நாட்டில எல்லோரும் தசாவதாரம் பற்றி பேசி ஓய்ந்த வேளையில் இப்போ பேச..பதிவிட குசேலன் வந்திருக்கிறது.ஆகவே நம் பங்கிற்கு குசேலன் பற்றி
ஒரு மொக்கை பதிவு.
குசேலன் ஏழை..வறுமையில் வாடுபவர்.வேறு ஏதும் வேலையில்லாததால் 27 குழந்தைகளைப் பெற்றவர்.அவரது பள்ளி நண்பன் கிருஷ்ணன்..சாட்சாத்
அந்த ஆண்டவன் கிருஷ்ணன் தான்.குசேலன் மனைவி கணவரை கிருஷ்ணரிடம் உதவி கேட்டு வரச் சொல்லி அனுப்புகிறாள்.வீட்டில் இருந்த அவுலை
சிறிது எடுத்துக் கொண்டு குசேலன் புறப்படுகிறார்.
ஆண்டவன் அவரை கட்டித் தழுவி வரவேற்கிறார்.அண்ணி என்ன கொடுத்து அனுப்பினார்?என்று கேட்க ..கூனிக் குறுகி அவல் மூட்டையை தருகிறார்.
அதை வாங்கி..முதல் வாயை போட்டுக்கொள்கிறார்.குசேலன் வீடு மாளிகை ஆகிறது .இரண்டாவது வாய்..பொன்னும்,மணியும் வீட்டில் குவிகிறது.மூன்றாவது
வாய் எடுத்த போது..வழக்கமாக பெண்களுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வோடு ருக்மணி தடுக்கிறாள்.ஆனாலும் கண்ணன் அதை சட்டை செய்ய வில்லை.
'வேறு என்ன விஷயம்'என்று கண்ணன் கேட்க...ஏதும் இல்லை..என்று யாசகம் கேட்க மனமில்லாமல் வீடு திரும்ப...அப்போதுதான் கண்ணனின்
விளையாடல் புரிகிறது.குசேலன் குபேரன் ஆகிறார்.
இதுதான் குசேலன் கதை.
7 comments:
/
வேறு ஏதும் வேலையில்லாததால் 27 குழந்தைகளைப் பெற்றவர்.
/
:)))))))
அப்பொழுது 27 நட்சத்திரங்கள்தான் இருந்திருக்கும் போல
அப்போ நாம் இருவர் நமக்கு எதுக்கு ஒருவர்ணு கவர்மென்ட் சொல்லல போல :-)
ஆனாலும் உங்க குசும்பு சூப்பர் :-)
நன்றி ஷியாம்
அது சரி... கதையிலெ க்ராஃபிக்ஸ் எதுவுமே இல்லையே!!!
இதில் கீழ்கண்ட காரணங்களால்..கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இல்லை
1.ஷங்கர் படம் இல்லை
2.கதானாயகனை சிவப்பாக காட்ட வேண்டாம்..ஏனெனில் கண்ணன் கருமை நிறம்.
3.நயந்தாரா இருக்கவே இருக்கிறார் ருக்மனியாக நடிக்க.
ச்சின்னப்பையன் சந்தேகம் தீர்ந்ததா?
Post a Comment