குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பது எப்படின்னு வால் பையன் ஒரு
பதிவு போட்டிருந்தார்..ஆனால் ஆரம்ப நிலையான குடிப்பது எப்படி என்பதை
அவர் சொல்ல வில்லை.அது ஒரு முக்கியமான வேலை என்பதால்
நான் ஒரு பதிவு போட வேண்டியது இந்த சுதந்திரநாளில் ஒரு இந்திய
குடிமகனின் கடமை என்று எண்ணியதால் இப்பதிவு.
முதலில்...ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்..நீங்கள் குடிப்பது
மினரல் வாட்டராய் இருந்தால்..அந்த பாட்டிலின் மூடியைத் திறந்து..அந்த டம்ளரில்
முக்கால் பாகமோ..அல்லது முழு பாகமோ தண்ணீரை ஊற்றி..அப்படியே
மெதுவாக எடுத்து சிப் பண்ணி சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.
இதற்குத்தான் குடித்தல் என்று பெயர்.
மினரல் வாட்டரோ,கண்ணாடி டம்ளரோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என
ஏதேனும் பின்னூட்டம் வந்தால்..அதைப்பற்றி அடுத்த பதிவு..வால்பையனோடு
கலந்து ஆலோசித்து இடப்படும்.
8 comments:
ஆஹா ஆஹா என்ன ஒரு பயனுள்ள தகவல்... நன்றி நன்றி
கடமை வீரர் ராதாகிருஸ்ணன் வாழ்க! வாழ்க!
தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி இவன்
கடமை வீரர்களை பாராட்டுவதே கடமையாகக் கொண்ட சிவா நன்றி
அவ்வ்வ்வ்......
//அவ்வ்வ்வ்......//
:-)))))))
மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று.அதுவும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 லிட்டராவது குடிக்கவேண்டுமாம்.
அதையும் சொல்லி இருக்கலாம்..குடி மகன்களுக்கு
varukaikku nanri anani
Post a Comment