Sunday, August 3, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

7 comments:

Anonymous said...

ஹா..ஹா..

நல்லாயிருக்கு..

வாழ்த்துக்கள்

சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com

Kanchana Radhakrishnan said...

நன்றி சூர்யா

கோவை விஜய் said...

//எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க//

ஹா! ஹா!ஹா!

இது எல்லா வீட்டிலும் நடக்குதே!

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri vijay

சின்னப் பையன் said...

:-)))))))))))))

Kanchana Radhakrishnan said...

:-)))))

மங்களூர் சிவா said...

:)))))))))
jUper jUper