Monday, January 31, 2011

பதிவர்களை கிண்டலடிக்கும் விகடன்..வன்மையாகக் கண்டிக்கிறேன்





விகடன்...26-1-11 இதழில் கதை என்ற பெயரில் கட்டுரை ஒன்று.'சரஸ்வதி விஜயம்' என்று..புத்தகக் கண்காட்சிக் குறித்து எழுதப்பட்டுள்ளது.

இதில் தேவையில்லாமல் இணையத்தைப் பற்றியும்..பதிவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.

இதை அனைத்துப் பதிவர்களும் ஏன் கண்டனம் செய்யவில்லை..

அவர்கள் கிண்டலைப் பாருங்கள்..

"திருவிழாவில் தொலைந்து போன குழந்தைகள் மாதிரி முழித்துக் கொண்டு சிலர் வலதும், இடதுமாகப் பிரக்ஞை இன்றிப் பார்த்தவாறே போய்க்கொண்டு இருந்தார்கள்.நிச்சயமாக இவர்கள் பிளாக்கர்கள்.அடுத்த வருடம் எழுத்தாளர்கள் ஆகிவிடுவார்கள்.

இரண்டு பிரக்ஞை அற்றவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்கள்.'

'நீங்க ..நீ..மம்பட்டியாந்தானே?"

"நீங்க..நீ..வெட்டியாந்தானே?" இன்டெர்நெட் எழுத்தாளர்களின் புனைப் பெயர்களுக்குப் பின்னால் கதையோ, காரணமோ எந்தக் கண்றாவியும் கிடையாது.ஆரத் தழுவிக் கொண்டார்கள்.போட்டோ எடுத்துக் கொண்டார்கள்.மறுநாள் இந்த சந்திப்பைப் பிளாக்கில் போட்டோவோடு போட்டு விழா மாதிரி கொண்டாடுவார்கள்'

வருத்தம் இல்லா வாசகர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலும் பிளாக்கர்கள்.கூகுள்காரன் இலவசமாக பிளாக் எழுதிக் கொள்ள இடம் கொடுத்ததுமே..இணையத்தில் துண்டு போட்டு இலக்கியத்தில் குடிசை போட்டவர்கள்.இன்டெர்னெட்டில் டன் கணக்கில் எழுத்துக் குப்பை கொட்டுபவர்கள்.இவர்களே ஒருவருக்கு ஒருவர் 'எழுத்துச் சூறாவளி' 'இலக்கியச் சுனாமி' என்று பட்டம் கொடுத்துக் கொண்டவர்கள்.அவ்வப்போது மொண்ணையாக ஏதாவது கூட்டம் போடுவார்கள்.மைக் பிடித்து சப்பையாகப் பேசுவார்கள்.இந்த இலக்கிய நிகழ்வுகளின் போட்டோக்களை இண்டெர்னெட்டில் ஒரு ரவுண்டு ஓட்டுவார்கள்.

என்னதான் நகைச்சுவை என்றாலும்..பதிவர்களை கேலி செய்து சமணன் எழுதியுள்ள இக்கதையை வன்மையாக சக பதிவன் என்ற முறையில்  வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கலைஞர் காமெடி பீசா..??!!





கலைஞரின் டில்லி விசிட்டுக்கு அரசு பல காரணங்களைச் சொன்னாலும்..உண்மையான காரணம் சோனியாவைச் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேசுவதே முக்கிய காரணம் என அனைவரும் அறிவார்கள்.

என்ன..வழக்கம் போல..மீனவர்கள் பிரச்னை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதிமொழி(!!) அளித்துள்ளார்..என்பது..கலைஞர் அந்த விஷயமாகவே டில்லி சென்றுள்ளார் என நம்ப வைப்பதற்காக..

இந்நிலையில் சோனியாவிடம் தொகுதி பங்கீடு பற்றி பேசும்போது..பா.ம.க., வும் கூட்டணியில் இருக்கிறது என்று கூறினால்..முன்னே..பின்னே ..காங்கிரஸ் கட்சிக்கு இடம் ஒதுக்கிடலாம்..என்று கலைஞர் நினைத்தே பா.ம.க., தங்கள் கூட்டணியில் உள்ளது என அறிவித்தார்.கலைஞரின் விருப்பமும் அதே..ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., விற்கு கிடைத்த 12 தொகுதிகள் வெற்றி..பா.ம.க., தங்களுடன் இருந்திருந்தால் கிடைத்திருக்காது என கலைஞர் அறிந்திருக்கக்கூடும்.ஆகவே தான் தானே முந்திக் கொண்டு...பா.ம.க., பற்றி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு..மருத்துவரை உச்சாணி கிளையில் அமர்த்திவிட்டது..கலைஞர் தம் கட்சியின் பலத்தை அறிந்து..தன்னை அவருடன் இணைத்துக் கொண்டுள்ளார் என நினைத்து விட்டார்..

இதுதான் தருணம் என எண்ணிய மருத்துவர்..'கலைஞர் சொன்னது அவர் விருப்பமாயிக்கலாம்..ஆனால் நாங்கள் இது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லை.மேலும் இது சம்பந்தமாக வேறு சிலக் கட்சிகளும் எங்களை அணுகி உள்ளன..ஃபெப்ருவரி முதல் வாரத்தில் முடிவெடுப்போம்' என சற்று கித்தாப்புடன்,சற்று முறுக்குடன் பதிலளித்துள்ளார்.

நேற்றுவரை..தன்னை யாராவது சேர்த்துக் கொள்வார்களா..என்ற நிலையில் இருந்தவரை கலைஞரின் இந்த அவசர அறிவிப்பு..உள்ளூர மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்..தன்னாலும் கலைஞரை சஞ்சலத்தில் ஈடுபட வைக்க முடியும் என எண்ணி..மருத்துவர் கலைஞரை காமெடி பீஸ் ஆக்கிவிட்டாரோ!!

Sunday, January 30, 2011

2016ல எங்க ஆளுதான் முதல்வர்





தங்களால முடியலேன்னாலும் சிலர் குரல் விடறதுல கில்லாடியாய் இருப்பாங்க..

அதுபோல..தன்னால தனித்து நின்னு ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சாலும்..நான் தனித்து நின்னா 100 தொகுதிகள் ஜெயிப்போம்..என்றவர் 50..தொகுதி ஜெயிப்போம் என்றார் அடுத்த நாள்.அப்படிப்பட்ட நீங்க ஏன் 30, 40 சீட்டுக்கு கூட்டணி சேரணும்னு நக்கலாய் கேட்ட போதும் இவர் சட்டை செய்யலை.அப்புறம்

நம்ம ஜாதி 2 1/2 கோடி பேர் இருக்கோம்..எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டா..நான் கோபாலபுரத்துக்கும், போயஸ் கார்டனுக்கும் அலையா அலைய வேண்டியதில்லைன்னு புலம்பிக்கிட்டு இருந்தாரு.

அப்புறம்..கொஞ்ச நாள் கழிச்சு..'என் முதல் எதிரியே தி.மு.க., தான்' என்றார்.

அப்பறம்..கூட்டணிப் பற்றி இன்னிக்கு முடிவு,நாளைக்கு முடிவுன்னு தள்ளிப் போட்டுக் கிட்டு வந்தார்..

எல்லாவற்றிருக்கும் முற்றுப்புள்ளிப் போட்டாற்போல கலைஞர் இவரு கூட்டணிலே இருக்கார்னு அறிவிச்சுட்டார்.

இவங்க தான் முதல் எதிரின்னுட்டு ..இப்போ ..அடுத்த எதிரியை தோற்கடிக்க முதல் எதிரியுடன் சேர்ந்து விட்டார்.

இனி..நாங்க எல்லாம் பங்காளி..ஒன்னுக்குள்ள ஒன்னு ன்னு சொல்வார்..

ஏன்னா..பகையாளிக் குடியை உறவாடிக் கெடு ன்னு சொல்றது இவருக்குத்தான் அத்துப்படி.

எந்தக் கூட்டணிலே நாங்க இருக்கோமோ அந்த கூட்டணி ஜெயிக்கும்னாரு..ஆனா பாராளுமன்ற தேர்தல்ல காலி.

சட்டசபை தேர்தல்ல..நாம் ஏன் சொல்லணும்..

இப்போதைக்கு கோபாலபுரத்துல செட்டில்டு..சட்டபை தேர்தல் வரைக்கும்..இல்லை..இல்லை..அதுக்கு அப்பால..ராஜ்யசபா வுக்கு தன் பையனுக்கு சீட் கிடைக்கற வரை அணி மாறமாட்டார்னு உறுதிசொல்வோம்.

அப்புறம்..

அப்புறம் என்ன..2016ல எங்க ஆளுதான் முதல்வர்னு ஆரம்பிச்சுட வேண்டியதுதான்..

டிஸ்கி-.ஆனால் சம்பந்தப் பட்டவரோ...கூட்டணி பற்றி தான் எதுவும் முடிவெடுக்கவில்லை என வழக்கம் போல பேசியுள்ளார்.


ஏழுகுண்டல வாடா..எது உண்மை

Saturday, January 29, 2011

விருந்தும்..மீனும்..





ஐந்தாண்டு பதவி வேண்டி

ஐந்து நட்சத்திர ஓட்டலில்

பலவகை மீன்களுடன்

பலமான விருந்து

போதை ஏறியதும்

தட்டில்

தண்ணென கிடந்த

ஒவ்வொரு மீனும்

தமிழக மீனவனாகவும்

கொண்டு வந்த வெயிட்டர்

சிங்கள கடற்படையாயும்

கண்ணுக்குத் தெரிந்தது

தலைவனுக்கு

கண்ணீரில் குளிக்க வைத்தான்

உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..


உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..

ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்



கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை

உறவை கொடுத்தவர் அங்கே

அலை கடல் மேலே அலையாய் அலைந்து

உயிரைக் கொடுப்பவர் இங்கே

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல் தான் எங்கள் வீடு

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல் தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை

இதுதான் எங்கள் வாழ்க்கை



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்



கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடி நீர் தருபவர் யாரோ

தனியாய் வந்தால் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்

ஊரார் நினைப்பது சுலபம்



தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை

தண்ணீரில் பிழைக்க வைத்தன்

கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை

கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்

கண்ணீரில் குளிக்க வைத்தான்


- வாலி

டிஸ்கி-ஓட்டு கேட்டு வருவோர்க்கு வேட்டு வைப்போம்

Friday, January 28, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (28-1-11)





உலக மக்கள் தொகையில் இரண்டாமிடம். நிலப்பரப்பில் ஏழாம் இடம்.அதிக இளைஞர்கள் எண்ணிக்கையில் முதலிடம்,வற்றாத நதிகள்,இயற்கை வளங்கள் என உலக நாடுகளில் உச்சத்தில் நம் நாடு இருக்கிறது.

