பாரத ரத்னா நாடகம் வெற்றிக்குப் பின், அடுத்த கோடை விழாவில் போடப்பட வேண்டிய நாடகம் குறித்த விவாதத்தில் ஈடு பட்டோம்.
அப்போது, இம்முறை ஒரு கிராமத்தை மையப்படுத்தி நாடகம் போட தீர்மானித்தோம்.குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமம்.
"சொல்லக் கொதிக்குது நெஞ்சம்" நாடகம் உருவானது.
ஒரு அழகான அம்மன் கோவில் செட் சைதை குமார் போட்டுத் தந்தார். கோவிலை ஒட்டி ஒரு அரச மரம், ஒரு டீஸ்டால்.
கோவில் அர்ச்சகராக நான், மூக்கன் எனும் தலித் கதா பாத்திரத்தில் கரூர் ரங்கராஜன், பண்ணையாராக முத்து சுப்ரமணியம். எதைச் சொன்னாலும் அதில் குற்றம் சொல்லும் ஏடாகூட ராமனாக ஜெயசூர்யா, டீக்கடைக் காரனாக ராஜேந்திரன்.
தீண்டாமை பிரச்னை, இரட்டைக் குவளை முறை டீக்கடையில், காவிரி தண்ணீர் பிரச்னை, அதனால் வளமை இழந்து வரும் கிராமம், என எல்லாவற்றினையும் சேர்த்து கதையாக்கினோம்.
ஒரு கட்டத்தில், அந்த கிராமத்தில் விவசாயம் அழிந்து, பண்ணையார் தற்கொலை செய்து கொள்ள.ராமன் பிழைப்புத் தேடி சென்னை செல்ல...தொழில் நகரமாக கிராமம் மாறுகிறது.
சில அருமையான வசனங்கள்.அவற்றை மட்டும் அடுத்த பதிவில் தருகிறேன்.
இந்நாடகம் சிறந்த நாடகத்திற்கான பரிசினைப் பெற்றது.மூக்கன் பாத்திரத்தில் நடித்த ரங்கராஜன், ஏடாகூடமாக நடித்த ஜெயசூர்யா ஆகியோருக்கு சிறந்த நடிகர்களுக்கான பரிசினைப் பெற்றனர்.
சிறந்த கதை, இயக்கம்,சிறந்த நாடகம் ஆகிய வற்றிற்கு எனக்கு விருது.
மொத்தத்தில் ஐந்து விருதுகளை இந்நாடகம் பெற்றது.நாடக அகடெமி சார்பில், சிறந்த அரங்க அமைப்பு என சைதை குமார் விருது பெற்றார்.
எல்லாவற்றையும் விட சிறந்த நாடகமாக தேர்ந்தெடுத்த நீதிபதிகளில் ஒருவராக நான் பெருமதிப்பினை வைத்துள்ள வீயெஸ்வி அவர்கள் இருந்தார் என்பதே எனக்குக்கிடைத்த மாபெரும் விருதாகும்
இனி நாடக முக்கிய வசனங்கள் அடுத்த பதிவில்
No comments:
Post a Comment