Monday, August 4, 2008

அந்த திரைப்படம் பற்றி பிரபல அரசியல் தலைவர்

பிரபல அந்த முதல்வர் கைராசிக்காரர் என்பதால் பட துவக்க விழாவிற்குஅவரை அழைத்திருந்தனர்.படபிடிப்பை ஆரம்பித்து பேசிய அவர் 'சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.என்னை கைராசிக்காரர்ன்னு கூப்பிட்டதா சொன்னாங்க.எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.நான் உழைப்பை நம்பறவன்.வரும்பொது படத்துக்கு என்ன பெயர்ன்னு கேட்டேன்...'பார்த்தால் பசி தீரும்'னு சொன்னாங்க.ஆமாம்..இவங்க கஷ்டப்பட்டு...செலவு பண்ணி எடுக்கிற படத்தை மக்கள் பார்த்தா இவங்க பசி தீரும்னேன்'
அப்படி சொன்ன அந்த முதல்வர் கர்மவீரர் காமராஜர்

10 comments:

சகாதேவன் said...

யார் பார்த்தால் யார் பசி தீருமோ
அவர்கள் பசி இன்று மன்னிப்பு கேட்டால்தான் தீரும்னேன்.
சகாதேவன்

சின்னப் பையன் said...

:-)))))

Kanchana Radhakrishnan said...

தமிழன் ஏமாளி சகாதேவன்..மறப்போம்..மன்னிப்போம்னு சொல்லிகிட்டே இருப்போம்

Kanchana Radhakrishnan said...

ச்சின்னப்பையன்...உங்க கீ போர்டில் : _ ) இந்த கீ எல்லாம் தேய்ந்து போயிருக்கும்னு நினைக்கிறேன்

Anonymous said...

அப்படிப்பட்ட பெரும் தலைவர் 'நான் படுத்துக்கிட்டே ஜெயிப்பேன்' என்று இறுமாப்பாய் சொன்னதால் தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார்.

Kanchana Radhakrishnan said...

என்ன செய்வது...தில்லு முல்லு பண்ணி ஜெயிக்கத் தெரியாத தலைவர்

கோவை விஜய் said...

கர்மவீரர் காமராஜை


தென்னாட்டு காந்தி என்பர்


உண்மைதான்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Kanchana Radhakrishnan said...

varukaikku nanri Vijay

மங்களூர் சிவா said...

அவர் இப்ப இருந்தா குருவி பாத்துட்டு என்ன சொல்லியிருப்பார்????

Kanchana Radhakrishnan said...

என்ன படம்னேன்..குருவின்னாங்க..குருவிகளைக் கண்டாத்தான் இவங்க விடமாட்டாங்களே