Tuesday, August 19, 2008

என்றும் நீ என்னோடுதான்

மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்

சற்றேனும் அறிவாயோ?

பாலும், பழமும், தேனுமென

குழந்தை பருவத்தில்

கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை

மகிழ்ச்சிக் கொண்டேன்!

வாலிப வயதிலோ..விரைவு உணவென

கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி

குப்பைக்கூடையாகினாய்..

உயிர் குடிக்கும் மதுவை

உள்ளே செலுத்தியவாறு

கல்லைத் தின்னாலும்

செரிக்கும் வயதென

செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..

எனக்கும் மூப்புண்டு அறிவாயா?

அத்தனையும் தாங்கும்

அடித்தளம் முற்றும் அழிந்தது

மரண அழைப்பு வந்தது

புற்றென பெயரில்..

சென்றிடுவோம் ..வந்திடு

என்றும் நீ என்னோடுதான்.

9 comments:

MSK / Saravana said...

இல்ல.. நான் வரல..
;)


கலக்கலான கரு..

Kanchana Radhakrishnan said...

//இல்ல.. நான் வரல..
;)


கலக்கலான கரு..//

இல்லை..நீங்க வரணும்...
நிறைய திறமை உள்ள நீங்க வெளிச்சத்திற்கு வரணும்.
பாராட்டுக்கு நன்றி சரவணன்

Anonymous said...

maarupatta chinhdhanai..paaraattukkal

Kanchana Radhakrishnan said...

//Anonymous said...
maarupatta chinhdhanai..paaraattukkal//


பாராட்டுதலுக்கு நன்றி

MSK / Saravana said...

//இல்லை..நீங்க வரணும்...
நிறைய திறமை உள்ள நீங்க வெளிச்சத்திற்கு வரணும்.//

ரொம்ப பீல் பண்ண வச்சிடீங்களே..

உங்க அன்புக்கு ரொம்ப நன்றி..
:)

சின்னப் பையன் said...

சூப்பர். கலக்குங்க...

நிஜமா நல்லவன் said...

அட...வித்தியாசமான கோணத்தில் அருமையா எழுதி இருக்கீங்களே!

Kanchana Radhakrishnan said...

//சூப்பர். கலக்குங்க//

நன்றி ச்சின்னப்பையன்

Kanchana Radhakrishnan said...

//அட...வித்தியாசமான கோணத்தில் அருமையா எழுதி இருக்கீங்களே//

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி..நிஜமாநல்லவன்