(அதனால் தான் அத்தனை ஊழல்களையும் நம்மால் சுமக்க முடிகிறதோ!!)

2)பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை இருந்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் சரக்கும்165 கோடிக்கு விற்பனையாகியுள்ளது

((ஒரு ரூபாய்க்கு அரிசி ரேஷனில் போட்டுவிட்டு..டாஸ்மாக்கில் குடிமகனிடம் வசூலித்த பணத்தை மானியமாக தருகிறதோ அரசு)

3)ரூபாய் ஒன்றுக்கு அரிசி வழங்குவதால் தமிழக அரசுக்கு சென்ற ஆண்டு 3136 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

((முந்தைய செய்திக்கும்..இதற்கும் உள்ள தொடர்பு இப்போது தெரிகிறதா?)

4)170 மொழிகளில் விக்கி அகரமுதலிகள் உள்ளன.தமிழ்மொழி உலக மொழிகளின் வரிசையில் முதல் பத்து இடத்தில் இருப்பதால் தமிழும் இடம் பெற்றுள்ளது.இதில் 1,92,000 சொற்கள் உள்ளன

5)சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதர் பொறுப்பிலிருந்து மூத்த நடிகர் அமிதாப் பச்சன் நீக்கப் பட்டுள்ளார்.சென்ற ஆண்டில் நடத்தப்பட்ட சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாது என அவர் அறிவித்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப் படுகிறது

6)கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்றி அறிய தடை இருந்தாலும், அதையும் மீறி ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே அழித்து விடும் கொடுமை நடக்கிறது.நாடு முழுதும் ஆண்டு தோறும் 7 லட்சம் பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப் படுவதாக ஒரு தகவல் அறிக்கை கூறுகிறது.

7)நொடிக்கு நொடி

கைமாறும் பணமே

உனக்கு

இத்தனை பொய் முகங்களா

கறுப்பு பணம்

சட்டவிரோத பணம்

வரி ஏய்த்த பணம்

பயங்கரவாதிகள் பணம்

உன் உண்மை முகம்

வியர்வை சிந்தி

உழைத்த

எங்களுக்கான பணமே

Thursday, January 27, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் - 23





நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

இப்பாடலை எழுதியவர் அதனால் கங்குல வெள்ளத்தார் எனப்பட்டார்.

இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லை - நாஞ்சில் நாடன்





சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சமீபத்தில் ஆனந்த விகடன் பத்திரிகைக்கு ஒரு பேட்டியளித்தார்..

மிகவும் சுவாரஸ்யமான அந்தப் பேட்டி குறித்து ஒன்றிரண்டு இடுகைகள் இடலாம் என்று எண்ணம்.

சமிப காலங்களில்..எதற்கும் பயப்படாமல்..தன் மனதில் உள்ளதை பளீரென பதிலாக அளித்த எழுத்தாளருக்கு வாழ்த்துகள்.

அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும்..அதற்கு அவரது பதிலும்..

கேள்வி- இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே

பதில்-உண்மைதான்.தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம்.ஆனால் இப்போது உள்ள மாணவர்களோ, 'மானாட மயிலாட'பார்ப்பதற்கு செலவழிக்கும் மணித்துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு இன்று எந்தத் தேசியத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதிகூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள்.நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?

இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம்.ஒரு புதுப் படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம்.உணர்ச்சி வசப்படுவதும் போராடுவதும் தான் இளைய தலைமுறையின் இயல்பே.ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக்கிடக்கும் எருமையைப் போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்த்க் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை..

நாஞ்சில் நாடனின் இந்த் பதிலில் உண்மையில்லாமல் இல்லை.இது குறித்து பதிவர்கள் தங்கள் எண்ணங்களை பின்னூட்டமாகவோ..அல்லது தங்கள் வலைப்பூவில் தனி இடுகையாகவோ இடலாம்.

சினிமா மட்டுமே தமிழ் காலாசாரத்துக்கு அபாயமானதா? என்ற கேள்விக்கு அவர் பதில் அடுத்த இடுகையில்..

Wednesday, January 26, 2011

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்!












அன்புள்ள இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி- இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்… என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட- உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை- இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.க வையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.க வை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்… அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?

உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களே… உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை- சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!



இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!

என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்

தாமரை

20.01.2011

சென்னை 24
 
(நன்றி- கீற்று )
 
இனி நான்..


தாமரையின் வரிகள் ஒவ்வொன்றையும் வழிமொழிகிறேன்..

விஜய்காந்துடன் அ.தி.மு.க., கூட்டணி அமையுமேயானால்..வை.கோ., விற்கு தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்னைகள் வரக்கூடும்..வை.கோ., என்னும் நல்ல மனிதர், இதையும் நினைத்துப் பார்க்கட்டும்.

இந்த சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை..தமிழர்கள் அனைவருக்குமான ஒரே எதிரி காங்கிரஸ்..அந்தக் கட்சி நிற்கும் இடமெல்லாம்..தோற்கடிக்கப் பட வேண்டும்..இதையே சீமானும்,நெடுமாறனும், வை.கோ., வும் முதல் வேலையாக நினைக்க வேண்டும்..

மற்றவை நாமே கெடுக்காமல் கெடும் காலமும் வரும்.



Tuesday, January 25, 2011

வாய் விட்டு சிரிங்க..





தலைவர் எந்தக் கடிதத்தையோ 100 பிரதி ஜெராக்ஸ் எடுக்கச் சொன்னாரே!

ஆமாம்..சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்து பிரதமருக்கு எழுதும் கடிதத்தைத்தான்

பிரதமர் என்ன செய்வார்

இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஜெராக்ஸ் எடுத்து வைத்துள்ள கடிதத்தில் ஒன்றை வெளியிடுவார்.

2)தலைவர் குடியரசு தின செய்தியை மறந்து போய் முடியரசு செய்தின்னு சொல்லிட்டாரே

மகனுக்கு முடி சூட்டும் எண்ணத்தில் இருப்பதால் ஏற்பட்ட சிறு குழப்பம்

3)தமிழுக்காக பிரதமரை சென்னையில் சந்திக்காத முதல்வர் டெல்லிப் போறாரே

சென்னையில் தமிழ் முக்கியம்..டெல்லியில் தொகுதி முக்கியம் ஆயிற்றே

4)திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிற..

அவரை புரிஞ்சுக்கவே முடியலே.. தி.மு.க., விற்கு கண்டனம் தெரிவிக்கிறார்..காங்கிரஸை திட்டறார்..ஆனால் அவங்க கூட்டணியிலே இருக்கார்..

அவர் தன் பெயரையும் இளங்கோவன்னு மாத்திக்கலாம்

5)பாகிஸ்தான் .சைனா வடக்கேயும்..அவர்கள் உதவியுடன் ஸ்ரீலங்கா தெற்கேயும் இந்தியாவை தாக்கினால் பிரதமர் என்ன முடிவெடுப்பார்

ஒபாமா என்ன சொல்றார்னு கேட்பார்


6)ஜெ 18 கட்சிக் கூட்டணி அமைக்கப் போகிறாராமே

அதுல ஒரு உறுப்பினர் பேட் கட்சி எவ்வளவாம்



7)கலைஞர் மறந்து போய் தங்க பாலு தி.மு.க., வில் இருப்பதாய் நினைத்து அவர் பெயரை மத்திய அமைச்சருக்கு சிபாரிசு செய்கிறாராமே

Monday, January 24, 2011

கலைஞர் தேர்தலில் நிற்கமாட்டார்...???!!!!





கலைஞர் 2001 சட்டசபைத் தேர்தலின் போதே..இது தான் நான் நீற்கும் கடைசித் தேர்தல் என்று கூறினார்.பின் 2006லும் நின்று வெற்றி பெற்று முதல்வரானார்.

இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசுகையில்..'என்னை முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும் போது தலைவர் என்ற சொல்லில் தான் தி.மு.க.,வினர் ஆர்வமாயிருப்பார்கள்.ஆதலால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன்' என்று கூறியுள்ளார்.இதன் மூலம் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம்.

அவரை இந்த முடிவெடுக்கத் தூண்டிய காரணங்கள் எவை என்று பார்த்தால்..

1)அவரது உடல் நிலை..

2) அழகிரி மாநில அரசுக்கு வர விரும்புகிறார் அல்லது தி.மு.க., விற்கு  செயலாளர் ஆக விரும்புகிறார்.


3)ஸ்டாலின் முதல்வர் ஆனால்..அழகிரி கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியைக் கேட்பார்.அச் சமயத்தில்..கழகத்தின் தலைவர் என்ற பதவியை கலைஞர் தக்க வைத்துக் கொண்டால்..கழகமும், ஆட்சியும் மறைமுகமாக அவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.அழகிரியும்..தலைவருக்குக் கட்டுப்பட்ட செயலாளராயிருப்பார், கட்சி இதனால் பிளவு படாது என கலைஞர் நினைக்கலாம்

4) முதல்வராக ஆக வேண்டாம் என்று நினைத்துவிட்டால்..தேர்தலில் நின்று ஒரு எம்.எல்.ஏ., வாக இருக்க கலைஞர் விரும்ப மாட்டார்.

4) இது நாள் வரை தான் தேர்தல்களில் தோற்றதே இல்லை என்னும் ரிகார்டை கலைஞர் தக்க வைத்துக் கொள்ள நினைக்கலாம்.

மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களாலேயே..கலைஞர் அப்படி பேசி இருப்பார் என்று தோன்றுகிறது.



டிஸ்கி-அப்படி ஒரு நிலை வந்தால் அன்பழகன் துணைத் தலைவராயிருப்பாரோ!!
நிகழ்வு -செய்திகள்

Sunday, January 23, 2011

ஈழத் தமிழர்கள் நிலை - பெண் வக்கீல் கவலை



இலங்கையில் போருக்குப் பிறகு அங்கு வாழும் தமிழர்கள் நிலை குறித்து அறிய வக்கீல் அங்கயற்கண்ணி,நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்த்த திருமலை ஆகியோர் இலங்கை சென்றனர்.அங்கு சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.


வக்கீல் அங்கயற்கண்ணி சொன்ன தகவல்கள்

தமிழர்கள் வாழும் வீடுகள் எல்லாம் வானம் பார்த்த வீடுகள்.ராணுவச் சிறையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரின் வீடு இடிந்துக் கிடப்பதைப் பார்த்தோம்.அவரது தாயார் அங்கு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.தமிழ் நாட்டிலிலிருந்து நாங்கள் வருவதாகக் கூறியதும்..அவரது கண்களில் கண்ணீர் மட்டும் வழிந்தது.அவர்களால் பேச இயலவில்லை.

வவுனியா அருகே ஓமந்தை என்ற இடத்தில் சோதனை சாவடியில் எங்களிடம் விசாரித்து, உளவுத் துறை போலீஸ் கைது செய்தனர்.பின்னர் பயங்கரவாத விசாரணைத் துறையில் காவலில் வைத்தனர்.பின் நீதிபதியிடம் எங்கள் நிலமையை விளக்கியதும் விடுவிக்கப் பட்டோம்.

உணவு,மருத்துவ வசதி எதுவும் இல்லாமல் ஈழத் தமிழர்கள் தவிக்கின்றனர்.அவர்கள் இங்குள்ள தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.என்று கூறினார் வக்கீல் அங்கயற்கண்ணி .
அவர் மேலும் கூறுகையில்'கிளிநொச்சியில் மக்கள் அகதிகளாகவே உள்ளனர்.ஒவ்வொரு வீட்டிலும் ஆண்களே இல்லை.பெண்களும், குழந்தைகளும்..கால்,கைகள் இல்லாமல்,கண்கள் குருடான நிலையில் உள்ளனர்.ஊனமில்லாத குடும்பத்தையேப் பார்க்க முடியவில்லை.

மொத்தத்தில் அங்கு தமிழ் இனத்தை அழித்திருக்கிறார்கள்..அழித்துக் கொண்டும் இருக்கிறார்கள் ..என்றார்..



டிஸ்கி..இப்போது மைய அரசு தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திவருவது குறித்து கவலைப்படுவதாக நடித்துவருகிறார்கள்.இது ஒரு ஹைக்கூவையே ஞாபகப்படுத்துகிறது..

ஆடுகள் நன்கு

தின்று கொழுக்கட்டும்

நாளை ரம்ஜான்

வெங்காயம் எட்டு ரூபாய் (ஜோக் கவிதை)





காய்கறி வியாபாரி

கந்தசாமி

வெங்காயம்

எட்டு ரூபாய்க்கு விற்கிறாராம்

கேட்டதுமே

கேஷ் ஐம்பதுடன்

விரைந்தேன்....

தேங்காயைப் போல

விற்கிறேன்

வெங்காயத்தை

ஒன்று எட்டுரூபாய்

என்றிட்டார்

Friday, January 21, 2011

குறள் இன்பம் - 7





இந்த இடுகையில் வள்ளுவரின் சொல்விளையாட்டை மேலும் இரண்டு குறள்களில் பார்க்கலாம்..
வினை செயல் வகையில் எட்டாவது குறள்..

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

சாதாரணமாக..நாம் கடைக்கு கிளம்புகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள்..மளிகை சாமான் வாங்கி முடித்து வீடு திரும்பும் போது..சமைக்க ஏதேனும் காய்கறியையும் அருகிலேயே கிடைக்கையில் ..ஒரே நடையாக அதையும் வாங்கிக் கொண்டு செல்வதில்லையா...அதைத்தான் சொல்கிறார் வள்ளுவர்..

எப்படி..

யானையைப் பிடிக்க நினைப்பவர்கள்..என்ன செய்வார்கள்..மற்றொரு யானையை ஒரு இடத்தில் கட்டி வைப்பர்.இது கண்டு..அந்த யானையைக் காக்க மற்றொரு யானை வந்து..பிடிக்க வெட்டப்பட்டிருக்கும் குழியில் விழுந்து அகப்பட்டுக் கொள்ளும்.இதுதான் யானையை வைத்தே யானையைப் பிடிப்பதாகும்.

மேலே சொன்ன குறளின் பொருள் -ஒரு செயலில் ஈடுபடும்போது, அச் செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்

வினையான், வினையாக்கி,யானையால்,யானையா என்னே சொல் விளையாட்டு.

அடுத்த குறள்
நட்பு அதிகாரத்தில் ஆறாம் குறள்..

நட்பு என்னும் சொல் நான்கு இடத்திலும்..மற்றும் முகநக,தகநக எனவும் சொல் விளையாட்டு ஆடும் குறள்

நண்பரின் இல்லத்திற்குச் செல்கிறோம்..அவரோ குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்கிறார்,நம்மைப் பார்த்ததும்..'அடடே வா..வா., என முகத்தில் மகிழ்ச்சியை காட்டி வரவேற்கிறார்.ஆனால் மனதிற்குள்..இவன் ஏன் இப்போது வந்து நம்மை தொல்லை செய்கிறான் என எண்ணுவாரானால்..அது நட்பு ஆகாது.மனதார மகிழ்ச்சியுடன் நண்பன் என்பவன் மற்றொரு நண்பனிடம் பழக வேண்டும்.

இதையே வள்ளுவர்...

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல..இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும் என்கிறார்.


முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு


மீண்டும் அடுத்த இடுகையில் சந்திப்போம்.

பலநாள் திருடனும்..கையும்..(கவிதை)





பலநாள் திருடன்

பக்கிரி

ஒருநாள் காவலனிடம்

மாட்டிக்கிட்டான்

கையூட்டு கொடுக்காததால்...

கோர்ட்டில் நிறுத்தினர்

காவலர்

நீதிபதி கேட்டார்

குற்றத்தை ஒப்புக்கிறியா?

மன்னிப்புத் தரேன்..என

ஐயா

கை இருப்பதாலேயே

திருடுகிறேன்..

கைக்கு மாற்று சொன்னால்

திருடுவதை

விட்டுடுவேன் என..!

விருட்டென சொன்னான்

Thursday, January 20, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (21-1-10)





1)கடந்த பத்து ஆண்டுகளில் 70 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டதாகவும், கடன் தொல்லையால் இதுவரை இரண்டு லட்சம் விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாகவும் ஒரு தகவல் அறிக்கை கூறுகிறது.

2)ஏர்டெல்,வோடாஃபோன்,ஐடியா,ஏர்செல்,வீடியோகான்,யூனினார் இவற்றில் எந்த நிறுவனத்தின் சேவை பிடிக்காவிட்டாலும் மற்ற ஒன்றின் சேவைக்கு எண்ணை மாற்றாமலேயே மாறிக் கொள்ளும் திட்டம் அமுலுக்கு வந்துள்ளது.ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களை தங்க வைத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.

3)விஜய் நடித்த காவலன் படம் பல சர்ச்சிக்கு நடுவில் நல்ல ரிபோர்ட்டுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.இதனிடையே..'என் கேரியரை பாழ்படுத்த வேண்டும் என சில வேண்டாத சக்திகள் சதி செய்வது எனக்குத் தெரியும்.அவர்கள் சதியை என் ரசிகர்கள் துணையுடன் முறியடிப்பேன்' என்றுள்ளார் விஜய்.

4) எம்.ஜி.ஆர்., தி.மு.க., வில் இருந்த போது ஒரு சமயம்..'காமராஜர் என் தலைவர்..' என்றார்.அப்போது வெளியான அவரது 'என் கடமை' என்ற படத்திற்கு வேண்டாத தொல்லையெல்லாம் கொடுத்து..ஒரு நல்ல படத்தை தோல்வி படமாக்கினர்.பின்னர் எம்.ஜி.ஆர்., 'காமராஜர் என் தலைவர்..அண்ணா என வழிகாட்டி' என்று சொன்னார்.

5)2050ஆம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு விட்டு வாங்கும் சக்தியின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் சாத்தியங்கள் உள்ளதாகவும்..சீனாவையே முந்தக் கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

6)வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை போட்டவர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று பிரதமர் மன் மோகன் சிங் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.இது செய்தி..(ஆனால் ..வெளியிடுவோம் என்று சொல்லியிருந்தால் தான் அது செய்தி என்கிறோம் நாம்)

7)அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே மீது போர் குற்றம் தொடர்பான விசாரணையை தொடங்குமாறு ஒபாமா அரசை சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

8)பாரதியார் பாடலில்..'காவிரி,தென்பெண்ணை,பாலாறு தமிழ் கண்ட தொரு வையை,பொருநை நதி என்கிறார்,தமிழகத்தில் பொருநை நதி எது தெரியுமா? நெல்லையை வளமாக்கும் தாமிரபருணி தான் பொருநை என அழைக்கப்படுகிறது.

9)மத்திய அமைச்சரை விரிவாக்கத்தில் தி.மு.க., அமைச்சர்கள் இல்லை.(ஒரு வேளை..தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தமிழக ஆட்சியில் பங்குக் கொடுத்தால்..மே மாதம் மைய அரசு விரிவாக்கத்தில் தி.மு.க., அமைச்சர் இடம் பெறக்கூடும்)

தோனியும்..மன் மோகன் சிங்கும்..


                                                         நீயும் நானும் ஒன்னாம்
                                                     

கிரிக்கெட்டில் வெற்றி கேப்டனாக திகழ்ந்து வருகிறார் தோனி..

மன்மோகன் சிங், சோனியாவின் ஆதரவு பெற்றதில் வெற்றி பிரதமராக இருக்கிறார்.

தோனிக்கும், மன்மோகன் சிங்கிற்கும் உள்ள ஒற்றுமை ..வியக்க வைக்கும் ஒன்றாகும்..

தோனி தலைமையிலான அணி வெற்றி பெறுகையில்..பாராட்டும் மக்கள்..ஏதேனும் போட்டியில் தோற்றாலோ அவரை உண்டு, இல்லை என ஆக்கிவிடுகின்றனர்..

அது கண்டு தோனி வருந்துவதில்லை.

அதுபோல மன் மோகன் அரசை உச்ச நீதி மன்றம் பல முறை சாடியுள்ளது.மன் மோகன் சிங், சற்றும் அது பற்றி கவலையோ, வருத்தமோ பட்டதில்லை.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் சரி, உணவு தானியங்கள் வீணாகப் போவதாக கூறப்பட்ட வழக்கிலும் சரி உச்ச நீதி மன்றம் சொன்னதற்கு..சற்றும்..கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.

இப்போது கருப்பு பண விவகாரமாக அடுத்தடுத்து இரண்டு முறை மத்திய அரசை கடுமையாக உச்ச நீதி மன்றம் சாடியுள்ளது.நாட்டின் பொருளாதாரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.அந்த செயலை அரசு ஏன் மறைக்கப் பார்க்கிறது? எனக் கேட்டுள்ளது.

மன் மோகன் சிங்..இது விஷயமாக மத்திய அரசின் இயலாமையை, பிரணாப் ஊடகங்களுக்கு எடுத்துச் சொல்லச் சொல்லும் பணியை ஒப்படைத்துள்ளார்.

