பெண்ணுரிமைப்பற்றி பெரியாரை தவிர எந்த தலைவரும் அதிகமாக பேசியதில்லை.ஆனால் பெரியார் படம் பார்த்தபோது ஒரு காட்சி மனதை உறுத்தியது.ஓரு ஏழை,தாழ்ந்த ஜாதி வீட்டில் அவரும் மணியம்மையும் சாப்பிடப்போகிறார்கள்.
அங்கே இருந்த நாற்றம் மணியம்மையால் சாப்பிட முடியவில்லை.தன் இலையின் அடியில் சாப்பாட்டை மறைத்து,சாப்பிட்டது போல பெயர் பண்ணுகிறார்.இது கண்டு பெரியார், அனைவர் எதிரிலும் எச்சிக்கையால் 'பளார்'என அறைகிறார்..
அவர் இப்படி செய்யலாமா?இதுவும் ஆணாதிக்கம் தானே?!
20 comments:
ஆம்!
வருகைக்கு நன்றி பரிசல்
என்ன காரணமாக இருந்தாலும், கை நீட்டி அடிப்பதை ஆணாதிக்கமாகவே கருதுகிறேன்.
ஆம் ... ஆம்....
மனொதியல் முறையில் மறைக்கப்பட்ட பன்பு... என்றாவது ஒரு நாள் ஒரு முறை வெளிப்படும்... இது தவறு என்று சொல்வதற்கில்லை. எனனை பொருத்தவரை இயற்கையான ஒன்று
//என்ன காரணமாக இருந்தாலும், கை நீட்டி அடிப்பதை ஆணாதிக்கமாகவே கருதுகிறேன்//
எல்லாவற்றிற்கும் தயாராக ஒரு பதிலை வைத்திருப்பார்கள்..எண்ன செய்வது கயல்.,வருகைக்கு நன்றி
//ஆம் ... ஆம்....
மனொதியல் முறையில் மறைக்கப்பட்ட பன்பு... என்றாவது ஒரு நாள் ஒரு முறை வெளிப்படும்... இது தவறு என்று சொல்வதற்கில்லை. எனனை பொருத்தவரை இயற்கையான ஒன்று//
எந்த ஒரு விஷயத்திலும் ஒரு மித்த கருத்துக்கள் ஏற்படாது.வருகைக்கு நன்றி
பெரியாரை யாருங்க ரொம்ப பெரிய மனுசனாக்கினது...
(இது இந்த பதிவுக்கான கருத்து கிடையாது...)
ஆமா!!!
தவறுக்கான சிறு தண்டனை இது. அதை ஏன் மூத்தோருக்கான உரிமையாக எடுத்து கொள்ள கூடாது?
- வேல் -
//பெரியாரை யாருங்க ரொம்ப பெரிய மனுசனாக்கினது...
(இது இந்த பதிவுக்கான கருத்து கிடையாது...)//
வெங்காயம்
(இதுவும் உங்கள் கேள்விக்கான பதில் இல்லை)
வருகைக்கு நன்றி
நான் பெரியார் படம் பார்க்கவில்லை. கணவன் மனைவி இருவருமே பரஸ்பரம் கைநீட்டி அடித்துக் கொள்பவர்கள் எனின் ஏற்றுக்கொள்ளலாம். :-)) ஆனால் கணவன் மட்டுமே அடிக்கிறார் எனின் அது ஆணாதிக்கம்தான்.
பொறுமையின்மை, எரிச்சல் மற்றும் ஆதிக்க மனம் தெரிகிறது.
ஆணாதிக்கம் ?
ஒரு பெண் இது போன்று செய்து இருக்கமாட்டார் என்பதனால் இது ஆணாதிக்கமாக தோன்றுகிறதா ?
nanri chchinnappaiyan
//தவறுக்கான சிறு தண்டனை இது. அதை ஏன் மூத்தோருக்கான உரிமையாக எடுத்து கொள்ள கூடாது?
- வேல் -//
பெரியோர் செய்த பிழை எல்லாம்..சிறியோர் ஆயின் பொறுத்தல் கடனே...என்கிறீர்களா?
//நான் பெரியார் படம் பார்க்கவில்லை. கணவன் மனைவி இருவருமே பரஸ்பரம் கைநீட்டி அடித்துக் கொள்பவர்கள் எனின் ஏற்றுக்கொள்ளலாம். :-)) ஆனால் கணவன் மட்டுமே அடிக்கிறார் எனின் அது ஆணாதிக்கம்தான்.//
padaththai paarungal.
varukaikku nanri
//பொறுமையின்மை, எரிச்சல் மற்றும் ஆதிக்க மனம் தெரிகிறது.
ஆணாதிக்கம் ?
ஒரு பெண் இது போன்று செய்து இருக்கமாட்டார் என்பதனால் இது ஆணாதிக்கமாக தோன்றுகிறதா ?//
பெண்ணுரிமை பேசுபவர்கள்..பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு என்று எண்ணவில்லையே.
தன் இஷ்டப்படி அவளும் நடக்க வேண்டும் என எண்ணுவது ஆணாதிக்கம் தானே
*****பெண்ணுரிமை பேசுபவர்கள்..பெண்ணுக்கென்று ஒரு மனம் உண்டு என்று எண்ணவில்லையே. தன் இஷ்டப்படி அவளும் நடக்க வேண்டும் என எண்ணுவது ஆணாதிக்கம் தானே******
நீங்க சொல்றதுல உண்மை. ஆனா, ஒருத்தரோட மத்த நடவடிக்கையும் பாத்துட்டு தான் இதுக்கு முடிவு சொல்லணும். (oru isolated incidentla neenga yentha inferenceum panna koodathu)
ஒரு அம்மா தன்னோட பையன (வளர்ந்த பையனாவே இருக்கட்டும்) அடிக்கராங்கன்னு அத பெண்ணாதிக்கம்ன்னு சொல்ல முடியுமா ?
//ஒரு அம்மா தன்னோட பையன (வளர்ந்த பையனாவே இருக்கட்டும்) அடிக்கராங்கன்னு அத பெண்ணாதிக்கம்ன்னு சொல்ல முடியுமா ?//
நீங்கள் சொல்வது தண்டிக்கப் பட வேண்டிய குற்றம்
இத தண்டிக்கப் பட வேண்டிய குற்றமா பாக்கற நீங்க பெரியார மட்டும் எதுக்காக ஆண் ஆதிக்கவாதியா பாக்கறீங்க ?
அப்போது பெரியாரும் தண்டிக்க பட வேண்டிய குற்றம் செய்தார் என்று தானே சொல்ல வருகிறீர்கள்.
நன்றி
Post a Comment