Sunday, August 3, 2008

நண்பர் கஜினியின் கதை

நானும்,கஜினியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.இவர்களுடன் கண்ணன் என்ற நண்பரும் எங்களுக்கு உண்டு.
நாங்கள் மூவரும் ஒன்றாக மாலை உணவு உண்போம்.ஒரு நாள் நான் உண்ணும்போது குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது.
நண்பர் கண்ணன் தான் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்ததால்..ஒரு பாட்டில் தண்ணீரை எனக்கும் கொடுத்து விட்டார்.
நான் மூடியை திறந்து..குடிக்கும் போது ..என்ன நினைத்தாரோ கண்ணன்..என்னைக் குடிக்கக் கூடாது என்று சொன்னார்.
கண்ணனின் ஊரை சேர்ந்த கஜினி உடனே 'அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு..அதை அவர் குடிக்கக்கூடாது'என்று
சொல்வது என்ன நியாயம் என்றார்.கண்ணனோ பிடிவாதமாக இருக்க..எனக்கோ தண்ணீர் இல்லாமல் நா வறட்சி ஏற்பட..
என் நிலை உணர்ந்த கஜினி'டேய்..கண்ணா..அவர் தண்ணீர் இன்றி தவிக்கிறார்..நீ அவருக்கென்று கொடுத்த நீரை
அவர் குடிக்கக்கூடாது என்பது என்ன நியாயம்.உன்னைப் போல தடுப்பவர்களை உதைத்தால் என்ன..என்றார்.நானோ
தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டேன்.
இது நடந்து சில நாட்கள் ஆகிவிட்டன.இரு தினங்களுக்கு முன்..கண்ணனுக்கு ஒரு பொருளை வாங்கிவந்து....தான் அதற்கு
செலவு செய்ததை விட அதிக விலை வைத்து..விற்க முயன்றார்.கண்ணன் மறுத்துவிடப் போகிறானே என்ற எண்ணத்தில்
'உன்னை நான் உதைத்தால் என்ன..என்று அன்று பேசியது தவறு..இந்த பொருளை வாங்கிக்கொள்' என்றார்.
உடனே நான் 'அவரிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?'என்றேன்.
கஜினி செய்ய நினைப்பது..வியாபாரம்..அதில் நெளிவு..சுளிவுகள் உண்டு..அதனால் அவர் சொல்வது தப்பில்லை.
உனக்கோ கஜினியிடம் பற்று அதிகம்..அதனால்..அவர் சாதாரணமாக சொன்னது..அவர் நிலை தாழ்ந்து மன்னிப்புக்
கேட்டதாய் நீ நினைக்கிறாய்..அதனால் உன் மீதும் தப்பில்லை.
ஆனால்...தன் காரியத்தை மௌனமாக சாதித்துக் கொண்டிருக்கிறானே..கண்ணன் அவன் அதி புத்திசாலி..என
எங்கள் பொது நண்பர் கூறினார்.

24 comments:

Anonymous said...

ஆஹா..கதை அருமை..பாராட்டுகள்

kanchana Radhakrishnan said...

பாராட்டுக்கு நன்றி..இது உண்மைக்கதை

கோவை விஜய் said...

குசேலர் கதைதானே?

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

கோவி.கண்ணன் said...

ஆகா,

ரஜினி 'நடித்த' 'எங்கேயோ கேட்ட குரலா'

அருமை அருமை !

kanchana Radhakrishnan said...

அபூர்வ ராகங்களாய் இருப்பதால்..உங்களுக்கு எங்கேயோ கேட்ட குரலாய் தெரிகிறது..கோவிசார்

kanchana Radhakrishnan said...

குசேலன் கதை அல்ல உண்மையில் குபேரன் கதை இது கோவை விஜய்

ச்சின்னப் பையன் said...

:-))

kanchana Radhakrishnan said...

:-)

விஜய் ஆனந்த் said...

// தன் காரியத்தை மௌனமாக சாதித்துக் கொண்டிருக்கிறானே..கண்ணன் அவன் அதி புத்திசாலி //

இல்லீங்க...அதி புத்திசாலி இல்ல..சந்தர்ப்பவாதி...

kanchana Radhakrishnan said...