தோனி, எதிரணி அபாரமாக விளையாடும் போதும் சரி, நம் அணியினர் விக்கெட் சொற்ப ஓட்டங்களுக்கு மட மட வென சரிந்தாலும் சரி..சற்றும் மனம் வருந்தாமல், டென்ஷன் இல்லாமல்..சிரித்தபடியே விளையாடுவது போல..எந்த நிலையிலும்..தனது ரியாக்க்ஷனைக் காட்டாது..எதுவுமே நடக்காததுப் போல இருக்கிறார் பிரதமர்.

ஆனால் ஒன்று விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி, தோல்விகளை சமமாகப் பார்க்க வேண்டியது அவசியம்..அப்போதுதான் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடியும்.

ஆனால் பிரதமருக்கு அந்தக் கவலையில்லை..கட்சியின் வெற்றி தோல்வியை சோனியா பார்த்துக் கொள்வார்.கட்சி வெற்றியடைந்தால்..ராஜ்யசபா உறுப்பினர் ஆகிவிடலாம்.பிரதமர் ...ஆட்சியை நடத்தவும் பிரணாப், சோனியா, ஒபாமா ஆகியோர் உள்ளனர்.

அழகு (கவிதை)





என்

அழகின் ரகசியம்

அன்றாடம்

உபயோகிக்கும்

உத்தமி சோப்பே

நடித்து முடித்த

நடிகைக்கு

ஒருமணி நேரம் ஆனது

ஓரங்குல மேக்கப்

கலைக்க

Wednesday, January 19, 2011

தமிழ்மணத்திற்கும்..மற்றும் விருது பெறாதவர்களுக்கும்

தமிழ்மணம் 2010க்கான விருது பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
அதே நேரம் தங்கள் இடுகை..விருது பெற்ற இடுகையை விடச் சிறந்தது என்றோ..தங்களுக்கு விருது கிடைக்க வில்லை என்றோ மனம் தளர வேண்டாம்.
நீங்கள் பதிவுலகில் நுழைகையில் விருதை எதிர்பார்த்தா நுழைந்தீர்கள்?
உங்களது எண்ணங்களுக்கு, கற்பனை வளத்திற்கு வடிகாலாய் இருக்கும் என்றே வலைப்பூ ஆரம்பித்து இடுகை இடத் தொடங்குகிறீர்கள்.நாளாக ஆக ஆக..பிறருக்கு கிடைக்கும் ஹிட்ஸ்,பின்னூட்டங்கள், சூடான இடுகை, வாசகர் பரிந்துரை ..இவற்றில் அதிகமாக நம் இடுகையும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறோம்.
தமிழ்மணத்தை பொறுத்து உங்களையும் சேர்த்து ஏழு நபர்கள் ஆதரவாக வாக்களித்தால் இடுகை வாசகர் பரிந்துரையில் வந்துவிடும்.இதற்கு உங்களுக்கு நட்பு வட்டம் பெரியதாய் இருக்க வேண்டும்.என் இடுகைகள் பல 5 அல்லது 6 வாக்குகள் பெற்று பரிந்துரையில் இடம் பெறாமல் பலமுறை போனதுண்டு.அதற்காக நான் வருந்தியதில்லை..அதற்கு பதிலாக பல இடுகைகள் நூற்றுகணக்கானோர் படிக்கின்றனர் என்ற திருப்தி எனக்கு.
நீங்களும் அந்தக் கணக்கைப் பாருங்கள் போதும்.பின் இவற்றுக்கெல்லாம் ஆசைப்பட மாட்டீர்கள்.
சமீபத்தில் தமிழ்மணம் Traffic Rank, 2010 முன்னணி இடுகை இவற்றைப் பற்றி வெளியிடுவதால் பதிவர்களிடையே போட்டி அதிகமாகி, சமீப காலங்களில் தரமான இடுகைகள் பல வர ஆரம்பித்துள்ளது ஒரு ஆரோக்கிய மாற்றம்.
இப்போது தலைப்புக்கு வருவோம்..
போட்டிக்கு கிட்டத்தட்ட 1500க்கும் மேலான இடுகைகள் பரிந்துரைக்கப் பட்டன.இதை அனைத்தையும் படித்துப் பார்த்தா பதிவர்கள் முதல் கட்டத்தில் வாக்களிக்கப் போகிறார்கள்.கண்டிப்பாக இல்லை.அப்படி யாரேனும் சொல்வாரானால் அது ஜமக்காளத்தில் வடி கட்டிய பொய்யாகும்.ஆகவே முதல் சுற்று வாக்கெடுப்பு கண்டிப்பாக நண்பர்களுக்குள் பண்டமாற்ரு வாக்கெடுப்பாய்தான் இருக்கும்.நீ எனக்குப் போடு..நான் உனக்குப் போடுகிறேன்..என்ற ரேஞ்சில் தான்.
இதன் மூலம் அதிக வாக்குகள் பெற்று கிட்டத்தட்ட 200 இடுகைகள் இரண்டாம் சுற்றுக்கு வருகிறது.
இங்கும் பதிவர்களும்..வாசகர்களும் (வாசகர்கள் என எவ்வளவு பேர் இருக்கப் போகிறார்கள்..பதிவர்கள் தவிர்த்து) வாக்களிக்க வேண்டும்.இதிலும் கிட்டத்தட்ட முதல் சுற்றில் வாக்களித்தவர்கள்..தங்களுக்குள் வாக்களிக்கும் சாத்தியக்கூறுகளே அதிகம்.
இதுவரை சென்ற இரண்டு ஆண்டுகளாக சிறந்த இடுகை தேர்ந்தெடுக்கப் பட்டது.
தமிழ்மணத்திற்கும்..இவை எல்லாம் தெரிந்ததால்..இவ்வாண்டு..பதிவர்கள் சிலரை நடுவர்களாக தேர்ந்தெடுத்து..பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடுகைகளை..ஒரு நடுவருக்கு இரண்டு பிரிவு என ஒதுக்கி மதிப்பெண் போடச் சொல்லப் பட்டது.
உண்மையில்..எனக்கு அப்படி வந்த இரு பிரிவுகளை படித்து நான் அதிக மதிப்பெண்கள் போட்ட நான்கு இடுகைகள் தரம் வாய்ந்தவை.இதுநாள் வரை அப்பதிவர்கள் இடுகைகளை நான் தமிழ் மணத்தில் படித்ததில்லை.முதல் இரண்டு சுற்றில் அவ்விடுகைகளுக்கு நான் வாக்களிக்க வில்லை.ஆனால் தரமான அவற்றைத் தேர்ந்தெடுத்தேன்.இந்தப் பிரிவுகளில் எனக்கு வேண்டிய நால்வரின் இடுகைகளும் இருந்தது.என் மனசாட்சிப் படி..நான் தேர்ந்தெடுத்தேன்.நட்புக்கு அந்த இடத்தில் இடம் இல்லை..இருந்திருந்தால் நான் நடுவராய் இருக்கும் அருகதையற்றவன் ஆகி விடுகிறேன்.ஆகவே நான் சொல்ல வருவது இந்த நடுவர் மூவ் தமிழ்மணத்தின் புத்திசாலித்தனமான மூவ்

இனி தமிழ்மணத்திற்கு..
என்னை நடுவர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி.
மொத்தமாக வருடம் முழுதுமான இடுகைகளை பரிந்துரைக்கச் செய்து 1500க்கும் மேற்பட்ட இடுகைகளுக்கு படித்து

வாக்களிக்கச்

சொல்வது கண்டிப்பாக இயலாத காரணம்.இனி காலாண்டுக்கு ஒரு முறை இடுகையை பரிந்துரை செய்யச் சொல்லி..அவ்விடுகைகளை பதிவர்கள் எப்போது வேண்டுமானாலும் படித்து வாக்களிக்கட்டும் என ஏற்பாடு செய்யலாம்.நான்கு காலாண்டு முடிந்ததும் அதிக வாக்குகள் பெற்ற இடுகையை நடுவர் குழுக்கள் பரிசீலிக்கலாம்.
அல்லது..இப்போது traffic rank இருப்பது போல இடுகையை தமிழ்மணம் நிர்வாகமே தேர்ந்தெடுக்கலாம்.
அப்போது பிரச்னை வராது.
விருது தரும் நிறுவனமே யாருக்கு விருது தருவது எனத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெறுவது சிறந்தது தானே.

டிஸ்கி- என் பதிவு ஒன்றும் ஐந்தில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப் பட்டு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப் படவில்லை.அதே போல பல மூத்த பதிவர்கள் இடுகைகளும் கடைசி சுற்றில் தேர்ந்தெடுக்கப் படவில்லை.காரணம்..அவற்றைவிட விருது பெற்ற இடுகைகள் சிறந்ததாக நடுவர்கள் பார்வையில் இருந்திருக்கலாம்.அதை நாம் குறைசொல்வதைத் தவிர்த்து ..இனி வரும் நாட்களில் போட்டிகளின் முடிவுகளை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம்.

கோழைகள் (கவிதை)

காதலித்தான்
காதலித்தாள்
மணமுடித்தான்
ஒருமுழ கயிற்றை
மூன்று முடிச்சுடன்
கழுத்தில் கட்டி
வேறோருத்தியை.
கோழை
இவள் தழுவினாள்..
மூன்று முழக் கயிற்றையும்
ஒரு முடிச்சையும்
நன்றிகெட்ட
நம்பிக்கைத் துரோகிக்காக!!

Monday, January 17, 2011

தி.மு.க., காங்கிரஸ் வெற்றி கூட்டணியா?

வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., காங்கிரஸ் இரண்டு கட்சிகளுக்கும் கிட்டத்தட்ட கூட்டணி முடிவாகிவிட்ட நிலையில்..பா.ம.க., இவர்களுடன் இணையலாம்.விடுதலை சிறுத்தைகள் இணையும்.அப்போது இக்கூட்டணி வலுவானதாக இருக்குமா?

அல்லது..

அ.தி.மு.க., ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்ட்கள்,விஜய்காந்த்,சீமான் இவர்கள் இணைந்த கூட்டணி வலுவானதா..

பாரதீய ஜனதா கட்சி வலுவானதா..

என்று பார்த்தோமானால்.

தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ்,இரு கம்யூனிஸ்ட்கள் இணைந்த 2006 தேர்தல் கூட்டணி 162 இடங்களில் வெற்றி பெற்றது .இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 44.5%

அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை இவர்களுக்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 39.8 % ஆனால் முடிவுகள் என்று பார்த்தால் தி.மு.க., கூட்டணிக்கு 162 இடங்கள் கிடைத்தன.

அ.தி.மு.க., கூட்டணிக்கு 68 இடங்கள்.

