தலைவி கூற்று
(கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி, “இன்னும் தலைவர் வரவில்லை. இனியும் அவன் பிரிவை பொறுத்திருக்க மாட்டேன்" என்று வருந்திக் கூறியது.)
முல்லை திணை - பாடலாசிரியர் வாயிலான்றேவன்
இனி பாடல்-
மழைவிளை யாடுங் குன்றுசேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயிற் படரப் புறவிற்
பாசிலை முல்லை யாசில் வான்பூச
செவ்வான் செவ்வி கொண்டன்
றுய்யேன் போல்வ றோழி யானே.
- வாயிலான்றேவன்
உரை-
(தோழி) மேகங்கள் விளையாடுவதற்கிடமான மலையைச் சேர்ந்த சிற்றூரினிடத்து மேயும் பொருட்டு சென்றிருந்த பசுக்கள், தனது கன்றுகளை நினைத்துச் செல்ல முல்லை நிலத்தில் பசிய இலைகளிடையே முல்லையினது சிறந்த மலர்ப் பரப்பு சிவந்த வானத்தின் அழகைக் கொண்டது’.இக்கார்பருவத்து மாலையில் தலைவர் வராவிடின் நான் உயிர் வாழேன்
(கருத்து) கார்ப்பருவம் வந்துவிட்டது; தலைவர் பிரிவை இனியும் என்னால் பொறுத்திருக்க இயலாது
No comments:
Post a Comment