என் எண்ணம்-எழுத்து- இயக்கத்தில் ஜெய கீர்த்தனா கிரியேஷன்ஸிற்காக நான் எழுதிய நாடகம் "என்னுயிர் நின்னதன்றோ"
இதில் அம்பி ராகவன் , கிரீஷ் வெங்கட், சுரேஷ், அஷோக் ஆகிய இளைஞர்களுடன் ரமணன் தந்தை வேடத்தில் நடித்தார்.
அண்ணன் தம்பிகளிடையேலான பாசத்தை மையமாகக் கொண்ட நாடகம்.
அண்ணன் பாரதிக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும், அப்போது தம்பி கூறுவாந் "அண்ணா! உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடான்னு அன்னிக்கு பாரதி சொன்னான்..ஆனா..இன்னிக்கு நான் சொல்றேன்..என் அண்ணனுக்காக அந்தக் காலனை நான் காலால் மிதிப்பேன் அண்ணா" என்று.இக்காட்சியில் ராகவனின் நடிப்பும், அண்ணனாக நடித்த கிரீஷ் வெங்கட் நடிப்பும் ரசிகர்களிடையே கைதட்டல்களை வாங்கிக் கொடுக்கும்.
இது போல பல உயிர்ப்புள்ள வசனங்கள் நாடகத்தை வெற்றி நாடகமாக ஆக்கின.
நான் எழுதிய 26ஆவது நாடகம் இது.
No comments:
Post a Comment