1961 ஆம் ஆண்டு யுஏஏவிற்கு மறக்கமுடியாத ஆண்டு.
ஆம், பட்டு எழுதிய "பெற்றால்தான் பிள்ளையா?" என்ற நாடகம் அரங்கேறியது.
27 காட்சிகள் இந்நாடகம் நடந்தது.அருமையான கதை, நடிப்பு, பாத்திரப்படைப்புகள்
பின் கேட்பானேன்..தமிழ்த்திரை ரசிகர்களும் இந்நாடகத்தைக் காண வேண்டும் என வெள்ளித்திரைக்குத் தயாரானது.ஆகவே நாடகம் நிறுத்தப்பட்டது.இல்லையேல் மேலும் பல காட்சிகள் நடந்திருக்கும்
ஒரு அமெச்சூர் குழுவின் நாடகம் திரைக்கு வருவதைவிட, அந்நாடகத்தில் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிக்கிறார் என்றால்...எந்தக் குழுவிற்கு அந்நாளில் இப்பேறு கிட்டியிருக்கும்? யூஏஏவிற்குக் கிடைத்தது.
"பெற்றால் தான் பிள்ளையா" பார்மகளே பார் என்ற பெயரில் திரைப்படமாக வந்து மாபெரும் வெற்றி பெற்றது
ஒரு சிறு சோகம் என்னவென்றால், இந் நாடகத்தில், தனது பதினோராம் வயதில் சிறுவனாக காலடி எடுத்து வைத்த மகேந்திரனால் திரையில் நடிக்க முடியவில்லை.காரணம் வெள்ளித்திரைக்கென செய்யப்பட்ட சில மாற்றங்களால்.
ஆனால், அதே நேரம் குழுவினருக்கு பெருமை ஏற்படக் காரணம், நாடகத்தில் 'மெக்கானிக் மாடசாமி" என்ற வேடத்தில் ஒரு நடிகர் நடித்தார்.அந்நடிகரே திரையிலும் நடிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் நடிகர்திலகம்.
அப்படி சிவாஜி சொல்லி இப்படத்தில் அறிமுகமானவர் "சோ"ஆவார்
ஆக, இவ்வாண்டு யுஏஏ மற்றும் தனிப்பட்ட முறையில் மகேந்திரன் ஆகியோருக்கு மறக்கமுடியாத ஆண்டாக அமைந்தது.
No comments:
Post a Comment