Thursday, August 7, 2008

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுவிழா

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு அவரது நண்பர்கள்(??!!)ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளை ஏகாம்பரத்தின் மகன் தொகுத்து வழங்கினார்.ஏகாம்பரத்தை வாழ்த்தி அவர்
தந்தை பேசினார்'.'என் மகன் பிறந்ததுமே..குழந்தையை வந்து பார்த்தவர் ஒருவர்..என்ன பெயர் வைத்திருக்கிறாய்?
என்று கேட்டார்.'ஏகாம்பரம்"என பதிலளித்தேன்.உடனே அவர்..ஏடாகூட பெயர் ஆயிற்றே..இவன்
பிற்காலத்தில்...கொலை..கொள்ளை என எதற்கும் அஞ்சா தவனாயிருப்பான்..என்றார்.
அது இன்று நிறைவேறியுள்ளது.இன்று எதற்கும் அஞ்சாமல்..தனக்குத்தானே பாராட்டு விழா ஏற்பாடு
செய்துள்ளார்.என்னைப் பொறுத்தவரை..பேரன்களைப் பாராட்டத்தான் பயமாயிருக்கிறது.மகன்களை
எவ்வளவு வேண்டுமானாலும்..பாராட்ட நான் தயார்.நான் அதிக நேரம் பேச ஆசைப் பட்டேன்..
ஆனால்..எனக்குமுன் பேசிய நையாண்டி நயினார் அதிக நேரம் எடுத்துக் கொண்டுவிட்டார்'என்றார்.
விழாவிற்கு பெரும் கூட்டமாக..மனைவி,மக்கள்,தாயார்..ஆகியவர்கள் வந்திருந்தனர்.
நன்றி தெரிவித்து பேசிய ஏகாம்பரம்..'இது போல மாதம் ஒருமுறை என்னைப் பாராட்டி விழா நடத்துவேன்'என்றார்.

12 comments:

கோவி.கண்ணன் said...

:)

போட்டு தாக்குங்க. நீங்க 'அஞ்சா நெஞ்சன்'

சின்னப் பையன் said...

ஹாஹாஹா...
அப்போ மத்தவங்கள பாராட்டற விழா இல்லையா அதெல்லாம்??????

மங்களூர் சிவா said...

:)))))))))))

Anonymous said...

தந்திய நீங்களும் பாத்துட்டீங்களா? ::)

Kanchana Radhakrishnan said...

கோவி சார்..எதுவும் உள்குத்து இல்லியே

Kanchana Radhakrishnan said...

எங்களைப் பொறுத்தவரை 'யாதும் ஊரே..யாவரும் கேளிர்' அவ்வளவுதான்.
ச்சின்னப்பையன்

Kanchana Radhakrishnan said...

Sivaa :-)))

Kanchana Radhakrishnan said...

அனானி..நீங்க சொல்றது புரியலையே...எதற்கும் அஞ்சா ஏகாம்பரம் பற்றி தெரிந்துக் கொள்ள தந்தியை எதுக்குப் பார்க்கணும்.

Unknown said...

ம்...ம்... க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க!

Kanchana Radhakrishnan said...

//karikalan said...
ம்...ம்... க‌ல‌க்குங்க‌ க‌ல‌க்குங்க//
^
^
^

^

^
நம்மளை கலாய்க்காம இருந்தா சரி கரிகாலன்

bala said...

//குழந்தையை வந்து பார்த்தவர் ஒருவர்..என்ன பெயர் வைத்திருக்கிறாய்?
என்று கேட்டார்.'ஏகாம்பரம்"என பதிலளித்தேன்.உடனே அவர்..ஏடாகூட பெயர் ஆயிற்றே..இவன்
பிற்காலத்தில்...கொலை..கொள்ளை //

காஞ்சனா ராதாகிருஷ்ணன் அம்மா,

பாலகன் ஏகாம்பரத்தைப் பார்த்து,வாழ்த்து சொல்லி,பெரிய அளவில் பார் புகழும் வண்ணம்,கொலை/கொள்ளை செய்யும் அஞ்சா நெஞ்சனாக வருவான் என்று ஆருடமும் சொல்லிச் சென்ற அந்த ஒருவர் அந்த கால கட்டத்தில் பலே காங்ஸ்டெராக வலம் வந்தவர் தானே?;அவருக்கு பெரிய அளவில் தாடி கூட இருந்தது;கரெக்ட்?இப்ப கூட அடிக்கடி ஏகாம்பரத்தோட அப்பாவுக்கு கனவில் வந்து நெஞ்சில் முள் இன்னும் தைத்தபடி இருக்குதே என்று புலம்பி செல்வார்;கரெக்ட்?

பாலா

Kanchana Radhakrishnan said...

//இப்ப கூட அடிக்கடி ஏகாம்பரத்தோட அப்பாவுக்கு கனவில் வந்து நெஞ்சில் முள் இன்னும் தைத்தபடி இருக்குதே என்று புலம்பி செல்வார்;கரெக்ட்?//

^^ ^^ அடடா..நம்மளை வம்புலே மாட்டிவிட்டுவிடுவீங்க போல இருக்கே...