Thursday, August 14, 2008

மனிதனானால் காதல் செய்! - பாரதியார்

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது.ஒரே ஒரு தெய்வம் முடியும் வரை விரிந்து நிற்பது--அதுதான் காதல்.
காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை எழுதுதல் ஆகாதென்று தடுத்தால், அவர்கள்..நமக்கு தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள்; பறவைகளின் பாட்டையும்,மலர்களின் கந்தத்தையும்,குழந்தையின் சிரிப்பையும்,ஞாயிற்றின் ஒளியையும்,காற்றின் உயிர்ப்பையும்,விண்
மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது?
தெய்வத்தின் படைப்பு முழுதும் காதலுக்கு தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது.உலகம் முழுதும் தூது போகச் செய்கிற திறமை காதலர்க்கு உண்டு.
இளவேனிற் காலமே நான் எழுதுகிற ஓலை நீ
உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய் பிற
செடியானால் தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்
காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.

3 comments:

சின்னப் பையன் said...

நல்லா சொல்லியிருக்காரு....

சின்னப் பையன் said...

இப்போல்லாம் மிஸ்ட் கால், பார்வர்ட் மெயில், எஸ்.எம்.எஸ் இப்படித்தான் காதலிக்கறவங்க முன்னேறிட்டாங்களே!!!

Kanchana Radhakrishnan said...

//இப்போல்லாம் மிஸ்ட் கால், பார்வர்ட் மெயில், எஸ்.எம்.எஸ் இப்படித்தான் காதலிக்கறவங்க முன்னேறிட்டாங்களே//



அதனால் என்னா...எல்லாக் காலங்களிலும் காதல்..காதல் தானே