குசேலன் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மதுரையில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
மதுரையில் 5 தியேட்டர்களிலும்,தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் படம் திரையிடப்பட்டது.சிவாஜியை விட அதிகம் வசூல் இருக்கும்
என்று சொல்லப்பட்டதால்..மினிமம் காரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால்..படம் வெளியீட்டு சமயம் ரஜினி..இப்படத்தில் 25%தான் வருவதாகவும்..இது முழுக்க முழுக்க பசுபதியின் படம் என்று கூறியதாலும்,
மேலும்..கன்னடர்களை சமாதானம் செய்துக் கொள்ள அளித்த பேட்டியாலும் வசூல் பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகிகள்
கூறுகின்றனர்.
இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சவிகிதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,மினிமம் காரண்டியை..டிபாசிட் தொகையாக மாற்றி..வசூலில்
சதவிகிதம் தரவேண்டும் என்றும் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை நிராகரிக்கப் படுமாயின்...12ம் தேதி சென்னையில் பிரமிட் சாய்மீரா அலுவலகம் முன்..உண்ணாவிரதப் போராட்டம்,தர்ணா
ஆகியவை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
(தினமலர்)
15 comments:
me..the first
வருகைக்கு நன்றி அனானி
லாபம் வரும் போது இந்த மாதிரி குரல் கொடுத்தால்...இப்போது கொடுப்பதில் ஞாயம் இருக்கும்.
இது வியாபரம் தானே? லாப/நஷ்டங்கள் சகஜம் என்பது தெரியாதா?
குசேலன்னாவே வறுமைதான்னு இவங்களுக்கு முன்னாலெயே தெரியலியாமா??????
//லாபம் வரும் போது இந்த மாதிரி குரல் கொடுத்தால்...இப்போது கொடுப்பதில் ஞாயம் இருக்கும்.
இது வியாபரம் தானே? லாப/நஷ்டங்கள் சகஜம் என்பது தெரியாதா?//
:-)))))
குசேலன்னாவே வறுமைதான்னு இவங்களுக்கு முன்னாலெயே தெரியலியாமா??????
குசேலனை குபேரன் ஆக்கிடலாம்னு நினைச்சிருப்பாங்க..
// kanchana Radhakrishnan said...
குசேலன்னாவே வறுமைதான்னு இவங்களுக்கு முன்னாலெயே தெரியலியாமா??????
குசேலனை குபேரன் ஆக்கிடலாம்னு நினைச்சிருப்பாங்க..
August 10, 2008 5:30:00 AM PDT
//
கலக்கல் ! சினிமா து(ரை)றைகளுக்கே இருக்கும் பெயர் செண்டிமெண்ட் காரணமாக கைவிட்டு இருக்கலாம், கைவிட்டிருக்கக் கூடாது !
:)
//கலக்கல் ! சினிமா து(ரை)றைகளுக்கே இருக்கும் பெயர் செண்டிமெண்ட் காரணமாக கைவிட்டு இருக்கலாம், கைவிட்டிருக்கக் கூடாது !
:)//
குசேலனை கண்ணன் குபேரன் ஆக்கியது ஒரு கதை...ஆனால் படத்தில் கண்ணனை நம்பி குபேரன் ஆக நினைச்ச விநியோகஸ்தர்களை..ரஜினியின் பேச்சு கெடுத்துவிட்டது.அவலை மெல்லாமல் ரஜினி வெறும் வாயை மென்று விட்டார்.
kanchana Radhakrishnan,
நீங்கள் ஐயா வா ? அம்மா வா ?
லதானந்த் என்ற பெயரில் ஐயா தான் இருக்கிறார்.
உங்கள் பெயரை வைத்து என்னால் ஐயாவா அம்மாவா என்று தெரிந்து கொள்ள முடியவில்லை.
நானும் பல பின்னூட்டங்களில்
kanchana Radhakrishnan ஐயா / சார் போட்டு இருக்கிறேன், நீங்களும் ஒன்னும் மறுப்புச் சொல்லவில்லை.
குழப்பம் தீரனும், சொல்லுங்க !
//குழப்பம் தீரனும், சொல்லுங்க !//
கோவி சாருக்கு குழப்பமா? என் பதிவுகளை படிக்கும் போது தெரிந்திருக்க வேண்டுமே!
சரி தீர்த்து வைக்கிறேன்..காஞ்சனா ராதாகிருஷ்ணன் பெயரில் நான்கு வலைப் பக்கங்க்கள்.
தமிழா...தமிழா..எழுதுவது ஐயா ராதாகிருஷ்ணன் தான்
அதைத்தவிர ..பாரதியார் எழுத்துக்கள் ஐயாவினுடையது.
ஆங்கிலத்தில் சமையல் குறிப்பும்..தமிழில் சமையல் குறிப்பும் அம்மாவினுடையது.
ஆனால் எல்லாமே அம்மா பெயரில் தான் வரும்.
கோவி சார்...மீண்டும் குழப்பிட்டேனோ?
சிவா எதற்கு இது ;-) பதிவுக்கா...அல்லது...
//லாபம் வரும் போது இந்த மாதிரி குரல் கொடுத்தால்...இப்போது கொடுப்பதில் ஞாயம் இருக்கும்.
இது வியாபரம் தானே? லாப/நஷ்டங்கள் சகஜம் என்பது தெரியாதா?//
அதுதானே!!!!!!!!!1
சுபாஷ்
//அதுதானே!!!!!!!!!1
சுபாஷ்//
அதுதானே..நஷ்டம்னா..அடுத்து பாபா மாதிரி ஒரு படம் கொடுத்து அதை ஈடுபடுத்திடுவோம் இல்ல..
//kanchana Radhakrishnan said...
//குழப்பம் தீரனும், சொல்லுங்க !//
கோவி சாருக்கு குழப்பமா? என் பதிவுகளை படிக்கும் போது தெரிந்திருக்க வேண்டுமே!
சரி தீர்த்து வைக்கிறேன்..காஞ்சனா ராதாகிருஷ்ணன் பெயரில் நான்கு வலைப் பக்கங்க்கள்.
தமிழா...தமிழா..எழுதுவது ஐயா ராதாகிருஷ்ணன் தான்
அதைத்தவிர ..பாரதியார் எழுத்துக்கள் ஐயாவினுடையது.
ஆங்கிலத்தில் சமையல் குறிப்பும்..தமிழில் சமையல் குறிப்பும் அம்மாவினுடையது.
ஆனால் எல்லாமே அம்மா பெயரில் தான் வரும்.
கோவி சார்...மீண்டும் குழப்பிட்டேனோ?
//
இதற்கு மறுமொழியிட்டது ஐயாவதான் இருக்கனும், காரணம் இது தமிழா தமிழா ! :)
சீனா ஐயா - செல்விஷங்கர் அம்மா தம்பதி போல் இங்கும் இருவரா !
கலக்குங்கள் !
NANRI KOVI SAAR
Post a Comment