Sunday, August 31, 2008

கால ஓட்டத்தில் காணாமல் போனவை - விவாதமேடை

அப்போது நாங்கள் இருந்த காலனியில் கிட்டத்தட்ட 100 வீடுகள் இருக்கும்.ஒவ்வொரு வீட்டினரைப் பற்றியும் அனைத்து வீட்டினரும் அறிவார்கள்.ஒவ்வொரு வீட்டு மனையும் 2 கிரௌண்டுகள் இருக்கும்.தனித்தனி வீடுகள்.வீடு கட்டியதுப் போக எஞ்சிய நிலத்தில் வெண்டை,கத்திரி,கொத்தவரை,அவரை,புடல் என செடிகள் போட்டிருப்பார்கள்.அவரைக்கும்,புடலுக்கும் பெரிய பந்தல்.புழக்கடைப் பக்கம் கிணறு...பக்கத்தில்..துணி தோய்க்க கல்.காலை விடியும் போதே.. கிணற்றிலிருந்து பக்கெட்..பக்கெட்டாக தண்ணீர் சேந்தி..தலைக்கு குளிப்போம்.குளிக்கும் தண்ணீர் செல்லும் பாதையில் வாழை மரங்கள்.வாழையடி வாழையாக வளரும் கன்றுகள்.அருகே தானே தரையில் வளரும் பூசணிக்கொடி.
வாசலில் மல்லிகை பந்தல்,ரோஜா செடிகள்,அந்தி மந்தாரை,பவழவல்லி மரம்,குண்டுமல்லிகை..என வாசனை கும்மென்று இருக்கும்.கூடியவரை எந்த வீட்டிலும் காய்கறிகள் விலை கொடுத்து வாங்கமாட்டார்கள்.நமக்குப் போக மீதத்தை பகிர்ந்து , பக்கத்து வீடுகளுக்கு கொடுக்கும் தாராள மனது.நவராத்திரி சமயத்தில்...மாலை நேரத்தில்..கண்களுக்கு விருந்தாய்..பல வண்ண ஆடைகள் உடுத்தி வீதியில் துள்ளித் திரியும் மான்கள் (??!!) கூட்டம்..கையில் குங்குமம்..சுண்டல் பைகளுடன் பொடிசுகள்.
தீபாவளி,பொங்கல் தினங்களில்..ஒருவர் வீட்டுக்கு..ஒருவர் வருவதும்..வாழ்த்துவதும்...அடடா அந்த நாட்கள்..பொங்கல் பொங்கும் போது காலனி முழுதும் எதிரொலிக்கும்'பொங்கலோ..பொங்கல்'கூவல்...அடுத்த நாள்..மாட்டுப்பொங்கல்....பசுமாடுகள் இருக்கும் வீட்டில்..அந்த பசுவின் கொம்புகளுக்கு..வண்ணம் தீட்டி..மற்ற வீடுகளுக்கு மாலை நேரத்தில் எடுத்துச் செல்வார்கள்.நாம் பசுவிற்கு எதேனும் கொடுக்க வேண்டும்.அதுபோக..காளைமாடுகள் பூட்டிய வண்டியில்..ஜாலியாக..ஊரைச்சுற்றி ஊர்வலம் வருவார்கள்.
ஏதேனும் வீடுகளில்..அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால்...இளைஞர்கள் கூட்டம் கூடிவிடும்.இறுதி ஊர்வலத்திற்கு உடலை சுமப்பதில்..நான்..நீ...என போட்டி இருக்கும்...

ஆனால் இன்று...?

தனித்தனி வீடுகள் போய்..எங்கு பார்த்தாலும்..அடுக்கு மாடி குடியிருப்புகள்..அடுத்த ஃப்ளாட்டில் யார் இருக்கிறார் என்று தெரியாது.போதாக் குறைக்கு...தீபாவளி சமயங்களில்..காலை 6 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற சட்டங்கள் வேறு.பொங்கல் அன்று..சாலமன் பாப்பையாவைப் பார்த்துக் கொண்டே குக்கர் பொங்கல்.
யார் வீட்டிலாவது...மரணம் சம்பவித்தால்..வரும் உறவு,நண்பர்கள்..எப்போது எடுப்பார்கள்? வீட்டில் மெகா சீரியல் பார்க்க நேரம் ஆச்சே என உள்ளம் பதை பதைக்க போலியாக வருத்தத்துடன் அமர்ந்திருக்கும் அவலம்.எங்களால் 'பாடி'யை சுமக்க முடியாது..B.P., sugar என்று கூறும் அனைத்து வயதினரும்.கடைசியில் அமரர் ஊர்தியில்..எவ்வளவு உறவு இருந்தாலும் தூக்க ஆளின்றி காடு செல்லும் பிணங்கள்.

இவற்றை எல்லாம்...பார்க்கும் போது...
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த, காணாமல் போன அந்த நாட்கள்..அந்த மனித நேயம்...திரும்ப வருமா? என்று எண்ணத் தோன்றுகிறது .

இப்படி ஒரு பதிவை போட உதவிய சிவாவிற்கு நன்றி.

இத் தொடரைத் தொடர நான் கேட்டுக் கொள்ளும் இருவர்...
ச்சின்னப்பையன்
வடகரை வேலன்

Saturday, August 30, 2008

உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன - பாரதியார்

நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

அய்ந்தறிவும் ஆறறிவும்....(கவிதை)...

உயர்ந்தோர் தாழ்ந்தோர்
பேதமில்லை
மச்சு வீடு குச்சு வீடு
பாகுபாடில்லை.

செய்த பாவம் தீர
இறை வழிபாடில்லை
மெய்யை பொய்யாக்க
நீதிமன்றங்கள் இல்லை.

உண்டு உண்டு உறங்கும்
சோம்பேறிகள் இல்லை
ஒருவருக்கொருவர்
கூழைக் கும்பிடு இல்லை

பதவிக்காக தலைவர்
புகழ் பாடுவாரில்லை
ஐந்தறிவு படைத்தவர் நாங்கள்
ஆறறிவு எங்களுக்கு இல்லை

Friday, August 29, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு நாள் ஒரு டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார்.அப்போது சுடுகாட்டிற்கு
2 சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.அவற்றுடன் நாயுடன் ஒருவர் செல்ல அவர் பின்னால் ஒருவர் பின் ஒருவராக
கிட்டத்தட்ட 500பேர் சென்றுக்கொண்டிருந்தனர்.அதைப் பார்த்த அண்ணாசாமிக்கு ஆச்சர்யம்.டீக்கடைக்காரரிடம்
நான் எவ்வளவோ பிண ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன்..ஆனால் இவ்வளவு ஒழுங்காக ஒருவர் பின் ஒருவராக
சென்று பார்த்ததில்லை..ஆமாம் ..யாருடைய ஊர்வலம் இது? என்றார்.
அவர் நாயுடன் செல்பவரை சுட்டிக்காட்டி 'அவரைக் கேளுங்கள்' என்றார்.
நாயுடன் செல்பவர் சொன்னார்'முதலில் சென்றது என் மனைவி..'
'ஆமாம் ..அவருக்கு என்னவாயிற்று?'
என் நாய் அவளைக்கடித்து விட்டது.இரண்டாவது பிணம் என் மாமியார்..என் மனைவியைக் காப்பாற்ற சென்றவரை
என் நாய் கடித்து விட்டது.
உடனே ஆவலுடன் அண்ணாசாமி'இந்த நாய் எனக்கு வாடகைக்கு கிடைக்குமா?'என்றார்.
வரிசையில் போய் நில்லுங்கள் என்றார்...நாயுடன் சென்றவர்.
அண்ணாசாமி 501வது ஆளாக வரிசையில் நின்றார்.

பலப்பத்தை மறந்த அவாள்

படிக்கின்ற காலத்திலே
பாலர் வகுப்பிலே
பலப்பம் இன்றி இருந்திட
பிச்சை இட்டேன்
பலப்பத்தை நான்
அதை மறந்திட்டார்
அவாள் இன்று
மற்றோரு ஆழ்வாரோ
வடவாசல் அன்னை
வருகை அன்று
என் எண்ணத்தை
தவிடு பொடி ஆக்கினார்
ஆதலால் பின்னாளில்
அன்னை புகழ் பாடினேன் -இன்றோ
நரைமுடியான் என எனை
எள்ளி நகையாடுகிறார்
தேளாய்,நண்டாய் கொட்டுகிறார்
வஞ்சகர்களே.இன்று
வன்மையாய் நான்
ஒன்று உரைத்திடுவேன்
கனி இருக்க காய்
கவர்ந்தற்று - .வள்ளுவன்
வாக்கை மறந்திடாதீர்.

Thursday, August 28, 2008

விழுதுகள் (கவிதை)

அவனுக்கு அவன்மீதே

ஆத்திரம்

நாம் இருவர்

நமக்கு இருவர் - மறந்து

வீங்கிய வயிறுடன்

வீட்டினுள் மணவாட்டி

முத்தாய் மூன்றாவது

முளையிலேயே கிள்ளிடணும்

இல்லையேல் முடியாது

இனிதாய் வாழ்ந்திட

இரவு முழுதும் மனப்புயல்

இடி மழையோ வெளியே

மறுநாள் புயலில்

மரங்கள் பல சாய

ஆலமரமோ சாயவில்லை

ஆதாரம் விழுதுகளே..

வருந்திய மனதில்

வந்தது மகிழ்ச்சி

Wednesday, August 27, 2008

கோவி கண்ணனும்,பதிவுகளும்

கோவி கண்ணன் சிங்கையில் சிஸ்டம் இஞ்சினியராக பணி புரிந்து வருகிறார்.நான்கு வருடங்களாக பதிவராக உள்ளார்.(govikannan.blogspot.com)
பதிவு உலகில் புதியதாக வருபவர்கள்..முதலில் இவரின் சில பதிவுகளையாவது படிக்க வேண்டும்.சாதாரண விஷயங்கள் முதல்..பல சமூக,அறிவியல்,பகுத்தறிவு,உலக நடப்பு,நகைச்சுவை,
மொக்கை பதிவு என எல்லா தலைப்புகளிலும் பதிவிடும் பதிவர்கள் மிகச் சிலரே!!!அதில் கண்ணனும் ஒருவர்.
நான் பதிவுகளில் நுழையும் முன் நான் படித்த சில பதிவர்கள்...தமிழச்சி,கோவி கண்ணன்.டோண்டு ராகவன்.
தமிழச்சியின் துணிச்சலான பதிவுகள்
டோண்டுவின் சிந்தனைப் பதிவுகள்
கோவி யின் தெரிந்துக் கொள்ள வேண்டிய பதிவுகள். இவைதான் என்னை பதிவு எழுத தூண்டியவை.
இந்த பதிவு கோவியைப் பற்றியது ஆதலால் அதைப்பற்றி...

சிறுகதை- அவர் சில சிறுகதைகளை பதிவேற்றி இருக்கிறார். அதில் 'புணரபி மரணம்..புணரபி ஜனனம்' என்று ஒரு கதை.அருமையான கதை.படிக்காதவர்கள் அந்த வலைப்பக்கத்துக்குச்
சென்று தவறாமல் படிக்கவும்.
மரணம்..ஜனனம்..எல்லாம் மாயை...எவ்வளவு அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்?

இடஒதுக்கிடு- பற்றி ஒரு பதிவு..உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன?
ஜாதி மக்கள் அடிப்படையில் எல்லோருக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால்தான் சமத்துவம் ஏற்படும்.
அவரின் இந்த எண்ணம்..அவரை ஜாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டவராய் தோற்றுவிக்கிறது.
யாருக்கும்..எதற்கும் பயப்படாது..தன் எண்ணங்களை பதித்துள்ளார்.

எண்ணப்படம் பார்த்ததுண்டா வில்...விசித்ரமனம் பற்றி ஒரு பதிவு
'அறிவியல்..ஆன்மீகம் அனைத்தும் பொருள் உரைத்தாலும்..மிகச் சரியாக மனம் என்பது எப்படி செயல் படுகிறது என்பதற்கான தெளிவுரை எவருமே எழுத வில்லை..'என்கிறார்.
எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?
ரோஜாவை எப்படி அழைத்தாலும் ரோஜாதான்..பதிவில்..பல்வேறு பெயர்களில் ரோஜாவை ஏற்றுக் கொள்ளும் நாம் பல் வேறு பெயர்களில் (ஈஸ்வரன்,அல்லா,ஜீஸஸ்)அழைக்கப்படும் பரம்பொருளை எண் ஏற்பதில்லை ...என்கிறார்.
கலைஞர் முடிவெடுக்க வேண்டிய நேரம்...ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றய ஒரு பதிவு..சிங்கையில் இருந்தாலும்..தமிழ்நாட்டை மறக்காத தமிழன் தான் என்பதை உறுதி படுத்துகிறார்.
சில மொக்கை பதிவகளும் உண்டு.
ஆனால் அவை நமக்கு மொக்கையாகத் தெரிவதில்லை.
பதிவர் சந்திப்பு..என்பார்..பார்த்தால் மார்க்கெட்டில் இரு பதிவர்கள் பார்த்திருப்பார்கள்.அவ்வளவுதான்..ஆனால்..படிக்க நமக்கு சுவையாக இருக்கும்..அதுதான் அவர் எழுத்து.
பொன்முடி ஆங்கிலம் படிக்க வேண்டிய..அவசியத்தை கூறியுள்ளதை..ஆதரித்து..ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்று ஒரு பதிவு.
மொத்தத்தில் தன் மனதில் சரி என்று தோன்றுவதை..யாருக்கும்..எதற்கும் பயப்படாமல் பதிவிடுதல் இவர் ஸ்பெஷாலிடி.

