முல்லைத் திணை- பாடலாசிரியர் கருவூர் பவுத்திரன்
இனி பாடல்-
கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.
.
-கருவூர்ப் பவுத்திரன்.
உரை-
முல்லையே, நீ வாழ் வாயாக. முல்லையே, மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற, நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண், பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில், நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால், புன்னகை கொண்டாய்; தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால், எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?
(கருத்து) நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.
No comments:
Post a Comment