மழையுதிர் காலம் முடிந்தபின் அரங்கேறிய நாடகம் "காத்தாடி"
லிவிங் டுகெதர் ..
இன்று பரவலாக பல இடங்களில் நடந்து வருகிறது.இதை அன்றே எங்கள் நாடகத்திற்கான கருவாக எடுத்துக் கொண்டேன்.
இதில் மற்றொரு புதுமையும் செய்தேன்.முதல் இரு காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.
அதாவது..பிளஸ் டூ படிக்கும் மாணவன் வீட்டில் பெற்றோரின் மனநிலை எப்படியிருக்கும் என்றும்..அதே மாணவன் இஞ்சினீரிங் படிப்பை முடித்து கேம்பஸ் இன்டெர்வியூவில் வேலை கிடத்ததும் பெற்றொரின் மனநிலையையும் அந்த இரு காட்சிகளும் சொல்லும்.
முதலில் சற்றே புரியாமல் இருக்கும் ரசிகர்கள், சிறிது நேரம் கழித்து புரிந்து கொண்டு இரண்டாம் காட்சியை ரசிப்பர்.
இந்நாடகத்தில் ஜெயசூர்யா, ரமேஷ், என் நடிப்பு ஆகியவை பாராட்டுப் பெற்றன.அல்சைமர் நோயாளியாக வந்த ராஜேந்திரனின் கதையைக் கூறும் கட்டத்தில் கண் கலங்காமல் இருக்க முடியாது.
இந்நாடகம் எழுதியமைக்கு நான் மிகவும் பெருமையடைகிறேன்.
இது போன்ற கருவினைக் கொண்ட நாடகங்கள் ஏன் திரைப்படத்துறையினர் கண்களில் படுவதில்லை? என எனக்குத் தெரியவில்லை
நாடகத்தில்வந்த சிறந்த வசனங்களையும், நாடகத்திற்கு "காத்தாடி" என்ற பெயரை ஏன் வைத்தேன் என்பது அடுத்த பதிவில்
No comments:
Post a Comment