பின்னூட்டம்-பின்னூட்டம் இடுவதிலும் தனித்து நிற்பவர்.ச்சின்னப்பையனின் ஒரு பதிவுக்கு..குமரி முனையில் நில்லுங்கள்..உங்கள் பின்னால் 100 கோடி பேர் இருப்பர் என மெல்லிய நையாண்டி..எனது வாய் விட்டு சிரியுங்கள் பதிவிற்கு 'நான் வாய் விட்டு சிரித்தால்..வேலைக்கு ஆப்பு"என்று பின்னூட்டம் இட்டவர்..எம்.ஆர்.ராதா பற்றிய என் பதிவிற்கு என்னை 'அஞ்சா நெஞ்சன்'என்றும் பாராட்டினார்.
எவ்வளவு பேருக்கு..பாராட்டும் மனம் இருக்கிறது?

புதிய பதிவர்கள் என்றால்..அவர்களை ஊக்குவித்து (கலைஞர்..ஸ்டாலின்..ஊக்கு அல்ல) மூத்த பதிவர் என்ற தோரணை இன்றி பின்னூட்டம் இடுவார்.
அவ்வளவு ஏன்..சில மாதங்களாகவே எழுதும் என்னை (தமிழா..தமிழா..)..உங்களுக்கு பிடிக்கும் என தன் பதிவின் முகப்பில் இட்டுள்ளார்.

இவரைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்...ஆனால் பதிவு நீண்டுவிடும்..
புது பதிவர்களே...இவர் பக்கத்திற்கு சென்று..இவர் பதிவுகளை படியுங்கள்.
ஆமாம்..இவர் பதிவில் எது சிறந்தது?
வெல்லக்கட்டியில் எந்த பாகம் இனிப்பு..சொல்லுங்கள்..நானும் சொல்கிறேன்.

Tuesday, August 26, 2008

திரைப்பட பாடல்களும்...பட்டுக்கோட்டையாரும்

..
கானா பாட்டு,குத்துப் பாட்டு என திரைப்பட பாடல்கள் வந்துக் கொண்டிருக்கும் நாளில்..(நிலா..நிலா..வா வா என்று ஒரு லேட்டஸ்ட் பாட்டு..இனி எந்த பள்ளியிலும் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சொல்லிக்கொடுக்க முடியாது)அந்த நாளில் பட்டுக்கோட்டையாரின் பாடல்களை நினைக்கத் தோன்றுகிறது.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொது உடமை கட்சிக்காரர்.ஒவ்வொரு பாடல்களிலும் கருத்து மிக அருமையாக இருக்கும்.அவரது பாடல் வரிகளில் இருந்து சிலவற்றைப் பார்ப்போம்.

'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளை அடிப்பதில்
வல்லமைக் காட்டிடும்
திருட்டு உலகமடா...தம்பி
உலகம் புரிந்து நடந்துக் கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா'

மற்றொரு பாடல்;-

(குழந்தையிடம் பாடும் பாடல்)

ஆளும் வளரணும்
அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு
அதுவே நீ தரும் மகிழ்ச்சி

என்று சொல்பவர்..அதே பாடலில்
வேப்பமர உச்சியில் நின்று
பேய் ஒன்று ஆடுதுன்னு
விளையாடப் போகையில் சொல்லி வைப்பாங்க -உன்
வீரத்தை முளையிலே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே ஸோம்பி இருந்து
வெம்பி விடாதே..

கவிஞருக்கு சமுதாயத்தின் மீது எவ்வளவு அக்கரை பாருங்கள்

நாடோடி மன்னன் படத்தில் வரும் 'தூங்காதே தம்பி தூங்காதே' பற்றி சொல்லவே வேண்டாம்.ஒவ்வொரு வரியும் பொன் வரிகள்..அப்பாடலின் கடைசி இரு வரிகள்..

இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

(இந்த இடத்தில்..தமிழக அரசு தூங்காமல் இருந்திருந்தால் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ஒப்புதல் போட்ட உடனேயே முடித்திருக்கலாம்.இன்று
பிரச்னை இருந்திருக்காது)
இப்படி பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் பற்றி கூறிக்கொண்டே இருக்கலாம்.
ஆமாம்..இவருக்கு ஜனரஞ்சக மான பாட்டுக்கள் எழுதத் தெரியாதா? என்றால்..
அவரால் அதுவும் முடியும்..
கல்யாணபரிசு பாடல்கள் அனைத்தும் அவர்தான்.
அவர் வாழ்நாள் முழுதும் கோடம்பாக்கம் ஸ்டூடியோக்களுக்குச் செல்ல மைலாப்பூரிலிருந்து 12-B பஸ் பிடித்துத்தான் செல்வாராம்..கார் வைத்துக்கொள்ள வசதி இல்லை.
எனக்கு புரியாத புதிர் ஒன்று...பாரதியார்,பட்டுக்கோட்டையார்,கண்ணதாசன்..போன்ற திறமையானவர்களை இயற்கை ஏன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கிறது?

ஆனந்தம்

மஞ்சள் நீராட்டு
குங்குமப்பொட்டு
கழுத்தில்மாலை
ஆட்டிற்க்கோ ஆனந்தம்
விவரம் புரியாததால்
நேர்த்திக்கடன் ஆண்டவனுக்கு
நிறைவேர்றப்போவதால்
பக்தனுக்கோ ஆனந்தம்
தான் படைத்த உயிர்களில்
தன் பெயரைச்சொல்லி
ஒன்று பலியாவதால்
இறைவனுக்கோ கண்ணீர்
கண்டிப்பாக
ஆனந்தக்கண்ணீர் அல்ல

பனிப்பாவை (கவிதை)

வைகறையில்
கதிரோனின் கீற்றுகள்
வண்ண வெளிச்சம் போட்டு
புற்களில் தூங்கும்
பனிப்பாவையினரின்
நிர்வாணத்தைக் கலைத்து
மேனியில் ஊடுறிவி
இன்னலை விளைவிக்க
வெட்கத்துடன் பாவையினர்
மறைந்தனரே

Monday, August 25, 2008

ஆணாதிக்க சமுதாயம் இது..பெண்களே இதை மாற்றவேண்டியது நீங்கள் தான்

இரு நண்பர்களிடையே நடந்த உரையாடல்..
'என்ன.. கோவிந்தன்..உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கறீங்களா? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?'
'வரப்போறவ பொறுமையில் பூமாதேவியாய் இருக்கணும்..என்னா..என் பையன் கோபக்காரன்.
அழகிலே மஹாலட்சுமியாய் இருக்கணும்..என்னா...என் பையன் சுமார் ரகம்தான்..வர்றவ அழகா இருந்தா பிறக்கப்போற குழந்தயும் அழகா இருக்கும்.
அமுது படைப்பதில் அன்னை போல இருக்கணும்..என் மகனுக்கு அடுப்பு கூட பத்த வைக்கத்தெரியாது.
இல்லறநுகர்ச்சியில் கணிகை போல...அப்போதானே வீட்டோட கிடப்பான்...வெளியே சாப்பிடத்தோனாது..
ஆலோசனை சொல்றதிலே அமைச்சராய் இருக்கணும்.இவன் படிப்பு 10வது தான்.பொண்ணு குறஞ்சது டிகிரி முடிச்சிருந்தா வசதியாய் இருக்கும்.
பணிவிடை செய்யறதுலே தாதியாய் ...புருஷனுக்கு அடங்கி ..அவனையும் வீட்டு பொறுப்புகளையும் கவனிச்சுண்டு..வேலைக்கும் போய் வரணும்..ஏன்னா எங்க வீட்டிலே வேலைக்காரி கிடையாது.இப்படியெல்லாம் ஒரு பொண்ணு இருந்தா பாருங்க'

ஆமாம் உங்க பையன் என்ன பண்றான்?

ஊதாரியாய் சுற்றிண்டு இருக்கான்..ஒரு கால் கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.

பெண்களே இப்போது பதிவின் தலைப்பை இன்னொரு முறை படியுங்கள்.

Sunday, August 24, 2008

இட்லி வடை பதிவும்..கலைஞர் பதிலும் "அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'.."

1.இ.வ.-முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து
எழுதலாமா? சிறுபிள்ளைத் தனமாக இல்லையா?

கலைஞர்-தம்பி இ.வ.(மனதிற்குள் இ.வா என்று சொல்லிக்கொள்கிறார்)
இதையே சிறுபிள்ளைத்தனம் என்று சொன்னால்..தரம்
தாழ்ந்தது என்று சொன்னால்..அஞ்சா நெஞ்சனை தா.கிருட்டிணன்
கொலை வழக்கில் சம்பந்தப் படுத்தி..பத்திரிகை நிருபர்கள் கேட்ட போது
* * * நீ பார்த்தியா? *** நான் சொல்றேன் நீதான் கொலை செஞ்சேன்னு
என்றெல்லாம் பேசினேனே அதை நீ என்ன வென்று சொல்வாய்?

2.இ.வ-பிராமண சமூகத்தை மட்டுமே ஏன் எப்போதும் இழிவு படுத்துகிறீர்கள்?அடுத்த
முறை கனவில் அண்ணா,பெரியார் வரும்போது நல்ல அறிவுரைகளைக்
கேட்டு தெரிந்துக் கொள்வீர்களா?
கலைஞர்-தம்பி..இம்முறையும் தவறாக என்னைப் புரிந்துக் கொண்டிருக்கிறாய்.பல
முறை என்னுடன் பணி புரியும் அதிகாரிகள் பிராமணர்கள்தான் வேண்டும்
என நான் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.அண்ணா..பெரியார் இருவரும் என்
கனவில் வரும்போது அதிகமாக ஸ்டாலினைப்பற்றியும்,அழகிரியைப் பற்றியுமே
கவலைப்படுகிறார்கள்.இது சம்பந்தமாக அவர்கள் இதயத்துள் தைக்கப்பட்டுள்ள
முள் அகன்றதும்தான் இதைப்பற்றி கேட்க முடியும் என்பதை நீ அறிவாய்.

3.இ.வ.-மைனாரிட்டி அரசாக இருந்தாலும்..நீங்கள் தமிழ்நாட்டு முதல் அமைச்சர்.
ஜாதிகளைப் பற்றிப் பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா?
கலைஞர்-இந்த கேள்வி சிரிப்பைத்தான் வரவழிக்கிறது. மைனாரிட்டி அரசு என்று
நீ சொல்வதன் மூலம் ...யார் சொல்லி நீ அதைக் கேட்கிறாய் என அறிந்தேன்.
நீ வெறும் அம்பு..எய்தவன் இருக்க உன்னை நொந்து என்ன பயன்?நான்
ஆரியன் இல்லை சூத்திரன் என்ற ஒரே காரணத்தினால் இக் கேள்விஎன்னிடம் கேட்கப்
பட்டிருக்கிறது என்பதை உடன் பிறப்புக்கள் அறிவார்கள்.

4.இ.வ-ஐந்து முறை பதவிப்பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு..'எந்த விருப்பும்..
வெறுப்பும் இன்றி..'என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா?
அதை கூட விட்டு விடுங்கள்..இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?
கலைஞர்-'அவாள்'என்று சொல்வதை ஏன் தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்.நான் எப்போதும்
அவர்கள் நினைப்பிலேயே இருப்பதால்..அந்த பேச்சு என்னை அறியாது எனக்குள்
புகுந்துவிட்டது.வேண்டுமானால் தயாளு மாமியை கேட்டுப் பாருங்கள்.மாறன் இருந்திருந்தால்
இந்த கேள்வி எழுந்திருக்காது.

5.இ.வ.-தேர்தலில் இதை பகிரங்கமாக சொல்லி 'அவாள்' ஓட்டு வேண்டாம் என்னும் தைர்யம்
நேர்மை கொஞ்சமாவது உண்டா?
கலைஞர்-மீண்டும் எனக்கு சிரிப்பை வரவழிக்கிறாய்..தேர்தல் போது நீ பார்க்கும் மு.க. வேறு.
தேர்தலில் அவர்கள் ஓட்டையும் பெற்று நான் கோட்டையை பிடிக்கும் போதும்,
கோட்டையை இழக்கும் போதும் பார்க்கும் மு.க. வேறு.

(இத்துடன் கலைஞரின், நமது கற்பனை பதில்கள் முடிந்தது)

இனி நமக்கு புரியாத கேள்வி..எல்லா சவால்களையும் சமாளிப்பவர்..'அவாள்' சவால் என்பது எதனால்..?

Saturday, August 23, 2008

தமிழ் படித்தவரா (குட்டிக்கதை)

பத்துக்கு எட்டு அளவுள்ள அந்த அறைக்குள் நுழைந்தான் அண்ணாமலை .
நேர் காணலுக்கு வந்திருக்கிறான் .அறங்காவலர்கள் மூவர் அமர்ந்திருந்தனர் .
அவனைப் பார்த்து 'சிட் டோவ்ன் 'என்றனர்.பின் ஒருவர் மாற்றி ஒருவர்
கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர் .
வாட் ஈஸ் உவர் நேம்'
அண்ணாமலை.
யுவர் எசுகேசனால் குவாலிபிகேசன்
எம். ஏ .,தமிழ்
'தமிழ்' என்றபடி மூவரும் அவனை ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவன் போல பார்த்தனர்.
'டூ யு நோ ..தி நேம் ஆப் அவர் பவுண்டர்,'
'வெள்ளையப்பன்'
வெரிகுட். யு நோ இன் விச் இயர் வி சேலி பி ரே டெட் அவர் கோல்டன் சுபீலி
இன் தி இயற் 2000
ஹொவ் மச் சே ல ரி யு வான்ட்'
10000
ஆல் ரெயிட். வி வில் லேட் யு நோ '
தமிழ் வளர்ச்சி சங்க வேலைக்கு வந்தவன் தமிழ் படித்திருந்ததால்
தேர்ந்து எடுக்கப் பட வில்லை.

Friday, August 22, 2008

பொழுது போகாத ச்சின்னப்பையனுக்கு

ச்சின்னப்பையனுக்கு பொழுது போகவில்லையாம்.
இப்படிப்பட்டவற்றையும் கண்டுபிடிக்கட்டும்.
ஓரெழுத்துச்சொல்-
கை..
கீ (சாவி)
தா
தீ
தை
நோ (NO)
பூ
பை, போ ,மை, ரோ(ROW)
வை

இரண்டு ஒறே எழுத்து
சௌசௌ
டாடா
தைதை(என குதித்தான்)
பாபா
மாமா
லாலா,
லோ..லோ(என அலைந்தான்)

ஒரே வார்த்தைகள் அதன் ஒற்றுடன்
காக்கா
பாப்பா
தாத்தா
சாச்சா
(அப்பாடா..ச்சின்னப்பையனுக்கு வேலை கொடுத்தாச்சு)

தாரே ஜாமீன் பர் லேட்டா வந்துள்ள லேட்டஸ்ட் விமரிசனம்

.
ஒரு தமிழ் படத்தயாரிப்பாளர் பார்வையில்

எல்லாரும் ஆஹா ,ஒ ஹோ ன்னு சொல்ராங்கலேன்னு அந்த படத்தை பார்க்க நினைச்சேன். ஆனா பாருங்க நமக்கு ஹிந்தி தெரியாது. இதுதான் தலைவா ஒரு கஷ்டம் ..நாம இந்தியாவிலே
இருந்தாலும் ,இந்தியாவிலே தயாரிக்கிற படத்தை நம்மலாலே
பார்க்கமுடியல்ல ..பார்த்தாலும் புரிஞ்சுக்க முடியல்ல.
இந்த படத்தோட DVD கிடைக்குமான்னு தேடினேன். அதுல தானே இங்கிலீஷ் சப் டைட்டில் இருக்கும்.(இங்கிலீஷ் ல கூட நான் வீக்
.அது வேற )
DVD கிடைச்சது. பார்த்தேன்.
என்ன அநியாயம் இது? இந்த படத்திலே என்ன இருக்கிறது?
ஒரு சண்டைக் காட்சி இருக்க...ஒரு கவர்ச்சி நடனம் உண்டா...
அவ்வளவு ஏன்...இதுலே ஒரு ஹிரோயின் னு கூட கிடையாது.
அப்பறம் தானே கவர்ச்சி .. தொப்புள்...எல்லாம்.
சரி.. அதுதான் போகட்டும்னா ,ஒரு வெளி நாட்டுலே கனவு காட்சி.
ஒரு பாட்டு,குறைஞ்ச ஆடையிலே ஒரு நடனம்..ம்..ம்...ம்..ம்..
சரி கதைக்கு வரேன்
டிச்லேக்சியா ங்கிற படிக்கிற திரன்லே குறைபாடுள்ள சிறுவனின்
கதை. அமீர்கானைவிட சிறுவன் நல்லா நடிச்சுருக்கான். ஆமாம் ..
இப்படி குழந்தைகளை நடிக்க வச்சா.. குழந்தை தொழிலாளர்கள்
சட்டம் மீரினாற்போல் இல்லையோ?
பாதியிலே DVD யை ஆப் பண்ணிட்டேன்.
சுவாரிசியமா எதுவுமில்ல.. ..நமக்கு இந்த படம் சரிப்படாது.
நம்ம அடுத்த படத்துலே நயன்தாரா பில்லா லே வர மாதிரி ஒரு கவர்ச்சி சீன் வைக்க சொல்லி இருக்கேன். கனல் கண்ணன் வேற காத்துக்கிட்டு இருக்கார்.
நான் வரேங்க.
நம்புங்க.. என்னாலே தாரே ஜாமீன் பார் மாதிரி ஒரு மட்டமான
படத்தை எடுக்க முடியாது.

Thursday, August 21, 2008

இளைஞர்களுக்கு வழிவிடப்படுமா?

தி.மு.க.வைத் தொடங்கும்போது அண்ணாவுக்கு நாற்பது வயது, நாவலருக்கு 29 வயது, பேராசிரியருக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது, மதியழகனுக்கு 25 வயது... எனவே, வயது எதற்கும் தடையில்லை... - இப்படித்தான் தி.மு.க.வின் தலைவர்கள் எல்லாரும் பேசினார்கள், 1980-ல் மதுரையில் இளைஞரணி தொடங்கப்பட்டபோது!

ஆனால், தி.மு.க.வில் கேள்வி எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தாலும்கூட கேள்விக்குறியாகவே தொடருகிறது இது. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக முதல்வர் கலைஞரின் உடல்நலம் பற்றிய சங்கடங்கள் வெளியே தெரியத் தொடங்கியபோது, ஸ்டாலின் முதல்வராவாரா? என்ற கேள்வி விவாதமானது. ஸ்டாலின் முதல்வராவதை ஆதரிப்பதாக பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பகிரங்கமாகவே அறிவித்தபோதிலும்கூட, பதில்கள் மட்டும் பூடகமாகவே வெளியிடப்பட்டு வந்தன.

இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கொதிநிலையை எட்ட, நெல்லையில் நடந்த தி.மு.க. மாநாட்டின்போது ஸ்டாலின் முதல்வராக அறிவிக் கப்படுவார் என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கமான பதிலுடன் அறிவிப்பு தள்ளிப் போனது. அதைத் தொடர்ந்துதான், இந்த யோசனையை யார் எதிர்ப்பது, ஏன் தள்ளிப் போகிறது, அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பது போன்ற கேள்விகளும் விவாதங்களும் பெரிதாக அடிபடத் தொடங்கின.

தொடர்ந்து, அடுத்த வாரிசுகளான அழகிரி, கனிமொழி போன்றோர் பற்றிய விவாதங்களும் சூடுபிடிக்கத் தொடங்கின. ஒரு சர்வேயின் பலனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டப்பட்ட தயாநிதி மாறனுடைய அரசியலும் இந்த சர்ச்சைகளுக்குள்ளே புகுந்து விளையாடத் தொடங்கியது.

அதிகாரத்தைக் குறிவைக்கும் குடும்ப அரசியலில் ஸ்டாலினும் ஒரு காயாகி, அங்கே இங்கே என்று நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்க, அண்மையில் ஸ்டாலின் மேற்கொண்ட லண்டன் பயணமும், அது தொடர்பான செய்திகளும் சர்ச்சைகளை மேலும் மேலும் வளப்படுத்தின. ஒருகட்டத்தில் ஸ்டாலின் ஓரங்கட்டப்படுகிறார் என்றேகூட கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த பலரால் கருதப்பட்டது.

வேலூர் மாநகராட்சித் தொடக்க விழாவில் பேசிய கலைஞரோ, `அடுத்த முறை முதல்வராக நான் விரும்பவில்லை. தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு உறுதுணையாக இருப்பேன்' என்றார். இத்தனைக்கும் மேடையில் உடனிருந்த ஸ்டாலின் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. மதுரையில் டி.எம். சௌந்தரராஜனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அழகிரியைப் பாராட்டி அவர் பேசிய பேச்சும், பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சிலை திறப்புக்கேகூட ஸ்டாலின் வராததும் சேர, அவருடைய ஆதரவாளர்களிடையே தர்மசங்கட அலைகளை ஏற்படுத்தியது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சென்னையில் அண்மையில் ஒரு மேம்பாலத் திறப்பு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சரான ஸ்டாலினையும் வைத்துக்கொண்டு பேசியபோதுதான், ஸ்டாலின் ஊக்கை விழுங்கிய கதையைக் கூறி, `அந்த ஊக்கத்தால் அவர் மேயராகி, அமைச்சராகி, இன்னும் என்னென்னவோ ஆகப் போகிறார்' என்று குறிப்பிட்டு மீண்டும் ஒரு நம்பிக்கை சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார் கலைஞர்.

ஸ்டாலின் முதல்வராவாரா?

இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க கலைஞர் முடிவு செய்துவிட்டதாகவே நம்பத் தகுந்த வட்டாரங்களின் லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பதுடன், காங்கிரஸின் கோரிக்கைக்கு செவிமடுத்து அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது பற்றிய அறிவிப்பையும் ஒருசேர செப்டம்பரில் கலைஞர் வெளியிடுவார் என இந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. அனேகமாக, செப்டம்பரில் அண்ணா பிறந்த நாளான 15-ம் தேதி, உள்கட்சித் தேர்தல் முடிந்து நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் இதுபற்றிய முறைப்படியான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு `காம்ப்ரமைஸ் ஃபார்முலா' உருவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக ஸ்டாலின் மீண்டும் உற்சாகமாகக் காணப்படுவதற்கு இந்தப் புதிய முடிவுதான் காரணம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
இந்த முடிவை நோக்கி கலைஞர் சென்றடையப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, உள்கட்சி தாண்டி அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சாதாரண மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படும் `யார் அடுத்த வாரிசு?' என்பது பற்றிய அநாவசியமான சர்ச்சை. இதையொட்டியே பேசப்படும் அவருடைய உடல்நிலை தொடர்பான சங்கடங்கள்.

இவையெல்லாம் இப்படியே தொடர்ந்தால் காலப்போக்கில் கட்சியைப் பலவீனப்படுத்திவிடக் கூடும் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது.

``கலைஞர் கண் முன்னாலேயே ஸ்டாலின் முதல்வராக அறிவிக்கப்பட்டால் பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் இருக்காது. தென் மாவட்டங்களையும் சேர்த்தால்கூட பெரும்பாலான மாவட்டச் செயலர்கள் ஸ்டாலின் வருவதை எவ்வித முணுமுணுப்புமின்றி எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். இந்த விஷயத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழகம் முழுவதும் ஸ்டாலின் செய்த சுற்றுப்பயணம் நல்ல பலனைத் தந்திருக்கிறது.

``வீரபாண்டி ஆறுமுகம் போன்ற சிலரும்கூட பல்வேறு காரணங்களால் இப்போது ஸ்டாலினை ஏற்றுச்செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனர். ஒருவேளை எதிர்ப்பு இருந்தாலும் ஒரு சொல்லில் கலைஞரால் அடக்கிவிடவும் முடியும். தக்க விதத்தில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும் பட்சத்தில் வாரிசுகள் இணக்கமாகச் செயல்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. கலைஞருடைய கண்காணிப்பு இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். காமராஜருக்குப் பிறகும், எம்.ஜி.ஆருக்குப் பிறகும் தமிழகத்தில் காங்கிரஸுக்கும் அ.தி.மு.க.வுக்கும் நேர்ந்ததை வரலாறு திருப்பிச் சொன்னாலும் வியப்பதற்கில்லை'' என்று அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

``ஆட்சியிலும் தேர்தலிலும் ஸ்டாலின் முன்னிறுத்தப்படும்பட்சத்தில் மாறன் சகோதரர்களின் எதிர்ப்புகூட மழுங்கடிக்கப்பட்டு விடக் கூடும். ஏனெனில், அழகிரியிடம் காட்டும் வன்மத்தை இவர்கள் ஸ்டாலினிடம் காட்டுவதில்லை. தேர்தல் என்று வரும்போது தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடிக்க இவர்கள் செய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் எல்லாமும்கூட மட்டுப்படலாம்.

``பாட்டாளி மக்கள் கட்சி வெளியேற்றப்பட்ட நிலையில் இடதுசாரிகளும் வெளியேறினால் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகளை மட்டும் வைத்துக் கொண்டுதான் எதிர்வரும் மக்களவைத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அ.தி.மு.க. அணி மேலும் வலுப்படும்பட்சத்தில், கட்சிக்குள் நடைபெறும் உள்குத்து அரசியல், தி.மு.க.வுக்குப் பெரும் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும்'' என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.

வெற்றியோ, தோல்வியோ மக்களவைத் தேர்தலை ஒருவழியாகச் சமாளித்துவிட்டாலும் மாநிலத்தில் மீதியுள்ள ஆட்சிக்காலம்? இந்த இடத்தில்தான் அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம் தரும் முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

காங்கிரஸை மட்டுமே நம்பி ஆட்சியைத் தொடர வேண்டிய சூழ்நிலையில், காங்கிரஸையும் ஆட்சியில் பங்கேற்கச் செய்வது மட்டுமே அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்யும். இல்லாவிட்டால், கோஷ்டிகளுக்குப் புகழ்பெற்ற காங்கிரஸில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி (மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இல்லாவிட்டால் மிகவும் வசதியாகப் போய்விடும்) தி.மு.க. அரசை மிக எளிதாக, மிக விரைவாக ஜெயலலிதா கவிழ்த்துவிடும் வேலைகளில் இறங்குவார். இதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

காங்கிரஸ் பங்கேற்புடனான தி.மு.க. ஆட்சி என்றால் தற்போதைய சூழலில் உடனடியாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டிய அவசியமின்றி, ஸ்டாலின் தலைமையில் மீதியுள்ள ஆண்டுகளை உறுதிப்பட நகர்த்திவிடவும் முடியும். ஸ்டாலின் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில், கூட்டணியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வலுப்பட்டால், சட்டமன்றத் தேர்தலின்போது வெற்றிக்காக மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்காது என்றும் கலைஞரும் தி.மு.க. வட்டாரங்களும் கருதுவதாகக் கூறப்படுகிறது.

`நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காரராக அரசியலில் தொடர்ந்து இருக்கிறார் ஸ்டாலின். சிறுவயதிலேயே கட்சித் தலைவர்களுக்கு அஞ்சல் அட்டையில் அவர் பொங்கல் வாழ்த்துகளை அனுப்புவார். இளைஞர் தி.மு.க. என்று தொடங்கிப் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்திருக்கிறார். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல்காந்தி போல திடீரென வந்தவரல்லர் அவர்' என்றே தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

`தலைவர் மகன் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே கட்சி தொடர்பான சிந்தனையுடன்தான் ஸ்டாலின் இருந்து வருகிறார். தி.மு.க.வின் கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் அவருக்கும் இடமிருக்கிறது. போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று வந்திருக்கிறார். சிறைக்கும் சென்றிருக்கிறார்' என்றும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தந்தைக்கு இணையாக முடியாது என்றாலும் பெரிதாகக் குறைகூற முடியாத அளவுக்கு அவர் சிறந்த நிர்வாகி என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. சென்னை மாநகரின் மேயராக இருந்த காலத்தில் வெற்றிகரமாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால், அந்த வெற்றியையேகூட எவ்வாறு வெளிக்காட்டிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியாது என்பது பலவீனம்.

மேலும், தனக்கு நெருக்கமான விசுவாசிகளுக்குச் சிக்கல் வரும்போதுகூடத் துணிந்து எதிர்ப்புக் குரல் காட்ட முன்வர மாட்டார். இவருடைய தீவிர ஆதரவாளரான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடமிருந்து நல்வாழ்வுத் துறை பறிக்கப்பட்டபோது இவரிடமிருந்து ஒரு முணுமுணுப்புக்கூட எழவில்லை என்பது சமீபத்திய எடுத்துக்காட்டு. எந்தவொரு விஷயமானாலும், அப்பாவிடம் கேட்க வேண்டுமே, கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிட்டால்..., நான் சொன்னால் நன்றாக இருக்குமா? என்கிற பாணியிலான இவருடைய அணுகுமுறைதான் பெரும் பலவீனங்களாக இருக்கும் என்றும் இவருடைய ஆதரவாளர்களே சுட்டிக்காட்டுகின்றனர்.

``ஸ்டாலின் முதல்வராக்கப்படுவது எப்போதோ நடந்திருக்க வேண்டியது. கலைஞர்தான் மிகவும் தயக்கம் காட்டி வருகிறார். சரியான காரணம் என்னவென்றுதான் தெரியவில்லை. இந்த முப்பெரும் விழாவிலாவது அறிவித்து விடுவார் என்றுதான் நம்புகிறோம்.

வட மாவட்டங்களின் அமைப்புச் செயலராக நீலநாராயணனும், தென் மாவட்டங்களின் அமைப்புச் செயலராக எஸ்.எஸ். தென்னரசுவும் இருந்தனர். தென்னரசுவின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. அனேகமாக, ஸ்டாலினுக்கு முடிசூட்டுவது பற்றி அறிவிக்கப்படும் விழாவிலேயே தென் மாவட்ட அமைப்புச் செயலராக அழகிரிக்கும் கட்சிப் பொறுப்பு வழங்கப்படலாம்'' என்று தி.மு.க. வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

எல்லாம் உறுதிதான் என்றே கூறப்பட்டாலும்கூட, ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்கக் காலம் கனிந்துவிட்டதா? அழகிரிக்கு கட்சிப் பொறுப்பு அறிவிக்கப்பட்டு விடுமா? காங்கிரஸுக்கு அமைச்சரவையில் பங்களிக்கப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் திட்டவட்டமான பதில்களை கலைஞரைத் தவிர வேறு யார் அறிவார்?

Wednesday, August 20, 2008

நகையெல்லாம் கவரிங்

வளர்ப்பு மகனுக்கு இப்படியொரு திருமணமா?' என்று தமிழகமே வாய்பிளந்து பார்த்தது... பி.பி.சி. உட்பட உலகத் தொலைக்காட்சி களே அதிசயித்து அந்தத் திருமணத்தை நேரடி ஒளி பரப்பு செய்தன... அது மட்டுமா?

`பார்த்தாயா உடன்பிறப்பே... இந்தப் பகட்டையும் படாடோ பத்தையும்... ஊரெல்லாம் மின் விளக்குத் தோரணம்... உடம்பெல்லாம் தங்கம் வைரம்... ஒரு திருமணத்திற்கு செலவு நூறு கோடி!' என எதிர்க்கட்சிகள் எல்லாம் எரிமலையாய்க் குமுறின...

விளைவு! ஆட்சிகள் மாறின, காட்சிகள் மாறியது! ஆர்ப்பாட்டமாக திருமணம் செய்தவர்களின் வீடுகளில் சி.பி.ஐ.யின் அதிரடி சோதனை... பறிமுதல் செய்யப்பட்டவை என்று, 27 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை பத்திரிகைகள் பட்டியல் போட்டதோடு, தொலைக்காட்சிகளும் போயஸ் தோட்டத்து சுவர்களை ஊடுருவி சுனாமியாய் சுழன்றடித்தது.

சோதனையின்போது 381 வளையல்கள், 172 கம்மல்கள், 104 மோதிரங்கள் என வியப்பு விரிந்து கொண்டே போனது...

அரசியலே சுத்தப்படுத்தப்பட்டுவிட்டதாக மக்களும் அதிசயப்பட்டனர். காலம் மாற மாற திடீரென காட்சிகளும் மாறிவிட்டன. ஆண்டுக் கணக்கில் நீண்ட அந்த வழக்கில் `பறிமுதல் செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட நகைகளில் விலையுயர்ந்த இரண்டு ஒட்டியானங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பொழுதே மிஸ்ஸிங்' என்றும்; `நீதிமன்ற ஆவணங்களில் அவை ‘not available’என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த ஒட்டியானங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவில்லையென்றும், அந்த ஒட்டியானங்களை கடைசியாக இரு வி.ஐ.பி.க்கள் பார்வையிட்டபின் வேறு யார் கண்ணிலும் அவை படவில்லை என்றும்' பலவிதமான பரபரப்புக் காட்சிகள் அரங்கேறின.

ஒரு வழியாக இந்த பரபரப்புகள் ஓய்ந்து, அமைதியான சூழ் நிலையில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு சுமுகமாக நடந்து கொண்டிருக்கும் பொழுது மீண்டும் ஓர் ஆழிப் பேரலை... அதை ஏற்படுத்தியது நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலாவின் வாக்குமூலங்களாக தாக்கல் செய்யப்பட்ட ஓர் ஆவணம்!

சுதாகரன் திருமணத்தின் போது ஜெயலலிதாவும், சசிகலாவும் அணிந்திருந்த நகைகள் எல்லாம் கவரிங் எனவும், அந்த கவரிங் நகைகள் மைசூரில் இருந்து திருமணத்திற்காக வரவழைக்கப்பட்டன எனவும், அதை மைசூரில் இருந்து ஒரு மேக்கப்மேனே எடுத்து வந்ததாகவும், திருமணம் முடிந்தபின் கையோடு அவற்றை யெல்லாம் அவர் திரும்ப எடுத்துச் சென்று விட்டதாக ஜெயலலிதாவும், சசிகலாவும் சொன்னதாகவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான் அந்த வாக்குமூலமாம்!

வீடு நிறைய பித்தளையே வைத்திருந்தாலும் ஒரு குண்டுமணித் தங்கம் திருடு போய்விட்டதென்றால் இருந்ததெல்லாம் தங்கம் என்று சொல்லும் இந்தக் காலத்தில் காணாமல் போனது மட்டுமல்ல நான் வைத்திருந்ததெல்லாம் பித்தளை என்பதுபோல் ஒருவர் சொல்கிறார் என்றால் அதன் சூட்சுமம் தெரியாமல் தலைசுற்றியது.

இதை நமக்குப் புரிய வைக்க முடியும் என்றால் அது ஒருவரால்தான் சாத்தியம்... அதனால் அவரிடம் கேட்கலாமென்று, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரி நல்லம நாயுடுவைத் தொடர்பு கொண்டோம்...

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருப்பதால் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டார்.

சம்பந்தப்பட்டவர் பேசமாட்டார்... சட்டம் தெரிந்த ஒருவரிடம் கேட்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கச் செயலாளரும் வழக்கறிஞருமான மோகனகிருஷ்ணனிடம் கேட்டோம்...

``பொதுவாகவே எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிகளிடம் பெறப் பட்டதாக விசாரணை அதிகாரிகளால் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வாக்கு மூலங்கள் குற்றம்சாட்டப் பட்டவர்களால் விசாரணையின் போது மறுக்கப்படும். விசாரணை அதிகாரி தாக்கல் செய்யும் அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவரின் கையொப்பம் அவசியமில்லை.... ஆனால் ஜெயலலிதா, சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் அவர்களே தங்கள் நகையெல்லாம் கவரிங் நகை என வாக்குமூலம் அளிக்கின்றனர்.

இது, `காணாமல் போன ஒட்டியானங்களைப் பற்றியும் நாங்கள் கவலைப்படத் தயாரில்லை. கைப்பற்றப்பட்ட மீதி நகையும் கவரிங் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் எங்களுக்கு நல்லது' என நினைப்பதாகத்தான் தோன்றுகிறது.

எதுவாக இருந்தாலும் அரசுத் தரப்பின் அடுத்த நடவடிக்கையைப் பொறுத்துத்தான் வழக்கின் போக்கு தெரியும்... அரசுத் தரப்பும் இரண்டு விதமாக யோசிக்கலாம்...

`ஜெயலலிதாவும் சசிகலாவும் சொல்கிற மாதிரி, இல்லை. தங்கம்தான்!'னு அவர்களின் வாக்குமூலத்தை மறுத் தால் காணாமல் போன ஒட்டியானப் பிரச்னை மீண்டும் வரலாம்.

ஒருவேளை அவர்கள் `கவரிங்'னு சொல்வதை அப்படியே கண்டுக்கொள்ளாமல் விட்டு விட்டால் ஒட்டியானமும் கவரிங்கோடு கவரிங்காகச் சேர்ந்து பிரச்னையே இல்லாமலும் போகலாம்...

இந்த இரண்டில் எதுவேணும்னாலும் நடக்கலாம்.''

இப்படி பிரச்னையின் நோக்கம் மட்டுமல்ல போக்கும் எப்படி இருக்கும் என்று தெளிவாகச் சொல்லி முடித்தார் மோகன கிருஷ்ணன்....

வடிவேலு பாணியில் நமக்குத் தோன்றியதெல்லாம்... ஆளாளுக்கு இப்படி திருப்பித் திருப்பி விட்டர்றாங்களே... என்னதான்யா நடக்குது?.

மதன் காமடிகளில் உச்சம் பதிவில் இல்லை

எடுக்கப்பட்டு விட்டதா?ஏன்? என பரிசல்காரனிடமிருந்து
ஒரு கேள்வி.,
இந்த கேள்வி வராவிட்டால் இந்த பதிவு போட வேண்டிய அவசியம் இருக்காது.
சில அனானிகளின் அநாகரிக பின்னூட்டம்..உண்மையான சில நண்பர்களிடமிருந்து
இது வேண்டாமே...ஓவர்..என அறிவுறுத்தல்கள் அந்த பதிவை எடுத்துவிட வேண்டிய
நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது.பின்னூட்டம் இட்ட ச்சின்னப்பையன்,செந்தழல் ரவி
பரிசல்காரன் அனைவருக்கும் நன்றி.
பெரிய தலைவர்களையெல்லாம் கண்டபடி கேலி செய்து கார்ட்டூன் போட்ட மதனை
ரசித்தவர்கள்..அவரை நையாண்டி செய்வதை ஏன் ரசிக்க மறுக்கிறார்கள்?

தமிழச்சியிடம் பெரியாரின் ஆணாதிக்கம்

பெண்ணுரிமைப்பற்றி பெரியாரை தவிர எந்த தலைவரும் அதிகமாக பேசியதில்லை.ஆனால் பெரியார் படம் பார்த்தபோது ஒரு காட்சி மனதை உறுத்தியது.ஓரு ஏழை,தாழ்ந்த ஜாதி வீட்டில் அவரும் மணியம்மையும் சாப்பிடப்போகிறார்கள்.
அங்கே இருந்த நாற்றம் மணியம்மையால் சாப்பிட முடியவில்லை.தன் இலையின் அடியில் சாப்பாட்டை மறைத்து,சாப்பிட்டது போல பெயர் பண்ணுகிறார்.இது கண்டு பெரியார், அனைவர் எதிரிலும் எச்சிக்கையால் 'பளார்'என அறைகிறார்..
அவர் இப்படி செய்யலாமா?இதுவும் ஆணாதிக்கம் தானே?!

Tuesday, August 19, 2008

என்றும் நீ என்னோடுதான்

மனிதா..உன்மேல் எனக்குள்ள பாசம்

சற்றேனும் அறிவாயோ?

பாலும், பழமும், தேனுமென

குழந்தை பருவத்தில்

கொற்றாவனாய் வளர்த்திட்டாய் எனை

மகிழ்ச்சிக் கொண்டேன்!

வாலிப வயதிலோ..விரைவு உணவென

கோக்,பீட்சா,பர்கர் என தள்ளி

குப்பைக்கூடையாகினாய்..

உயிர் குடிக்கும் மதுவை

உள்ளே செலுத்தியவாறு

கல்லைத் தின்னாலும்

செரிக்கும் வயதென

செப்பிக் கொண்டாய் ஆறுதலாய்..

எனக்கும் மூப்புண்டு அறிவாயா?

