Tuesday, September 29, 2009

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமவிகிதத்திலேயே உள்ளது.இது கலைஞரை திருப்தி படுத்தவே என சில பதிவுகளில் படித்தேன்.

சிவாஜி படம் 2008க்கான சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினி நடித்துள்ளார் என்பதற்காக சிறந்த படமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவோ,ரஜினி சிறந்த நடிகர் விருது அவரை திருப்தி படுத்தவோ அல்ல.,என்றே தோன்றுகிறது.

அப்படத்தில் ரஜினி எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் வருவதால்..கலைஞரின் நண்பர்களான சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும்..கௌரவப்படுத்தவே அவ்விருது ரஜினிக்கு கொடுக்கப்படுகிறது.இதனால் அவர்கள் ரசிகர்கள் மகிழ்வார்கள்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்.

சிறப்புப் பரிசு பெரியார் படத்திற்கும்..சிறப்பு நடிகர் சத்யராஜிற்கு வழங்கியதன் மூலம்..பெரியாரின் தொண்டர்களையும்..வீரமணியையும் திருப்தியடைய வைக்கலாம்.

சிறந்த நடிகராக விவேக் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என ஆராய தேவையில்லை..அவருக்கு பத்மஸ்ரீ ஏன் கொடுக்கப்பட்டதோ அதே காரணமாய் கூட இருக்கலாம்.

2009க்கான சிறந்த படம் தசாவதாரம்..கமல் சிறந்த நடிகர்..கமல் ரசிகளை திருப்தி அடைய வைத்தாயிற்று.சூரியா சிறப்பு பரிசு கொடுத்ததன் மூலம் அவர் ரசிகர்கள் வாயை மூடலாம்.

2008 பாடலாசிரியர் வைரமுத்து..2009 வாலி ..இதுவும் பேலன்ஸ் செய்தாயிற்று.

உளியின் ஓசைக்கு 3 விருதுகள்.சிறந்த உரையாடல்(கலைஞர்)நடன ஆசிரியர் (சிவசங்கர்)நகைச்சுவை நடிகை(சரளா)..இது கலைஞரை திருப்தி படுத்தியிருக்குமா தெரியவில்லை.ஒரு வேளை இப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் படாதது கலைஞருக்கு வருத்தத்தை அளிக்கக்கூடும்..

பொம்மலாட்டம் படத்திற்காக உண்மையில் பாரதிராஜாவிற்கு இயக்குநர் விருதும்..சிறந்த திரைக்கதைக்கான விருதும்..அப்படத்தின் எடிட்டிங்கிற்கான விருதும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.சமீப காலமாக பாரதிராஜாவின் தமிழர் என்ற போக்கு மேலிடத்திற்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

ஆமாம்..விஜய் க்கு ஏதும் விருது கிடையாதா? அப்படி கொடுத்திருந்தால் கலைஞருக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருக்கும் என தேர்வுக் குழுவினர் எண்ணியிருக்கலாம்.விஜய் சமாச்சாரம் ராகுல் பார்த்துக் கொள்வார் என்றிருக்கும்.

20 comments:

venkat said...

நேற்றைக்கு அண்ணா விருது அடுத்து உளியின் ஓசைக்கு 3 விருது. வயசான காலத்துல தனக்குத்தானே விருது வாங்குறதுல ஒரு அற்ப சந்தோஷம்.
சரித்தான் விடுங்க.

கோவி.கண்ணன் said...

:)

"உண்ணாவிரதம்" 3 மணி நேரப் படத்தை எழுதி, நடித்து, இயக்கியதற்கு அடுத்த ஆண்டு விருது கிடைக்குமா ?

வருண் said...

எல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?

Nobody has the guts to criticize that award where Kamal came up with bunch of masks with a worthless plot!

Why does that deserve best picture award??

உண்மைத்தமிழன் said...

[[[பொம்மலாட்டம் படத்திற்காக உண்மையில் பாரதிராஜாவிற்கு இயக்குநர் விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும். அப்படத்தின் எடிட்டிங்கிற்கான விருதும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். சமீப காலமாக பாரதிராஜாவின் தமிழர் என்ற போக்கு மேலிடத்திற்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.]]]

சிறந்த திரைக்கதைக்கான தனி விருது இல்லை ஸார்.. இருந்திருந்தாலும் அது "அஞ்சாதே" படத்திற்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

Deepa said...

