Thursday, November 6, 2014

இறைவனுக்கு மனம் என்ன கல்லா...

                   

டாக்டர் புரூனோ

கள்ளமில்லா வெள்ளை மனம்..அவர் அணியும் உடையைப் போலவே..

எந்த வேறுபாடும் இன்றி..அனைவரிடமும் நண்பனாகவே பழகுபவர்..

செருக்கின் விலை என்ன எனக் கேட்பவர்..

உதவி என்று அழைத்திட்டால்...நேரம்..காலம்...தனது வேலைகள் அனைத்தும் மறந்து ஓடோடி வருபவர்.

ஒருசமயம்...அவருக்கு நான் தொலைபேசி, 'உங்களால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டேன்.உடன் அவர் தந்த பதில், "என்ன இப்படிக் கேட்கிறீர்கள்.."புரூனோ! இந்த வேலை செய்யுடா..என கட்டளையிடுங்கள்" என்றார்'

சற்று படித்தாலே போதும்..ஆர்பாட்டம் செய்யும் மானிடரிடையே இப்படி ஒரு முத்து..

அப்படிப்படவர்க்கு...மக்கள் சேவையே முக்கியம் என்று இருந்தவர்க்கு ஏன் இந்த சோதனை..வேதனை..

 டாக்டர் தொழில் செய்பவர் குறித்து யாரேனும் குறை சொன்னால் பொங்கி எழுவாயே! புரூனோ..இப்பொழுது உனக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வேன்?

இறக்கும் வயதா உன் துணைக்கு...வாழ்வில் நாம் இருவர்..நமக்கு இருவர்...என ஆசைப்பட்டது தவறா..அதற்கு..இப்படி ஒரு தண்டனையா..

இறைவன் இருக்கின்றானா? இருந்தால்..அவன் யாருக்குத் துணையாய் இருக்கின்றான்?

நல்லவர்களுக்கு இல்லையா?

ஆம்..என்றால்..அவனைத் தூக்கி எறிவோம்..

கல் மனம் கொண்டவன்..ஆண்டி ஆனால் என்ன?ஆண்டவன் ஆனால் என்ன?

(புகைப்படம் உதவி - அபி அப்பா)

6 comments:

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

நிகழ்காலத்தில்... said...

சகோதரியின் இழப்பு ஈடு செய்ய முடியாதது...

kankaatchi.blogspot.com said...

இறைவன் இருக்கின்றானா? இருந்தால்..அவன் யாருக்குத் துணையாய் இருக்கின்றான்?

அவனை ஒவ்வொரு கணமும் நினைப்பவருக்கு
அனைத்து உயிரிலும் அவனைக் காண்பவருக்கு.

திரு ப்ருனோ நல்ல மனிதர் .சில ஆண்டுகளுக்கு முன் அவர் பதிவில் வலம் வந்ததுண்டு. இறைவன் நல்லவர்களை இவ்வுலகில் வெகு காலம் இருந்து துன்பப்பட விடுவதில்லை. அவனிடமே விரைவில் அழைத்துக்கொண்டுவிடுகிறான். இதுவும் கடந்துபோகும்

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

cheena (சீனா) said...

பிரிந்த ஆன்மா அமைதி அடையட்டும் - ஆழ்ந்த இரங்கல்கள்

Rathnavel Natarajan said...

ஆழ்ந்த இரங்கல்கள்.