அத்தனையும் தாங்கும்

அடித்தளம் முற்றும் அழிந்தது

மரண அழைப்பு வந்தது

புற்றென பெயரில்..

சென்றிடுவோம் ..வந்திடு

என்றும் நீ என்னோடுதான்.

Monday, August 18, 2008

என்னை யாரும் ஏமாற்றமுடியாது - கலைஞர்

சென்னையில் சமீபத்தில் நூலகம் ஒன்றிற்கு அடிக்கல்
நாட்டிய முதல்வர்..தன்னை யாரும் ஏமாற்றமுடியாது
என்றும்,யாரை எங்கு வைப்பது என தனக்குத் தெரியும்
என்றும் பேசினார்.

அவர் கூற மறந்த அவர் ஏமாந்த தருணங்கள்-

1.பொருளாளராக இருந்த M.G.R., கணக்குக் கேட்டதும்..அப்போது
அவருக்குத் தெரியாது M.G.R., ஒரு பெரிய சக்தியாக உருவாவார் என்று.
கலைஞர் முதல் ஏமாந்தது இத் தருணத்தில் தான்.

2.M.G.R.,மறைவுக்குப் பின் ஜானகி அணிக்கு ஆதரவு கேட்டு வீரப்பன் வந்த
போது..ஆதரவு அளிக்க மறுத்தது.அப்படி அன்று ஆதரவு அளித்திருந்தால்
பிற்காலத்தில் ஜெ தலைமையில் அண்ணா தி.மு.க., வளர்ந்திருக்காது.
இதிலும் கலைஞர் ஏமாந்தார்.

3.2001 தேர்தலின் போது..அதீத நம்பிக்கையில்...தன்னை ஆதரித்த கட்சிகளை
விலக்கி..தேர்தலை சந்தித்தது..வெற்றி வாய்ப்பை இழந்தது.

4.M.G.R.க்கு போட்டியாக வரவேண்டும் என் தன் மகன் முத்துவை நடிகனாக
ஆக்க முயன்று ஏமாந்தது.

5.மாறன் சகோதரர்கள் தன்னை விட்டு விலகி விடுவார்கள் என அறியாது..அரசியலில்
சற்றும் அனுபவம் இல்லா தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் ஆக்கி ஏமந்தது.
(இவர்கள் சர்ச்சைக்கு உண்மையான காரணம்..தன் பெயரிலும்,தன் மனைவியின்
பெயரிலும் இருந்த சன் டீ.வீ. பங்குகளை விற்ற போது..அதற்கான
பணத்தை சகோதரர்கள் குறைவாகக் குடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என்ற
வதந்தியும் உண்டு.இதிலும் ஏமாந்தார் கலைஞர்.)

6.தான் நம்புபவர்கள் எல்லாம்..தன் முதுகில் குத்துகிறார்கள் என சில நாட்கள்
முன்பு அறிக்கை விட்டார் முதல்வர்.அப்படியென்றால்..அவர் நம்பியர்வர்கள்
அனைவரும் அவரை ஏமாற்றிவிட்டார்கள் என்றுதானே அர்த்தம்.

இப்போதற்கு எனக்கு ஞாபகம் வந்தது இவ்வளவுதான்...வேறு சந்த்ர்ப்பங்கள்
ஞாபகம் வந்தால் அடுத்த பதிவில் தொடரும்.

வாய் விட்டு சிரியுங்க

1.உன்னை நம்பி வநதவனை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வந்தது?
நம்பி வந்தவனைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவனை என்ன செய்ய முடியும்.

2.நம்ம தலைவரை நான் எழுதிய நூல் வெளியீட்டு விழாவிற்கு கூப்பிட்டது தப்பாப் போச்சு
ஏன்? என்ன ஆச்சு
என்னய்யா ஏதோ நூல் வெளியீடுன்னு சொல்லிட்டு கையிலே புத்தகம் ஒன்னைக் கொடுத்து
வெளியிடச் சொல்றியேன்னு கோபப்பட்டார்

3.தயாரிப்பாளர்-(கவர்ச்சி நடிகையிடம்)வயதான கிராமத்து கிழவியை மையமா வைச்சு ஒரு படம் எடுக்கிறோம்
யாருக்கும் எந்த மேக்கப்பும் கிடையாது..நீங்க நடிச்சா தத்ரூபமாயிருக்கும்.

4.உங்க ஆஃபீசிலே வேலை செய்யற சாஃப்ட்வேர் எஞ்சினீயர் தங்கம் உண்மையிலேயே பத்தரை மாற்று தங்கம் னு
எப்படி சொல்றே
உரசி பார்த்துட்டேனே

5. இன்னயிலேயிருந்து நம்ம கம்பனிலே உங்களை அப்பாயிண்ட் பண்றேன்..உங்களுக்கு எதாவது சந்தேகம்
இருந்தா கேளுங்க..
நான் VRS ல போகமுடியுமா...சார்

6.உன்னோட நண்பன் அண்டப்புளுகு ன்னு எப்படி சொல்ற
ஹாஸ்பிடல்லே ஆபரேஷன் தியேட்டர்ல புரஜக்டர் ஆபரேட்டராய் இருக்கேன் னு சொல்றான்

Sunday, August 17, 2008

மனிதர்களும் நாயும் (சிறுகதை)

'அம்மா' ..எனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கலேன்னா ..நான் இனிமேல் கல்லூரிக்கு போகமாட்டேன்' என்று மகன் ரவி சொல்ல. .அதைககனவன் கோபாலி டம் சொல்லச் சென்றாள் மாதவி.
கோபாலோ .. வளர்ந்து நிற்கும் தன் மகள் ஜானகிக்கு நாயாக அலைந்தும் சரியான மாப்பிள்ளை கிடைக்கவில்லையே
என்ற சோகத்தில் இருந்தான். மாதவி தகவலைச் சொன்னதும் அவளைப் பார்த்து 'வாள் வாள்' என கத்த ஆரம்பித்தான்.
'நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி 'வள் ளு ' ன்னு விழறீங்க' என்றபடியே உள்ளே சென்று விட்டாள் மாதவி .
அப்பாவின் கோபத்தைப் பார்த்து விட்டு வாலைச்சுரிட்டிக்கொண்டு மூலையில் படிக்க ஆரம்பித்து விட்டான் ரவி
அவனைப் பார்த்து ஜானகி கலாய்க்க ஆரம்பித்தாள்
பொறுமை இழந்த ரவி 'என் கிட்ட வாலாட்டினே அப்பா கிட்ட சொல்லிடுவேன்.. ஜாக்கிரதை' என்றான்,
'நன்றி கெட்ட ஜன்மம்' என அவனைத் திட்டிவிட்டு படிக்க ஆரம்பித்தாள்.
அப்பா அலுவலகம் கிளம்பியதும் மீண்டும் அம்மாவிடம் வந்த ரவி 'அம்மா' என அவளைக் கட்டிக் கொண்டான்.
'ஏண்டா நாயாட்டம் மேல விழரே.. இந்த வீட்டிலே உங்கப்பாகிட்ட குப்பை கொட்டறதை விட ஒரு நாயா பிறந்து இருக்கலாம்' என்றாள் மாதவி.
மாலை மணி ஆறு...
அலுவலகத் திலிருந்து .. கோபால் ஒரு புதிய கைனடிக் ஹோண்டா வில் வந்து இறங்கினான்.
வண்டியை நாக்கை நீட்டியபடி ஜொள்ளு வழிய பார்த்த ரவியிடம் 'சம்பள உயர்வு கேட்டு ..மேலதிகாரி இடம்
வாலைக் குழைச்சு கிட்டு கெஞ்சினேன் .உடனே கொடுத்திட்டார் .அந்த மகிழ்ச்சியில் உனக்கு வண்டி வாங்கிட்டேன் 'என்றான்.
காலையில் இருந்து அந்த வீட்டில் நடந்த களேபரம் எல்லாவற்றையும் உன்னிப்பாக ..ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடன்
பார்த்துக் கொண்டிருந்தது ..டாமி.

Saturday, August 16, 2008

இலங்கையிலும் சத்தியத்துக்காக போராடஒரு தீரன் தோன்ற வேண்டும்

இலங்கையின் முன்னேற்றத்திற்குப் பரம்பரை பரம்பரையாகப் பாடுபட்ட பல லட்சம் மக்களை அந்நாட்டிலேயே சௌகரியமாக வாழச் செய்ய வழி காணாமல்,அவர்களின் எவ்வளவு பேரை எப்படி பங்கு போட்டு இந்தியாவிற்கு வரவழித்துக்கொள்ளலாம் என்பது பற்றி நமது சர்க்கார் இலங்கை பிரதமருடன் வாதம் நடத்தி முடித்திருக்கிறது.இந்த பேர விவாதம் நீடித்து இரு சர்க்கார்களின் 'உடன்படிக்கை'க்கணக்கை பார்க்கும் போது தமிழ் இதயங்களீின் ரத்தம் கொதிக்கும்.பல தலைமுறைகளுக்குமுன்.இலங்கை சென்று அந்நாட்டில் தங்கள் நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைத்து,அதனை வாழவித்தவர்களின் வாரிசுகளில் பெரும் பகுதியினருக்கு அங்கு இடமில்லை என்ற அநியாயத்தை எப்படி ஏற்பது?இலங்கையில் பிறந்ந ஒரு இந்திய வம்சாவளியினர் அங்கேயே வாழ விரும்பி அந்நாட்டிலே வேலை செய்து வரும்போது அந்த ஒரே ஒருவரை 'நாடற்றவ'ராக்கி இந்தியாவிற்கு துரத்தினாலும் அது அநீதியாகும்.ஆனால் இப்போதோ ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை அகதியாக்கியுள்ள ஏற்பாட்டுக்கு இந்திய சர்க்கார் ஒப்புக்கொண்டிருக்கிறது.இது இலங்கை சர்க்காரின் வெற்றி.தமிழர்கள் அகதிகளாக நிற்கின்றனர்.

அன்று தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்காக ஒரு காந்திஜி எழுச்சிக்கொண்டு போராடியதுபோல இன்று இலங்கை தமிழர்களுக்காக ஒருவர் அந்நாட்டில் எழுச்சி பெற மாட்டாரா?இலங்கை அரசாங்கத்தை விட கொடிய எதிராளியுடன் காந்திஜி போரிட்டார்.அன்று மனித உரிமைகளை காக்கும் அய்க்கிய நாடுகள் சபையும் இருக்கவில்லை.எனினும் அண்ணலின் சத்தியம் வென்றது.
இலங்கையிலும் சத்தியத்துக்காக போராட ஒரு தீரன் தோன்றவேண்டுமென்று ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

(1965ம் ஆண்டு கல்கி பத்திரிகையில் வந்த தலையங்கம்

Friday, August 15, 2008

நலம்..நலம் அறிய ஆவல்

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகள்லே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்தோட நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா?

குடிப்பது எப்படி

குறைந்த தண்ணீரில் சரக்கடிப்பது எப்படின்னு வால் பையன் ஒரு
பதிவு போட்டிருந்தார்..ஆனால் ஆரம்ப நிலையான குடிப்பது எப்படி என்பதை
அவர் சொல்ல வில்லை.அது ஒரு முக்கியமான வேலை என்பதால்
நான் ஒரு பதிவு போட வேண்டியது இந்த சுதந்திரநாளில் ஒரு இந்திய
குடிமகனின் கடமை என்று எண்ணியதால் இப்பதிவு.
முதலில்...ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்..நீங்கள் குடிப்பது
மினரல் வாட்டராய் இருந்தால்..அந்த பாட்டிலின் மூடியைத் திறந்து..அந்த டம்ளரில்
முக்கால் பாகமோ..அல்லது முழு பாகமோ தண்ணீரை ஊற்றி..அப்படியே
மெதுவாக எடுத்து சிப் பண்ணி சிறிது சிறிதாக அருந்த வேண்டும்.
இதற்குத்தான் குடித்தல் என்று பெயர்.
மினரல் வாட்டரோ,கண்ணாடி டம்ளரோ இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என
ஏதேனும் பின்னூட்டம் வந்தால்..அதைப்பற்றி அடுத்த பதிவு..வால்பையனோடு
கலந்து ஆலோசித்து இடப்படும்.

Thursday, August 14, 2008

என்னென்னவோ ஆகப்போகிறார் ஸ்டாலின்

இன்று (14-8) சென்னை தி.நகரில்(மன்னிக்கவும் தியாகராய நகரில்)
உஸ்மான் சாலை..துரைசாமி சாலைசந்திப்பில் மேம்பாலத்தை
திறந்து வைத்து பேசிய முதல்வர்..உஸ்மான் என்பது இஸ்லாம் சமூகத்தை
சேர்ந்தவர் பெயர்..துரைசாமி என்பது ஐயர்..இருவரையும் இம் மேம்பாலம்
இணைக்கிறது என்றார்.மேலும் பேசுகையில் ..மேயர் சுப்ரமணியத்தை
பாராட்டியவர்...ஸ்டாலின் பற்றி கூறுகையில்'இவர் மேயராக இருந்தபோதும்..
இப்போது உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் சரி..பாராட்டும் வகையில் செயல்பட்டுள்ளார்..
இவர் இன்னும் என்னென்னவோ ஆகப்போகிறவர்..'என்றார்.
அந்த என்னென்னவோக்களில் ஒன்று எனக்குத் தெரியும்...
வேறு ஏதாவது என்னென்னவோ உங்களுக்குத் தெரியுமா?

மனிதனானால் காதல் செய்! - பாரதியார்

உலகம் இறுகி ஒரு பொருளாய் நிற்பது.ஒரே ஒரு தெய்வம் முடியும் வரை விரிந்து நிற்பது--அதுதான் காதல்.
காதலர் பிரிந்திருக்கும் போது அவர்களை ஒருவருக்கொருவர் ஓலை எழுதுதல் ஆகாதென்று தடுத்தால், அவர்கள்..நமக்கு தெரியாதபடி ஆயிரம் ஆச்சரிய வழிகள் கண்டுபிடித்து பேசிக் கொள்கிறார்கள்; பறவைகளின் பாட்டையும்,மலர்களின் கந்தத்தையும்,குழந்தையின் சிரிப்பையும்,ஞாயிற்றின் ஒளியையும்,காற்றின் உயிர்ப்பையும்,விண்
மீன்களின் கதிர்களையும் காதலர் தூது விடுகிறார்கள். ஏன் கூடாது?
தெய்வத்தின் படைப்பு முழுதும் காதலுக்கு தொண்டு செய்யும் பொருட்டே அமைந்து இருக்கிறது.உலகம் முழுதும் தூது போகச் செய்கிற திறமை காதலர்க்கு உண்டு.
இளவேனிற் காலமே நான் எழுதுகிற ஓலை நீ
உயிரே, நீ கல்லாய்ப் பிறந்தால் காந்தக் கல்லாய் பிற
செடியானால் தொட்டால் வாடிச் செடியாகிவிடு
மனிதனானால் காதல் செய்
காதலர் இல்லாவிடின், ஞாயிறு என்றதோர் தீப்பந்தம் அவிந்து போய்விடும்.

நான் என்ன படிக்கணும்? குட்டிக்கதை

கண்டிப்பா கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் சேர்க்கணும்- என்றார் அப்பா.

'போடா...மடையா...இன்னிக்கு சாஃப்ட்வேர்க்கு மவுஸ் இருக்குன்னு சேர்த்துட்டா...எதிர்காலத்தில எப்படி
இருக்குமோ..யாருக்குத் தெரியும்? இப்பவே பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பேனி எல்லாம் ஆள்
குறைப்பு ன்னு நியூஸ் வருது' என்றார் தாத்தா.

'ஏங்க..வேணும்னா..B.Com.,படிச்ச்ட்டு CA பண்ணட்டுமே....நம்ம நாட்டிலே என்னிக்குமே
கறுப்பு பணத்தை ஒழிக்க முடியப் போறதில்லை..அதனாலே வருமானவரி கட்டாம எப்படி
ஏய்க்கலாம்ங்கற மனப்பான்மை நம்ம மக்கள் கிட்ட மாறப்போறதில்லை.
அப்படிப்பட்டவங்களுக்கு CA உதவி கண்டிப்பா தேவை இருக்கும் என்னிக்கும்' என்றாள்
படுக்கையில் இருந்தபடியே தங்கமணி.

'இல்ல..இல்ல..நம்ம குடும்பத்திலே டாக்டர் யாரும் இல்லை..அதனால டாக்டருக்குத்தான்
படிக்கணும்'இது அம்மா.

'அவன் என்ன நினைக்கிறானோ..அதை படிக்கட்டுமே..அவனை தொந்தரவு பண்ணாதீங்க'
என்றாள் பாட்டி.

'அடடா..நான் பிறந்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை..அதுக்குள்ள நான் என்ன படிக்கணும்னு
என்ன சர்ச்சை..முதல்ல என் பர்த் சர்டிஃபிகேட் வாங்கிட்டு வாங்க'என்று கூற நினைத்து..
அதை எப்படி இவர்களுக்கு சொல்வது எனத் தெரியாமல் அழ ஆரம்பித்தது..காலையில்
தான் இந்த உலகத்துக்கு வந்த பாப்பா.

Wednesday, August 13, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.நம்ப தலைவரோட வேட்பு மனு ஏன் நிராகரிக்கப்பட்டது
பழக்க தோஷத்திலே வேட்பு மனுவுக்கு பதிலாக முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துட்டாராம்.

2.வேலைக்காரி- அம்மா..வர..வர..உம் புருஷன் செய்ய்யறது நல்லா இல்லை ..சொல்லிட்டேன்
பெண்-(பதட்டத்துடன்) அப்படி என்ன செஞ்சார்
வேலைக்காரி- இன்னிக்கு சாம்பார்லே உப்போ காரமோ இல்லை

3.நண்பன்-(தன் நண்பனிடம்) கடன் கேட்டா இல்லைன்னு சொல்லிட்டே..என்னைப்பற்றி இப்போ
உனக்குத் தெரியாது..நீ accident ஆகி hospital ல இருக்கும்போதுதான் உயிர் காப்பான் தோழன்னு
என்னைப் புரிஞ்சுப்ப...

4.போன வாரம் செத்தது..நீயா..இல்ல உன் அண்ணனா?
ம்...நீ அண்ணன்னு சொன்னது என்னையா இல்ல என் தம்பியையா?
???!!!!

5.அந்த ராப்பிச்சை உங்க்களுக்கு ஏன் பணம் கொடுட்துட்டுப் போறான்?
மாசக்கடைசி கைச் செலவுக்கு பணம் இல்லைன்னு சொன்னேன்..வட்டிக்கு பணம்
கொடுத்துட்டு போறான்.

6.என்னை யாராவது முட்டாள்..மடையன்னு திட்டினா..நீ தாண்டா அதுன்னு மனசுலே நினைச்சுக்கிட்டு 'வரட்டுமா'
அப்பிடின்னு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன்
அப்போ நான் வரட்டுமா...
???!!!!

தமிழனுக்கு...---பாரதி (இலக்கியம்)

தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.
உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.
தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.
பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்க்ளும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்த்ங்க்கலும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.

Tuesday, August 12, 2008

முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்???!!!!

துணிச்சலான யோசனை,புரட்சிகரமான சிந்தனை இவற்றில் ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி காந்தியைப் போன்றவராம்
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இதை தெரிவித்துள்ளது.
அம்பானி..அப்பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்..
அதில் அவர்'இந்தியாவின் நன்மையை நோக்கமாகக் கொண்டே எங்கள் நிறுவனம் செயல் படுகிறது.168 லட்சம் கோடி வருமானம் உள்ள எங்கள் நிறுவனம் 100 கோடி இந்தியர்களின் நலனைச் சார்ந்தே இயங்கும்.விவசாயிகள் பலன் அடையும் வகையில் இதுவரை 700இடங்களில் காய்கறி,உணவுப்போருள்கள் கடைகளை தொடங்கி பல ஆயிரம் பேருக்கு நேரடி,மறைமுக வேலை அளித்துள்ளோம்.5 ஆண்டுகளீல் 3 கோடி விவசாயிகள், மற்றும் ஊழியர்களுக்கு வேலை அளிக்க உள்ளோம்'என்றார்.
அவரது பேட்டி வெளியான செய்தியில்..தனது துணிச்சலான முடிவுகள்..புரட்சிகர சிந்தனைகளின் மூலம் காந்திக்கு
அடுத்தபடியாக இந்தியாவின் சிறந்த மனிதராக முகேஷ் அம்பானி விளங்குகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அம்பானியை பாராட்டட்டும்..வேண்டாம் என்று சொல்லவில்லை..
ஆனால் காந்தி யுடன் அவரை ஒப்பிட்டது...
காந்தி ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டார்.ஆனால் அம்பானி..? ஏழை காய்கறிவிற்பவர்கள்,கீரை விற்கும் பெண்கள் ஆகியவர்களின் வயிற்றில் அடிக்கிறார்.
தேசப்பிதாவுடன், 8000 கோடிyil மனைவிக்காக வீடு கட்டும் அம்பானி ஒப்பிடப்படுகிறார்.
ஒவ்வொரு இந்தியனும் வாயில் விரலை வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்க்கிறோம்.
இதுவே வேறு எந்த நாடாய் இருந்திருந்தாலும்..பத்திரிகையை மன்னிப்புக் கேட்க வைத்திருக்கும்.

Monday, August 11, 2008

தாரே ஜமீன் பர் தமிழில்

அமீர்கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தாரே ஜமீன் பர்.
அது தமிழிலும்,தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு செப்டம்பர்
12ம் தேதி வெளிவருகிறது.தமிழில் அமீர்கானுக்கு நடிகர் சூர்யா குரல்
கொடுத்துள்ளார்.
இயக்குநர் முருகதாஸ் கஜினி படத்தை ஹிந்தியில் அமீர்கானை வைத்து
இயக்கி வருகிறார்.ஒருநாள் படபிடிப்பின் போது..தாரே ஜமீன் பர் படம்
தமிழில் வரவேண்டும் என்ற கோரிக்கை வந்த பத்திரிகை ஒன்றை அமீரிடம்
காட்ட..அதற்கு அவர் ஒப்புதல் அளித்தாராம்.
பிரமீட் சாய் மீரா நிறுவனம் வெளியிடும் பொறுப்பை ஏற்றுள்ளது.
தமிழில் 'வால் நட்சத்திரம்'என்ற பெயரிலும்..தெலுங்கில்'நிலமீது தாரலு'
என்ற பெயரிலும் வரும்.
இச்செய்தியை..தாரே...படத்திற்கு Gollapudi ஸ்ரீனிவாச நேஷனல் விருது வழங்கும் விழாவில் அமீர் தெரிவித்தார்.

வாய் விட்டு சிரியுங்க

தயாரிப்பாளர்-(இயக்குநரிடம்)நம்ம படத்திலே கிளைமேக்ஸ் எல்லோரும் நம்பும்படி இருக்கணும்
இயக்குநர்- வில்லன் கார்ல தப்பி ஓடறான்..ஹீரோ ஒரு ரோடு ரோல்லர் ல போய் அவனைப் பிடித்து விடுகிறான்.

2.என் முதலாளி சரியான நன்றி கெட்ட ஜன்மம்..எதெற்கெடுத்தாலும் வள் வள்னு விழறார்
வள் வள்னு விழறவர் எப்படி நன்றி கெட்ட ஜன்மமாய் இருப்பார்.

3.சிறுவன்(வீட்டுக்குவருபவரைப்பார்த்துவிட்டு) அப்பா..இந்த மாமாவிற்கு இரட்டை நாக்குன்னு சொன்னே ஆனா
ஒன்னுதான் இருக்கு

4.நகைச்சுவை எழுத்தாளராக கொடி கட்டி பறந்தீர்கள்..இப்போல்லாம்..நீங்க ஏன் நகைச்சுவை கதை எழுதறதில்லை?
இப்போ எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு

5.டாக்டர்..உங்ககிட்ட வர்ற பேஷண்ட்ஸ் குறைவுதான்..அதுக்காக வர்ற பேஷண்ட்ஸ் எல்லாம்..தன்கூட இன்னொரு
பேஷண்டை கூட்டிக்கிட்டு வரணும்னா எப்படி?

தமிழ் வளர ...

தமிழ் வாழ்க ... தமிழ் வாழ்க என்றால் மட்டும் தமிழ் வாழ்ந்துவிடுமா ?
தமிழ் வாழவேண்டுமானால் .. தமிழை தமிழன்னு சொல்கிற வர்கள் அனைவரும்
வாசிக்கவேண்டும் ..தமிழாசிரியர்களை மதிக்கவேண்டும் தமிழாசிரியர்களையும் ,
தமிழ் எழுத்தாளர்களையும் மதிக்காத மொழி எப்படி வளரும் .
தமிழ் படிச்சா கேவலம்ன்னு தமிழன் நினைக்கிறான்.தெலுங்கலித் தாய்மொழியாகக் கொண்டவன்..அதே மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டவனைப் பார்த்தால் "பாக உன்னாரா"னு  கேட்கறான்.
மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் மற்றொரு அதே தாய்மொழிக்காரரனைப் பார்த்தால்,
"சுகம்தன்னே: என்கிறான்.
அதே போன்றே மற்ற மொழியினரும் நடக்கின்றனர்
ஆனால்//

ஒரு தமிழன் மட்டும் இன்னொரு தமிழனைப்பார்த்தால் ஹலோ
ஹொவ் ஆர் யு ? ன்னு கேட்கிறான் .
கொஞ்சம் யோசனை செய்தால் தமிழனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்ப்பற்று குறையுதுன்னு தோன்றுகிறது.

Sunday, August 10, 2008

கமல் அவசர கதை ஆலோசனை

தனக்குப் பிடித்த இயக்குனர்கள்,எழுத்தாளர்களை அழைத்து கமல் அடுத்த பட கதை ஆலோசனை செய்தார். அதன் விவரம்.

கமல்- ரவிகுமார்,மௌலி,சுந்தர் சி.,கிரெசி மோகன்,மதன்,சுஜாதா..sorry., அவர் மறைஞ்சுட்டார்ங்கிறதை மறந்துட்டேன்.உங்களை எல்லாம் ஏன்
வரச்சொன்னேன்னா..என்னோட மர்மயோகி வர 2 வருஷம் ஆகும்.குறுகிய காலத்தயாரிப்பான குசேலன் சரியா ஓடல்லை.,அதனால்..
உடனே என் படம் ஒன்னு வரணும்.உங்ககிட்ட யாரிடம் எனக்கான கதை இருக்கு..

(எல்லோரும் ஒன்றாக கையைத் தூக்க..)

