Tuesday, August 12, 2008

முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்???!!!!

துணிச்சலான யோசனை,புரட்சிகரமான சிந்தனை இவற்றில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இதை தெரிவித்துள்ளது.
அம்பானி..அப்பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்..
அதில் அவர்'இந்தியாவின் நன்மையை நோக்கமாகக் கொண்டே எங்கள் நிறுவனம் செயல் படுகிறது.168 லட்சம் கோடி வருமானம் உள்ள எங்கள் நிறுவனம் 100 கோடி இந்தியர்களின் நலனைச் சார்ந்தே இயங்கும்.விவசாயிகள் பலன் அடையும் வகையில் இதுவரை 700இடங்களில் காய்கறி,உணவுப்போருள்கள் கடைகளை தொடங்கி பல ஆயிரம் பேருக்கு நேரடி,மறைமுக வேலை அளித்துள்ளோம்.5 ஆண்டுகளீல் 3 கோடி விவசாயிகள், மற்றும் ஊழியர்களுக்கு வேலை அளிக்க உள்ளோம்'என்றார்.
அவரது பேட்டி வெளியான செய்தியில்..தனது துணிச்சலான முடிவுகள்..புரட்சிகர சிந்தனைகளின் மூலம் காந்திக்கு
அடுத்தபடியாக இந்தியாவின் சிறந்த மனிதராக முகேஷ் அம்பானி விளங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அம்பானியை பாராட்டட்டும்..வேண்டாம் என்று சொல்லவில்லை..
ஆனால் காந்தி யுடன் அவரை ஒப்பிட்டது...
காந்தி ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டார்.ஆனால் அம்பானி..? ஏழை காய்கறிவிற்பவர்கள்,கீரை விற்கும் பெண்கள் ஆகியவர்களின் வயிற்றில் அடிக்கிறார்.
தேசப்பிதாவுடன், 8000 கோடிyil மனைவிக்காக வீடு கட்டும் அம்பானி ஒப்பிடப்படுகிறார்.
ஒவ்வொரு இந்தியனும் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறோம்.
இதுவே வேறு எந்த நாடாய் இருந்திருந்தாலும்..பத்திரிகையை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கும்.

12 comments:

Anonymous said...

No. Not at all. You will ALSO accept if your read this...this is taken from Web...This is Gandhi's real Face:

செருப்பு இருக்கும் வரையில்...
இந்தியனுக்கு சங்கிலியன் இருக்க வேண்டும்...!
மயிர் இருக்கும் வரையில்...
இந்தியனுக்கு அம்பட்டன் இருக்க வேண்டும்...!
மலம் வெளியேறும் வரையில்...
இந்தியனுக்கு தோட்டி இருக்க வேண்டும்...!
அதையெல்லாம் புனித தொழிலாக கருத வேண்டும்...
சொன்னவனை மகாத்தமாவாக்கிய இந்தியனுக்கு...
செருப்பும்.., மயிரும்.., மலமும்.. தொடர் கதை தான்...!

Kanchana Radhakrishnan said...

காந்தி எப்படிப்பட்டவர் என்ற சர்ச்சையில் ஈடுபட நான் வரவில்லை.நான் சொல்லவந்தது அவர் எளிமையாக வாழ்ந்தவர்,
அவரை அம்பானியுடன் ஒப்பிட்டார்களே..என்பதுதான் என் ஆதங்கம்...
அனானி..நீங்கள் யார் என எனக்குத் தெரியும்..உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இட்டிருக்கலாமே

Anonymous said...

மோகன்தாஸ் காந்தி செய்த அரசியல் யாரும் அதிகம் பேசாதது.
திறமையான மற்ற தலைவர்கள் இருக்கையில் நேருவை பிரதமாரக்கியது முதல் அவர் செய்யாத அரசியலா ?

அப்புறம் என்ன அவருடன் ஒப்பிட்டால் வருத்தம் வருகிறது?

அவர் தன்னை ஒரு எளியோனாக நன்கு மக்கள் மனத்தில் பதித்து விட்டார். அவ்வளவே!

Anonymous said...

அனானி..நீங்கள் யார் என எனக்குத் தெரியும்..உங்கள் பெயரிலேயே பின்னூட்டம் இட்டிருக்கலாமே!

No you are wrong. I cut and pasted from a site and wanted to give credit to that person---meaning I did not want to take credit for what I did not create.

Again, Ambani has money, and he is spending. He is at least creating jobs. My point is Ambani did not cast a bad shadow on us like what Gandhi did. Then why did I not give my original name because, I have been wounded enough by many people by ridiculing my caste when they cannot argue a point well.

My name is Mokka Samy hailed from a small village in interior RamNad Distrcit. Do you know my village school (up to 5th grade) did not have any locks? yes, why do you need locks when there is no door ??? Do you know we have to work in our teacher's home in the evening as a servant for free? If I did not do that I would NOT be writing like this. I would have been living in that village. Yes, the teacher would have failed us.