இல்லை விஜய்..இன்று புத்திசாலிகள் ஏமாளிகளாக இருக்கிறோம்.நீங்கள் சொல்வதுபோல சந்தர்ப்பவாதிகள் அதிபுத்திசாலியாக பாராட்டப்படுகிறார்கள்.

Anonymous said...

ஆளாளுக்கு அவரைப்பிடித்துக் கொண்டு..பாவம் விட்டு விடுங்கள்

kanchana Radhakrishnan said...

யாரை விட்டுவிடச் சொல்கிறீர்கள்..கஜினியையா..அல்லது கண்ணனையா?

கிருஷ்ணா said...

படத்தைக் கர்நாடகாவில் வெளியிடும் பொருட்டு படு கேவலமாகப் பால் மாறிய ரசினியின் பச்சோந்தித் தனத்தை ரசிகர்கள் உணர வேண்டும்

kanchana Radhakrishnan said...

நடக்காததை பேசுகிறீர்களே..கிருஷ்ணா

karikalan said...

//kanchana Radhakrishnan said...
பாராட்டுக்கு நன்றி..இது உண்மைக்கதை\\


க‌தையை க‌ண்ணிய‌மாக‌ சொல்லியிருக்கிறீர்க‌ள்.

ஆனால் ந‌ட‌ந்த‌தோ க‌ண்ணிய‌ம‌ற்ற‌, பொது ந‌ல‌ன‌ற்ற‌ ச‌ந்த‌ர்ப்ப‌வாத‌ சுய‌ந‌ல‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின்
வீண் ஆர்ப்ப‌ரிப்பு. அதில் ஏமாந்து ப‌லியான‌து ம‌ட்டும் 'க‌ஜினி'.


எப்போதும்போல் வேடிக்கைப் பார்ப்ப‌து (நாம்) ந‌ம் ம‌க்க‌ள்.

kanchana Radhakrishnan said...

கஜினி சந்தர்ப்பவாதிகளின் அரசியலை அறிந்துக்கொண்டால் சரி

மங்களூர் சிவா said...

செம டைமிங்!

அருமை
:))))

kanchana Radhakrishnan said...

//செம டைமிங்!

அருமை
:))))//

nanri sivaa

Rajkumar said...

Instead of wasing your time on this.. go and do some better work guys...

Just be honest to yourself.. do you really feel insulted as tamilian or just pretending so..

There are lots of good thing to discuss...

For instance.. why don't we see lots of blog on 'Agaram Foundations' good work.. but lot of scholding for rajinikanth..

One thing i can understand is all you guys hate rajini and his fame than you love the tamil ppl...

இவன் said...

//செம டைமிங்!

அருமை//


ரிப்பீட்டேடேடேடே...

சரியான நேரத்தில சரியான கதை

kanchana Radhakrishnan said...

//Rajkumar said...
Instead of wasing your time on this.. go and do some better work guys...

Just be honest to yourself.. do you really feel insulted as tamilian or just pretending so..

There are lots of good thing to discuss...

For instance.. why don't we see lots of blog on 'Agaram Foundations' good work.. but lot of scholding for rajinikanth..

One thing i can understand is all you guys hate rajini and his fame than you love the tamil ppl...//
thank you for your advice

kanchana Radhakrishnan said...

varukaikku nanri ivan

Anonymous said...

M.G.R..அவரோட 'என் கடமை'ங்கிற படம் வந்தப்போ 'காமராஜர் என் தலைவர்'ன்னார்..படத்தை கழகக்கண்மணிகள் ஃபெயிலர் ஆக்கினர்..பின்னர்
அண்ணா என் வழிகாட்டி என்று சொல்லி மழுப்பினார்.இன்று ரஜினியின் குசேலர் முந்தைய பேச்சு படத்தை ஓடவிட தடையாய்விட்டது.

kanchana Radhakrishnan said...

//M.G.R..அவரோட 'என் கடமை'ங்கிற படம் வந்தப்போ 'காமராஜர் என் தலைவர்'ன்னார்..படத்தை கழகக்கண்மணிகள் ஃபெயிலர் ஆக்கினர்..பின்னர்
அண்ணா என் வழிகாட்டி என்று சொல்லி மழுப்பினார்.இன்று ரஜினியின் குசேலர் முந்தைய பேச்சு படத்தை ஓடவிட தடையாய்விட்டது.//

தயவு செய்து M.G.R.உடன் ரஜினியை ஒப்பிடாதீர்கள்