அறிவு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (423)
எந்த ஒரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும்,அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை
ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும் என்று அறிவுடைமைப் பற்றி சொன்ன வள்ளுவர்..
அறிவுடையவன் என்பவன் எப்படி இருப்பான்..
என்றும் சொல்கிறார்..
உலகில் உள்ள அறிவுடையோர், சிறந்தோர் ஆகியோருடன் நட்பு கொள்வது கூரிய அறிவாகும்.அப்படி நட்பு கொண்டபின், அந்த நட்பைவிட்டு விலகாமல் இருப்பதும் அறிவு ஆகுமாம்.
உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு (425)
உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.(அவனே அறிவுடையவன் ஆவான்)
நமக்கு பகையால் அழிவு வராமல் பாதுகாப்பது நம் அறிவு மட்டுமேயாகும்.
No comments:
Post a Comment