Monday, September 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

ஆமை ன்னு ஒரு படத்திலே..நடிச்சீங்களே..என்னவாச்சு
தயாரிப்பாளரோட இல்லாமை,இயக்குநரோட இயலாமை,கதாநாயகனோட தள்ளாமை எல்லாம் சேர்ந்து படத்தை வராமையாக்கி விட்டது.

2)உயர் அதிகாரி-(அதிகாரியிடம்)ஏன்யா? உங்கிட்டே வேலை செய்யறவன் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான்.பார்க்க அருவருப்பா இருக்கு..கொஞ்சம் சொல்லிவைக்கக் கூடாது
அதிகாரி-நாளையிலிருந்து என் மேசையைப் பூட்டிவைக்கிறேன் சார்

3)டாக்டர்- சிஸ்டெர் பத்தாம் நம்பர் நோயாளிக்கு டிரிப்ஸ் ஏத்தினியா
நர்ஸ்-பத்து நிமிஷம் முன்னாலதான் ஏற்றினேன்
டாக்டர்- இனிமேல் வேண்டாம்..நோயாளி செத்து ஒரு மணி நேரம் ஆச்சு

4)என் மனைவி அறிவாளி..அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வேன்..அவளைக் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்
அது என்ன காரியம்
அவளைக் கேட்காமல் அவளைக் கல்யாணம் செய்துகிட்டதுதான்.

5)வீடு கட்ட கடன் வாங்கி இரண்டு வருஷம் ஆயிற்று..வீடு கட்டி முடிச்சாச்சா?
ஓ..இன்னும் அஸ்திவாரம் ஒன்றுதான் பாக்கி

6) அந்த டாக்டர் முன்னால சினிமா டைரக்டராய் இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளி கிட்ட..எக்ஸ்ரே நாலு ரீல் எடுத்துடுங்கன்னு சொன்னார்.

12 comments:

Anonymous said...

//வீடு கட்ட கடன் வாங்கி இரண்டு வருஷம் ஆயிற்று..வீடு கட்டி முடிச்சாச்சா?
ஓ..இன்னும் அஸ்திவாரம் ஒன்றுதான் பாக்கி//

:))0
சூப்பர்ங்க..


அன்புடன்,

அம்மு.

goma said...

4)என் மனைவி அறிவாளி..அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வேன்..அவளைக் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்
அது என்ன காரியம்
அவளைக் கேட்காமல் அவளைக் கல்யாணம் செய்துகிட்டதுதான்.
:-))))))

தாலி கட்றதுக்கு முன்னால் அவள் அவர் மனைவி இல்லையே ,அதான் கேட்க வில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

4ல் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிகிறதே தல..,

க.பாலாசி said...

//பத்து நிமிஷம் முன்னாலதான் ஏற்றினேன்
டாக்டர்- இனிமேல் வேண்டாம்..நோயாளி செத்து ஒரு மணி நேரம் ஆச்சு//

அடப்பாவி மக்கா...செத்துப்போனவனுக்குத்தான் டிரிப்ஸா....

எல்லா ‘நகை’களும் சுவையே....

Starjan (ஸ்டார்ஜன்) said...

என்னா சிரிப்பு தாங்க முடியல

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அம்மு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தாலி கட்றதுக்கு முன்னால் அவள் அவர் மனைவி இல்லையே ,அதான் கேட்க வில்லை//
கல்யாணம் ஆகும் முன் அவளிடம் ஒரு வார்த்தை பேசியிருந்தால்..அறிவாளி என்று சொல்லும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது ..
இது எப்படி இருக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
4ல் சிரிப்பையும் தாண்டி ஒரு சோகம் தெரிகிறதே தல..,//

பழனியில் இருக்கும் என் நண்பரை நினைத்து எழுதியது அந்த ஜோக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//க.பாலாஜி said...
எல்லா ‘நகை’களும் சுவையே....//

நன்றி பாலாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
என்னா சிரிப்பு தாங்க முடியல

:-))))//

நன்றி starjan

மங்களூர் சிவா said...

:))))))
எல்லாமே சூப்பர்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
:))))))
எல்லாமே சூப்பர்!//

நன்றி சிவா