Saturday, October 6, 2018

நாடகப்பணியில் நான் - 78



அடுத்து என் எண்ணம்-எழுத்து- இயக்கத்தில் உருவான நாடகம் "இறைவன் கொடுத்த வரம்" நாடகம்.

ஒரு ஆதர்ச தம்பதியினர் கதை.

கணவன்-மனைவி இருவருக்குமே நடிப்பிற்குத் தீனிப் போட்ட நாடகம்.

கணவனாக பி டி ரமேஷ் நடித்தார்.சௌம்யாவின் ஆஸ்தான நாயகன்..ஆகவே..அவரை விட்டால் அப்பாத்திரத்திற்கு வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் மனைவி பாத்திரத்தில் நடிக்க ஒரு திறமையான நடிகை வேண்டும்.நடிப்புக்கு சரியான தீனி போடும் பாத்திரம்.

என் மனதில் அப்பாத்திரத்திற்கேற்றவர்கள் என ஒரு சிலரை எண்ணியிருந்தேன்.

அவற்றில் ஒருவர் ஃபாத்திமா பாபு.

அவரை அணுகி அவரிடம் பாத்திரம் குறித்து சொல்லிவிட்டு ஸ்கிரிப்டைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அடுத்த நாளே அவர் எனக்குத் தொலைப்பேசி, அந்த பாத்திரத்தை தானே நடித்துக் கொடுப்பதாகக் கூறினார்.

மற்றும்..ஸ்ரீராம்,கிரீஷ் வெங்கட்,ரமணன், விஜயஸ்ரீ ,நரேன் பாலாஜி ஆகியோரும் நடித்தனர்.இவர்களில் ஸ்ரீராம் எனது "என்று ம் அன்புடன்" நாடகத்தில் அறிமுகமான அற்புத நடிகர்.சிறப்பாக இந்நாடகத்திலும் நடித்துக் கொடுத்தார்

நாடகம் மாபெரும் வெற்றி..
ரமேஷும், ஃபாத்திமா பாபுவும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டனர் எனில் மிகையில்லை.

அந்நாடகம் பற்றி மேலும் பல விஷயங்களை அடுத்தபதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

No comments: