Sunday, August 24, 2008

இட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் "அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'.."

1.இ.வ.-முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து
எழுதலாமா? சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

கலைஞர்-தம்பி இ.வ.(மனதிற்குள் இ.வா என்று சொல்லிக்கொள்கிறார்)
இதையே சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னால்..தரம்
தாழ்ந்தது என்று சொன்னால்..அஞ்சா நெஞ்சனை தா.கிருட்டிணன்
கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தி..பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது
* * * நீ பார்த்தியா? *** நான் சொல்றேன் நீதான் கொலை செஞ்சேன்னு
என்றெல்லாம் பேசினேனே அதை நீ என்ன வென்று சொல்வாய்?

2.இ.வ-பிராமண சமூகத்தை மட்டுமே ஏன் எப்போதும் இழிவு படுத்துகிறீர்கள்?அடுத்த
முறை கனவில் அண்ணா,பெரியார் வரும்போது நல்ல அறிவுரைகளைக்
கேட்டு தெரிந்துக் கொள்வீர்களா?
கலைஞர்-தம்பி..இம்முறையும் தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய்.பல
முறை என்னுடன் பணி புரியும் அதிகாரிகள் பிராமணர்கள்தான் வேண்டும்
என நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.அண்ணா..பெரியார் இருவரும் என்
கனவில் வரும்போது அதிகமாக ஸ்டாலினைப்பற்றியும்,அழகிரியைப் பற்றியுமே
கவலைப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக அவர்கள் இதயத்துள் தைக்கப்பட்டுள்ள
முள் அகன்றதும்தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்பதை நீ அறிவாய்.

3.இ.வ.-மைனாரிட்டி அரசாக இருந்தாலும்..நீங்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.
ஜாதிகளைப் பற்றிப் பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா?
கலைஞர்-இந்த கேள்வி சிரிப்பைத்தான் வரவழிக்கிறது. மைனாரிட்டி அரசு என்று
நீ சொல்வதன் மூலம் ...யார் சொல்லி நீ அதைக் கேட்கிறாய் என அறிந்தேன்.
நீ வெறும் அம்பு..எய்தவன் இருக்க உன்னை நொந்து என்ன பயன்?நான்
ஆரியன் இல்லை சூத்திரன் என்ற ஒரே காரணத்தினால் இக் கேள்விஎன்னிடம் கேட்கப்
பட்டிருக்கிறது என்பதை உடன் பிறப்புக்கள் அறிவார்கள்.

4.இ.வ-ஐந்து முறை பதவிப்பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு..'எந்த விருப்பும்..
வெறுப்பும் இன்றி..'என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா?
அதை கூட விட்டு விடுங்கள்..இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
கலைஞர்-'அவாள்'என்று சொல்வதை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்.நான் எப்போதும்
அவர்கள் நினைப்பிலேயே இருப்பதால்..அந்த பேச்சு என்னை அறியாது எனக்குள்
புகுந்துவிட்டது.வேண்டுமானால் தயாளு மாமியை கேட்டுப் பாருங்கள்.மாறன் இருந்திருந்தால்
இந்த கேள்வி எழுந்திருக்காது.

5.இ.வ.-தேர்தலில் இதை பகிரங்கமாக சொல்லி 'அவாள்' ஓட்டு வேண்டாம் என்னும் தைர்யம்
நேர்மை கொஞ்சமாவது உண்டா?
கலைஞர்-மீண்டும் எனக்கு சிரிப்பை வரவழிக்கிறாய்..தேர்தல் போது நீ பார்க்கும் மு.க. வேறு.
தேர்தலில் அவர்கள் ஓட்டையும் பெற்று நான் கோட்டையை பிடிக்கும் போதும்,
கோட்டையை இழக்கும் போதும் பார்க்கும் மு.க. வேறு.

(இத்துடன் கலைஞரின், நமது கற்பனை பதில்கள் முடிந்தது)

இனி நமக்கு புரியாத கேள்வி..எல்லா சவால்களையும் சமாளிப்பவர்..'அவாள்' சவால் என்பது எதனால்..?

16 comments:

சின்னப் பையன் said...

போட்டுத் தாக்குங்க.... அவ்வ்....

கோவி.கண்ணன் said...

கலைஞரின் அவாள் உங்களுக்கு இன்னிக்கு கிடைத்த ...... ......................... ... ........ .................................................................. ........................................................................................................................................................................................................................................................................................................................................................... அவல் !
:)

விஜய் ஆனந்த் said...

:-)))...

சரவணகுமரன் said...

:-)

சூர்யா - மும்பை said...

சும்மா நச்சுனு இருக்கு.

கலக்குங்க இனா வானா.

அன்புடன்

ஸூர்யா.

Hariharan # 03985177737685368452 said...

//1. முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ?//

வெறும் வயது மூப்பு கருணாநிதி போன்ற வாழ்நாள் சாதனையான மலிவான அரசியல் செய்யும் நபரிடம் என்ன முதிர்ச்சியைத் தரமுடியும்??

