எனது "என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து சில வசனங்கள்-
1)ஊர்ல இருக்கற முகம் தெரியாத நண்பர்கள் பிறந்த நாள், திருமணநாளை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் நாம் நம் தாய் தந்தையின் பிறந்த நாள்,திருமணநாளை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை
2)பெத்தவங்க மேல அன்பும், பாசமும், பக்தியும் வைக்காதவன் முன்னால தெய்வமே வந்து நின்னாலும் அவனாலே அதைக் காணமுடியாதுன்னு வேதங்கள் சொல்லுது
3)தன் குழந்தைகளோட வருங்காலத் தேவைகளை மனசுக்குள்ளே கணக்குப் போட்டு..தன்னோட தேவைகளையும்,சுகங்களையும் ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யற புண்ணிய ஆத்மா அப்பாக்கள்தான்
4)எல்லா உறவுமே நீரில் மிதக்கற கட்டைகள் மாதிரிதான்.சந்தர்ப்பம் காரணமாக எல்லாம் ஒன்னா மிதக்குது.அப்புறமா..வாழ்க்கைங்கற தண்ணியோட வேகத்திற்கு ஏற்ப ஒன்னை ஒன்னு பிரியுது
5)மகாபாரதத்தில அபிமன்யூ பத்மவியூகத்தில சிக்கி வெளியே வரத் தெரியாம இறந்ததும், அர்ச்சுனன் அவனைக் காண பாசத்தோட சொர்க்கத்திற்குப் போனானாம்.அங்கு இருந்த மகன் அபிமன்யூவை நெருங்கினான்.அபிமன்யூவோட உணர்ச்சியில எந்த மாற்றமும் இல்லை.
அர்ச்சுனன், "மகனே! உன் அப்பா வந்து இருக்கேன்"னான்
அதுக்கு அபிமன்யூ, "ஓ அப்படியா! நான் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து இருக்கேன்.நீ என்னோட எந்த ஜன்மத்து அப்பா? பிறப்பும், இறப்பும் பஞ்சபூதங்களால் ஆன உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது ஏற்படும் தோற்றங்கள்.ஏதோ ஒருமுறை நான் பிறப்பெடுக்க நீ காரணமா இருந்து இருக்க.அத்துடன் உன்னுடன் ஆன தொடர்பு முடிஞ்சுப் போச்சு.எனவே தற்போது தந்தைன்னு எனக்கு யாரும் இல்லை.நீங்க போகலாம்"னான்
(அடுத்த பதிவிலும் வசனங்கள் தொடரும்)

No comments:
Post a Comment