தனித்து போட்டியிட்ட டி.எம்.டி,கே., ஒரு இடம்.

உண்மையில் விஜய்காந்த் கட்சிக்கான தமிழ் நாடு முழுதும் ஆன ஆதரவு 8.32 சதவிகிதம் இதுவே சரி.

மற்றவை..அந்தந்தக் கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் கிடைத்த சதவிகிதத்தை வைத்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம்.இது சரியாய் இருக்குமா எனத் தெரியவில்லை.

இந்நிலையில்..வரும் தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் அதி.மு.க., கூட்டணிக்கு வந்துள்ளன.வி.சி.கே., தி.மு.க. கூட்டணி.

தனிப்பட்ட கட்சி ஆதரவு எனப் பார்த்தால்..தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும், விஜய்காந்தும் மட்டுமே அவர்கள் வாக்கு வங்கியை சரியாக வைத்திருப்பார்கள்.

சென்ற தேர்தலின் படிப் பார்த்தால்..

அ.தி.மு.க.,32.5 +கம்யூனிஸ்ட்3.27+ ம.தி.மு.க. 5.97+விஜ்யகாந்த் 8.38..இவர்களின் ஓட்டு சதவிகிதம் 50.12%

தி.மு.க., 26.4+பா.ம.க.5..58+காங்கிரஸ்8.38 மொத்தம் 40.36%

தவிர்த்து சீமான் அ.தி.மு..க.விற்கும், திருமாவளவன் தி.மு.க., விற்கும் எவ்வளவு வாக்குகள் கொண்டுவருவார்கள் என தெரியவில்லை.

விலைவாசி உயர்வு, ஊழல், இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவை ஆளும் கூட்டணிக்கான வாக்குகளில் சில சதவிகிதங்கள் குறைக்கக் கூடும்.

(மேலும் சென்ற தேர்தலில் தி.மு.க., அதி.மு.க., கட்சிகள் தோற்ற இடத்தில் ..அவைகள் தோல்வியுற்ற வாக்குகளைவிட விஜய்காந்த் 63 தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற்றிருந்தார்.இதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

இன்றைய நிலையில் எதிர்க்கட்சிக் கூட்டணியே சற்று பலம் வாய்ந்ததாகத் தெரிகிறது.போகப் போக நிலைமை மாறலாம்.

ஜெ ., பி.ஜே.பி., ஐயையும் தன் கூட்டணியில் கொண்டு வந்தால் சில சதவிகித வாக்குகள் கூடக் கூடும்.

ஆனால்..ஒன்று மட்டும் நிச்சயம்..இந்தத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை எந்த திராவிடக் கட்சிக்கும் கிடைக்காது என உறுதியாய் சொல்லலாம்.

காணும் பொங்கல் (கவிதை)




காணும் பொங்கலாம்

எதைக் காண

யாரைக் காண

என்றிட்டால்

உறவுகளைக் காணவாம்

நாம் இருவர்

நமக்கு ஒருவர்

என்றபின்

உறவுகள் ஏது

நண்பர்களையும் நாளும்

பார்க்கிறோம்

காணும் பொங்கலன்று

கடற்கரையையும்

திரைப்படங்களையும்

மட்டுமே

காணமுடிகிறது

இப்போதெல்லாம்

Sunday, January 16, 2011

தமிழ்மணமும்..விருதும்..(கவிதை)


தமிழ்மண விருதாம்

உனக்குக் கிடைத்துள்ளதா

நண்பர் வினவினார்

விருதாம் விருது

யாருக்கு வேண்டும்

என் எழுத்தை

எடையிட இவர் யார்

ஆத்ம திருப்திக்கு எழுதுகிறேன்

விருதுக்கு அல்ல

நண்பர் நழுவினார்

பட்டியலை மீண்டும் பார்த்தேன்

எங்கேனும்

நான் இருக்கிறேனா

என

Saturday, January 15, 2011

வாய் விட்டு சிரிங்க..

அமைச்சரே!..நம் நாட்டில் பால் பொங்கியாயிற்றா
மந்திரி-தங்கள் பால் கோபம் பொங்கியாயிற்று மக்களுக்கு

2)பொங்கல் இனாம்னு இப்ப யாரும் வரதில்லையே பார்த்தியா
அதுதான் அரசாங்கமே எல்லாமே இனாமாக் கொடுத்துடறாங்களே

3)பொங்கலுக்கு என்ன படம் பார்க்கப் போற
ஆடுகளத்திலே சிறுத்தையா,இளைஞனா காவலனுக்குப் போறேன்

4)போன மாதத்திற்கு இந்த மாசம் எல்லாம் ஏறியிருக்கே பார்த்தியா..எதிலும் இறக்கம் இல்லை
பேப்பரை பாரு..இந்த மாசம் ஊழல்கள் போன மாசத்தைவிடக் குறைவாய் தான் இருக்கு

5)ஏம்மா..உனக்கு வரப்போறவன் வேலைக்குப் போகணும்,நல்லாவும் சமைக்கத் தெரியணும் இப்படி இரண்டும் சேர்ந்த மாப்பிள்ளை கிடைக்கறது கஷ்டமாச்சே
தனித்தனியாய் கிடைச்சாலும் இரண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் அப்பா

6)அவர் போன பிறவியிலே கழுதையா பிறந்திருப்பார்னு எப்படி சொல்ற
ஒரு சப்பாத்தியை பேப்பர் பிளேட்ல போட்டுக் கொடுத்தேன்.சாப்பிட்டுவிட்டு இரண்டாவது சப்பாத்தி நல்லாயிருக்குன்னு சொன்னார்

7)அந்த தலைவர் போலின்னு எப்படி சொல்ற
இதுவரைக்கும் எந்த ஊழலும் செய்யாதவராய் இருக்கறதாலத்தான்

Friday, January 14, 2011

எனக்கு 'பொங்கல்' பிடிக்கும்



பச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.

எனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.

நம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.

சிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)

சரி..தலைப்புக்கு வருகிறேன்..

பொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.

தமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்

சாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.

இயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்

இயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்

இயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.

சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்

உழந்தும் உழவே தலை

(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

இந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்

உலகம் உருண்டை (கவிதை)


அன்று
அப்பாவைச் சேர்த்தேன்
முதியோர் இல்லத்தில்
இன்று
என்னைச் சேர்த்துவிட
மகன்
கிளம்புகையில்
உலகம் உருண்டையா அப்பா
வினவினான்
அவன் மகன்

Thursday, January 13, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (14-1-11)

ரஜினி நடிக்கும் சுல்தான் தெ வாரியர் படத்திற்கு ஹரா என்ற பெயர் வைத்தார்கள்.ஹரா சமஸ்கிருத பெயர்..வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தின் பெயரை 'ராணா' என மாற்றலாமா என யோசித்து வருகிறார்களாம்.(.என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கட்டும்..ரஜினி ராசிப்படி படம் பாபா ஆகாமல் இருந்தா சரி என்கிறார் ஒரு ரசிகர்)

2)சமீபத்தில் பேராசிரியர் அன்பழகனின் 88ஆவது பிறந்தநாள் வாழ்த்தில் கலைஞர்..அன்பழகன் 88 வயது இளைஞராகவே இருக்கிறார் என்றார்.,(ஒருவேளை கழகத்தின் இளைஞர் பாசறைத் தலைவராக அன்பழகனை நியமிக்கும் எண்ணம் கலைஞருக்கு இருக்கிறதோ..-என்கிறார் ஸ்டாலின்)

3)ஸ்ரீலங்கா அரசு தமிழர்கள் மீது நடத்திய இனப்படுகொலைப் போரில் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 1,46,679 பேர் என சொல்லப் படுகிறது...(இந்தியா விரைவில் ஸ்ரீலங்காவிற்கு இது சம்பந்தமாக உதவக்கூடும்)

4)சிக்கன் 65 என்கிறோமே அப்படியென்றால் என்ன தெரியுமா..ஒரு கறிக்கோழி முழுதுமாக வளர்ச்சி அடைய எடுத்துக் கொள்ளும் நாட்கள் 65ஆம்.(சுருக்கமாகச் சொல்வதானால் அந்த்க் கோழியின் ஆயுள் 65 நாட்களே)

5)என வாழ்க்கையில் பலவேறு நிலையில் உறுதுணையாக இருந்து வழிகாட்டியாய் திகழ்ந்தது திருக்குறள் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு பள்ளிவிழாவில் தெரிவித்துள்ளார்..(அவர் பள்ளியில் கூடத் தெரிவிப்பார்)

6)தரமணி சாலை ராஜீவ் காந்தி சாலை ஆனது.அரசு பொது மருத்துவ மனை ராஜீவ் காந்தி மருத்துவ மனை ஆகப் போகிறது.அது போல ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நகர் எனப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்கிறார் ஒரு காங்கிரஸ் ஊழியர்.(கூட்டணிக்குப் பின் இது பற்றி முடிவெடுக்கப் படலாம்)

7) தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்றுள்ளார் மருத்துவர். (கூட்டணியில் சேர்ந்தால் அந்த அளவு கூட தொகுதிகள் கிடைக்காதே..நாமே தனித்து நின்றால் என்ன..என்கிறார் ஒரு அப்பாவி பா.ம.க., தொண்டர்.

8)புத்தகக் காட்சிக்கு

சென்றிட வேண்டும்

அலமாரியில்

அடைபடாது

சிறிது இடம்

உள்ளது

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இறுதியானது..

பல நாட்களாக..குறிப்பாக டி.ஆர்.பாலு, கலைஞர் சார்பில் சோனியாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு..தமிழக காங்கிரஸார் சிலர் தி.மு.க., பற்றியும், கூட்டணி பற்றியும் கேவலமாக விமரிசித்து வருவதையும் ..ஒரு மாணவன் ஆசிரியரிடம் புகார் செய்வது போல புகார் செய்ய, சோனியாவும் குறிப்பிட்டவர்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பியிப்பார் போலத் தெரிகிறது.ஆகவே தான் சில நாட்களாக அவர் வாயைத் திறக்கக் காணோம்.

இந்நிலையில்.. சட்டசபை நிகழ்ச்சி ஒன்று காங்கிரஸுடன் கூட்டணி நிச்சயம் என்பதை புலப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், சென்னை மருத்துவ மனைக்கு 'ராஜிவ் காந்தி' பெயரை வைக்க வேண்டும் என்றதுமே கலைஞர் உடனடியாக சம்மதித்து விட்டார்,

இந்த நிகழ்ச்சி, காங்கிரஸ் இடையே..குறிப்பாக சோனியாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்..கூட்டணி இதனால் உறுதியாகிவிட்டது எனலாம்.

சிலர், சில விஷயத்தை தவிர்க்க வேண்டுமென்று, கண்ணைத் திறந்துக் கொண்டே பள்ளத்தில் விழுவேன் என்னும் போது..மற்ற ஆதரவாளர்கள் செயலிழக்கத்தான் வேண்டியுள்ளது.

Wednesday, January 12, 2011

பச்சோந்தி அரசியல் (கவிதை)




அந்தக் கட்சியா

இந்தக் கட்சியா

தேசிய நீரோட்டமா

அந்தக் கட்சின்னா

இந்தக் கட்சி

நம்பிக்கைத் துரோகி என்றும்

இந்தக் கட்சின்னா

அந்தக் கட்சி

சாதியைச் சொல்லியும் திட்டும்

தேசிய நீரோட்டம்னா

கொலைகாரக் கட்சியில

என்னிக்குமே நான் கேவலம்

என்ன செய்வது..

இப்போதுதான் புரியுது

அரசியல்வாதிகளும்

பச்சோந்தி ஆனதேன் என

Tuesday, January 11, 2011

வடிகால் (கவிதை )

மனதிற்குள்

ஆயிரம் எண்ணங்கள்

கரையில் அமர்ந்தவாறே

காலால் ஆட்டினேன்

குளத்து நீரை

குவியல் குவியலாய்

எண்ணங்கள்

கரையத் தொடங்கின

நீரில்

லீனா மணிமேகலை படத்திற்குத் தடை..?!


இந்தப் படம் முழுக்க முழுக்க உண்மையே..கற்பனை யில்லை என தைரியமாக அறிவித்துவிட்டு..வெளியிட தயாராய் உள்ள ஈழ யுத்தத்தையும்,தமிழக மீனவர் பிரச்னைகளையும் விளக்க முயலும் லீனா மணிமேகலை உருவாக்கியுள்ள 'செங்கடல்' என்ற படத்திற்கு சென்னை சென்சார் குழு தடை விதித்துள்ளது.
ஒருகரையில் ரத்தம் வடிக்கும் தமிழன்,மறு கரையில் தன் இனம் படும் அவதி எண்ணி கண்ணீர் வடிக்கும் தமிழக தமிழன், இடையில் மீன் பிடிக்கச் சென்று உயிர் விடும் தமிழக மீனவர்கள் இவர்கள் அவலங்களை அப்படியே வைத்து படம் தயாராகியுள்ளதாம்.
இப்படத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதாகக் கூறிக் கொண்டு..அப்பாவி தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்த சிங்கள அரசை விமரிசிக்கும் வசனங்கள் உள்ளதாம்.
தில்லி நடுவர் தீர்ப்பாயத்திற்கு அனுமதி கோரி லீனா போகப் போகிறாராம்.

டிஸ்கி-அனுமதி படத்தில் எந்தக் காட்சி நீக்கமும் இல்லாமல் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் ஜூன் மாத வாக்கில் தான் படம் வெளிவரும் நிலை ஏற்படும் என பட்சி சொல்லுது

சீமான் பலிகடா ஆக்கப் படுகிறாரா..

வைகோ சீமானை சந்தித்து பேசிய பின்..பின் அ.தி.மு.க., கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட ஒன்று.

சீமானை..சிறைக்கு அனுப்பியது..கலைஞராகவே இருக்கட்டும்..

ஆனால்..கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததால் ஈழத் தமிழர் பிரச்னையில்..காங்கிரஸ் செய்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டு இருந்ததாகவே இருக்கட்டும்..அதிக பட்சம் நான்கு மணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே அவரால் இருக்க முடிந்ததாகவே இருக்கட்டும்..சீமான் சற்று எண்ணிப் பார்க்கட்டும் ஜெ ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் என.

தேவையில்லாமல் பொடா சட்டத்தில் வைகோ வை சிறையில் அடைத்தவர் அவர்..

கலைஞர் இடமாவது சற்று உண்மையான வருத்ததை எதிர்பார்க்கலாம்.ஜெ..யிடம்..

எம்.ஜி.ஆரை.யே செயல்பட முடியா முதல்வர்..என்னை முதல்வராக ஆக்குங்கள் என ராஜீவிடம் கூறியவர்.

ஜானகி மீது இவர் சொன்ன குறையைச் சொல்லக் கூட எனக்கு மனமில்லை.

பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் அவர்.

ஜெ இப்போது பதவி வெறியில் உள்ளார்..எப்பாடு பட்டாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணுகிறார்.

ராஜா விவகாரத்தில்..காங்கிரஸ் அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதாகச் சொன்னதை சீமான் மறந்துவிடக் கூடாது.

நாளைக்கே..காங்கிரஸ் அ.தி.மு.க., கூட்டணி ஏற்பட்டால்..தன்னிடம் இருக்கும் அனைவரையும் கழட்டிவிடவும் அவர் தயாராய் இருப்பார்.

சீமான் மிகவும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய தருணம்..

அரசியலுக்கு வந்து சட்டசபைக்குச் செல்ல சீமான் ஆசைப்படுவது தவறல்ல..அந்த ஆசையை..தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள நினைக்கும் சக்திக்கு இரையாகி விடக் கூடாது.

சீமான் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்து முடிவுக்கு வரட்டும்.

பதவிக்காக காவு கொடுக்க பலிகடா தேடுபவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றே தோன்றுகிறது.

டிஸ்கி- ஆடு கசாப்புக் கடைக்காரரைத்தான் நம்புமாம்..

Monday, January 10, 2011

தீர்மானம் நிறைவேறியது.. ( கவிதை )



தீபாவளி..

 சிறப்பு ஊதியத்தில்

தங்கம் வாங்கலாம்

துணிமணிகளுக்கே முதலிடம்

உள்ள கடனை அடைப்போம்

ஆளாளுக்குக் குழப்பம்

எதையும் ஏற்காமல்

கணக்குப் பார்க்காது

காய்கறிகள் வாங்கி

ஒரு நாளேனும்

உண்டு மகிழும்

தீர்மானம்

மட்டுமே நிறைவேறியது

வைகோ..சீமான் சந்திப்பு


சீமானை தனது கூட்டணியில் சேர்க்க ஜெ ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.
வைகோ வை சீமான் சந்தித்தார்.கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் நடந்த சந்திப்பில்..பல விஷயங்கள் பேசப்பட்டதாகத் தெரிகிரது.
சிறையில் அவர் இருந்த போது..அவர் விடுதலை ஆக வேண்டும் என அறிக்கை விட்டவர் வைகோ. மேலும் அவரை சிறையில் வந்து பாத்தவர்.அவரிடம்..தேசிய அரசியலில் நீண்ட நாட்கள் இருந்து விட்டீர்கள்..மாநில அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்றும்..சட்டசபையில் வைகோவின் தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் எனவும் சீமான் கேட்டுக் கொண்டதாகக் கூறினார் .
மேலும் சீமான் கூறுகையில் காங்கிரஸிற்கு எதிராகக் களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க., என்றும்..காங்கிரஸை வீழ்த்த அ.தி.மு.க., விற்கு ஓட்டு போடச்சொல்லி தான் மக்களிடம் கேட்பேன் என்றும் கூறினார்.
வைகோ இது பற்றிக் கூறுகையில்..கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்..1200 கோடிகள் தி.மு.க., கூட்டணி செலவழித்தும்..அவர்களால் 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது என்றார்.
அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள்,நாம் தமிழர் ஆகியவை ஒரு அணியில் வரக்கூடும்.
பா.ம.க., காங்கிரஸ்,தி.மு.க., ஒரு கூட்டணியாகலாம்.
விஜய்காந்த் அ.தி.மு.க., கூட்டணியில் சேர்ந்தால் பலமுள்ள கூட்டணியாய் அது அமையும்.
ஆனால் இன்னமும் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து சந்தேகம் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது.
அவர்கள் எடுக்கும் முடிவு மாறினால்..பல மாறுதல்கள் கூட்டணிகளில் ஏற்படலாம்.
ஆனால் காங்கிரஸ் சேரும் கூட்டணி இம்முறை தோல்வியை சந்திக்கும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வரக்கூடும் என்றே தோன்றுகிறது.
 

Sunday, January 9, 2011

குறள் இன்பம் -7

வள்ளுவனின் சொல் விளையாட்டு, சொல்லழகுத் தொடரில் இன்று நான்கு குறள்கள்

வினைசெயல்வகை அதிகாரத்தில் ஏழாம் குறள்
செய்..செய்..செய்..என மூன்று முறையும் செய்வினை,அவ்வினை என சொல்லழகோடு வரும் குறள்

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளங் கொளல்

ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச் செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்..
எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதைப்பற்றி முழுதும் தெரிந்த பின்னரே ஈடுபட வேண்டும்..என்ன ஒரு அர்த்தம் பொதிந்த குறள்

அடுத்து அவை அஞ்சாமை அதிகாரத்தில் முதல் குறள்..வகையறிந்து, தொகையறிந்து..ஆகா..என்ன சொல்லழகு..

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

சொற்களை அளவறிந்து உரைத்திடும் தூயவர்கள் அவையிலிருப்போரின் வகையறியும் ஆற்றல் உடையவராய் இருப்பின் பிழை நேருமாறு பேச மாட்டார்கள்
என்ற பொருள்.

அடுத்து நாடு அதிகாரத்தில் ஒன்பதாம் குறள்..ஐந்து இடங்களில் நாடு என வருவது சிறப்பு

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளை விட இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்..
இப்போது சொல்லுங்கள் இந்தியா சிறந்த நாடுதானே..இயற்கை அன்னை நமக்கு வாரி வழங்கியுள்ளாள். ஆனால் நமக்குத்தான் போற்றத் தெரியவில்லை.

அடுத்து பொருள் செயல்வகை அதிகாரத்தில் முதல் குறள்..பொருள் என்பது நான்கு இடத்தில் குறளை அலங்கரிக்கிறது

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு ஏதுமில்லை ..எவ்வளவு அர்த்தமுள்ள குறள்
இதைத்தான் கண்ணதாசன் சுருக்கமாக..'பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா' என்றார் எனலாம்.

கோழியும்..பூனையும் (கவிதை)




பூனை ஒன்று

குட்டிப் போட்டிருந்தது

நான்கு மொத்தம்

கோழியும்

குஞ்சு பொரித்திருந்தது

பத்து அழகாக

பூனைக்குட்டி ஒன்றை

காணாது

அம்மாவிடம் கேட்டால்

தன் குட்டி ஒன்றை

தாயே தின்னிடுமாம்

கோழியைக் கூடக்

காணுமே

அம்மாவிடம் கேட்கவில்லை

Saturday, January 8, 2011

மலம் அள்ளும் தோட்டித் தாய்

எது சோத்தாங்கைஎது பீச்சாங்கை மலம் அள்ளும்தோட்டித் தாய்க்கு..?

'ஆசிட் ' ஊற்றதெரிந்தவள்தான்ஆனாலும்
அரசியலில் அவளில்லை..!



கழிப்பறைகளில்தான்வேலை என்றாலும்கழிக்கும் வேலை மட்டும்அவளுக்கு கழிப்பறைகளில்கிடையாது..!

மூக்குப் பிடிக்கத்தின்று கழித்ததைமூக்கை பிடிக்காமல்வெளியேற்றுபவள்..!
சோற்றில்கை வைப்பதற்காகதன்சோத்தாங்கையைஇழந்தவள்..!

அத்தனைஷாஜகான்களும்அவளுக்காய் கட்டியது'பீங்கான் ' தாஜ்மஹால்தான்..!
எந்த ஒரு மிருகத்தின்கழிவைக் கூடமற்றொரு மிருகம்அகற்றும் அவலமில்லைமனித மிருகத்தை தவிர..!

அவளுக்காய்திறக்கும் ஒரே கதவுகழிப்பறையில்மட்டும்தான்இருக்கிறது..!
அவள்தேடிக்கொண்டேயிருக்கிறாள்நம் கழிவுகளில்தொலைந்துபோனஅவள் வாழ்வைமட்டுமல்ல,மனிதர்களையும்தான்..!
 
நன்றி -யோவ்,கீற்று .ஆதிபகவன்

Friday, January 7, 2011

பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மத்திய அமைச்சர்

2G ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்கிறார் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில்சிபல்
நாட்டின் தலைமை தணிக்கை அதிகாரியை காங்கிரஸ் மதிக்கிறது.அதே நேரத்தில் அவர் கூறியுள்ள 1.76 லட்சம் கோடி நஷ்டம் எந்தக் கணக்கின் அடிப்படையில் கூறியுள்ளார் எனத் தெரியவில்லை.
சில தவறான கணக்கீட்டு முறையைப் பின்பற்றியுள்ளார்.அதில் ஏராளமான பிழைகளும்,தவறுகளும் உள்ளன.இந்தக் கணக்கை ஏற்கவே முடியாது.
தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநீதியை செய்துக் கொண்டுள்ளனர்..என்றுள்ளார்.

டிஸ்கி -கபில்சிபல் மத்திய அமைச்சர் ஆவதற்கு முன் உச்சநீதிமன்ற வக்கீல் ஆவார்..ஒரு வக்கீலுக்கு தன் கட்சிக்காரருக்காக வாதாடி, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டிய கடமை உண்டு.

Thursday, January 6, 2011

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (7-1-11)

ஆங்கிலேயர்கள் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவில் உப்புக்கு வரி விதித்தார்கள்.அதை எதிர்த்து 1930 ஆம் ஆண்டு காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தண்டி யாத்திரை மூலம் மேற்கொண்டார்.ஆனால்..பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள்..தங்கள் நாட்டு சாலைகளில், தண்டவாளங்களில் உறைந்து கிடக்கும் ஐஸ் கட்டிகளை உடைக்க இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதிக்கு ஒப்பந்தம் செய்துள்ளன.

2)புத்தாண்டு தினத்தன்று திருப்பதி ஏழுமலியான் கோயிலில் ஒரே நாளில் உண்டியல் வசூல் 3.8 கோடியாம்.பழனியிலோ முதல் இரண்டு நாட்கள் வசூல் ஒரு கோடியாம்.இதென்ன பிரமாதம்..தி.மு.க., தலைவர்கள் கூட்டத்தில் ஒரே நிமிஷத்தில் 44 லட்சம் வசூல் என்கிறார் ஒரு உடன்பிறப்பு.

3)சென்ற ஆண்டு டாஸ்மாக் விற்பனை 16445 கோடி ரூபாய்கள்..வாழ்க தமிழக குடிமகன்கள்.கலைஞர் ஒரு ரூபாய்க்கு அரிசி போட இவங்களும் காரணம் தானே!

4)யுனெஸ்கோ அறிக்கை ஒன்றின்படி 18 வயதிற்கு உட்பட்ட விலைமாதர்கள் இந்தியாவில் 4.5 லட்சம் பேர் உள்ளனராம்.இதே வயதில் அமெரிக்காவில் 3 லட்சம் பேர் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனராம்.(ஆமாம்..40 கோடி மக்கள் தொகை நாட்டில் 3 லட்சம் 118 கோடி மக்கள் தொகை நாட்டில் 4.5 லட்சம் குறைவுதான் என்கிறார் உல்லாச நபர் ஒருவர்)

5)ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 163 கோடி செலவில் பல கூடுதல் சலுகைகளை முதல்வர் அறிவித்துள்ளார்.இதனால் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயன் பெறுவர்..(தேர்தல் அன்று வாக்குச்சாவடியில் ஆசிரியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் என நம்புவோமாக)

6)சானிட்டரி நாப்கின் பயன்படுத்த முடியாததால் 40 விழுக்காடு கிராமப்புற இளம் பெண்கள் நோய் தொற்றினால் பாதிக்கப் படுகின்றனர்.அவர்களை பாதுகாக்க நாப்கினை தமிழக அரசு கொள்முதல் செய்து இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.(அதற்காக டெண்டர் விடப்படுமா? அல்லது ஏலமா? அல்லது முதலில் வருபவர்க்கு முன்னுரிமையா எனக் கேட்கிறார் ஒரு அரசியல்வாதி)

7)தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு 512 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.கடந்த ஆண்டு 1174 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.நாடு முழுதும் கடந்த ஆண்டு 17000 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

8)எம்.பி.க்கள் படியையெல்லாம் உயர்த்திய மத்திய அரசு..வருஷத்தில் 100 நாட்கள் கண்டிப்பாக வேலை தரும் திட்டத்தில்..ஒரு நாள் கூலியாக 100 ரூபாய் கொடுப்பதை உயர்த்தச் சொல்லி சோனியா பிரதமரிடம் கேட்டுக் கொண்டும்..கை விரித்து விட்டாராம் பிரதமர்.(ஏற்கனவே..உணவுப் பொருள் கெட்டாலும் கெடட்டும்..இலவசமாக தரமுடியாது என்ற ஏழைப்பங்காளன் தானே அவர்)

9) 2011ல் நான் தான் முதல்வர் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்..சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் கதையாக..இப்போது 2016ல் நான் தான் முதல்வர் எனச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர்.

10) நாங்கள் தனித்து நின்றால் 50 இடங்களில் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் சின்னக் கட்சிகள்..இரண்டு, மூன்று சேர்ந்து கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாமே..அதை விடுத்து ஏன் கோபாலபுரத்திற்கும்..போயஸ் தோட்டத்திற்கும் மாறி மாறி நடக்க வேண்டும். :)))

குறள் இன்பம் - 6




இன்றைய குறள் இன்பத்தில் வள்ளுவரின் சொல்லழகும்..சொல்விளையாட்டையும் இந்த நான்கு குறள்களில் காணலாம்



சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து



சொல்வன்மை அதிகாரத்தில் ஐந்தாம் குறள்..சொல் என்னும் சொல் ஆறு இடத்தில் வருகிறது.இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக இப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால்..'நன்று' என பின்னூட்டம் இட்டால்..அதை வெல்லும் சொல் 'அருமை' அதையும் வெல்லும் சொல் 'அற்புதம்" இந்தச் சொல்லை வேறு சொல் வெல்லாது அதுபோலத்தான்.

இக்குறளில் சொல் விளையாட்டைப் பார்த்த நாம்..அடுத்துப் பார்க்கப் போவது..



அதே அதிகாரத்தில் முதல் குறள்


நாநல மென்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத் துள்ளதூஉம் அன்று



நலம் எனும் சொல் நலமாக நான்கு இடத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு

சொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை.எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்

ஒஓ, ஆஅ என வள்ளுவனின் சாதுர்யத்தை விளக்கும் குறள்


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினை

ஆஅது மென்னு மவர்



மேன்மேலும் உயர்ந்திட வேண்டும் என விரும்புகின்றவர்கள் தம்முடைய செயலால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

நல்ல செயல்களைச் செய்பவர்களே மென் மேலும் உயர்வர்.



வினைத்திட்பம் அதிகாரத்தில் ஆறாம் குறள்


எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்



'எண்ணி' என்பது மூன்று இடத்தில்..விளையாடுகிறது.

எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள் என்பதே பொருள்.

அடுத்தது 'வினைசெயல்வகை' யில் இரண்டாம் குறள்


தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க

தூங்காது செய்யும் வினை



என்ன அழகான குறள்..ஒன்றே முக்கால் அடியில்..ஒரே மாதிரி சொல் வருவதெனில்..அது வள்ளுவனின் சொல்வன்மையா..தமிழின் அழகா..என சொல்லமுடியாது போட்டிதான் நடந்துள்ளது

நிதானமாகச் செய்ய வேண்டிய காரையங்களைத் தாமதித்துச் செய்யலாம்.ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் தாமதம் கூடாது..என்னும் பொருள் படும் அருமையான குறள் இது.

அடுத்த இடுகையில் சந்திப்போம்.

Wednesday, January 5, 2011

அமைச்சர் பதவி, கட்சிப் பதவிகளிலிருந்து விலகினார் அழகிரி

மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகி வருவதாகத் தெரிகிறது. முதல்வர் கருணாநிதியை நேற்று இரவு சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.

அழகிரி கோரிக்கைகள்:

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

- சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்

மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

இருப்பினும் அழகிரியின் இந்த போர்க்கொடி முதல்வரைக் கவலைப்படுத்தவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதை அவர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
நேற்று நடந்த திமுக உயர் மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எதைப் பற்றியும் யாரும் கவலைப்பட வேண்டாம். காங்கிரஸ் நம்முடன் நீடிப்பது உறுதி. அதேபோல பாமகவும் நம்முடன் வரும். எனவே தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று முதல்வர் கூறியுள்ளாராம். இந்தக் கூட்டத்தில் அழகிரி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்றுஇரவு முதல்வர் கருணாநிதியை அழகிரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் பதவியிலிருந்து தான் விலகுவதாக கூறி ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக வட்டாரம் மேலும் பரபரப்பாகியுள்ளது.
(நன்றி  தட்ஸ்தமிழ் )

டிஸ்கி-அழகிரி ராஜினாமா பற்றி வந்த செய்தியை டி.ஆர்.பாலு(!!) மறுத்துள்ளார்

Tuesday, January 4, 2011

வாய் விட்டு சிரிங்க..

1)அந்த நீதிபதி அப்பவும் அரசாங்கத்தை எதிர்த்து தீர்ப்பு வழங்க மாட்டார்
ஏன்
அரசாங்கம் அவருக்காக ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் அல்லாட் பண்ணியிருக்கே

2)கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்டே
நோட்டுல ரிசர்வ் பேங் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே 2ஜி ஸ்பெக்ட்ரம் ன்னு போட்டுட்டேன்

3)தலைவர் போற இடத்துக்கு எல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே
அது அவரது சொத்து கணக்காம்

4)அவன் பகுத்தறிவுவாதின்னு சொன்ன..இவ்வளவு நாள்..பேய், பிசாசு நம்பாதவன் இப்பவெல்லாம் நம்பறானே
அவனுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்சு

5)அந்த சுவாமிஜிக் கிட்ட போறவங்க எல்லாம் 'மெய்' மறந்துடுவாங்களாம்..
உடம்பை 'மெய்'யின்னு சொல்ற அளவு உனக்குத் தமிழ்ப் பற்றா

6)போன மாசம் இந்திய அரசியல்ல ஒரு புதுமை நடந்திருக்கே பார்த்தியா
ஆமாம்..புது ஊழல் எதுவும் சொல்லப்படலை

7)கவர்ச்சி நடிகை வீணா நம்ப கட்சியில சேர்ந்ததற்கு சந்தோஷப்பட்ட தலைவர் இப்ப ஏன் வருத்தப் படறார்
அவங்களை மேக்கப் இல்லாம இன்னிக்குத்தான் பார்த்தாராம்

சனி (கவிதை)





சனியனே..

எங்கே போனே

குழந்தையைத் திட்டியவாறே

சனிப் பார்வை விலக

நவக்கிரகம் சுற்றும்

தாய்

Monday, January 3, 2011

முதல்வர் பிரதமரை வரவேற்கச் செல்லாதது ஏன்?


முன்னதாக பிரதமர் அடையாறில் உள்ள சுற்றுச் சூழல் பூங்காவைத் திறப்பதற்காகவும்,அறியவில் மாநாட்டைத் துவக்கி வைக்கவும் சென்னை வருவதாக இருந்தது.
ஆனால்..சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அனுமதி பூங்காவிற்குக் கிடைக்காததால்..அதன் திறப்பு நிறுத்தி வைக்கப் பட்டது.இந்நிலையில் மாநாட்டை துவக்கி வைக்க மட்டுமே பிரதமர் சென்னை வந்தார்.
சாதாரணமாக பிரதமர் ஒரு மாநிலத்திற்கு விஜயம் செய்தால் அம் மாநில முதல்வர் விமான நிலையம் சென்று வரவேற்பதுதான் முறை.
ஆனால்..முதல்வர் வைரமுத்து அவர்களின் நூல் வெளியீட்டு விழாவிற்கு வருவதாக முன்னரே சொல்லிவிட்டதால்..பிரதமரை வரவேற்க செல்லவில்லை என்று சொல்லப்பட்டது.முதல்வர் சார்பில்..துணை முதல்வர் பிரதமரை வரவேற்றார்.
அடுத்தநாள் பிரதமரை ராஜ்பவனில் சென்று முதல்வர் சந்தித்து..தமிழக வெள்ள நிவாரண உதவிகள் பற்றி பேசினார்.
ஆனால்..உண்மையில் மத்திய சுற்றுச் சூழல் துறை மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளார்.
முன்னதாக..கேரளாவிற்கு முல்லை பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளபோதே..அணைக்கு சற்று தள்ளி புதிய அணைகட்ட ஆய்வு செய்ய

சுற்றுச் சூழல் அமைச்சகம் கேரளாவிற்கு அனுமதி வழங்கியது

 ஞாபகத்தில் வைக்க வேண்டிய ஒன்று.
தவிர்த்து..மாநாட்டு துவக்க விழாவை முதல்வர் தவிர்த்ததற்கு..விழாவில் ராஜா விற்கு பின் அந்த இலாகாவை ஏற்ற கபில்சிபல் காரணமாய் இருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது.
வழக்கம் போல முதல்வரும், பிரதமரும்..காங்கிரஸ்,தி.மு.க., விற்கான கூட்டணி வலுவாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

நம்புவோமாக..

டிஸ்கி-டி.ஆர்.பாலு ஒரு கூட்டத்தில் பேசுகையில்..கலைஞர் உயிருடன் உள்ளவரை தமிழன் இளிச்சவாயனாக இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.அப்போது..கலைஞருக்குப் பின் தமிழர்கள் இ.வா. என்கிறாரா?

Sunday, January 2, 2011

அஞ்சாநெஞ்சனுடன் உண்மைத்தமிழன் சந்திப்பு

உண்மைத்தமிழன் (த் இருப்பதை கவனிக்கவும்) மதுரை செல்லத் தீர்மானித்தார்.

அங்குச் சென்று அஞ்சா நெஞ்சனைச் சந்தித்து தனக்கு பதிவர்களாலும், வேண்டாத சிலராலும் இழைக்கப் படும் அநீதிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.இனி அவர்கள் சந்திப்பு

உ.த- வணக்கம்

அ.நெ-வணக்கம்..நீங்க

உ.த- என்னை உண்மைத் தமிழன்னு சொல்லுவாங்க..

அ.நெ- எங்களுக்குத் தெரியாமல் உண்மை பேசியா..(பக்கத்தில் ஒருவர் அவர் காதில் முணுமுணுக்கிறார்).ஓகோ..நீங்க தான் இணையத்தில 'தாத்தா..தாத்தா..'ன்னு

எழுதறவரா

உ.த- அது வேற..இப்போ சந்திக்க வந்தது வேற விஷயங்கள்

அ.நெ- என்ன விஷயம்..

உ.த- என் பதிவுக்கு சிலர் எதிர்த்து ஓட்டுப் போட்டுறாங்க....நமக்கு விழாத ஓட்டுகளை..நமக்கு எதிரான ஓட்டுகளை நமக்கு ஆதரவாக மாற்றுவது எப்படி? ன்னு யோசனை செய்தேன்..உடனே..இடைத் தேர்தல்கள் ஞாபகம் வந்தது..உங்க ஞாபகமும் வந்தது..

அ,நெ_ ஏன்..சிவகங்கை ஞாபகம் வரலியா

உ.த- மதுரை பக்கம்..சிவகங்கைன்னா தில்லிப் போகணுமே

அ.நெ- சரி..சரி..இப்போ உங்க எதிர்ப்பு ஓட்டை உங்களுக்கு சாதகமாக்க..(அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, காதில் ஏதோ சொல்கிறார்)

உ.த- அப்படியா..நன்றிங்க..அப்பறம் நம்மளுக்கு ஆதரவு ஓட்டை அதிகரிக்கணும்னா

அ.நெ-அதுக்கும் வழியிருக்கு (காதில் சொல்கிறார்)

உ.த- ரொம்ப நன்றிங்க..நான் வரேன்..

அ.நெ- நான் சொன்ன இந்த ரகசியங்களுக்கு குருதட்சணை கிடையாதா?

உ.த- என்னவேணும்னாலும் சொல்லுங்க..என் அப்பன் முருகன் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன்

அ,நெ-தேர்தல் சமயத்திலே சொல்லியனுப்பறேன்..பத்து தொகுதிகளுக்கு அழைச்சிட்டுப் போவேன்.அங்கெல்லாம் நம்ம ஆளுக்கு ஓட்டுப் போட்டுடணும்.

உ.த- இல்லேன்னா.. அல்லது இந்த ரகசியத்தை அம்மாகிட்ட சொல்லிட்டா

அ.நெ-கையிருக்க வேண்டிய இடத்திலே..கால் இருக்கும்..

(உ.த., பதற்றத்துடன் ஓட்டமெடுக்கிறார்)

Saturday, January 1, 2011

தமிழ்மணத்திற்கு நன்றியும்..வேண்டுகோளும்..




தமிழ்மணம் புத்தாண்டில் இரு புது சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.

முதல் சேவை சென்ற ஆண்டிற்கான முன்னணி 100 வலைப்பதிவுகள் பற்றிய பட்டியல்.

இதில் இடம் பெற்ற அனைவருக்கும் மகிழ்ச்சிஏற்படும் என்பது திண்ணம்.இடம் பெறாதவர்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் இப்பட்டியலில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படும்.

அதே போல டிராஃபிக் ரேங்க்..அவ்வப்போது நம் வலைப்பூவிற்கு வருகை புரிவோர் வைத்து இது தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.அதனால் நாம் நிறைய நபர்கள் நம் இடுகையைப் பார்க்க வெண்டும் என்று சிறந்த இடுகைகளை இட முயல்வோம். இதனால் நம் இடுகைகளின் தரம் உயரக்கூடும்.

ஆனால் இவை என் அனுமானங்களே..

இது ஆரோக்கியப் போட்டியாய் இருக்க வேண்டும் என விழைகிறேன்.

தமிழ்மண நிர்வாகிகளுக்கு அனைத்து பதிவர்கள் சார்பில் என் வாழ்த்துகள்..பாராட்டுகள்.

அதே நேரத்தில் இந்த நெகடிவ் ஓட்டு முறை தொடர்ந்து தலைவலியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

நெகடிவ் ஓட்டு முறையையே எடுத்துவிடலாம்.ஒரு பதிவர் தன் எண்ணத்தை,கருத்துகளை இடுகையாக இடுகிறார்.அது நன்றாய் இருந்தால் ஆதரவு ஓட்டு போடலாம்.அந்த கருத்து/எண்ணம் நமக்குப் பிடிக்கவில்லையெனில்..படித்துவிட்டு அகன்றுவிடலாம் அல்லது நம் கருத்தை பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம்.அதைவிடுத்து நெகடிவ் ஓட்டு என்றால்...

மேலும்..இப்போதெல்லாம்..பெரும்பான்மை பதிவுகளில்..சம்பந்தப்பட்ட பதிவர்கள் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டவே (காழ்ப்புணர்ச்சி என்பது சற்று கடினமாய் இருந்தாலும்..உண்மை அப்படித்தான் தோன்றுகிறது) இந்த நெகடிவ் ஓட்டு முறை பின்பற்றப் படுகிறது என்றே தோன்றுகிறது.

தமிழ்மணம் இதை கருத்தில் கொண்டு..இந்த நெகடிவ் ஓட்டுமுறையை எடுத்திவிடலாம்.



2010ஆம் ஆண்டு முன்னணி வலைப்பதிவில் 'தமிழா தமிழா" வை ஒன்பதாம் இடத்திற்கு தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கும்..அதற்குக் காரணமாய் இருந்த அன்பு பதிவர்களுக்கும்,நண்பர்களுக்கும் என் நன்றி