சென்னையில் சமீபத்தில் நூலகம் ஒன்றிற்கு அடிக்கல்
நாட்டிய முதல்வர்..தன்னை யாரும் ஏமாற்றமுடியாது
என்றும்,யாரை எங்கு வைப்பது என தனக்குத் தெரியும்
என்றும் பேசினார்.
அவர் கூற மறந்த அவர் ஏமாந்த தருணங்கள்-
1.பொருளாளராக இருந்த M.G.R., கணக்குக் கேட்டதும்..அப்போது
அவருக்குத் தெரியாது M.G.R., ஒரு பெரிய சக்தியாக உருவாவார் என்று.
கலைஞர் முதல் ஏமாந்தது இத் தருணத்தில் தான்.
2.M.G.R.,மறைவுக்குப் பின் ஜானகி அணிக்கு ஆதரவு கேட்டு வீரப்பன் வந்த
போது..ஆதரவு அளிக்க மறுத்தது.அப்படி அன்று ஆதரவு அளித்திருந்தால்
பிற்காலத்தில் ஜெ தலைமையில் அண்ணா தி.மு.க., வளர்ந்திருக்காது.
இதிலும் கலைஞர் ஏமாந்தார்.
3.2001 தேர்தலின் போது..அதீத நம்பிக்கையில்...தன்னை ஆதரித்த கட்சிகளை
விலக்கி..தேர்தலை சந்தித்தது..வெற்றி வாய்ப்பை இழந்தது.
4.M.G.R.க்கு போட்டியாக வரவேண்டும் என் தன் மகன் முத்துவை நடிகனாக
ஆக்க முயன்று ஏமாந்தது.
5.மாறன் சகோதரர்கள் தன்னை விட்டு விலகி விடுவார்கள் என அறியாது..அரசியலில்
சற்றும் அனுபவம் இல்லா தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கி ஏமந்தது.
(இவர்கள் சர்ச்சைக்கு உண்மையான காரணம்..தன் பெயரிலும்,தன் மனைவியின்
பெயரிலும் இருந்த சன் டீ.வீ. பங்குகளை விற்ற போது..அதற்கான
பணத்தை சகோதரர்கள் குறைவாகக் குடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்ற
வதந்தியும் உண்டு.இதிலும் ஏமாந்தார் கலைஞர்.)
6.தான் நம்புபவர்கள் எல்லாம்..தன் முதுகில் குத்துகிறார்கள் என சில நாட்கள்
முன்பு அறிக்கை விட்டார் முதல்வர்.அப்படியென்றால்..அவர் நம்பியர்வர்கள்
அனைவரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.
இப்போதற்கு எனக்கு ஞாபகம் வந்தது இவ்வளவுதான்...வேறு சந்த்ர்ப்பங்கள்
ஞாபகம் வந்தால் அடுத்த பதிவில் தொடரும்.
6 comments:
காஞ்சனா மேடம்
ஏதோ பெரியவர் தெரியாம சொல்லிட்டார், விட்டுடுங்க JK :)
வருகைக்கு நன்றி கயல்விழி
அவரை ஏமாத்திட்டாங்கன்னு நீங்க சொல்றது எல்லாம் போன வருஷம் அல்லது போன மாசம்...
அவர் தன்னை யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொல்றது இந்த மாசம்.... ஓகேவா?...:-)))
//அவரை ஏமாத்திட்டாங்கன்னு நீங்க சொல்றது எல்லாம் போன வருஷம் அல்லது போன மாசம்...
அவர் தன்னை யாரும் ஏமாத்த முடியாதுன்னு சொல்றது இந்த மாசம்.... ஓகேவா?...:-)))//
அவரை நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கீங்க ச்சின்னப்பையன்
நான் ஏமாற மாட்டேன்..மற்றவர்களைத்தான் ஏமாற்றுவேன் என்கிறாரோ?
வருகைக்கு நன்றி அனானி
Post a Comment