தனக்குப் பிடித்த இயக்குனர்கள்,எழுத்தாளர்களை அழைத்து கமல் அடுத்த பட கதை ஆலோசனை செய்தார். அதன் விவரம்.
கமல்- ரவிகுமார்,மௌலி,சுந்தர் சி.,கிரெசி மோகன்,மதன்,சுஜாதா..sorry., அவர் மறைஞ்சுட்டார்ங்கிறதை மறந்துட்டேன்.உங்களை எல்லாம் ஏன்
வரச்சொன்னேன்னா..என்னோட மர்மயோகி வர 2 வருஷம் ஆகும்.குறுகிய காலத்தயாரிப்பான குசேலன் சரியா ஓடல்லை.,அதனால்..
உடனே என் படம் ஒன்னு வரணும்.உங்ககிட்ட யாரிடம் எனக்கான கதை இருக்கு..
(எல்லோரும் ஒன்றாக கையைத் தூக்க..)
கமல்- ஒவ்வொருத்தரா..முதல்லே ரவிகுமார்..உங்க கதையைச் சொல்லுங்க
ரவிகுமார்-ஜக்குபாய் ன்னு ஒரு கதை இருக்கு
கமல்-அதுதான் ரஜினி நடிக்கறதா..இருந்து..இப்ப..சரத் நடிக்கிறாரே
ரவி- இது வேற ஜக்குபாய்..அது வேற ஜக்குபாய்..இதுல எதிர்காலத்தைக் காட்டக்கூடிய ஒரு கருவி..வில்லன்கள் கிட்ட கிடைக்கிறது.
அதைத் தெரிஞ்சுக்கிட்டா..பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டுடுமே என்று கதாநாயகன்..அதைக் கடத்தி அழிக்கப் பார்க்கிறான்.
அவனுடன் சேர்ந்து..அசினும் ஓடிக்கிட்டே இருக்காங்க..நம்ம வையாபுரி,சார்லி. இவங்கைள் காமடியனா போட்டுடுவோம்.
(சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)
கமல்- உங்களோட சேர்ந்தா..படம் முடிய 2 வருஷம் ஆகுமே..
ரவி- குறுகிய காலத் தயாரிப்புன்னு சொல்றீங்க..அதனால 730நாள்ல முடிச்சுடலாம்.
கமல்-கதைல..தசாவதார சாயல் இருக்கே
ரவி-திரைக்கதையிலே எல்லாம் மாறிடும்..மொத்தம் 12 கேரக்டர்ஸ்..எல்லாத்தையும் நீங்களேக் கூடச்செய்யாலாம்.நான் மட்டும்
ஒரு பாடல்ல வந்து பூமிக்கும்..வானத்துக்கும் குதிச்சுடறேன்.
கமல்- உங்க கிட்ட அப்புறம் வர்றேன்..கிரேசி..உங்ககிட்ட ஏதாவது...
கிரேசி-இருக்கே...இருக்கே...முஹம்மது ஜான் சுந்தர பாண்டியன்னு ஒரு கதை.நாலு ரோலும் நீங்க பண்ணாலாம்..அதுலே சுந்தர் ரோல்
ஒரு சமயல்காரான்...ஐ..மீன்...
கமல்-யூ மீன்..என்னன்னு புரிஞ்சுப் போச்சு.. மௌலி நீங்க..
மௌலி- கிரேசி..சொன்ன கதையையே எடுத்திடலாம்...வேணும்னா..டைடில..ஹரி சந்திரமதின்னு மாத்திடலாம்.(கமல் மௌனமாயிருக்க)
இல்லேன்னா..சங்கரதாஸ் uvve சாமி ன்னு வைச்சுப்போம்
கமல்-அது என்ன நடுவே uvve
மௌலி-அது சங்கரதாஸ் உவ்வே வாந்தி சத்தம் சுவாமி உங்க பேரு...பிண்ணனி இசையே வேண்டாம்..திருப்பாவையை ஓட விட்டுடலாம்.
கமல்- சுந்தர் உங்க கிட்ட
சுந்தர்-நான் இப்ப நடிப்பிலே பிஸி..உங்க கதை அன்பே சிவம் மாதிரி எதாவது இருந்தா..நான் டைரக்ட் பண்ணிடறேன்..
(ரவி முணுமுணுக்கிறார்-நோவாம நோம்பு கும்பிடப் பார்க்கிறார்)
கமல்-மதன் நீங்க
மதன்-டூ..டூ..டூ..டூன்னு(two to two to) ன்னு படப்பேரு..ஹீரோ...ஒரு விபத்திலே..மூக்கு கோணிடுது..அப்பறம்..பீஹார்ல வெள்ளத்திலே மாட்டிக்கிறான்..இப்படி
போகுது கதை...
கமல்-அன்பே சிவம் மாதிரி தெரியுதே
சுந்தர்-அப்போ..நானே..டைரக்ட் பண்ணிடறேன்
மதன்-அதனால் என்ன..படப்பேரை 'வாழ்க வளர்க'ன்னு வைச்சுப்போம்
(ஃபோன் அடிக்க..கமல் பேசுகிறார்)
கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..
(அனைவரும் விரைகின்றனர்)
13 comments:
\\கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..
\\
Ha hA ha Ha ha ha ha ha
ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))
வருகைக்கு நன்றி முரளி கண்ணன்
//ஹாஹா... போட்டுத் தாக்குங்க...:-)))//
இப்படியே உசுப்பேத்திக்கிட்டு இருங்க
//சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)//
கலக்கல் !
//சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)
கலக்கல் !//
கோவிசார்..பாராட்டுதலுக்கு நன்றி
ஆஹா நீங்களுமா??
ம்ம்ம் சூப்பராயிருக்கு.
கலக்குங்க.
இன்னும் எதிர்பார்க்கும்
சுபாஷ்
varukaikku nanri subaash
அருமை..அருமை..
nanri anaani
கலக்கறீங்க !!
:))))))))
:-)))))
Post a Comment