கமல்- ஒவ்வொருத்தரா..முதல்லே ரவிகுமார்..உங்க கதையைச் சொல்லுங்க

ரவிகுமார்-ஜக்குபாய் ன்னு ஒரு கதை இருக்கு

கமல்-அதுதான் ரஜினி நடிக்கறதா..இருந்து..இப்ப..சரத் நடிக்கிறாரே

ரவி- இது வேற ஜக்குபாய்..அது வேற ஜக்குபாய்..இதுல எதிர்காலத்தைக் காட்டக்கூடிய ஒரு கருவி..வில்லன்கள் கிட்ட கிடைக்கிறது.
அதைத் தெரிஞ்சுக்கிட்டா..பிரபஞ்ச ரகசியம் வெளிப்பட்டுடுமே என்று கதாநாயகன்..அதைக் கடத்தி அழிக்கப் பார்க்கிறான்.
அவனுடன் சேர்ந்து..அசினும் ஓடிக்கிட்டே இருக்காங்க..நம்ம வையாபுரி,சார்லி. இவங்கைள் காமடியனா போட்டுடுவோம்.

(சுந்தர் ( முணு முணுக்கிறார்) ஆமாம்..படமே காமடி..இதுல காமடியன் வேறயா..ஹீரோ,ஹீரோயின் ஓடினா படம் ஓடிடுமா)

கமல்- உங்களோட சேர்ந்தா..படம் முடிய 2 வருஷம் ஆகுமே..

ரவி- குறுகிய காலத் தயாரிப்புன்னு சொல்றீங்க..அதனால 730நாள்ல முடிச்சுடலாம்.

கமல்-கதைல..தசாவதார சாயல் இருக்கே

ரவி-திரைக்கதையிலே எல்லாம் மாறிடும்..மொத்தம் 12 கேரக்டர்ஸ்..எல்லாத்தையும் நீங்களேக் கூடச்செய்யாலாம்.நான் மட்டும்
ஒரு பாடல்ல வந்து பூமிக்கும்..வானத்துக்கும் குதிச்சுடறேன்.

கமல்- உங்க கிட்ட அப்புறம் வர்றேன்..கிரேசி..உங்ககிட்ட ஏதாவது...


கிரேசி-இருக்கே...இருக்கே...முஹம்மது ஜான் சுந்தர பாண்டியன்னு ஒரு கதை.நாலு ரோலும் நீங்க பண்ணாலாம்..அதுலே சுந்தர் ரோல்
ஒரு சமயல்காரான்...ஐ..மீன்...

கமல்-யூ மீன்..என்னன்னு புரிஞ்சுப் போச்சு.. மௌலி நீங்க..

மௌலி- கிரேசி..சொன்ன கதையையே எடுத்திடலாம்...வேணும்னா..டைடில..ஹரி சந்திரமதின்னு மாத்திடலாம்.(கமல் மௌனமாயிருக்க)
இல்லேன்னா..சங்கரதாஸ் uvve சாமி ன்னு வைச்சுப்போம்

கமல்-அது என்ன நடுவே uvve

மௌலி-அது சங்கரதாஸ் உவ்வே வாந்தி சத்தம் சுவாமி உங்க பேரு...பிண்ணனி இசையே வேண்டாம்..திருப்பாவையை ஓட விட்டுடலாம்.

கமல்- சுந்தர் உங்க கிட்ட

சுந்தர்-நான் இப்ப நடிப்பிலே பிஸி..உங்க கதை அன்பே சிவம் மாதிரி எதாவது இருந்தா..நான் டைரக்ட் பண்ணிடறேன்..

(ரவி முணுமுணுக்கிறார்-நோவாம நோம்பு கும்பிடப் பார்க்கிறார்)

கமல்-மதன் நீங்க

மதன்-டூ..டூ..டூ..டூன்னு(two to two to) ன்னு படப்பேரு..ஹீரோ...ஒரு விபத்திலே..மூக்கு கோணிடுது..அப்பறம்..பீஹார்ல வெள்ளத்திலே மாட்டிக்கிறான்..இப்படி
போகுது கதை...

கமல்-அன்பே சிவம் மாதிரி தெரியுதே

சுந்தர்-அப்போ..நானே..டைரக்ட் பண்ணிடறேன்

மதன்-அதனால் என்ன..படப்பேரை 'வாழ்க வளர்க'ன்னு வைச்சுப்போம்

(ஃபோன் அடிக்க..கமல் பேசுகிறார்)

கமல்-நாம கதை டிஸ்கஸ் பண்றது தெரிஞ்சு..தயாரிப்பாளர்கள்..ஏ.எம்.ரத்னம்,ஆஸ்கர் ரவி,செவென்த் சேனல் மாணிக்கம் எள்ளாம் எங்கேயோ ஓடிட்டார்களாம்.
முதல்லே அவங்களை கண்டுபிடிப்போம் வாங்க..

(அனைவரும் விரைகின்றனர்)

Saturday, August 9, 2008

வறுமையில் வாடும் குசேலன்

குசேலன் படத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி மதுரையில் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தை தியேட்டர் உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
மதுரையில் 5 தியேட்டர்களிலும்,தென் மாவட்டங்களில் 26 தியேட்டர்களிலும் படம் திரையிடப்பட்டது.சிவாஜியை விட அதிகம் வசூல் இருக்கும்
என்று சொல்லப்பட்டதால்..மினிமம் காரண்டி முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ஆனால்..படம் வெளியீட்டு சமயம் ரஜினி..இப்படத்தில் 25%தான் வருவதாகவும்..இது முழுக்க முழுக்க பசுபதியின் படம் என்று கூறியதாலும்,
மேலும்..கன்னடர்களை சமாதானம் செய்துக் கொள்ள அளித்த பேட்டியாலும் வசூல் பாதித்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தியேட்டர் நிர்வாகிகள்
கூறுகின்றனர்.
இதுவரை வட்டியுடன் சேர்த்து 90 சவிகிதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்,மினிமம் காரண்டியை..டிபாசிட் தொகையாக மாற்றி..வசூலில்
சதவிகிதம் தரவேண்டும் என்றும் அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோரிக்கை நிராகரிக்கப் படுமாயின்...12ம் தேதி சென்னையில் பிரமிட் சாய்மீரா அலுவலகம் முன்..உண்ணாவிரதப் போராட்டம்,தர்ணா
ஆகியவை நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
(தினமலர்)

ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே.....

என்று மனைவியைத்தவிர வேறு பெண்களைப்பார்த்து நாம் சொல்வோம்.(மனைவிக்கூட காதலியாய் இருந்த போது இப்படி புளுகி இருப்போம்) அந்தப் பெண்ணும்..தான் எப்படி இருக்கிறோம் என்பது தெரிந்தும்..நம் புகழ்ச்சியில் மனம்
மயங்கி கண்ணாடியில் தன்னை அடிக்கடி பார்த்துக்கொள்வாள்.ஆனால் இனிமேல் அப்படி முடியாது.
இஸ்ரேல் விஞ்ஞானிகள் ..கம்ப்யூட்டருக்கு எப்படிப்பட்ட பெண் அழகானவள் என சொல்லிக்கொடுத்து இருக்கிறார்களாம்.அதன்படி ஒரு பெண்ணின் மேக்கப்,நடை,உடை.பாவனை ஆகியவற்றை வைத்துஅழகை கம்ப்யூட்டர்
தீர்மானிக்குமாம்.அழகை தன் மொழியில் கிரகித்து முடிவை சொல்லுமாம்.
ஜாக்கிரதை...இனி நீங்கள் யாரையாவது, அழகாய் இருக்கிறாய் என சொல்லிவிட்டு.,அவளூம் ஆசையுடன் தன்
படத்தை கம்ப்யூட்டரில் போட்டுவிட்டு, மௌசை கிளிக்கினால் நம் பொய் வெட்ட வெளிச்சமாய் ஆகிவிடும்

Friday, August 8, 2008

ஜெ.ஆட்சியில் பயந்த தி.மு.க. - ராமதாஸ்

ராமதாஸ் பேச்சிலிருந்து சில துளிகள்.
1.கூட இருந்து குழி பறிப்பவர்கள் நாங்கள் அல்ல.
2. மிசா காலத்தில் தமிழகம் வந்த இந்திரா காந்தி மீது பயங்கர தாக்குதல் நடத்தியது தி.மு.க.
ரயிலில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு சென்னை வந்தார் இந்திரா.மதுரையில் அன்று அவரை
காப்பாற்றியவர்களில் நெடுமாறனும் ஒருவர்.
3.எம்.ஜி.ஆரை மலையாளி என்று சொன்னதுடன் அல்லாது மலையாளிகள் தாக்கப்பட்டது யார் ஆட்சியில்.
அவரின் நேற்று..இன்று..நாளை படம் வந்தபோது என்ன நடந்தது.
4.M.G.R., நீக்கப்பட்டதும் நடந்த D.M.K. பொதுக்குழு கூட்டத்தில் எஸ்.எஸ்,ஆர் தாக்கப்பட்டு ரத்தம் ஒழுக
வெளிவந்தது யாரால்
5.ஜெ. ஆட்சிக்காலத்தில் 3 மாதத்தில் அவர் கூட்டணியிலிருந்து வெளீயே வந்தோம்..பின் 4 3/4 ஆண்டுகள்
துணிச்சலாக எதிர்கட்சியாக செயல்பட்டோம்.உங்களைப்போல் பேரவைக்கு உள்ளேயும்,
வெளியேயும் பயந்து பயந்து செயல்படவில்லை.
பா.ம.க.வை அழிக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெற்றி பெற முடியாது.அப்படி நாங்கள் அழிந்தால் மொழி,
இனம் காக்க குரல் கொடுக்க ஆளில்லாத நிலை ஏற்படும் ஆகவே எங்கள் பயணம் தொடரும்.எங்களுக்கு என்றும்
தோல்வி இல்லை.
(தினகரன் 21-6-08)

Thursday, August 7, 2008

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு பாராட்டுவிழா

எதற்கும் அஞ்சா ஏகாம்பரத்திற்கு அவரது நண்பர்கள்(??!!)ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்தனர்.
விழா நிகழ்ச்சிகளை ஏகாம்பரத்தின் மகன் தொகுத்து வழங்கினார்.ஏகாம்பரத்தை வாழ்த்தி அவர்
தந்தை பேசினார்'.'என் மகன் பிறந்ததுமே..குழந்தையை வந்து பார்த்தவர் ஒருவர்..என்ன பெயர் வைத்திருக்கிறாய்?
என்று கேட்டார்.'ஏகாம்பரம்"என பதிலளித்தேன்.உடனே அவர்..ஏடாகூட பெயர் ஆயிற்றே..இவன்
பிற்காலத்தில்...கொலை..கொள்ளை என எதற்கும் அஞ்சா தவனாயிருப்பான்..என்றார்.
அது இன்று நிறைவேறியுள்ளது.இன்று எதற்கும் அஞ்சாமல்..தனக்குத்தானே பாராட்டு விழா ஏற்பாடு
செய்துள்ளார்.என்னைப் பொறுத்தவரை..பேரன்களைப் பாராட்டத்தான் பயமாயிருக்கிறது.மகன்களை
எவ்வளவு வேண்டுமானாலும்..பாராட்ட நான் தயார்.நான் அதிக நேரம் பேச ஆசைப் பட்டேன்..
ஆனால்..எனக்குமுன் பேசிய நையாண்டி நயினார் அதிக நேரம் எடுத்துக் கொண்டுவிட்டார்'என்றார்.
விழாவிற்கு பெரும் கூட்டமாக..மனைவி,மக்கள்,தாயார்..ஆகியவர்கள் வந்திருந்தனர்.
நன்றி தெரிவித்து பேசிய ஏகாம்பரம்..'இது போல மாதம் ஒருமுறை என்னைப் பாராட்டி விழா நடத்துவேன்'என்றார்.

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி ஒரு சமயம் கர்ப்பிணி பெண் ஒருத்தியைப் பார்த்தார்.அவருடன் வந்த நண்பர்
அந்த பெண் pregnant ஆக இருக்கிறார் என்றார்.அண்ணாசாமிக்கு வழக்கமான சந்தேகம் வந்தது.
pregnant என்றால்..என்று நண்பரைக்கேட்க நண்பரும் pregnant என்றால்one who carries a child
என்றார். வேறு ஒரு சமயம்...அண்ணாசமியின் வீட்டுக்கு அருகில் ஒரு அடுக்ககம் தீப்பிடித்து எரிந்தது.
மேல் மாடியில் ஒரு குழந்தை மாட்டிக்கொண்டது.அதை ஒரு தீ அணைப்பு வீரர் கயிறு மூலமாக தன் வயிற்றில்
கட்டி இறங்கினார்.அதைப் பார்த்த அண்ணாசமி உடனே 'he is pregnant..he is pregnent' கத்தினார்.
2.ஒரு சமயம் அண்ணாசாமிக்கு துப்பறியும் நிறுனமொன்றில் வேலைக்கு interview வந்தது.ஒரு புகைப்படத்தை கொடுத்து 'இந்த புகைப்படத்தில் உள்ளவன் ஒரு கிரிமினல்..புகைப்படத்தைப் பார்த்து அவனைப்பற்றி நீங்கள்
அறிந்ததைக் கூறுங்கள்'என்றனர்.
அதைப்பார்த்த அண்ணாசாமி உடனே'இவன் ஒரு கண் உள்ளவன்..கண்ணாடி போடாதவன்'என்றார்.
அவரைப் பாராட்டிய அதிகாரிகள் 'எப்படி கண்டுபிடித்தீர்கள்'என வியப்புடன் கேட்டனர்.அண்ணாசாமி'நீங்கள் கொடுத்த புகைப்படத்திலேயே தெரிகிறதே'என்றார்.அவருக்கு கொடுத்திருந்த புகைப்படம் அந்த கிரிமினலின்
'side profile'புகைப்படம்.

