Wednesday, October 17, 2018

நாடகப்பணியில் நான் - 89

"வேதம் புதிதல்ல" இது 90ல் அரங்கேறிய எங்கள் நாடகம்.

நண்பன் செய்த நம்பிக்கைத் துரோகம்..இதுவே இந்நாடகத்தின் ஒன்லைன்.

வழக்கம் போல மணிபாரதி, ராம்கி, நான் , காவேரி ஆகியோர் நடித்தோம்.

காவேரிக்கு, அன்னை, மகள் என இரு வேடங்கள்.இரண்டையும் வேறுபடுத்தி மிக அருமையாக நடித்தார்.

எனக்கு இளைஞன்..பின்னாளில் கோவில் குருக்கள் வேடம்

மணிபாரதிக்கு இளைஞன்..பின்னாளில் பாதிரியார் வேடம்

இந்நாடகத்தில் கதாநாயகனாக ஒருவரை அறிமுகப்படுத்தினோம்.அவர் பெயர்..

ராஜேந்திரன்...

ஆம்..பின்னாளில் பெரிய நாடக நடிகராகவும், திரைப்பட கலைஞராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தின் தலைவராகவும் திகழ்ந்த ராஜேந்திரன் தான்..

நாடகத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்கு இவருக்கும் உண்டு

நான்...சௌம்யாவின் சாதனைகளை அசைப் போடும்போதுதான் எவ்வளவு கலைஞர்கள் என் குழுவில் நடித்துள்ளனர் என்ற வியப்பினை ஏற்படுத்தியது.

நாடகப்பணியில் என் பங்கு சிறிதானாலும்...என் குழுவின் மூலம் நடிகர்கள் ஆனவர்கள், என் குழுவில் நடித்தவர்கள் என எவ்வளவு  நடிகர்கள்...

மனம் மகிழ்கிறது

No comments: