Monday, March 2, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 67

மறப்போம்..மன்னிப்போம்

உங்களுடன் இணைபிரியா நண்பன் ஒருவன் இருக்கிறான்.அவனுக்கு நீங்கள் பல உதவிகள் செய்துள்ளீர்கல். அவனும் உங்களுக்கும் பல உதவிகள் செய்துள்ளான்.

இந்நிலையில், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு நல்ல வாய்ப்பை உங்களுக்கேத் தெரியாமல் அவன் அபகரித்துக் கொள்கிறான்.இதனால் நீங்கள் மீண்டும் எழ முடியா இழப்பு...

அடுத்து..

உறவினர்கள்..நமக்கு நெருங்கிய உறவினர்கள்.நமது சுக துக்கங்களில் பங்குக் கொண்டவர்கள்.அவர்கள் தவறிழைத்து விடுகின்றனர்.இதனால் உங்களுக்கு வேதனை, அவமானம்..."இனி உங்கள் முகத்திலேயே விழிப்பதில்லை" என்று விடுகிறீர்கள்

இப்படி வாழ்வில் நமக்கு பலரால்..பல போது பல சிக்கல்கள் வரலாம்.பலரால் நாம் வஞ்சிக்கப்படலாம்..

அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்.

நட்பை, உறவை துண்டித்துக் கொள்ள வேண்டுமா?

தேவையில்லை...அதற்கும் வள்ளுவர் சொல்கிறார்.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும் (109)

ஒருவர் நமக்குக் கொலை செய்வது போன்ற மிகக் கொடுமையான தீமையைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால்,அதற்கு முன்னர் அவர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தால் போதுமானது


உறவுகள், நட்பு, அலுவலகம் என எங்கு வரும் பெரும் சிக்கல்களும் தீர  ஒண்ணே முக்கால் அடியில் வழி சொல்கிறார் வள்ளுவர்.

மறப்போம்..மன்னிப்போம்

No comments: