருந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒப்புதல் போட்ட உடனேயே முடித்திருக்கலாம்.இன்று
பிரச்னை இருந்திருக்காது)
இப்படி பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம்..இவருக்கு ஜனரஞ்சக மான பாட்டுக்கள் எழுதத் தெரியாதா? என்றால்..
அவரால் அதுவும் முடியும்..
கல்யாணபரிசு பாடல்கள் அனைத்தும் அவர்தான்.
அவர் வாழ்நாள் முழுதும் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களுக்குச் செல்ல மைலாப்பூரிலிருந்து 12-B பஸ் பிடித்துத்தான் செல்வாராம்..கார் வைத்துக்கொள்ள வசதி இல்லை.
எனக்கு புரியாத புதிர் ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது?
10 comments:
டைலமோ டைலமோ டைல டைல டைலமோ - இதிலே என்ன குறைச்சல்ன்றீங்க?....
//ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது? //
அவர்கள் மேல் உள்ள பிரியமாய் இருக்குமோ!
கோவை விஜய்
//டைலமோ டைலமோ டைல டைல டைலமோ - இதிலே என்ன குறைச்சல்ன்றீங்க?....//
இந்த பாட்டில் ஒன்றும் குறையில்லையே..யார் சொன்னது குறை?என்ன ஒரு அருமையான கருத்துள்ள பாடல் இது.
//அவர்கள் மேல் உள்ள பிரியமாய் இருக்குமோ!
கோவை விஜய்//
இருக்கலாம்.ஏனென்றால் ஒருவரைப்பற்றி அவர் இறந்த பின்னால்தானே முழுவதும் நமக்குத் தெரிகிறது
வாடிக்கை மறந்ததும் ஏனோ.. கல்யாண பரிசு பாட்டில்
"நான் கருங்கல்லு சிலையோ
காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ"
என்ற கல்யாணசுந்தரத்தின் வரிகளை இன்று டைரக்டர்களும்
நடிகைகளும் கேட்க வேண்டும்
சகாதேவன்
//வாடிக்கை மறந்ததும் ஏனோ..
யாண பரிசு பாட்டில்
"நான் கருங்கல்லு சிலையோ
காதல் எனக்கில்லையோ
வரம்பு மீறுதல் முறையோ"
என்ற கல்யாணசுந்தரத்தின் வரிகளை இன்று டைரக்டர்களும்
நடிகைகளும் கேட்க வேண்டும்
சகாதேவன்//
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு
நான் இருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமா
உறவை புரிந்துக் கொள்ள முடியுமா?
என்னும் இரும்புத்திரை பாடலை மறந்துவிட்டீர்களே சஹாதேவன்
நல்ல ஞாபகசக்தி காஞ்சனா உங்களுக்கு.
அருமையான பாடல் வரிகளும் கூட.
ஆனாலும் உங்க பதிவுல உள்ள பாடல் எல்லாம் அந்த காலத்து அட்வைஸ்.
வீரனா இருக்கணும். ஒழுங்கா சாப்பிடனும் இயற்கைய ரசிக்கணும். இந்த மாதிரி பல கருத்துக்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொல்ற பாடல் இதோ.
ஹே. வெட்டு குத்து கத்தி கம்பு புடிச்சி பாருடா.
நான் கம்பி எண்ணி கணக்கு பாடம் கத்துகிட்டேண்டா.
வருஷத்துல எல்லா நாளும் பொறந்த நாளுடா
நாங்க வெட்டுறது கேக் இல்ல கையு காலுடா.
என் பேரு ஆறுடா.
ஊரு அடையாருடா.
டீல்ன்னு வந்தாக்க
தாறு தாறு தாறு
ஹேய் கூவம் நதி ஓரத்துல
குந்திகின்னு கூவிகினோம்
ஹேய் சாயங்கால நேரத்துல
சுண்டகஞ்சி ஊத்திகனும்.
சோடா பாட்டில் கையுல
சைக்கிள் செயின் பையில
தோடா வரான் பாருடா ஆறுமுகம்
சினிமா பாடல் மட்டும் தானா ? அரசியலுக்கு வாங்க.
டி ஆர் விஜயகாந்த் பத்தி ஒரு கவிதை சொல்லி இருக்காரு. அது வேணுமா !
இதோ.
''விஜயகாந்த் -
இரவிலே பிராந்தி...
கைகளில் ஏந்தி...
சுவைக்க நாடுவதோ பூந்தி...
அதன்பின் தேடுவதோ மனசாந்தி...
விடிந்தபின் பேட்டி என்ற பெயரில்
எடுப்பதோ வாந்தி...
இவர் எப்படி ஆவார் காந்தி..?!
என் ஞாபகசக்தியை விட உங்கள் ஞாபகசக்தி,கேட்கும் திறன் ஆகியவற்றை பாராட்ட வேண்டும்.இந்த பாட்டின் வரிகள் ஞாபகம் இருக்கின்றனவே..எனக்கு தியேட்டரிலேயே வரிகள் என்னவென்று புரியாது.:-)))
//டி ஆர் விஜயகாந்த் பத்தி ஒரு கவிதை சொல்லி இருக்காரு. அது வேணுமா !//
:-))))
Post a Comment