I learnt English (although taught in a so-called high school that too I had to walk 8 miles to and fro. Do you know I went to school ONLY to eat Mid-day meals? Thanks to Kamaraj, MGR, and MK, I am here in the United States. I am still nursing my wounds that are eternal--nursing would never end. On the contrary, my children have No such feelings, and they have come in life on their own in the U.S.

Gandhi by saying "அதையெல்லாம் புனித தொழிலாக கருத வேண்டும்...
" he showed he was a mean person. It is one thing to clean your toilet that too volunarrily, but making us to do that JOB for our survival was cruel. He is worse than Ambani in my opinion.

Yes, I got a BE degree thro' reservation, and by the time I completed my BE I was good enough to write some decent English and ultimately landed in the U.S.

Where I would have been had I did my high-schooling in Madras, Madurai or at least a small town such as Villupuram, Dindigul or even uUliampatti. I am positive I could have got a much better score and landed in I.I.T or even at the prestigiuos institutions here in the U.S. such as Princeton, U of Michigan, etc.

First work toward giving education to our people, and make 67% of my brothern make at least 21 rupees per day (they make 20 rupees day now).

But if you really take into account 20% of our people are so ill they cannot even make any money...

Gandhi by telling that "அதையெல்லாம் புனித தொழிலாக கருத வேண்டும்" made us feel that we have to do that for you guys who make a minmum of 50000 rupees/month.

At lelast beacuse of Amabai some of us are still able to sneak into the jobs you guys love.

Therefore, for us, Ambani is many many shads better that our Gandhi[ the so-called mahathma!! I deleberately put m in small case as he does NOT deserve a capital M...

I also hope you don't remove this note as that's what typically done by people who cannot argue. Leave it here. Let others sahre this.
As usual, Fires or Flames for this blog should be welcome with an open-heart. i hope you do that...

Thanks
Dr. Mokka Samy

Kanchana Radhakrishnan said...

தங்கள் பின்னூட்டத்தை நான் remove பண்ணவில்லை.
உங்களைப்போல் கஷ்டப்பட்டவர்களை நானும் அறிவேன்.
நமக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.பல
இன்னல்களிடையே வாழ்க்கையில் முன்னேறிய உங்களுக்கு
என் வாழ்த்துக்கள்

சின்னப் பையன் said...

இப்படி அம்பானியை காந்தியுடன் ஒப்பிடுகிறார்களா? ஏதாவது ஒரு பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சியிலோ விவாதம் நடந்ததா என்ன? நான் இங்கேதான் கேள்விப்பட்டேன்.

Kanchana Radhakrishnan said...

நியூயார்க் டைம்ஸில் அம்பானியின் பேட்டி..சில நாட்களுக்கு முன் வந்தது.அதில் தான் இப்படி கூறப்பட்டிருந்ததாம்.
தினகரனில் சில நாட்களுக்குமுன் இச் செய்தி வந்தது.

Hariharan # 03985177737685368452 said...

தமிழ்நாட்டில் கருணாநிதியை வாழும் வள்ளுவராக்க வில்லையா? இதனால் வள்ளுவரும் கருணாநிதியும் ஒன்றாகிவிட்டனரா?

கருணாநிதியின் குறளோவியத்துக்காக அவர் வாழும் வள்ளுவராக்கப்பட்டால் தமிழ்நாட்டில்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் என்று கோனார் தமிழுரை பதிப்பகத்தார் முதல் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

காந்திக்கும் அம்பானிக்கும் குஜராத் மைந்தர்கள் என்பதோடு லட்சக்கணக்கானவர்களுக்கு அம்பானியின் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தந்திருக்கிறது.

அம்பானி சட்டத்தை மீறி ஊழல்செய்து மேலே வந்தார் என்றால் அதற்கு முதலில் பொறுபேற்கவேண்டியது அரசியல்வாதிகள்தான்!

ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகளால் விவசாயிகளை வஞ்சிக்கும் அரசியல்வாதி இணைப்புடைய இடைத்தரகர்கள் ஆட்டம் கண்டிருக்கிறார்கள். ஒருவிவசாயியாவது ரிலையன்ஸ் ப்ரஷ் கடைகளால் நஷ்டம்னு சொல்லியிருக்காங்களா??

பாமக, கம்யூனிஸ்டுங்களுக்கு, இதர அரசியல்வாதிகளுக்கு விவசாயிகள் பொருளாதார தன்னிறைவு அடைஞ்சுட்டா தன்கிட்ட குறைன்னு பொலம்பி வரும் கூட்டம் குறைந்துவிட்டால் கமிஷன் காலி, வோட்டும் காலி ஆகிடும் பயம்!

Kanchana Radhakrishnan said...

வருகைக்கும் , தங்கள் கருத்தை தெரிவித்தமைக்கும் நன்றி

மங்களூர் சிவா said...

பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கறான்.

மங்களூர் சிவா said...

அம்பானியால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். காந்தி பற்றி விலாவாரியாக தெரியாது. அனானி பின்னூட்டமும் ஹரிஹரன் ஐய்யா பின்னூட்டமும் அருமை.

Kanchana Radhakrishnan said...

சிவா களத்திலே இறங்கினாலே ஒரு தெம்புதான்..நன்றி சிவா