Wednesday, March 11, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 76

ஒருவருக்கு சிறப்பினையும், செழிப்பினையும் தரக்கூடியது,அறவழி  மட்டுமே

மனத்தூய்மையாய் இருப்பதே அறம்.

மனத்தூய்மைக்கு பொருந்தாதவை என வள்ளுவர் சிலவற்றைக் கூறுகிறார்.

அவை என்ன?

"அழுக்கா றவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம் (35)"

பொறாமை,பேராசை,பொங்கும் கோபம்,புண்படுத்தும் சொல் ஆகிய நான் கும் அறவழிக்கு பொருந்தாதவையாகும் என்கிறார்

ஒருவன் அறவழி வாழ்வில் வருவது மட்டுமே புகழ்..இன்பம் ஆகும்.மற்றவை புகழும் ஆகாது,இன்பமும் ஆகாது..

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல (39)

No comments: