Monday, September 21, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்
என்ன சொல்றீங்க
சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்

2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு
நண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.

3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு

4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே

5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்
தொண்டர்-தலைவா...அரசியல்லே இருந்து விலகப்போறீங்களா?

6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு

10 comments:

க.பாலாசி said...

//உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு//

ஹா...ஹா....சுவையான நகைத்துணுக்குகள்...அருமை....

Prathap Kumar S. said...

4, 6 நல்லாருக்கு... மற்றவை ஓகே ரகம்...

JesusJoseph said...

.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே
//

நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
க.பாலாஜி said...
ஹா...ஹா....சுவையான நகைத்துணுக்குகள்...அருமை....//

நன்றி பாலாஜி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நாஞ்சில் பிரதாப் said...
4, 6 நல்லாருக்கு... மற்றவை ஓகே ரகம்...//

நன்றி நாஞ்சில் பிரதாப்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//JesusJoseph said...
நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்//

நன்றி ஜோசப்

இராகவன் நைஜிரியா said...

// 6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு //

அனுபவம் பேசுகிறது... (என்னையும் அதுல சேர்த்துதான் சொல்லுகின்றேன்)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// இராகவன் நைஜிரியா said...
அனுபவம் பேசுகிறது... (என்னையும் அதுல சேர்த்துதான் சொல்லுகின்றேன்)//

உங்களைப்போல ஒரு சிலருக்கே உண்மையை ஒப்புக்கொள்ளும் குணம் இருக்கிறது

மங்களூர் சிவா said...

எல்லாமே அருமை குறிப்பாக 3வது மிக அருமை!
:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மங்களூர் சிவா said...
எல்லாமே அருமை குறிப்பாக 3வது மிக அருமை!
:)///


நன்றி சிவா