Saturday, August 30, 2008

அய்ந்தறிவும் ஆறறிவும்....(கவிதை)...

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பேதமில்லை
மச்சு வீடு குச்சு வீடு
பாகுபாடில்லை.

செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யை பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை.

உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை

பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவாரில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கு இல்லை

10 comments:

Aruna said...

Nice poem..
anbudan aruNaa

மங்களூர் சிவா said...

ஹா ஹா
சூப்பரா சொன்னீங்க போங்க எவனுக்கும் ஜால்ரா அடிச்சி கும்பிடு தேவை இல்லைன்னு!!

:)))

Kanchana Radhakrishnan said...

// Aruna said...
Nice poem..
anbudan aruNaa//

nanri aruna

Kanchana Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
ஹா ஹா
சூப்பரா சொன்னீங்க போங்க எவனுக்கும் ஜால்ரா அடிச்சி கும்பிடு தேவை இல்லைன்னு!!

:)))//



ஹா..ஹா..ஹா..ஹா..
சிவா இரண்டு லைன் எழுதி பாராட்டிட்டார்

மங்களூர் சிவா said...

/
kanchana Radhakrishnan said...


ஹா..ஹா..ஹா..ஹா..
சிவா இரண்டு லைன் எழுதி பாராட்டிட்டார்
/

ஹா ஹா இது என்ன பாராட்டா இல்ல திட்டா??

அவ்வ்வ்வ்வ்


(மொத்தம் 5 லைன் ஆச்சுங்கோ)

Kanchana Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
/
kanchana Radhakrishnan said...


ஹா..ஹா..ஹா..ஹா..
சிவா இரண்டு லைன் எழுதி பாராட்டிட்டார்
/

ஹா ஹா இது என்ன பாராட்டா இல்ல திட்டா??

அவ்வ்வ்வ்வ்


(மொத்தம் 5 லைன் ஆச்சுங்கோ)//


சிவாவை திட்ட முடியுமா? கண்டிப்பா பாராட்டு தான்

சின்னப் பையன் said...

:-))

Kanchana Radhakrishnan said...

//ச்சின்னப் பையன் said...
:-))//

:-))))

இலவசக்கொத்தனார் said...

ஐந்தறிவு எனச் சொல்லாமல் அய்ந்தறிவு என எழுதுவது ஏன்?

Kanchana Radhakrishnan said...

//இலவசக்கொத்தனார் said...
ஐந்தறிவு எனச் சொல்லாமல் அய்ந்தறிவு என எழுதுவது ஏன்?//


வீஷேஷ காரணம் ஏதுமில்லை..அ னாக்கு ஆனா அவ்வளவுதான் இ னா.
வருகைக்கு நன்றி