Tuesday, March 10, 2020

தமிழ்நாடகமேடை

தமிழ்நாடகமேடை
---------------------------

இப்பதிவிற்கு..ஆதரவாகவும்,எதிர்ப்பு தெரிவித்தும் பல பின்னூட்டங்கள் வரலாம்.ஆனாலும் இதுதான் உண்மைநிலை.

நாடகம் பார்க்க ரசிகர்கள் வருவதில்லை...இது முதல் குற்றச்சாட்டு..

இதில் ஓரளவு உண்மை இருக்கிறது.ஆனால்..இது இன்று நேற்றல்ல..ஒரு சமயத்தில் திருச்சியில் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகத்திற்கு வந்திருந்து ரசிகர்கள் 12 பேர்தானாம்.உடன் நடிக்கும் சக நடிகர், "மேடையில்..கீழே நாடகம் பார்க்க வந்திருப்போரைவிட அதிகம் "என்றாராம் மேடையிலேயே, முத்லியாரிடம்.

ஆகவே..ரசிகர்கள் வருவதில்லை என்பதை முதல் காரணமாக நினைக்கக்கூடாது.அது நிரந்தரமல்ல..நாடகம் காண மக்களை நாடகக் குழுக்கள்தான் ஈர்க்க வேண்டும்.அதற்கு உண்மையிலேயே நாடகத்தில் பற்றுள்ள குழுக்களும்,சபாக்களும் வேண்டும்.
ஊடகங்கள் உதவ வேண்டும்.

150க்கும் மேற்பட்ட சென்னை சபாக்களில் இப்போது இருப்பவை அதிகபட்சமாக 15 தான்.அதிலும், தங்களுக்கு என அரங்கம் இல்லாதவர்களால், அரங்க வாடகையும் கொடுத்து, குழுக்களுக்கு ஊதியமும் கொடுத்து நாடகங்களை நடத்துவது இயலாத காரியமாக ஆகி வருகிறது.இதே நிலைதான் தமிழகம் முழுதும் நடத்து வந்த, வரும் சபாக்களின் நிலை

பொதுமக்கள் ஆதரவு இல்லாவிடின்..ஸ்பான்சார்களும் எவ்வளவு நாட்கள் ஆதரிக்க முடியும்?

பல இளம் கலைஞர்கள் பல புதுக் குழுக்களைத் தொடங்கி..பிரம்மாண்டமான காட்சியமைப்புகளை அமைத்து தமிழ்நாடகமேடைக்குள் சமீபத்தில் வந்திருப்பதைப் பாராட்டினாலும்...இதே போன்று நாடகம் பார்க்க இளம் சமுதாயத்தினரை அரங்கிற்கு இழுக்க வேண்டும்.அதே நேரம் நாடக இலக்கணத்தை மறந்துவிடக் கூடாது.

அதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு..பல புது சபாக்களை ஆங்காங்கே மீண்டும் ஆரம்பிக்க முயல வேண்டும்.

தங்களுக்கு என அரங்கு உள்ள சபாக்கள் குறைந்த வாடகைக்கு அரங்கை வாடகைக்கு விடுவதன் மூலம்..பல சிறிய சபாக்கள் நாடகங்களை நடத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தலாம்.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றம், ராணி சீதை ஹால், மியூசிக் அகடெமி ஆகிவற்றில் நாடகங்களே நடப்பதில்லை. நிகழ்ச்சிகளுக்கான வாடகையை அரங்குகள் குறைத்தால்..குழுக்களேக் கூட நாடகங்களை தங்கள் செலவில் நடத்த முன் வருவார்கள்.

திறமையுள்ள,சமூக அந்தஸ்து உள்ள இளைஞர்கள் புது சபாக்களை உருவாக்கும் முயற்சியிலோ அல்லது உள்ள சபாக்களில் உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியிலோ இறங்கலாம்.

ஊர் கூடி தேர் இழுத்தால்தான்..தேர் நகரும்..
நாடகக் கலைஞர்கள், சபாக்கள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்நாடகத் தேரை இழுப்போம்...

கலைஞர்களுக்கும், கலைக்கும் என்றும் ஆதரவு கரங்களை நீட்டுவோமாக 

No comments: