Monday, September 14, 2009

தேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..

பழனியிலிருந்து மருத்துவர் சுரேஷ் இந்த தொடர் பதிவில் என்னை கோர்த்துவிட்டிருக்கிறார்.அவருக்கு என் நன்றி..

தேவதை ஒருத்தி பத்து வரம் கொடுத்தால் ..என்ன..என்ன..கேட்பாய் என்பதே..

நான் கேட்ட வரங்கள்.

முதல் வரம் - கேட்டவருக்கெல்லாம் இணையதள பதிவர்கள் விருதுகளை வாரி வழங்குவது போல..நீயும் 10 வரங்கள் என்பது அதிகம்..இனி..யாருக்கும் 3 வரங்களுக்கு மேல் கொடுக்காதே! அந்த மூன்று வரங்களே பல மாற்றங்களை கதைகளில் ஏற்படுத்தி உள்ளன.

இரண்டாம் வரம்- அனைத்து அரசியல்வாதிகளையும் யோக்யர்களாக மாற்றிவிடு

மூன்றாம்வரம் - நாட்டில் எந்த மாணவன் எந்த படிப்பு படித்தாலும்..அதைப் படிக்க முடியவேண்டும்.பொருளாதாரம் அதற்கு தடையாய் இருக்கக் கூடாது.அரசு அனைத்து மாணவர்களையும்..அவர்கள் படிப்பு முடியும் வரை அரசு தத்தெடுக்க வேண்டும்.

நான்காம் வரம்- மதிப்பெண் மூலம் புத்திசாலிகள் தேர்ந்தெடுக்கப் படும் முறை மாற வேண்டும்.

ஐந்தாம்வரம்- சாதி..மத பேதம் ஒழிய வேண்டும்

ஆறாம்வரம்-பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்களுக்கு..உடனுக்குடன் தண்டனை வழங்க வெண்டும்..

ஏழாம்வரம்-நாட்டில் இல்லாமை என்பதே இல்லா நிலை வர வேண்டும்

எட்டாம்வரம்-ஸ்விஸ் வங்கியில் உள்ள 75 லட்சம் கோடி நமது கறுப்பு பணத்தை ..எங்கள் நாட்டுடமை ஆக்கிவிடு

ஒன்பதாம் வரம்- மெகா சிரியல்களுக்கு தடை விதிக்கப் பட வேண்டும்..எவ்வளவு மனிதர்களின் பொன்னான நேரங்களை இந்த உருப்படாத சீரியல்கள் விழுங்கிவிடுகின்றன.

இந்த ஒன்பது வரங்களையும் அந்த தேவதை உடனே கொடுத்து விட்டது..ஆனால் பத்தாவது வரத்தைக் கேட்டதும்..அது என்னால் முடியாது..என்று ஓடி ஒளிந்தது.அந்த பத்தாவது வரம்..

இணையதளத்தில்..அவ்வப்போது ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி பதிவுகளும்..அதைவிட ஆபாசமாய் வரும் பின்னூட்டங்களும் இனி வராமல் செய்..என்பதுதான்.

20 comments:

மணிகண்டன் said...

அனானி பதிவு போடும் தேவதை போல !

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லா வரங்களும் ரொம்ப சூப்பர்

நாந்தான் ரெண்டாவது

உடன்பிறப்பு said...

பத்தாவது வரம் தேவதையிடம் கேட்கக் கூடாது, தமிழ் வலைப்பதிவு உலகை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் சில பிரபல பதிவர்களிடம் தான் கேட்கவேண்டும்

பீர் | Peer said...

அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகள் எனில், வரம் 2 ற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் 10 ஐ பற்றிய கவலை வேண்டாம்...

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிக மிகச் சாதுர்யமான வரங்களையேக் கேட்டு இருக்கிறீர்கள் ஐயா.

நான் தான் வரம் கேட்கும் வாய்ப்பை ஒரே வரம் கேட்டதன் மூலம் நழுவவிட்டு விட்டேன்.

T.V.Radhakrishnan said...

//மணிகண்டன் said...
அனானி பதிவு போடும் தேவதை போல !//

:-))

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லா வரங்களும் ரொம்ப சூப்பர்

நாந்தான் ரெண்டாவது//

நன்றி ஸ்டார்ஜன்

T.V.Radhakrishnan said...

///உடன்பிறப்பு said...
பத்தாவது வரம் தேவதையிடம் கேட்கக் கூடாது, தமிழ் வலைப்பதிவு உலகை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் சில பிரபல பதிவர்களிடம் தான் கேட்கவேண்டும்//

அவர்களைக் கேட்டால்..புதியதாக விருது ஒன்று அறிமுகமாகும்..அவ்வளவுதான்

T.V.Radhakrishnan said...

//பீர் | Peer said...
அரசியல் செய்பவர்கள் அரசியல்வாதிகள் எனில், வரம் 2 ற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டால் 10 ஐ பற்றிய கவலை வேண்டாம்...//

இவர்கள் அரசியல் செய்வதில்லை ..இவர்களிடையே ஈகோ தான் காரணம் என எண்ணுகிறேன்

T.V.Radhakrishnan said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிக மிகச் சாதுர்யமான வரங்களையேக் கேட்டு இருக்கிறீர்கள் ஐயா.

நான் தான் வரம் கேட்கும் வாய்ப்பை ஒரே வரம் கேட்டதன் மூலம் நழுவவிட்டு விட்டேன்.//

நம் இருவரில் யார் கேட்டால் என்ன சார்

கோவி.கண்ணன் said...

//ஆறாம்வரம்-பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்களுக்கு..உடனுக்குடன் தண்டனை வழங்க வெண்டும்..
//

:) அந்த உறுப்பே மறைஞ்சு போய்விடனும்

Anonymous said...

நிஜமாவே அந்த தேவதை வராதான்னு இருக்கு.

நையாண்டி நைனா said...

நல்ல நல்ல வரங்களை கேட்டிருக்குறீர்கள்.

T.V.Radhakrishnan said...

////கோவி.கண்ணன் said...
//ஆறாம்வரம்-பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்களுக்கு..உடனுக்குடன் தண்டனை வழங்க வெண்டும்..
//

:) அந்த உறுப்பே மறைஞ்சு போய்விடனும்///

:-)))

T.V.Radhakrishnan said...

//சின்ன அம்மிணி said...
நிஜமாவே அந்த தேவதை வராதான்னு இருக்கு.//

வரும்..ஆனா வராது

T.V.Radhakrishnan said...

//நையாண்டி நைனா said...
நல்ல நல்ல வரங்களை கேட்டிருக்குறீர்கள்.//


நன்றி நைனா

நையாண்டி இல்லையே!

வால்பையன் said...

தேவதை டரியலாகிருக்குமே!

T.V.Radhakrishnan said...

///வால்பையன் said...
தேவதை டரியலாகிருக்குமே!//

:-))

மங்களூர் சிவா said...

/
அனைத்து அரசியல்வாதிகளையும் யோக்யர்களாக மாற்றிவிடு
/

இதைக்கேட்டதுக்கப்புறமுமா தேவதை உங்க முன்னாடி நின்னுகிட்டு இருந்துச்சு????

T.V.Radhakrishnan said...

//மங்களூர் சிவா said...
/
அனைத்து அரசியல்வாதிகளையும் யோக்யர்களாக மாற்றிவிடு
/

இதைக்கேட்டதுக்கப்புறமுமா தேவதை உங்க முன்னாடி நின்னுகிட்டு இருந்துச்சு????//

அந்த வரத்துக்குக்கூட ஓகே சொன்ன தேவதை..கடைசி வரம் கேட்டதும் ஓடி ஒளிந்துவிட்டதே!