Saturday, September 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 29

சிவாஜி நாடக மன்ற நாடகங்கள்
நாக நந்தி
பகல் நிலா
ஜஹாங்கீர்
தேன்கூடு
நீதியின் நிழல்
களம் கண்ட கவிஞன்
வேங்கையின் மைந்தன்
வியட்நாம் வீடு
தங்கப்பதக்கம்

நடிகர் திலகம் பெற்ற விருதுகள்
1962-கலைமாமணி
1966-பத்மஸ்ரீ
1984-பத்மபூஷன்
1986-டாக்டர் பட்டம்
1989-தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர்.,விருது
1993-ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பில் 'ஆதித்தனார்' தங்கப் பதக்கம்
1994-தென்னிந்திய நடிகர் சங்கம் 'கலைச்செல்வம்' விருது
1995-ஃபிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய செவாலியே விருது
1997-தாதா சாகேப் பால்கே விருது.
இதற்குப் பின் சிவாஜியின் வீடு இருக்கும் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது.

நீண்ட நாட்கள் ஓடிய படங்கள்
பராசக்தி-42வாரங்கள்
வசந்த மாளிகை-41 வாரங்கள்
பாகப்பிரிவினை-31வாரங்கள்
தர்த்தி(ஹிந்தி)-38 வாரங்கள்
சம்பூர்ண ராமாயணம்-25 வாரங்கள்
இரும்புத்திரை,வீரபாண்டிய கட்டபொம்மன்,பாவ மன்னிப்பு,பாச மலர்,திருவிளையாடல்,தியாகம்,சந்திப்பு,படிக்காதவன்,முதல் மரியாதை,தேவர் மகன்,ஆகியவை 25 வாரம் ஓடின.நீதிபதி..141நாட்கள் ஓடின.தவிர 78 படங்கள் நூறு நாட்கள் ஓடின.

இப்படிப்பட்ட வெற்றியை எந்த நடிகரும் கொடுத்ததில்லை,கொடுக்கப் போவதுமில்லை.

சிவாஜி நடித்த சிறந்த கதாபாத்திரங்கள்..இந்த பதிவைப் படிக்கவும்..

அடுத்த பதிவோடு இத் தொடர் பதிவு முடிவு பெறும்.

10 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சிவாஜியை பத்தி அருமையான பதிவுகளை தந்துள்ளீர்கள்

ஜோ/Joe said...

நன்றி!

இராகவன் நைஜிரியா said...

சிவாஜி பற்றிய தகவல்களாக கொடுத்து கலக்கின்றீர்கள்.

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சிவாஜியை பத்தி அருமையான பதிவுகளை தந்துள்ளீர்கள்//நன்றி starjan

T.V.Radhakrishnan said...

// ஜோ/Joe said...
நன்றி!//

எதற்கு நன்றி ஜோ..நான் ஒரு சிவாஜி ரசிகன்..அவர் நடிப்பை ரசித்தமைக்கு என்னால் ஆன சிறு குருதட்சணையாக இப்பதிவை சொல்லலாம்.

T.V.Radhakrishnan said...

நன்றி இராகவன்

ஜோ/Joe said...

//எதற்கு நன்றி ஜோ..நான் ஒரு சிவாஜி ரசிகன்..அவர் நடிப்பை ரசித்தமைக்கு என்னால் ஆன சிறு குருதட்சணையாக இப்பதிவை சொல்லலாம்.//

நானும் ஒரு சிவாஜி ரசிகன் தான் .நான் செய்யாததை நீங்கள் செய்ததால் நன்றி சொன்னேன்.

goma said...

சிவாஜி ஒரு சகாப்தம்
நான் இன்றும் ரசிக்கும், இரண்டு விஷயங்கள்
உத்தமபுத்திரன் பாடல் .யாரடி நீ மோஹினியில்.....விந்தையான வேந்தனே என்று ஒரு பெண் வந்து சிவாஜிய்யின் காலடியில் மண்டியிடுவார்...சிவாஜி அந்த பெண்ணைத் தூக்கி விடுவது போல் அவளைத் தொடாமலேயே கரத்தில் ஒரு பழு தூக்கும் பாவனையோடு மேலே தூக்கி ஒரு அசைவு தருவார் பாருங்கள்,அவர் முழு பலத்தோடு அந்த பெண்ணை தூக்குவது போல் தெரியும்...
அடுத்து வீரபாண்டிய கட்டபொம்மன்
“....அங்கு கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாயா ...”என்று கேட்கும் பொழுது ...அவர் கரங்களில் அம்மிக் குழவி இருப்பது போலவே பார்வையாளர்கள் உணரும் வண்ணம்..குழவியை உருட்டி இழுப்பதும் அதற்கான பலத்தைப் பிரயோகிப்பதும் துல்லியமாகத் தெரியும்...
இவை போன்ற நுணுக்கமான கவனிப்பும் நடிப்பும் அவர் ஒருவரால்தான் இயலும்.

T.V.Radhakrishnan said...

//ஜோ/Joe said...
நானும் ஒரு சிவாஜி ரசிகன் தான் .நான் செய்யாததை நீங்கள் செய்ததால் நன்றி சொன்னேன்.//

நன்றி Joe

T.V.Radhakrishnan said...

நீிங்கள் சொல்வது உண்மைதான்..அவ்வளவு ஏன்..புதியபறவை கிளைமேக்ஸ் காட்சியில்...தான் கொலை செய்ததை எல்லாம் சொல்லிவிட்டு..மூக்கு சிந்துவாரே..அந்த நடிப்புக்கூட அடடா...

நன்றி goma