Monday, August 11, 2008

தமிழ் வளர ...

தமிழ் வாழ்க ... தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா ?
தமிழ் வாழவேண்டுமானால் .. தமிழை தமிழன்னு சொல்கிற வர்கள் அனைவரும்
வாசிக்கவேண்டும் ..தமிழாசிரியர்களை மதிக்கவேண்டும் தமிழாசிரியர்களையும் ,
தமிழ் எழுத்தாளர்களையும் மதிக்காத மொழி எப்படி வளரும் .
தமிழ் படிச்சா கேவலம்ன்னு தமிழன் நினைக்கிறான்.தெலுங்கலித் தாய்மொழியாகக் கொண்டவன்..அதே மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவனைப் பார்த்தால் "பாக உன்னாரா"னு  கேட்கறான்.
மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் மற்றொரு அதே தாய்மொழிக்காரரனைப் பார்த்தால்,
"சுகம்தன்னே: என்கிறான்.
அதே போன்றே மற்ற மொழியினரும் நடக்கின்றனர்
ஆனால்//

ஒரு தமிழன் மட்டும் இன்னொரு தமிழனைப்பார்த்தால் ஹலோ
ஹொவ் ஆர் யு ? ன்னு கேட்கிறான் .
கொஞ்சம் யோசனை செய்தால் தமிழனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப்பற்று குறையுதுன்னு தோன்றுகிறது.

9 comments:

Yuvaraj said...

தோழருக்கு வணக்கம்.
தங்கள் பதிவு நல்ல பதிவு.
ஆனால் தமிழ் வளர இதைவிட சிறந்த வழியை நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம்.
நீங்க சொன்னவழியில் பின்பற்றி பார்த்தச்சு. தோல்விதான் மிச்சம்....


----வெ.யுவராசன்.
வாய்ப்பிருந்தா தோட்டத்துக்கு வாங்க.

சின்னப் பையன் said...

ஹலோ. ஹவ் ஆர் யூ?

சின்னப் பையன் said...

நீங்க சொல்றது நிஜம்தாங்க....

Kanchana Radhakrishnan said...

//ஹலோ. ஹவ் ஆர் யூ?//



நலம்..விழைவதுவும் அதுவே

Kanchana Radhakrishnan said...

//நீங்க சொல்றது நிஜம்தாங்க//

உண்மை..உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை

Kanchana Radhakrishnan said...

//தோழருக்கு வணக்கம்.
தங்கள் பதிவு நல்ல பதிவு.
ஆனால் தமிழ் வளர இதைவிட சிறந்த வழியை நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம்.
நீங்க சொன்னவழியில் பின்பற்றி பார்த்தச்சு. தோல்விதான் மிச்சம்....


----வெ.யுவராசன்.
வாய்ப்பிருந்தா தோட்டத்துக்கு வாங்க//

உங்கள் வருகைக்கு நன்றி..தமிழ் வளர..என்று பெரிய பதிவு ஒன்றே போட உள்ளேன்.இடையே தங்கள் தோட்டத்திற்கும் வந்து இளைப்பாறி கனிகளை சுவைக்கிறேன்.

மங்களூர் சிவா said...

இன்னா மச்சி இப்பிடி சொல்லிட்ட நான் ஒத்துக்கமாட்டேன்

இப்பிடிதான் மங்களூர்லயும் நாங்க பேசிக்கிறோம்

:)))))))))

Kanchana Radhakrishnan said...

//இன்னா மச்சி இப்பிடி சொல்லிட்ட நான் ஒத்துக்கமாட்டேன்

இப்பிடிதான் மங்களூர்லயும் நாங்க பேசிக்கிறோம்

:)))))))))//

உன்னோட பேஜாராப்பொச்சு..உன்னை இட்டுக்கிட்டு எங்கே போறது

veerabaagu said...

தமிழை வளர்க்க ஒரு யோசனை உள்ளது. பொதுமக்கள் ஊடகங்களான தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி, திரைப்படம், சுவரொட்டி, விளம்பரம், சொற்பொழிவு, மேடைப்பேச்சு இப்படி பொது மக்கள் பார்வைக்கு வரும் எந்த செய்தியும் தமிழிலே இருக்க வேண்டும் என சட்டம் போட வேண்டும்.

மீறினால் அதிகபட்ச தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்.

ஏனெனில் பொதுமக்கள் இதை பார்த்துதானே தங்களின் அன்றாட பழக்கவழக்கங்களையே அமைத்துகொள்கிறார்கள்