கருணாநிதி போன்ற மலிவான சிந்தனை, செயல்கள் செய்யும் நபர் முதலமைச்சராக வரமுடிவதே சாதிபற்றி மட்டுமே எதையும் பேசி சிந்திப்பதால்தானே!

//பிராமண சமூகத்தவரை மட்டுமே ஏன் எப்போது எழிவு படுத்துகிறீர்கள் ? அடுத்த முறை உங்க கனவில் அண்ணா, பெரியார் வரும் போது நல்ல அறிவுரைகளை கேட்டு தெரிந்துக்கொள்வீர்களா ?//

கொடுமை கொடுமைன்னு கனவுல பெருங்கொடுமையான அறிவுரையா "பாம்பையும் பார்ப்பானையும் ஒருசேர பார்த்தால் பார்ப்பானை முதலில் அடி" எனும் ஈவெராமசாமியின் வெங்காயப் பேச்சுக்கள் தான் அறிவுரைகளா?? அல்லது எவரும் கேட்டறியத் தகுதியானவையா?

//தேர்தலில் இதை பகிரங்கமாகச் சொல்லி, அவாள் ஓட்டு வேண்டாம் என்னும் தைரியமும் நேர்மையும் கொஞ்சமாவது உண்டா//

அதான் அத்தனி அவாள்கள் ஓட்டையும் இவாளே போட்டுண்டுறாளே!!

இவாள்ல்லாம் நமக்கு நாமே கள்ள ஓட்டு திட்டப்படி பூத் பூத்தா, வார்டு வார்டா போட்டுண்டுட்டதெல்லாம் போக மிச்சம் மீதி இருக்கும் கொஞ்சநஞ்ச அவாள்கள் எலெக்சன் பூத் வரை போய் ஓட்டெல்லாம் போடுற அரசியல் கடமையைச் செய்யறாளா என்ன??

இப்படி தமிழ்நாட்டில் அவாள்கள் எல்லாம் தங்கள் அரசியல்/ தேர்தல் அடிப்படை கடமையே செய்யாம நல்லோர் ஆட்சி எனும் பலன் எதிர்பார்க்கலாமோ??

கிருஷ்ணபரமாத்மா சொன்னபடிக்கு தங்கள் கடமையை கரெக்டா அவாள்கள் எலெக்சன் பூத் போய் 100% தங்கள் ஓட்டுப்போட்டு செய்யட்டும்! நல்லோர்கள் பதவிக்கு வந்து நல்லவிதமான ஆட்சிக்கு அதுவே வித்திடும் தமிழ்நாட்டில்.

தமிழ்நாட்டு அரசியலில் யார் நல்லோரா?? தேடுங்க தேடுங்க தேடிக்கிட்டே இருங்கோ அவாள் இவாள்னு எல்லோருமா சேர்ந்து!

TBCD said...

யார் இந்த புதுப்பதிவர்...????

muthukumaran said...

Very nice Article.. I have enjoyed.. Please keep it up

Kanchana Radhakrishnan said...

//போட்டுத் தாக்குங்க.... அவ்வ்....//

போட்டுத் தாக்குங்கன்னு சொல்லிட்டு அப்புறம் என்ன அவ்வ்வ்வ்?

Kanchana Radhakrishnan said...

//கலைஞரின் அவாள் உங்களுக்கு இன்னிக்கு கிடைத்த ...... ......................... ... ........ .................................................................. ........................................................................................................................................................................................................................................................................................................................................................... அவல் !
:)//
கோவி சார் கிருஷ்ண ஜெயந்தி போனப்பிறகும் நீங்க அவல் ஞாபகம் வைச்சிருக்கீங்க.

Kanchana Radhakrishnan said...

:-)))))
nanri vijay

Kanchana Radhakrishnan said...

nanri saravanan
:-)))

Kanchana Radhakrishnan said...

//சும்மா நச்சுனு இருக்கு.

கலக்குங்க இனா வானா.

அன்புடன்

ஸூர்யா.//

நான் மட்டும் இ.வா. இல்லீங்க..மு.னா க.னாக்கு அவாள் எல்லாம் இனாவனா.
வருகைக்கு நன்றி சூர்யா

Kanchana Radhakrishnan said...

ஹரிஹரன் சார் ...பதிவு அருமைன்னு பின்னூட்டம் இடுவாங்க..ஆனா நான் ஒரு மாறுதலுக்கு உங்க பின்னூட்டம் அருமை ன்னு சொல்ல ஆசைப்படறேன்.ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளீர்கள்.வருகைக்கு நன்றி.

Kanchana Radhakrishnan said...

tbcd சார்..நான் சில காலமாய் எழுதி வருகிறேன்.இன்று தான் உங்கள் கண்ணில் பட்டுள்ளேன்.தங்கள் வருகைக்கும் ,பின்னூட்டத்திற்கும் மகிழ்ச்சி

Kanchana Radhakrishnan said...

//Very nice Article.. I have enjoyed.. Please keep it up//

varukaikku nanri muththukumaran