:))

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே கொடுத்து வாங்கல்னு சொல்லுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//venkat said...
நேற்றைக்கு அண்ணா விருது அடுத்து உளியின் ஓசைக்கு 3 விருது. வயசான காலத்துல தனக்குத்தானே விருது வாங்குறதுல ஒரு அற்ப சந்தோஷம்.
சரித்தான் விடுங்க.//

விடமுடியவில்லை வெங்கட்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
:)

"உண்ணாவிரதம்" 3 மணி நேரப் படத்தை எழுதி, நடித்து, இயக்கியதற்கு அடுத்த ஆண்டு விருது கிடைக்குமா ?//

வெறும் வாய்..அவல்..ம்..என்ன செய்வது..எல்லாம் காலம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருண் said...
எல்லாம் சரிதான், "தசாவதாரம்" ரொம்ப தகுதியான படமா என்ன? அதை மட்டும் ஏன் எல்லோரும் பூசி மொழுகுறீங்க?//

யாரும் பூசி மொழுகவில்லை.சிவாஜி,தசாவதாரம் இரண்டுமே அந்த இரு நடிகர்களை அரவணைத்துப்போக என்பதை எழுதித்தான் தெரிய வேண்டுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சிறந்த திரைக்கதைக்கான தனி விருது இல்லை ஸார்.. இருந்திருந்தாலும் அது "அஞ்சாதே" படத்திற்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.//
திரைக்கதைக்கென தனி விருது இல்லைதான்..ஆனால்..அதற்கும் சிறப்பு பரிசு என உருவாகியிருக்கலாம்.
அஞ்சாதே சிறந்த படம் ..அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது..ஆனாலும்..பொம்மலாட்டம் ஒரு காவியம்..பாரதிராஜா பார்த்து..பார்த்து செதுக்கி இருப்பார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Deepa (#07420021555503028936) said...
:))//

வருகைக்கு நன்றி தீபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எல்லாமே கொடுத்து வாங்கல்னு சொல்லுங்க//
ஆமாம்..விருதுகள் இப்படித்தான் கிடைக்கின்றன..உண்மையாய் கிடைக்க வேண்டியவைகளுக்கு...எப்படி..யாரை அணுகுவது என்று தெரியாத காரணங்களால் இருட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.

goma said...

அண்ணா நூற்றாண்டு விழாவில் , ”...கலைஞர் ஆட்சி கொடைநாடு.
மற்றது கொடநாடு....”.என்ற ரீதீயில் திரு வாலி உரையாற்றும் போதே நினைத்தேன் விருது காத்திருக்கிறது என்று.

goma said...

சிவாஜிக்கு[திரைப்படம்] விருதா??????

T.V.ராதாகிருஷ்ணன் said...

///goma said...
அண்ணா நூற்றாண்டு விழாவில் , ”...கலைஞர் ஆட்சி கொடைநாடு.
மற்றது கொடநாடு....”.என்ற ரீதீயில் திரு வாலி உரையாற்றும் போதே நினைத்தேன் விருது காத்திருக்கிறது என்று.///

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///goma said...
சிவாஜிக்கு[திரைப்படம்] விருதா??????//

நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்

வருண் said...

***T.V.Radhakrishnan said...

யாரும் பூசி மொழுகவில்லை.சிவாஜி,தசாவதாரம் இரண்டுமே அந்த இரு நடிகர்களை அரவணைத்துப்போக என்பதை எழுதித்தான் தெரிய வேண்டுமா?***

அது மட்டும் இல்லைங்க, 2 படமும் டி வி ரைட்ஸ் கலைஞர் டி வி யுனுடையது.

படையப்பா, அருணாச்சலம், சந்திரமுகி எல்லாத்துக்கும் தமிழ்நாடு அரசு விருது வழங்கி இருக்குங்க.

அவர்கள் கண்சிஸ்டண்டா திருந்தாமல் இருக்காங்க. நமக்குத்தான் திருந்திடுவாங்களானு ஒரு நப்பாசை :))

மங்களூர் சிவா said...

/
Starjan ( ஸ்டார்ஜன் ) said...

எல்லாமே கொடுத்து வாங்கல்னு சொல்லுங்க
/

:)))))))))
well said

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருண் said...
அது மட்டும் இல்லைங்க, 2 படமும் டி வி ரைட்ஸ் கலைஞர் டி வி யுனுடையது.

படையப்பா, அருணாச்சலம், சந்திரமுகி எல்லாத்துக்கும் தமிழ்நாடு அரசு விருது வழங்கி இருக்குங்க.

அவர்கள் கண்சிஸ்டண்டா திருந்தாமல் இருக்காங்க. நமக்குத்தான் திருந்திடுவாங்களானு ஒரு நப்பாசை :))//

அவர்கள் திருந்துவது இருக்கட்டும்....அவர்களை திருப்தி படுத்துவதே யன்றி வேறொன்றும் அறியோம் பாராபரமே என்றிருக்கும் அதிகாரிகள் திருந்த வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி siva