Monday, April 23, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 31


அத்தியாயம் - 31
(வியட்நாம் வீடு மேடை நாடகத்தில் சிவாஜி, சகுந்தலா)
2009ல் அரங்கேறிய நாடகம்..அரங்கேற்றம் என சொல்லலாமா? எனத் தெரியவில்லை.ஏனெனில்..1967ஆம் ஆண்டே நடிகர் திலகம் சிவாஜி பிரஸ்டிஜ் பத்மநாபனாகவே மாறி நடிக்க,மனைவி  சாவித்திரி யாக ஜி சகுந்தலா நடிக்க தமிழ்மேடையில் சக்கைப் போடு போட்ட நாடகம்  "வியட்நாம் வீடு  ".பின், திரைப்படமாகி, சகுந்தலா எற்ற பாத்திரத்தை பத்மினி ஏற்க..நடிகர்திலகத்தின் ரத்தினங்களாகத் திகழ்ந்த படங்களில் ஒன்றாகிப் போனது
திலகத்தின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று அவர் நினைவாக அவருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.,அவரையே சுவாசித்துவரும் மகேந்திரனால்.
ஆம்..2009ல் மகேந்திரனுடன் , சாவித்திரி பாத்திரத்தில் நித்யா நடிக்க மீண்டும் மேடையேறியது வியட்நாம் வீடு.
சிவாஜி நடித்த பாத்திரத்தில் மகேந்திரனா? என எண்ணியவர்கள் மூக்கில் விரல் வைத்தனர்.இவ்வளவு அழகாக மீண்டும் பிரஸ்டிஜ் பத்மனாபனை மேடையில் பார்க்கிறோமா?என தங்கள் கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டனர்.
மகேந்திரன் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்தார்.மகன்கள் பிரச்னையில் மாட்டித் தவிக்கையில் தன் நடிப்பால், அரங்கில் வானதிரும் கைத்தட்டல்களைப் பெற்றார்

நாடகத்தை சிவாஜி குடும்பத்தினரும் வந்திருந்து பார்த்து வாழ்த்தி பாராட்டினர்.அவரது குருவும், நாடக அரங்கில் ஏதோ மூலையில் அமர்ந்திருந்து பார்த்து மகேந்திரனை ஆசிர்வதித்திருப்பார்

இந்நாடகம் பார்த்த கிரேசி மோகன் என்ன சொல்கிறார்..
"சுதேசி ஐயரை மகேந்திரன் காலச் சக்கரத்தில் கதாபாத்திரங்களை ஏற்றிக்கொண்டு பின்னோக்கிச் சென்று வியக்க வைத்தார்."வியட்நாம் வீடு" நாடகத்தில் நடிப்பு எனும் காலச்சக்கரத்தில் ஏறிக்கொண்டு ,முன்னோக்கிச் சென்று நடிகர்திலகத்தை நம் முன் நிறுத்தி,நம்மை பிரமிக்க வைக்கிறார்,நடிகர்திலகத்தின் வியட்நாம் வீடு வால்மீகி ராமாயணம் என்றால் மகேந்திரனின் "வியட்நாம் வீடு"கம்பராமாயணம்"
யூஏஏ கிரீடத்தில் மற்றுமொரு சிறகு...இல்லை இல்லை சாதா சிறகு இல்லை தங்கசிறகு இது எனலாம்

No comments: