எங்களது அடுத்த "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம்..சௌம்யாவின் எதிர்காலத்தையேத் தீர்மானித்தது என்றால் மிகையில்லை.அந்த நாடகத்தில் என்னுடன் பங்காற்றியவர்கள்
பரத் எனும் சேதுராமன்
----------------------------------------
அந்த நாடகத்தை எழுதியவர் பரத்.அவரது இயற் பெயர் சேதுராமன்.இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஊழியர்.இவருக்கு இது முதல் நாடகம். தாயை இழந்த கூட்டுக் குடும்பத்தின் கதை.தாயுமானவனாய் தந்தை.
மணிபாரதி-
-------------------- இந்நாடகத்தில் தந்தையின் பாத்திரத்தை ஏற்ற நடிகர் மணி.பாரதி.எனது குழுவில் இந்நாட்கம் மூலம் இணைந்தவர்.எல் ஐ சி யில் பணியாற்றியவர்.திரைப்படங்களிலும் நடித்தவர்.பாலைவனச் சோலை, தூங்காதே தம்பி தூங்காதே, நினைவெல்லாம் நித்யா, துடிக்கும் கரங்கள் ஆகியவை இவர் நடித்த சில படங்கள்.இவர் சௌம்யாவின் ஆஸ்தான நடிகராக ஆனார் இந்நாடகத்திற்குப் பின்.
குட்டி பத்மினி
---------------------
இந்நாடக்ம அரங்கேறி சில காட்சிகள் வரை கமலா லாமேஷ் நடித்தார்.பின்னர் அவர் நடிக்க இயலவில்லை.அந்த கால கட்டத்தில் ஆபத்பாந்தவராக வந்தவர் குட்டி பத்மினி.இந்நாடகம் நடந்து முடியும் வரை அனைத்துக் காட்சிகளிலும் இவரே நடித்தார்
ஊட்டி குமார்_
---------------------கரீமுதீன் என்ற இவர் என்னுடன் ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்.தன் பெயரை ஊட்டி குமார் என மாற்றிக் கொண்டு இந்நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
மற்றபடி முதல் நாடகத்தில் நடித்த நண்பர்களும் இதில் நடித்தனர்
இந்நாடகத்திற்கு ஒளி அமைத்தவர் கோம்ஸ் ஆவார்.
இவரின் ஒளி அமைப்பு, மேடையில் சிலுவை மேலிருந்து இறங்கும் காட்சி ஆகியவை சிறப்பு
நாடகத்திற்கு இசை அமைத்தவர்கள் கோபு- பாபு ஆவர்
நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாகத் திகழ்ந்தது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க இந்நாடகம் "ஆனந்தக்கண்ணீர்" என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது
No comments:
Post a Comment