Monday, August 25, 2008

ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்

இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'

ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?

ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.

பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.

18 comments:

விஜய் ஆனந்த் said...

என்ன கொடும இது???

கயல்விழி said...

இதெல்லாம் நிஜமா?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

முடியல...

மங்களூர் சிவா said...

ஓ ஊதாரித்தனமா சுத்திகிட்டிருந்தாதான் இப்பிடி ஒரு பொண்ணு கிடைக்குமா!?

இதுதெரியாம இவ்ளோ நாளா வேலை பாத்துகிட்டிருக்கேனே :(((

Kanchana Radhakrishnan said...

//என்ன கொடும இது???//

என்ன செய்வது விஜய்..இதுதான் நிலவரம்

Kanchana Radhakrishnan said...

//இதெல்லாம் நிஜமா?//

உண்மையில் ரயிலில் நான் கேட்ட உரையாடல் இது.பேசியவர்கள் இரு பயணிகள்.அவர்கள் பெயர் தெரியாது.பேசிய விஷயம் இந்த பதிவு.

Kanchana Radhakrishnan said...

//முடியல...//


ஜீரணிக்க எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது மதுவதனன்

Kanchana Radhakrishnan said...

//ஓ ஊதாரித்தனமா சுத்திகிட்டிருந்தாதான் இப்பிடி ஒரு பொண்ணு கிடைக்குமா!?

இதுதெரியாம இவ்ளோ நாளா வேலை பாத்துகிட்டிருக்கேனே :(((//

சிவா..உங்களின் இந்த பின்னூட்டம் ஜெர்மனிக்கு யாரோ ஃபார்வேர்ட் செய்திருக்கிறார்களாம்

ISR Selvakumar said...

இதில் நீங்கள் கவனிக்க மறந்த விஷயம்.

"பெண் எப்போதும் நல்லவளாகத்தான் இருப்பாள். இந்த ஆண்கள் இப்படித்தான் விளங்காமல் இருப்பார்கள்" என்கிற ஒப்புதல் வாக்கு மூலம் இருக்கிறது.

Kanchana Radhakrishnan said...

//இதில் நீங்கள் கவனிக்க மறந்த விஷயம்.

"பெண் எப்போதும் நல்லவளாகத்தான் இருப்பாள். இந்த ஆண்கள் இப்படித்தான் விளங்காமல் இருப்பார்கள்" என்கிற ஒப்புதல் வாக்கு மூலம் இருக்கிறது.//

இப்படி சொல்லி சொல்லித்தான் அவர்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம் என்பதே என் கருத்து.வருகைக்கு நன்றி செல்வகுமார்.

manikandan said...

******என்ன செய்வது விஜய்..இதுதான் நிலவரம்******

எந்த ஊர்ல ?

நீங்க எந்த மாதிரி பையன் வேணும்ன்னு பொண்ணு வீட்டுல நடக்கிற உரையாடலையும் எழுதலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அம்மாகிட்டயே பேசிகிட்டு இருப்பா. எந்த ஒரு முடிவுனாலும் அவங்க கிட்ட பேசி தான் எடுப்பா. பொண்ண வேலைக்கு போகலாம்ன்னு சொல்ல கூடாது. வேலைக்கு போககூடதுன்னும் சொல்ல கூடாது. பையன் கை நிறைய சம்பளம் வாங்கணும்.
IT company ல ஒரு நல்ல வேலைல இருக்கணும். அமெரிக்கால இருக்கணும்.
ஒரு பையனும் அவன விட ஜாஸ்தி சம்பளம் வாங்க கூடாது. வாங்கினா பொண்ணு அதே பத்தியே தான் பேசிகிட்டு இருப்பா. அத பையன் motivation aa தான் எடுத்துக்கணும். இந்தியாவுல இருந்தா பையன் சராசரி ஒரு 60 ஆயிரமாவது சம்பளம் வாங்கணும். பொண்ணு இப்ப வேல பாக்கறா. ஆனா கல்யாணம் ஆச்சுனா, இந்த trafficla ஆபீஸ் போயிட்டு எதுக்கு வரணும் ? அதுனால அவ போக மாட்டா.
அதுக்கு அப்புறம் பையனுக்கு அம்மா/அப்பா இல்லாட்டி நல்லது. ஏன்னா இருந்தா, அவன் அவங்ககிட்ட பொண்ணுகிட்ட இருக்கறத விட பாசமா இருப்பான்.


நீங்க எழுதினத விட இதுல exagerration கொஞ்சம் கம்மி தான்.

manikandan said...

******இதுதெரியாம இவ்ளோ நாளா வேலை பாத்துகிட்டிருக்கேனே ******

வேல பாக்கரதுனால நீங்க ஊதாரி இல்லன்னு ஆயிடுமா சிவா ?

உங்களோட பின்னூட்டம் எல்லா பதிவுலையும் கலக்கலா இருக்கு.

Kanchana Radhakrishnan said...

//நீங்க எந்த மாதிரி பையன் வேணும்ன்னு பொண்ணு வீட்டுல நடக்கிற உரையாடலையும் எழுதலாம்.

பொண்ணு கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் அம்மாகிட்டயே பேசிகிட்டு இருப்பா. எந்த ஒரு முடிவுனாலும் அவங்க கிட்ட பேசி தான் எடுப்பா. பொண்ண வேலைக்கு போகலாம்ன்னு சொல்ல கூடாது. வேலைக்கு போககூடதுன்னும் சொல்ல கூடாது. பையன் கை நிறைய சம்பளம் வாங்கணும்.
IT company ல ஒரு நல்ல வேலைல இருக்கணும். அமெரிக்கால இருக்கணும்.
ஒரு பையனும் அவன விட ஜாஸ்தி சம்பளம் வாங்க கூடாது. வாங்கினா பொண்ணு அதே பத்தியே தான் பேசிகிட்டு இருப்பா. அத பையன் motivation aa தான் எடுத்துக்கணும். இந்தியாவுல இருந்தா பையன் சராசரி ஒரு 60 ஆயிரமாவது சம்பளம் வாங்கணும். பொண்ணு இப்ப வேல பாக்கறா. ஆனா கல்யாணம் ஆச்சுனா, இந்த trafficla ஆபீஸ் போயிட்டு எதுக்கு வரணும் ? அதுனால அவ போக மாட்டா.
அதுக்கு அப்புறம் பையனுக்கு அம்மா/அப்பா இல்லாட்டி நல்லது. ஏன்னா இருந்தா, அவன் அவங்ககிட்ட பொண்ணுகிட்ட இருக்கறத விட பாசமா இருப்பான்.


நீங்க எழுதினத விட இதுல exagerration கொஞ்சம் கம்மி தான்.//








நீங்கள் சொல்வதும் நடக்கிறது...ஆனால் மேல் தட்டு மக்களிடையே.சதாரண குடும்பங்கல் இன்ரும் இருக்கத்தான் செய்கிறது.நான்கு,ஐந்து குழந்தைகளுடன் ,மூத்த பெண்ணை யாருக்காவது தள்ளிவிட்டால் போதும் என்று இருக்கும் பெற்றோர்கள் பலரும் இருக்கிறார்கள்.சமுதாயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் நீங்கள் பார்க்கறீர்கள்.
வருகைக்கு நன்றி.

manikandan said...

********சமுதாயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் நீங்கள் பார்க்கறீர்கள்.
வருகைக்கு நன்றி.******

அமாம். நான் எழுதியது சற்று மேல்தட்டு வர்க்கத்தில் நடக்கும் உரையாடலே !

manikandan said...

*****சதாரண குடும்பங்கல் இன்ரும் இருக்கத்தான் செய்கிறது.********

:)-

Kanchana Radhakrishnan said...

//*****சதாரண குடும்பங்கல் இன்ரும் இருக்கத்தான் செய்கிறது.********

:)-//

வருகைக்கும்..நாசுக்காக தட்டச்சு பிழையை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி

manikandan said...

நான் சுட்டிகாட்ட முயன்றது உங்களின் எழுத்து பிழையை அல்ல.

Kanchana Radhakrishnan said...

//நான் சுட்டிகாட்ட முயன்றது உங்களின் எழுத்து பிழையை அல்ல.//
nanri