Sunday, August 17, 2008

மனிதர்களும் நாயும் (சிறுகதை)

'அம்மா' ..எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கலேன்னா ..நான் இனிமேல் கல்லூரிக்கு போகமாட்டேன்' என்று மகன் ரவி சொல்ல. .அதைககனவன் கோபாலி டம் சொல்லச் சென்றாள் மாதவி.
கோபாலோ .. வளர்ந்து நிற்கும் தன் மகள் ஜானகிக்கு நாயாக அலைந்தும் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லையே
என்ற சோகத்தில் இருந்தான். மாதவி தகவலைச் சொன்னதும் அவளைப் பார்த்து 'வாள் வாள்' என கத்த ஆரம்பித்தான்.
'நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி 'வள் ளு ' ன்னு விழறீங்க' என்றபடியே உள்ளே சென்று விட்டாள் மாதவி .
அப்பாவின் கோபத்தைப் பார்த்து விட்டு வாலைச்சுரிட்டிக்கொண்டு மூலையில் படிக்க ஆரம்பித்து விட்டான் ரவி
அவனைப் பார்த்து ஜானகி கலாய்க்க ஆரம்பித்தாள்
பொறுமை இழந்த ரவி 'என் கிட்ட வாலாட்டினே அப்பா கிட்ட சொல்லிடுவேன்.. ஜாக்கிரதை' என்றான்,
'நன்றி கெட்ட ஜன்மம்' என அவனைத் திட்டிவிட்டு படிக்க ஆரம்பித்தாள்.
அப்பா அலுவலகம் கிளம்பியதும் மீண்டும் அம்மாவிடம் வந்த ரவி 'அம்மா' என அவளைக் கட்டிக் கொண்டான்.
'ஏண்டா நாயாட்டம் மேல விழரே.. இந்த வீட்டிலே உங்கப்பாகிட்ட குப்பை கொட்டறதை விட ஒரு நாயா பிறந்து இருக்கலாம்' என்றாள் மாதவி.
மாலை மணி ஆறு...
அலுவலகத் திலிருந்து .. கோபால் ஒரு புதிய கைனடிக் ஹோண்டா வில் வந்து இறங்கினான்.
வண்டியை நாக்கை நீட்டியபடி ஜொள்ளு வழிய பார்த்த ரவியிடம் 'சம்பள உயர்வு கேட்டு ..மேலதிகாரி இடம்
வாலைக் குழைச்சு கிட்டு கெஞ்சினேன் .உடனே கொடுத்திட்டார் .அந்த மகிழ்ச்சியில் உனக்கு வண்டி வாங்கிட்டேன் 'என்றான்.
காலையில் இருந்து அந்த வீட்டில் நடந்த களேபரம் எல்லாவற்றையும் உன்னிப்பாக ..ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடன்
பார்த்துக் கொண்டிருந்தது ..டாமி.

5 comments:

சின்னப் பையன் said...

வவ்... வவ்....

அடுத்து இதே மாதிரி பூனை, கிளி எல்லாத்துக்கும் கதை எழுதுவீங்களா????

Kanchana Radhakrishnan said...

//வவ்... வவ்....

அடுத்து இதே மாதிரி பூனை, கிளி எல்லாத்துக்கும் கதை எழுதுவீங்களா????//

நீங்க சொன்னா எழுதிட வேண்டியது தான்

MSK / Saravana said...

ஆகா.. யாரு மனுஷங்க யாரு நாயுனே தெரியலே..
கலக்கலனா கதை

MSK / Saravana said...

//ச்சின்னப் பையன் said...
வவ்... வவ்....
அடுத்து இதே மாதிரி பூனை, கிளி எல்லாத்துக்கும் கதை எழுதுவீங்களா????//

ரிப்பீட்டேய்..

Kanchana Radhakrishnan said...

//ரிப்பீட்டேய்..//

வருகைக்கு நன்றி