Wednesday, August 6, 2008

நானும்..நடிகவேள் ராதாவும்..ரத்தக்கண்ணீரும்

M.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு
சிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்
அவதிப்பட்டு வந்தார்.
அந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற
அவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை
செய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாயும் கூறினேன்.அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி" என்றார்.
எனக்கோ..இப்படி "பட்" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான
தேதியும் கொடுத்தார்.
ஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக
சுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.
நாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.
மாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.
நானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.
இடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..
'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ
என்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.
அவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.
என்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.
பின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.

தமிழன்...அரசியல்வாதி...கவிஞன்

1. தமிழ் வாழ்க
என்றால்
அவனுக்கு புரிவதில்லை
லாங்லிவ் டமில்
என்றால்
அவனுக்கு புரிகிறது
ஏனெனில்
அவன் ஒரு தமிழன்.

2. தமிழ்
கட்டாய பயிற்சி மொழிக்காக
ஆங்கிலப் பள்ளியில்
அரசியல் வாதி
ஆர்ப்பாட்டம்
வகுப்பறையிலிருந்து
வெளியே தந்தையை
பார்த்தான் மகன்.

3. வாழும்போது
வறியவன் நீ
தனிமனிதன் உனக்கு
உணவில்லை தரணியில்
இறந்தபின் உன்
புகழ்ப் பாடப்படும்
நினைவில்லம் கட்டப்பட்டும்
உன் ஜாதகம் அப்படி
ஏனெனில்..நீ
ஒரு தமிழ்க்கவிஞன்

Tuesday, August 5, 2008

ஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம்-அமைச்சர் தகவல்

ஒகேனக்கல் கர்நாடகாவிற்கே சொந்தம் என்றும்..அங்கு வசிக்கும் மக்கள் கர்நாடகாவில் வாக்களிப்பவர்கள் என்றும்..
அவர்கள் பெயர்கள் கர்நாடகாவின் வாக்காளர் பட்டியலில் தான் இருக்கிறது..அவர்களிடம் கர்நாடகா ரேஷன் கார்டுகள்
தான் உள்ளது..என்றும்..கர்நாடகாவின் நீர் வளத்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.மத்திய அரசு..இரு மாநில
முதல்வர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும் இது சம்பந்தமாக..என்றும் அவர் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக மீண்டும் ஒரு உண்ணாவிரத போராட்டமோ..அல்லது யாரையாவது உதையுங்கள் என்ற பேச்சோ
கூடிய விரைவில் இருக்குமா?

வாய் விட்டு சிரியுங்க

சுமதி டார்லிங்..உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்
ஆமாம்..இதையே எவ்வளவோ..தரம் சொல்லிட்டீங்க..ஒரு தரம் கூட செயல்படுத்தலை

2.வீடு கட்டணும்னு கடன் வாங்கினியே கட்டி முடிச்சுட்டியா?
ரூஃப்,அறைகள் எல்லாம் கட்டி முடிச்சுட்டேன்..இன்னும் அஸ்திவாரம் தான் பாக்கி

3.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் வழக்கமில்லை எனக்கு..
பொய் சொல்லாதே..நேற்றுக்கூட வாழிக்காய் பஜ்ஜின்னு சொன்னே..ஆனா உள்ள
உருளைக்கிழங்குதான் இருந்தது.

4.முட்டாள்னு யாரையோ திட்டினியே..என்னையா?
சே..சே..ஊர்ல உன்னைத்தவிர வேற முட்டாளே இல்லையா என்ன?

5.உன்னோட அறிவுதான் டார்லிங் என்னை மயக்கிடுச்சு
நான் உன்னை லவ் பண்றதுக்கும் அதுதான் காரணம்
என்னைப்போல உன்னாலயும் பொய் சொல்ல முடியுதே

6.கள்ளச்சாராயம் விக்கற பக்கிரியின் பொண்ணை பெண் பார்க்க போனியே என்ன ஆச்சு
பொண்ணு எப்படியிருக்கா?
பீப்பாய் மாதிரி இருக்கா.

Monday, August 4, 2008

அந்த திரைப்படம் பற்றி பிரபல அரசியல் தலைவர்

பிரபல அந்த முதல்வர் கைராசிக்காரர் என்பதால் பட துவக்க விழாவிற்குஅவரை அழைத்திருந்தனர்.படபிடிப்பை ஆரம்பித்து பேசிய அவர் 'சினிமாவிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.என்னை கைராசிக்காரர்ன்னு கூப்பிட்டதா சொன்னாங்க.எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.நான் உழைப்பை நம்பறவன்.வரும்பொது படத்துக்கு என்ன பெயர்ன்னு கேட்டேன்...'பார்த்தால் பசி தீரும்'னு சொன்னாங்க.ஆமாம்..இவங்க கஷ்டப்பட்டு...செலவு பண்ணி எடுக்கிற படத்தை மக்கள் பார்த்தா இவங்க பசி தீரும்னேன்'
அப்படி சொன்ன அந்த முதல்வர் கர்மவீரர் காமராஜர்

'சோ' வும்..அவரது கோபமும்

நான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்
ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'சோ'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.
6 மணி அளவில் அம்பத்தூர் வந்த "சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்
முகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக"சோ உனக்கு கிள்ளுக்கீரையா?"
என்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு
தொலைவில்"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு
gate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.
நாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..
நாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்.."எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'
சென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)
சோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.

Sunday, August 3, 2008

நண்பர் கஜினியின் கதை

நானும்,கஜினியும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள்.இவர்களுடன் கண்ணன் என்ற நண்பரும் எங்களுக்கு உண்டு.
நாங்கள் மூவரும் ஒன்றாக மாலை உணவு உண்போம்.ஒரு நாள் நான் உண்ணும்போது குடிக்க தண்ணீர் தேவைப்பட்டது.
நண்பர் கண்ணன் தான் இரண்டு பாட்டில் தண்ணீர் கொண்டு வந்ததால்..ஒரு பாட்டில் தண்ணீரை எனக்கும் கொடுத்து விட்டார்.
நான் மூடியை திறந்து..குடிக்கும் போது ..என்ன நினைத்தாரோ கண்ணன்..என்னைக் குடிக்கக் கூடாது என்று சொன்னார்.
கண்ணனின் ஊரை சேர்ந்த கஜினி உடனே 'அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு..அதை அவர் குடிக்கக்கூடாது'என்று
சொல்வது என்ன நியாயம் என்றார்.கண்ணனோ பிடிவாதமாக இருக்க..எனக்கோ தண்ணீர் இல்லாமல் நா வறட்சி ஏற்பட..
என் நிலை உணர்ந்த கஜினி'டேய்..கண்ணா..அவர் தண்ணீர் இன்றி தவிக்கிறார்..நீ அவருக்கென்று கொடுத்த நீரை
அவர் குடிக்கக்கூடாது என்பது என்ன நியாயம்.உன்னைப் போல தடுப்பவர்களை உதைத்தால் என்ன..என்றார்.நானோ
தண்ணீர் குடிக்காமல் இருந்து விட்டேன்.
இது நடந்து சில நாட்கள் ஆகிவிட்டன.இரு தினங்களுக்கு முன்..கண்ணனுக்கு ஒரு பொருளை வாங்கிவந்து....தான் அதற்கு
செலவு செய்ததை விட அதிக விலை வைத்து..விற்க முயன்றார்.கண்ணன் மறுத்துவிடப் போகிறானே என்ற எண்ணத்தில்
'உன்னை நான் உதைத்தால் என்ன..என்று அன்று பேசியது தவறு..இந்த பொருளை வாங்கிக்கொள்' என்றார்.
உடனே நான் 'அவரிடம் ஏன் மன்னிப்பு கேட்கிறாய்?'என்றேன்.
கஜினி செய்ய நினைப்பது..வியாபாரம்..அதில் நெளிவு..சுளிவுகள் உண்டு..அதனால் அவர் சொல்வது தப்பில்லை.
உனக்கோ கஜினியிடம் பற்று அதிகம்..அதனால்..அவர் சாதாரணமாக சொன்னது..அவர் நிலை தாழ்ந்து மன்னிப்புக்
கேட்டதாய் நீ நினைக்கிறாய்..அதனால் உன் மீதும் தப்பில்லை.
ஆனால்...தன் காரியத்தை மௌனமாக சாதித்துக் கொண்டிருக்கிறானே..கண்ணன் அவன் அதி புத்திசாலி..என
எங்கள் பொது நண்பர் கூறினார்.

வாய் விட்டு சிரியுங்க

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

Saturday, August 2, 2008

யாரோ சொன்னார் கேட்டேன்அதை உன்னிடம் சொன்னேன்

..1.அழகு குணத்தால் அணி பெறுகிறது
இனம் சீலத்தால் அணி பெறுகிறது
கல்வி பயன்படுத்துவதால் அணி பெறுகிறது
செல்வம் அனுபவிக்கப் படுவதால் அணி பெறுகிறது

2.பணம் இல்லாததால் ஒருவன் தாழ்வடைவதில்லை.
செல்வந்தர்கள் எல்லாம் உயர்ந்தோர் என்பதுமில்லை
கல்வி எனும் ரத்தினம் இல்லாதவன் எல்லாப் பொருளிலும் தாழ்ந்தவனே
என்பதில் ஐயம் இல்லை.

3.பயம் நம் எதிரே வராத வரைக்கும்
பயந்துக்கொண்டே இரு.அது வந்து விட்டால் கண்டதுமே
அதனை சந்தேகப்படாமல் அடித்து தொலைத்துவிடு.

4.மன அமைதியைவிட உயர்ந்த தவம் வேறில்லை.மகிழ்ச்சியை விட
உயர்ந்த இன்பம் வேறீல்லை.ஆசையைவிட உயர்ந்த நோய் ஒன்றுமில்லை.
கருணையைவிட உயர்ந்த தருமம் வேறில்லை

5.வெட்டி நறுக்கப்பட்டாலும் சந்தனமரம் நறுமணம் இழக்காது.முதுமை எய்தினும் கூட
யானை தன் விளையாட்டை விடாது.ஆலையில் இட்டுப் பிழிந்தாலும் கரும்பு
இனிமையை விடாது.நற்குடிப் பிறந்தோர் வறுமையால் கெட்டழிந்தாலும்
ஒழுக்க குணங்களைக் கைவிட மாட்டார்கள்.

வாய் விட்டு சிரியுங்க

1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?

Friday, August 1, 2008

நம்ம பங்குக்கு குசேலன் கதை

நாட்டில எல்லோரும் தசாவதாரம் பற்றி பேசி ஓய்ந்த வேளையில் இப்போ பேச..பதிவிட குசேலன் வந்திருக்கிறது.ஆகவே நம் பங்கிற்கு குசேலன் பற்றி
ஒரு மொக்கை பதிவு.
குசேலன் ஏழை..வறுமையில் வாடுபவர்.வேறு ஏதும் வேலையில்லாததால் 27 குழந்தைகளைப் பெற்றவர்.அவரது பள்ளி நண்பன் கிருஷ்ணன்..சாட்சாத்
அந்த ஆண்டவன் கிருஷ்ணன் தான்.குசேலன் மனைவி கணவரை கிருஷ்ணரிடம் உதவி கேட்டு வரச் சொல்லி அனுப்புகிறாள்.வீட்டில் இருந்த அவுலை
சிறிது எடுத்துக் கொண்டு குசேலன் புறப்படுகிறார்.
ஆண்டவன் அவரை கட்டித் தழுவி வரவேற்கிறார்.அண்ணி என்ன கொடுத்து அனுப்பினார்?என்று கேட்க ..கூனிக் குறுகி அவல் மூட்டையை தருகிறார்.
அதை வாங்கி..முதல் வாயை போட்டுக்கொள்கிறார்.குசேலன் வீடு மாளிகை ஆகிறது .இரண்டாவது வாய்..பொன்னும்,மணியும் வீட்டில் குவிகிறது.மூன்றாவது
வாய் எடுத்த போது..வழக்கமாக பெண்களுக்கே உரிய ஜாக்கிரதை உணர்வோடு ருக்மணி தடுக்கிறாள்.ஆனாலும் கண்ணன் அதை சட்டை செய்ய வில்லை.
'வேறு என்ன விஷயம்'என்று கண்ணன் கேட்க...ஏதும் இல்லை..என்று யாசகம் கேட்க மனமில்லாமல் வீடு திரும்ப...அப்போதுதான் கண்ணனின்
விளையாடல் புரிகிறது.குசேலன் குபேரன் ஆகிறார்.
இதுதான் குசேலன் கதை.

ஆளும் கட்சியின் தவறைத் தடுப்பது யார்?- ராமதாஸ் (அல்ல)

ஆளும் கட்சி தவறு செய்கிறபோது அநியாயம் என அநேகம் பேர் கூறுவர்.
தவறுதான் என ஆறாயிரம் பேர் கூறுவர்.
தவறாய் இருந்தால் நமக்கென்ன என ஒதுங்கியிருப்போர் அறுபதாயிரம் பேர் உண்டு
ஆனால்...அந்தத் தவறை தடுத்து நிறுத்துவோர் எதிர்க்கட்சியினர்தான்.
அப்பேர்ப்பட்ட நம்மைப்பார்த்துத்தான் 'இவர்களுக்கு பதவி பைத்தியம்"என்கிறார்கள்.
இவர்கள் ஏதோ பதவியை விரும்பாதவர்கள் போல..பேசுகிறார்கள்.
கல்யாண வீட்டில் முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு..இரண்டாவது பந்திக்குப்
போகிறவர்களைப் பார்த்து'ஏன்..அடித்துக் கொள்கிறாய்?கல்யாண சாப்பாடு சாப்பிடா
விட்டால் குடியா முழுகிவிடும்'என்று கேட்பது போல் இவர்கள் கேட்கிறார்கள்.
இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?
அறிஞர் அண்னாதான்.