ஆண்டு 2007..
எனது புதிய நாடகம் "என்று தணியும்"
சாதாரணமாகவே நான் சிவாஜி ரசிகன்.குறிப்பாக கௌரவம் படத்தில் அவர் ஏற்ற பாரிஸ்டர் ரஜினிகாந்த் பாத்திரம் என் மனதைவிட்டு அழையாத ஒன்று.
நீயும் இதுபோல ஒரு பாத்திரத்தை எழுது...எழுது..என என் உள்மனம் என்னை தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
அதை இந்நாடகம் மூலம் தீர்த்து கொண்டேன்..
ஆம்...இதில் அடவகேட் பத்ரிநாத் பாத்திரத்தை படைத்தேன்.பத்ரிநாத் ரஜினிகாந்தின் ஜூனியர் என்று சொன்னேன்.கரூர் ரங்கராஜ் இவ்வேடம் ஏற்றார்
சீனியரைப் போலவே ஜூனியரும், கொலைகாரன் என தெரிந்தும் தனசேகர்/விஸ்வநாதனை விடுவிக்கும் விதத்தில் வாதாடி வெற்றி பெறுவார்.
ஆனால்..அந்த விஸ்வநாதன், தனசேகர் ஆகிய இருவரையா? என்று கேட்டால் ..இல்லை இருவரும் ஒருவர்தான்
இதுவரை மேடையில் தோன்றாத ஒரு பாத்திரம்
ஆம்..ஸ்பிளிட் பெர்சனாலிட்டி ..
விஸ்வநாதனே தன்னையும் தனசேகர் என்று சொல்லிக் கொள்வான்
இதில் விஸ்வநாதன், மேல்சாதியில் பிறந்ததால்..தேவையான மதிப்பெண் இருந்தும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை
அதே நேரம்..தனசேகர்..தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவன்.ஆனாலும் உயர் பிரிவினரின் சதியால் மருத்துவம் படிக்க இயலவில்லை.ஆகவே தனசேகர் அதற்குக் காரணமாக இருந்த கனபாடிகளை கொலை செய்கிறான்.
வழக்கு நீதிமன்றம் வருகிறது.
தான் யாரையும் கொல்லவில்லை என சொல்லும் விஸ்வநாதன்..அடுத்த நொடியே தான் தனசேகரன் என்றும், தான் கனபாடிகளைக் கொன்றவன் என்றும் கூறுகிறான்.
அவனை வாதாடி விடுவிக்கும் பத்ரிநாத்திற்கு, கடைசியில் விஸ்வநாத்/தனசேகர் ஸ்பிளிட் பர்சன் அல்ல..அப்படி நடித்தான் எனத் தெரிகிறது
என்ன...தலை சுற்றுகிறதா..
நாடகம் பார்ப்போர் சிந்தித்து நாடகம் பார்த்தால் புரியும்.
இந்நாடகம் என் மாஸ்டெர்பீஸ் எனலாம்.இன்றும், இப்படி ஒரு நாடகத்தை மேடையேற்றியதற்காக எனக்குள் சற்று தலைக்கனம் உண்டு
இந்நாடகத்தில் நடித்த ஜெயசூர்யா சிறந்த நடிகனுக்கான விருதினைப் பெற்றார்.
நான் மிகவும் மதிக்கும் முத்ரா பாஸ்கர் தன் சமுத்ரா பத்திரிகையில் இந்நாடகத்திற்கு 95 மதிப்பெண்கள் கொடுத்து பாராட்டினார்
தில்லி தமிழ்ச் சங்கத்தில் இந்நாடகம் நடந்து முடிந்த அடுத்தநாள் நாங்கள் ஷாப்பிங் செல்கையில் ஒரு சிறுவன் எங்களிடம் வந்து "அங்கிள்..இன்னிக்கு இப்போ இங்கக் கூட வரது தனசேகரனா இல்ல விஸ்வநாதனா? என்று கேட்டான்.இன்றளவும் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை.
No comments:
Post a Comment